சனி, 31 மே, 2014

வியாழன், 29 மே, 2014

புதன், 28 மே, 2014

மாலைமலர் இ-பேப்பர் 28-MAY-2014 Maalaimalar ePaper

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  28-MAY-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

2014 Uthayan ePaper 28MAY2014 உதயன்

TamilNesan ePaper 28May2014 தமிழ் நேசன் மலேசியா

https://www.facebook.com/tamilnesan1924?fref=ts


===========================================
Thanks : TamilNesan / Semparuthi

News :   http://www.semparuthi.com/?p=109929

மலேசிய அரசாங்கம் இரகசியமாகவும் வலுக்கட்டாயமாகவும் இரு சிறீலங்கா அகதிகளையும் அடைக்கலம் தேடி வந்த இன்னொருவரையும் நேற்று சிறீலங்கா அரசாங்கத்திடம் ஒப்படைத்தது.  

மலேசிய அரசாங்கத்தின் இந்த அநியாய, அக்கிரம மற்றும் அநாகரீகமான நடவடிக்கையை மனித உரிமைக் கழகமான சுவாராம் இன்று கடுமையாக விமர்சித்து கண்டனம் செய்தது.
இயக்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வை சுவராம் தலைவர் கா.ஆறுமுகம், அதன் வழக்குரைஞர் நியு சின் இயு, ஒருங்கிணைப்பாளர் ஆர். தேவராஜன் ஆகியோர் வழி நடத்தினர்.
கோலாலம்பூரிலுள்ள ஐநா  ஹைகமிசனால் அகதிகள் என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த கிருபாஹரன் மற்றும் கிருபநாதன் ஆகியோருடன் அடைக்கலம் கோரி மனு செய்திருந்த குசேந்தன் என்பவரையும் மலேசிய அரசாங்கம் அனைத்துலக நீதி கோட்பாடுகளுக்கு முரணாக நாடு கடத்தி மீண்டும் சிறீலங்கா அரசாங்கத்திடம் ஒப்படைத்ததை சுவாராம் கடுமையாகக் கண்டிக்கிறது என்று அக்கழகத்தின் தலைவரான கா. ஆறுமுகம் இன்று காலை மணி 11.00 க்கு பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
Arumugam_Suaram“மலேசிய அரசாங்கத்தின் இச்செயல் ‘Non-refoulement’ என்ற அனைத்துலக வழக்கமான நடைமுறைச் சட்டத்தை மீறியதாகும். இச்சட்டப்படி அரசாங்கத்தின் கொடுஞ்செயலால் உண்மையாகக் பாதிக்கப்பட்ட ஒருவர் அக்கொடுங்கோலரிடம் மீண்டும் ஒப்படைக்கப்படுவதை தடை செய்கிறது”, என்று கூறிய ஆறுமுகம், “இம்மூவரும் நாடு கடத்தப்பட்டதை அவர்களுடைய குடும்பத்தினருக்கும், ஐநா அகதிகள் ஹைகமிசனுக்கும், சுவாராமுக்கும் தெரிவிக்கவில்லை. இதனால் நாங்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளோம்”, என்றார்.
போலீசார் இம்மூவரையும் கடந்த 15.5.2014-இல் கைது செய்தது. அவர்கள் 14 நாள்கள் வரையில் தடுப்புக்காவலில் வைத்திருக்க ரிமாண்ட் மனுவை போலிஸ் பெற்றது என்றும் அதைத்தொடர்ந்து நேற்று அவர்களை நாடு கடத்தியது சட்டப்படி தவறாகும் என்று சுவாராமின் மனித உரிமை வழக்குரைஞரான நியு சின் இயு அச்செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இம்மூவரும் நடத்தப்பட்ட முறை இமிகிரேசன் சட்டத்திற்கு முற்றிலும் முரணானதாகும் என்றாரவர்.
Suaram sin yewஇமிகிரேசன் இலாகா இம்மூவரையும் தடை செய்யப்பட்ட நபர்கள் என்று அறிவிக்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்டிய நியு சின் இயு “இமிகிரேசன் சட்டம் முற்றிலும் உதாசீனப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அந்த இலாகா இவ்வாறு நடந்து கொண்டது இது முதல் தடவை அல்ல. 2004  மற்றும் 2012 ஆண்டுகளிலும் இவ்வாறு நடந்துள்ளது”, என்றாரவர்.
“இம்மூவரும் நாடு கடத்தப்பட்டது அவர்களை மீண்டும் இனப்படுகொலை நடத்தி வரும் கொலையாளியிடம் கொடுப்பதற்கு ஒப்பாகும். மலேசியா  அனைத்துலகச் சட்டத்தை மீறிவிட்டது”, என்று இடித்துரைத்த அவர், “அம்மூவரும் தீவிரவாதிகள் என்றால், போலீஸ்படைத் தலைவர் அவர்களை ஏன் நீதிமன்றத்தில் நிறுத்தவில்லை”, என்று வினவினார்.

