சனி, 22 அக்டோபர், 2011

உள்ளாட்சித் தேர்தல் - அ.தி.மு.க வெற்றி !

உள்ளாட்சித் தேர்தல் - அ.தி.மு.க வெற்றி !

காங்கிரஸ் - படுதோல்வி - டெபொசிட் காலி !!






------------------------------------------------------------------------

- "காங்கிரஸ் ஒரு காலி பெருங்காய டப்பா " - மக்கள் ஓசை நாளிதழ்

பெருங்காய டப்பா - அதுக்கு கூட ஒரு "வாசனை" இருக்கும் ! ஆனால் காங்கிரஸ் ??


தமிழகத்தில், காங்கிரஸ், மா.கம்யூ., -இ.கம்யூ.,- பா.ம.க., - வி.சி., ஆகியவை பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன

------------------------------------------------------------------------------------


ம.தி.மு.க - வளரும் கட்சி ! ( MDMK - Vaiko )

உள்ளாட்சித் தேர்தலை தனித்து சந்தித்து, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சிகளில் மேயர் பதவிக்கான போட்டியில் மூன்றாவது இடமும், திருப்பூர், வேலூர், கோவை மாநகராட்சிகளில் நான்காவது இடத்தையும் பிடித்து, ம.தி.மு.க., தமிழக அரசியலில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த தேர்தலில் பெரிய கட்சிகளாக கூறிக் கொண்ட தே.மு.தி.க., - பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் போன்றவை படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், ம.தி.மு.க., தனித்துப் போட்டியிட்டு 150 உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றியிருப்பது, அக்கட்சியினருக்கு புது தெம்பை அளித்துள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிய ம.தி.மு.க., இந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களமிறங்கியது. இதில் கணிசமான வெற்றியை பெற முடியாவிட்டால், கட்சியின் எதிர்காலமே கேள்விக்குறியாகி இருக்கும்.
எனினும், எதிர்பார்த்ததை விட கூடுதல் இடங்களை ம.தி.மு.க., பிடித்துள்ளது. நேற்று மாலை 6.30 மணி நிலவரப்படி, மாநகராட்சிகளில் எட்டு கவுன்சிலர் பதவிகளையும், ஒரு நகராட்சித் தலைவர் பதவியையும், 48 நகராட்சி உறுப்பினர் பதவிகளையும், ஏழு பேரூராட்சி தலைவர் பதவிகளையும், 82 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளையும், நான்கு ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளையும் வென்றுள்ளது.

இது, ம.தி.மு.க.,வுக்கு அடிமட்டத்தில் இன்னும் செல்வாக்கு உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது
----------------------------------------------------------------------------------

புதன், 19 அக்டோபர், 2011

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் : மீண்டும் எச்சரிக்கிறது அமெரிக்கா USA warns srilanka



இலங்கையின் மனித உரிமை மீறல்கள்; பதிலளிக்காவிடின் அழுத்தம் அதிகரிக்கும்; மீண்டும் எச்சரிக்கிறது அமெரிக்கா

மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை அரசு உடனடியாக பிரதிபலிப்பை வெளிப்படுத்த வேண்டுமென்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.






நேற்றுமுன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறையின் பிரதிப் பேச்சாளர் மார்க்ரோனர், சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதிலை இலங்கை வழங்கத் தவறும் பட்சத்தில் சர்வதேச அழுத்தங்கள் மேலும் அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியவை வருமாறு:

இலங்கை அரசால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க மற்றும் விசாரணை ஆணைக் குழுவின் அறிக்கை இலங்கை மீதான குற்றச்சாட்டுகளுக்குச் சரியான பதிலாக இருக்குமா என்பது குறித்து அமெரிக்காவால் இப்போதைக்குக் கருத்து எதனையும் கூறமுடியாது. அந்த அறிக்கை வெளியிடப்பட்ட பின்னரே எதனையும் கூறமுடியும்.

குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டியது இலங்கை அரசின் பொறுப்பு. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அரசின் விசாரணைகள் வெளிப்படையானது என்பதை நிரூபிக்கவேண்டிய தேவை உள்ளது.

இலங்கை அரசு அந்தப் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறினால், சுதந்திரமான பொறிமுறை குறித்த அழுத்தங்களைச் சந்திக்க நேரிடும்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்த உள்நாட்டுக்குள்ளேயே இதைச் செய்யவேண்டியது முக்கியமானது. இலங்கை அதனைத் தானாகவே செய்துகொள்ளும் என்ற நம்பிக்கை இன்னும் எமக்கு உள்ளது.அதை அவர்கள் செய்யாது போனால், நாங்கள் பலமுறை கூறியது போன்று, ஏனைய பல பொறிமுறைகளின் மீது கவனம் செலுத்துவதற்கான அனைத்துலக அழுத்தங்கள் அதிகரிக்கும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

-----------

Thanks :  Uthayan Newspaper  & Yarl.com  website

ஞாயிறு, 2 அக்டோபர், 2011