சித்திரவதை நிச்சயம்

மலேசிய அரசாங்கத்தால் அனைத்துலகச் சட்ட மற்றும் நீதி முறைகளுக்கு முரணாக நாடு கட்டத்தப்பட்டுள்ள அம்மூவரையும் நிச்சயமாக சித்திரவதை செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை என்பதோடு அவர்கள் உயிருக்கு ஆபத்தும் ஏற்படலாம் என்றும் கா. ஆறுமுகம் கவலை தெரிவித்தார்.
அவர்களை நாடு கடத்துவதில் ஏன் இந்த அவசரம்? அந்நாட்டு அரசாங்கத்திற்கு பயந்துதானே இங்கு அடைக்கலம் தேடுகிறார்கள். அப்படி வெளிநாடுகளில் வாழ்கின்றவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் சிறீலங்கா அரசாங்கத்தின் திட்டத்தை மலேசிய அரசாங்கம் ஆதரிக்கிறதா?
suaram thevaமே 25, 2014 இல், போலீஸ் படைத்தலைவர் காலிட் அபு பாக்கார் வெளியிட்ட ஒரு செய்தி அறிக்கையில் அவர்கள் தீவிரவாதிகள் என்று கூறியுள்ளார். அச்சந்தேகப் பேர்வழிகள் அதிகாரிகளின் நடவடிக்கைகளிலிமிருந்து தப்பித்துக்கொள்வதற்காக யுஎன்எச்சிஆர் அட்டைகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர் என்று அவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
“அம்மூவரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படாமல், தீவிரவாதிகள் என்று நிருபிக்கப்படாத நிலையில் அவர்கள் மீது அவ்வாறான முத்திரை குத்தப்பட்டுள்ளதின் அடிப்படை மற்றும் உள்நோக்கம் குறித்து கேள்வி எழுப்புகிறோம் என்றார் சுவராம் ஒருங்கிணைப்பாளர் ஆர். தேவராஜன்.

“இந்த அறிக்கை இவ்விவகாரம் மீது விசாரணை மேற்கொண்டுள்ள அதிகாரி அளித்த தகவலுக்கு முற்றிலும் எதிர்மாறானதாக இருக்கிறது. இம்மூவரும் இமிகிரேசன் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாகவும் கைது செய்யப்பட்ட மே 15 ஆம் தேதியிலிருந்து 14 நாள்களுக்கு அவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அதிகாரி சுவாராமிடம் தெரிவித்திருந்தார்”, என்று செய்தியாளர் கூட்டத்தில் கூறிய தேவராஜன், “அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் ஏன் இந்த திடீர் மாற்றம்: இமிகிரேசன் சட்டம் சம்பந்தப்பட்ட குற்றங்களிலிருந்து இப்போது தீவிரவாதத் தொடர்பு என்ற குற்றச்சாட்டு. இது அவர்கள் நாடுகடத்தப்படுவதை நியாயப்படுத்துவதற்காக கட்டப்படும் கதையா?”, என்று வினவினார்.
ஐஜிபி சட்டஆளுமைக்கு உட்பட்டு நடக்க வேண்டும்
igpகுற்றவாளி என்று நிருபிக்கப்படும் வரையில் மாசற்றவர் என்பது மலேசியாவின் சட்டஆளுமையாக இருப்பதாகத் தெரியவில்லை என்பதைச் சுட்டிக் காட்டிய ஆறுமுகம், “ஐஜிபி ஒரு நீதிபதி அல்ல என்பதையும் அவர் அகதிகளையும் அடைக்கலம் தேடுபவர்களையும் முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமலும் விசாரணை செய்யப்படுவதற்கான அவர்களுக்கு உரிய உரிமைகளை அளிக்காமலும் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டு செயல்படக்கூடாது என்பதை சுவாராம் அவருக்கு நினைவூட்ட விரும்புகிறது”, என்றார்.

ஐஜிபி அவரது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினாரா என்பதை விசாரிக்க ஒரு சுயேட்சையான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை சுவாராம் முன்வைப்பதாக ஆறுமுகம் தெரிவித்தார்.

TamilNesan ePaper 27May2014 தமிழ் நேசன் மலேசியா

https://www.facebook.com/tamilnesan1924?fref=ts

செவ்வாய், 27 மே, 2014

ஞாயிறு, 25 மே, 2014

2014: Thinakkural ePaper 25May2014 தினக்குரல்

2014 : Tamil National Alliance Seeks Date with Modi மோடியோடு நெருங்கிப் பணியாற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு விருப்பு; வாழ்த்துக் கடிதத்தில் சம்பந்தன்


இந்தியாவின் புதிய பிரதமரான நரேந்திர மோடியோடு நெருக்கமாகப் பணியாற்ற இதய சுத்தியோடு காத்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.

அத்தோடு மோடியையும் அவரது அரசில் பங்கெடுப்பவர்களையும் சந்திப்பதற்கான ஒரு வாய்ப்பை எமக்கு விரைவாக ஏற்படுத்தித் தரவேண்டும் என நாம் வேண்டுகின்றோம்.

இந்தியப் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மோடிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் பெற்ற பிரமாண்டமான வெற்றிக்கா கவும், பாரத தேசத்தின் பிரதமர் என்ற உயர் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்வதற்காகவும், இலங்கைத் தமிழ் மக்களின் சார்பில் எங்களது மன மார்ந்த வாழ்த்துக்கள்.

நீங்களும் உங்களது அரசும் எடுத்திருக்கின்ற கடினமான பொறுப்புக்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கும் எங்களது இதயபூர்வமான வாழ்த்துக்கள் உங்களுக்கு உரித்தாகட்டும்.

அனைத்து இலங்கை மக்களும், சமத்துவத்தினதும் நீதியினதும் அடிப்படையில், தத்தமது பாரம்பரிய நிலங்களில் வாழ்வதை உறுதிப்படுத்துவதற்கும் இலங்கையில் மீண்டும் வன்முறை தலைதூக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கும் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நேர்மையான உறவுகளைப் பலப்படுத்துவதற்கும் உங்களது அரசோடு நெருக்கமாகப் பணியாற்ற நாங்கள் இதய சுத்தமாகக் காத்திருக்கின்றோம்.

1983ஆம் ஆண்டின் தமிழர் எதிர்ப்பு படுகொலைகளின் தொடர்ச்சியாக இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு நிரந்தரத் தீர்வை கொண்டு வருவதற்காக இந்தியா எடுத்த முயற்சிகளை இலங்கை ஏற்றுக்கொண்டிருந்தது.

காலத் துக்குக் காலம் இடையூறுகள் ஏற்பட்டபோதும் இந்த முயற் சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்தியா, ஒரு தனித்துவமான பாத்திரத்தை இந்த முயற்சிகளில் வகித்து வந்திருக்கின்றது.

2009 மே மாதத்தில் ஆயுதப் போர் தோற்கடிக்கப்பட்டு வன்முறை முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் தொடர்ச்சியாக, சமத்துவத்தினதும் நீதியினதும் அடிப்படையிலான நிரந்தரத் தீர்வு ஒன்றை தேசிய இனப்பிரச்சினைக்குக் காண்பதற்கான வாய்ப்புக்கள் உருவாகின. ஏற்றுக்கொள்ளத்தக்க ஓர் அரசியற் தீர்வை தான் கொண்டுவருவேன் என்ற வாக்குறுதியை போர் நிகழ்ந்த காலத்திலும், போரின் முடிவிற்குப் பின்னாலும் இந்தியாவிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அரசு வழங்கியிருந்தது.

ஆனாலும், தனது அந்த வாக்குறுதிகளை மதித்து இலங்கை அரசு நடக்கவில்லை.
மாறாக கடும்போக்கான ஓர் நிகழ்ச்சித் திட்டத்தை இலங்கை அரசு முனைப்பாக முன்னெடுத்து வருகின்றது.

அதன்படிக்கு,
1. தங்களது வாழ்விடங்களாகவும், வாழ்வாதார இடங்களாகவும் தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த இலங்கையின் வடக்கு கிழக்கிலே இருக்கின்ற வளமும் பெறுமதியும் மிக்க பல்லாயிரம் ஏக்கர் நிலங்களும் அரசால் ஆக்கிரமிக்கப்படுகின்றன.

தமது சொந்த நிலங்களுக்கு மீளச்செல்ல முடியாமல் அது தமிழ் மக்களைத் தடுத்திருக்கின்றது. மக்களிடம் அவர்களது வாழ்விடங்களை மீளக்கையளிப்போம் என உச்ச நீதிமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் தான் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசு மீறுகிறது.

இதன் மூலம், தமிழ் மக்களைப் படுமோசமான ஒரு வாழ்நிலைக்குள் அது தள்ளியுள்ளது.

2. வடக்கு கிழக்கு பிராந்தியத்தின் இனப்பரம்பல் முறைமையினை மாற்றியமைக்கும் நோக்குடன், நில ரீதியான அரச உதவிகளை வழங்கி, பெரும்பான்மை இன மக்களை அரசு அங்கு முனைப்போடு குடியேற்றுகிறது.

3. வடக்கு கிழக்கில் இருக்கின்ற இந்துத் தமிழ் மக்களுக்கு மத ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த புராதன வரலாற்று இடங்களை அழித்தும், மாற்றுநிர்மாணம் செய்தும், தமிழர் நிலத்தின் பண்பாட்டு மற்றும் மொழியியல் அடையாளங்களில் அடிப்படையான மாற்றங்களை அரசு செய்கிறது.

4. மிகப் பெருவாரியான மக்களால் ஜனநாக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண அரசான, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகளையும் தடைகளையும் கொழும்பு அரசு போட்டு வருகிறது.

5. வடக்கு கிழக்கிலே வாழுகின்ற தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளையும் மனித உரிமைகளையும் தொடர்சியாக மீறுவதன் மூலம், சட்டத்திற்கு முன்னால் அவர்களுக்கு நீதியை நிராகரித்து, அவர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக அரசு தரம் தாழ்த்துகிறது.

6. வடக்கிலும் கிழக்கிலும் மக்கள் தொகையின் விகிதாசார அளவீட்டிற்கு மிக அதிகப்படியான அளவில் இருக்கின்ற இராணுவத்தின் ஆக்கிரமிப்பு பிரசன்னம், இராணுவத்திற்காக நிர்மானிக்கப்படுகின்ற நிலையான வீட்டுவசதிக் கட்டுமானங்கள், சாதாரண மக்களது வாழ்வின் மீது இடப்படுகின்ற பாரதூரமான இடையூறுகள், பெண்கள் மீதான வன்முறைகள், விவசாயம், மீன்பிடி, வணிக நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபடுகின்றமை என்பன பாரதூரமான எதிப்புணர்வு மிக்க தாக்கங்களை மக்களின் மனங்களில் ஏற்படுத்துகின்றன.

இலங்கை அரசின் இத்தகைய செயற்பாடுகள், நல்லிணக்க முயற்சிகளையும் நிரந்தர அமைதி ஏற்படும் சூழலையும் மேலும் பலவீனப்படுத்துவன மட்டுமன்றி எதிர்ப்புணர்வுகளையே உருவெடுத்து வளரச் செய்யும். இத்தகைய ஒரு நிலைமையைத் தமிழ் மக்கள் நிச்சயமாக விரும்பவில்லை. இலங்கை அரசின் இத்தகைய நடவடிக்கைகள், ஏற்றுக்கொள்ளத்தக்க ஓர் அரசியல் தீர்வை உருவாக்கி எடுப்பதில் அது விசுவாசமாக இல்லை என்பதையே தெளிவாகக் காட்டுகின்றன என்பதையும் நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இந்த விடயங்களை முடிந்தளவு விரைவாக உங்களது கவனத்திற்கு கொண்டுவருவது எங்களது கடமைப்பாடு என்று நாங்கள் கருதுகின்றோம். நாங்கள் அப்படி கருதுவது ஏனென்றால் நீதியினதும் சமத்துவத்தினதும் அடிப்படையிலான கெளரவமான ஒரு சமாதானம் எங்கள் நாட்டில் உருவாகும் என்றும் பாரத தேசம் வகிக்கின்ற பாத்திரம் அதனை உறுதிப்படுத்தும் என்றும் நாங்கள் நம்புகின்றமையால் ஆகும்.

உங்களையும் உங்கள் அரசில் அங்கம் வகிக்கும் ஏனையவர்களையும் சந்திப்பதற்கான ஒரு வாய்ப்பை உங்களால் முடிந்த அளவுக்கு விரைவாக எமக்கு வழங்குமாறும் நாம் வேண்டுகின்றோம். என்றுள்ளது.
- See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=722693044625388252#sthash.yIsPlBfa.dpuf

2014 : Virakesari ePaper 25MAY2014 வீரகேசரி

 http://epaper.virakesari.com:8080/home/index?editionId=19&editionDate=25/05/2014


--------------

2014 Uthayan ePaper 25MAY2014 உதயன்

http://euthayan.com/indexresult.php?id=28265&thrus=0#


http://euthayan.com/indexresult.php?id=28265&thrus=0#

இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் அமைக்கப்படவுள்ள விசாரணைக் குழுவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அனான் தலைவராக நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன.

சமதானத்துக்கான நோபல் பரிசு வென்றவர் கோபி அனான். இலங்கையில் நல்லிணக்கத்தையும் அமைதியையும் உருவாக்கும் நோக்குடனேயே போர்க் குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. தீர்மானம் வலியுறுத்துவதால் கோபி அனானே அந்தக் குழுவின் தலைவராக இருப்பதற்குச் சிறந்தவர் என்று தற்போதைய மனித உரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளை ஆலோசிக்கிறார் என்று தகவல்கள் கூறுகின்றன.

"கோபி அனானைத் தலைவராக நியமிப்பதில் பல அனுகூலங்கள் இருப்பதாக நவிப்பிள்ளை கருதுகிறார். அவரைப் போன்ற ஒருவரை இலங்கை அரசு வெகு சுலபமாகப் புறங்கூறி ஒதுக்கிவிட முடியாது.

அதே நேரத்தில் இலங்கைக்கு உள்ளே விசாரணைகளை நடத்த அனான் விரும்பினால் அதனை மறுப்பதும் இலங்கை அரசுக்கு தர்மசங்கடமானது. மீறி தடை விதிக்கப்பட்டால் அது சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும்'' என்று ஐ.நா. வட்டாரங்கள் கூறுகின்றன.
 ===================================================================

இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் அமைக்கப்படவுள்ள விசாரணைக் குழுவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அனான் தலைவராக நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன. 
சமதானத்துக்கான நோபல் பரிசு வென்றவர் கோபி அனான். இலங்கையில் நல்லிணக்கத்தையும் அமைதியையும் உருவாக்கும் நோக்குடனேயே போர்க் குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. தீர்மானம் வலியுறுத்துவதால் கோபி அனானே அந்தக் குழுவின் தலைவராக இருப்பதற்குச் சிறந்தவர் என்று தற்போதைய மனித உரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளை ஆலோசிக்கிறார் என்று தகவல்கள் கூறுகின்றன.
"கோபி அனானைத் தலைவராக நியமிப்பதில் பல அனுகூலங்கள் இருப்பதாக நவிப்பிள்ளை கருதுகிறார். அவரைப் போன்ற ஒருவரை இலங்கை அரசு வெகு சுலபமாகப் புறங்கூறி ஒதுக்கிவிட முடியாது. 
அதே நேரத்தில் இலங்கைக்கு உள்ளே விசாரணைகளை நடத்த அனான் விரும்பினால் அதனை மறுப்பதும் இலங்கை அரசுக்கு தர்மசங்கடமானது. மீறி தடை விதிக்கப்பட்டால் அது சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும்'' என்று ஐ.நா. வட்டாரங்கள் கூறுகின்றன. 
அண்மையில் சிரியா
- See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=763663044425756809#sthash.uzWIQaOj.dpuf

வெள்ளி, 23 மே, 2014

Oru Paper - Issue 218_23MAY2014 ஒரு பேப்பர்

https://docs.google.com/viewer?url=http://www.orupaper.com/Uploads/epaper/200_225/Issue_218.pdf 


 ஒரு பேப்பர் ( Oru Paper )

‘Oru Paper’ is a Free bi-lingual Fortnightly Newspaper of Tamilnadu & Srilankan Tamil Community. It is published from London since 2004 by Oru Paper Ltd. on the 1st and 3rd Fridays of each month.

====================================================

2014 : ‘‘தமிழக மக்களின் உணர்வுகளை காயப்படுத்தி உள்ளது’’ - ஜெயலலிதா கடும் எதிர்ப்பு

மோடி பதவி ஏற்பு விழா ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததற்கு
 
முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு 
 
‘‘தமிழக மக்களின் உணர்வுகளை காயப்படுத்தி உள்ளது’’
நரேந்திரமோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு, இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இந்த நடவடிக்கை, தமிழக மக்களின் உணர்வுகளை காயப்படுத்தி உள்ளது என்று அவர் கூறி இருக்கிறார்.

 

வியாழன், 22 மே, 2014

மோடி விழாவில் ராஜபக்சே - வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போலிருக்கிறது: முதல்வர் ஜெ. கண்டனம்!


மே 22, 2014

நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் இலங்கை ராஜபக்சேவை அழைத்ததற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புதிய மத்திய அரசின் இந்த முடிவு தமிழக மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியிருப்பதுடன் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதாக இருக்கிறது என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கை:

புதிய பாரதப் பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு இந்தியாவின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு அந்த அழைப்பை ஏற்று இலங்கை அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்ற கவலை தரும் செய்தியை ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன்.

இலங்கை தமிழர் பிரச்சனையில் தமிழ்நாட்டு மக்கள் மற்றும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்கள் ஆகியோரின் மன எழுச்சி, கொந்தளிப்பு அனைவரும் நன்கு அறிந்தவையே. நாடாளுமன்ற மக்களவைக்கு பொதுத்தேர்தல் நடைபெற்று ஒரு சில நாட்களில் புதிய மத்திய அரசு பதவியேற்க இருக்கிறது என்றாலும் இந்த மாற்றம், தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு இடையே ஏற்கெனவே உள்ள இறுக்கமான உறவில் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதியில், இலங்கை ராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள், இனப்படுகொலை மற்றும் இன அழிப்பு ஆகியவை குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை இந்த நாடே, ஏன் இந்த உலகமே நன்கு அறியும்.

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்று நாங்கள் கோரிக்கை விடுத்ததோடு, போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை புரிந்தவர்களை சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தி, விசாரணைக்கு அவர்களை உட்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் ஒன்றை இந்தியா முன்னின்று கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

ஆனால் முன்பிருந்த மத்திய அரசு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றிய தீர்மானங்களின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தி தமிழர்களின் உணர்வுகளை மிதித்துவிட்டது. புதிதாக மத்தியில் அமையவிருக்கும் அரசு, தமிழர்கள் தொடர்பான பிரச்சனைகளில் பரிவுடன் செயல்படுமென்றும் தமிழ்நாட்டுடன் நட்புணர்வு பாராட்டும் என்றும் நாங்கள் நம்பினோம்.

ஆனால் புதிய பிரதமரும் புதிய மத்திய அரசும் பதவியேற்று செயல்படத் தொடங்குவதற்கு முனன்ரே, இந்திய பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை அதிபருக்கு அழைப்பு விடுத்திருக்கிற இந்த துர்பாக்கியமான செயல், தமிழ்நாட்டு மக்களை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய உணர்வுகளை மீண்டும் காயப்படுத்தியுள்ளது.

இந்த செயல் வெந்த புண்ணில்வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது. புதியதாக மத்தியில் அமைய உள்ள அரசிடம் இதனை மிகுந்த மன வேதனையுடன் நாங்கள் சுட்டிக்காட்ட விழைகிறோம். தவறான ஆலோசனையின் பேரில் அமைந்த இந்த செயல் தவிர்க்கப்பட்டிருந்தால் புதிதாக அமையவுள்ள அரசு மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியவற்றுக்கு இடையேயான உறவு சிறப்புடையதாக இருந்திருக்கும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தமது அறிக்கையில் கூறியுள்ளார்.


2014 Uthayan epaper 22MAY2014

 http://euthayan.com/indexresult.php?id=28203&thrus=0

சனி, 17 மே, 2014

2014 Uthayan ePaper 17MAY2014 உதயன்


உதயன் 

epaper   http://euthayan.com/  

website      http://onlineuthayan.com/
 

  http://euthayan.com/indexresult.php?id=28078&thrus=0
  http://euthayan.com/indexresult.php?id=28079&thrus=1

2014 MakkalOsai ePaper 2014MAY17 மக்கள் ஓசை


மக்கள் ஓசை  :    http://makkalosaionline.com/2014 Thinakkural ePaper 17MAY2014 தினக்குரல்

http://epaper.thinakkural.lk/

தினக்குரல் ( 17May2014 )
-------------------------------------------------------------------------------

2014 : Election : ADMK அண்ணா தி.மு.க வரலாற்று சாதனை !


தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. 37 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது.

அ.தி.மு.க. தனித்து போட்டி

இந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியிலும் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டது. 

எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் அ.தி.மு.க. துணிச்சலுடன் தனித்து களம் இறங்கியதுமுதல்-அமைச்சர் ஜெயலலிதா மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, அ.தி.மு.க. அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்டார். அவரது உரையை கேட்க லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர்.37 தொகுதிகளில் வெற்றிதேர்தல் முடிவுகள் நேற்று வெளியாயின. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. 37 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று மகத்தான சாதனை படைத்து உள்ளது.தமிழ்நாட்டில் கன்னியாகுமரி தொகுதியில் பாரதீய ஜனதாவும், தர்மபுரி தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரசும் வெற்றி பெற்றன. இந்த 3 தொகுதிகள் தவிர மற்ற 37 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிவாகை சூடினார்கள். 


இது, இதற்கு முன் எப்போதும் கிடைக்காத வெற்றி ஆகும். எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் கூட அ.தி.மு.க. இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றது இல்லை.

வரலாற்று சாதனைகடந்த 2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து 33 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. 

அதன்பிறகு 2009-ம் ஆண்டு தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி, ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 23 தொகுதிகளில் போட்டியிட்ட அந்த கட்சி 9 தொகுதிகளை கைப்பற்றியது. ஆனால் இந்த தேர்தலில் தனித்து களம் இறங்கிய அ.தி.மு.க. 37 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது.

 இது ஒரு வரலாற்று சாதனை ஆகும்.

அ.தி.மு.க. வென்ற தொகுதிகள்

அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்ற தொகுதிகள் வருமாறு:-

1. திருவள்ளூர் - டாக்டர் வேணுகோபால்
2. வடசென்னை- டி.ஜி.வெங்கடேஷ்பாபு
3. தென்சென்னை- டாக்டர் ஜெ.ஜெயவர்தன்
4. மத்திய சென்னை- எஸ்.ஆர்.விஜயகுமார்
5. ஸ்ரீபெரும்புதூர்- கே.என்.ராமச்சந்திரன்
6. காஞ்சீபுரம்- மரகதம் குமரவேல்
7. அரக்கோணம்-திருத்தணி கோ.அரி
8. வேலூர்- பா.செங்குட்டுவன்
9. கிருஷ்ணகிரி- கே.அசோக்குமார்
10. திருவண்ணாமலை- ஆர்.வனரோஜா
11. ஆரணி- செஞ்சி சேவல் வெ.ஏழுமலை
12. விழுப்புரம்- எஸ்.ராஜேந்திரன்
13. கள்ளக்குறிச்சி- டாக்டர் காமராஜ்
14. சேலம்- வி.பன்னீர்செல்வம்
15. நாமக்கல்- வி.ஆர்.சுந்தரம்
16. ஈரோடு- எஸ்.செல்வக்குமார சின்னையன்
17. திருப்பூர்- வி.சத்தியபாமா
18. நீலகிரி- சி.கோபாலகிருஷ்ணன்
19. கோயம்புத்தூர்- ஏ.பி.நாகராஜன்
20. பொள்ளாச்சி- சி.மகேந்திரன்
21. திண்டுக்கல்- எம்.உதயகுமார்
22. கரூர்- மு.தம்பிதுரை
23. திருச்சி- ப.குமார்
24. பெரம்பலூர்- ஆர்.பி.மருதைராஜ்
25. கடலூர்- அருண்மொழிதேவன்
26. சிதம்பரம்- மா.சந்திரகாசி
27. மயிலாடுதுறை- ஆர்.கே.பாரதி மோகன்
28. நாகப்பட்டினம்- டாக்டர் கே.கோபால்
29. தஞ்சாவூர்- கு.பரசுராமன்
30. சிவகங்கை- பி.ஆர்.செந்தில்நாதன்
31. மதுரை- இரா.கோபாலகிருஷ்ணன்
32. தேனி- ஆர்.பார்த்திபன்
33. விருதுநகர்- டி.ராதாகிருஷ்ணன்
34. ராமநாதபுரம்- அ.அன்வர்ராஜா
35. தூத்துக்குடி- ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி
36. தென்காசி- வசந்தி முருகேசன்
37. திருநெல்வேலி- கே.ஆர்.பி.பிரபாகரன் 

 --------------------------------------------------------------------------------------------

கன்னியாகுமரி :  பொன்.ராதாகிருஷ்ணன்  ( பிஜேபி)
தருமபுரி :  அன்பு மணி இராமதாஸ்    ( ப.ம.கட்சி )

-------------------------------------------------------------------------------------------------- 

வைகோ : தோல்வி
 விருதுநகரில் போட்டியிட்ட திரு.வைகோ  தோல்வியடைந்தார் !
---------------------------------------------------------------------------------------------------- 

2014: Jaya Thanks Tamilnadu people அ.தி.மு.க வரலாற்று சிறப்பு வெற்றி ! தமிழக மக்களுக்கு " முதல்வர்" ஜெயலலிதா நன்றிவரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத்தந்த தமிழக மக்களுக்கும், உழைத்த அ.தி.மு.க. தொண்டர்களுக்கும், தோழமைக் கட்சியினருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.


சென்னை போயஸ் தோட்டத்திலுள்ள தமது இல்லத்தில் நேற்று மதியம் முதல்-அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி வருமாறு:- 

வரலாறு காணாத வெற்றி

நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை அ.தி.மு.க.வுக்கு வழங்கியுள்ள எனது அன்பார்ந்த தமிழக மக்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்கள் என் மீதும், நான் தலைமை ஏற்றிருக்கும் அ.தி.மு.க.வின் மீதும் முழுமையான நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதனை இந்தத்தேர்தல் முடிவுகள் உலகுக்கே எடுத்துக்காட்டி உள்ளன.

வாக்களித்து வரலாற்று சிறப்புமிக்க, மகத்தான வெற்றியை அளித்த தமிழக மக்களுக்கும், வாக்காளப் பெருமக்களுக்கும் மீண்டும் ஒருமுறை எனது இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  

அ.தி.மு.க.வின் தேர்தல் வெற்றிக்காக பாடுபட்ட, அ.தி.மு.க.வின் தொண்டர்கள், இந்த மகத்தான வெற்றிக்காக அல்லும் பகலும் அயராது உழைத்த எம்.ஜி.ஆர். ரத்தத்தின் ரத்தமான, என் உயிரினும் மேலான அ.தி.மு.க. உடன்பிறப்புகள், அ.தி.மு.க. கிளை செயலாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வார்டு மற்றும் அ.தி.மு.க. வட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பேரூராட்சிக்கழக நிர்வாகிகள், மற்றும் செயலாளர்கள், நகர, ஒன்றியக்கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாவட்டக்கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் பெருமக்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் கழகத்தின் சார்பில் அமைப்புகளில் பொறுப்புகள் வகிக்கும் நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


தமிழக மக்களுக்கு நன்றி

அ.தி.மு.க.வுக்காக பிரசாரத்தை மேற்கொண்டு, அ.தி.மு.க.வின் வெற்றிக்காக பாடுபட்ட தோழமைக்கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். முழுமையான முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

இருப்பினும் இந்த தேர்தல் முடிவுகள் எந்த திசையை நோக்கிச்செல்கின்றது என்பது அனைவருக்கும் தெளிவாகிவிட்டதால், இப்போது உங்களைச்சந்தித்து இந்தக்கருத்துக்களை தெரிவித்துக்கொண்டிருக்கிறேன். முதலில் இந்தத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மகத்தான, மாபெரும் வெற்றியைத் தேடித்தந்த எனது பாசமுள்ள தமிழக மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

இந்த வரலாற்று வெற்றி இணையற்ற இதுவரை நிகழ்ந்திராத ஒரு வரலாற்று வெற்றியாக, எந்தவித கூட்டணியோ, அல்லது யாருடைய மற்ற கட்சிகளின் ஆதரவோ இல்லாமல் தனித்து நின்று அ.தி.மு.க. இந்த வெற்றியை அடைந்துள்ளது.இந்த நேரத்தில் இதன் வெற்றிக்காக உண்மையாக சேவை உள்ளத்தோடு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

   3-வது பெரிய கட்சி

பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுக்கச்செய்து கவுரவப்படுத்திய தமிழக மக்களுக்கு எனது நன்றியை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக மக்கள் என் மீதும், அ.தி.மு.க. மீதும் வைத்துள்ள நம்பிக்கைக்கு பாத்திரமாக நாங்கள் நடந்து கொள்வோம் என்பதைத் தெரிவித்து, பாராளுமன்றத் மக்களவைத் தேர்தலையொட்டி அ.தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் என்னென்ன வாக்குறுதிகளை தமிழக மக்களுக்கு வழங்கியிருக்கிறோமோ, அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அ.தி.மு.க. மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. பாராளுமன்றத்தில் பொறுப்புள்ள கட்சியாக செயல்படுவோம். நிச்சயமாக கடந்த மூன்றாண்டு காலமாக பலமக்கள் நலத்திட்டங்களை நாங்கள் நிறைவேற்றியிருக்கிறோம். சதா சர்வ காலமும் மக்களைப்பற்றியே சிந்திக்கிற ஒரே இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்பதை பலமுறை நான் சொல்லியிருக்கிறேன். அதைப்போலவே மக்கள் நலனைப்பற்றி மட்டுமே சிந்திக்கிற மாநில அரசாக அனைத்திந்திய அ.தி.மு.க. அரசு விளங்குகிறது. மக்களுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தியிருக்கிறோம். அந்தத்திட்டங்களின் பயன்களெல்லாம் மக்களை சென்றடைந்திருக்கின்றன. அதனால் மக்கள் தங்கள் மகிழ்ச்சியை, தங்கள் அங்கீகாரத்தை இந்தத்தேர்தலின் மூலம் தெரிவித்திருக்கிறார்கள். மக்கள் என் மீதும் கொண்டுள்ள அளவு கடந்த அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

புதிய மத்திய அரசுக்கு வாழ்த்து

அமையவுள்ள புதிய மத்திய அரசுக்கும், புதிய பிரதமருக்கும் எனது வாழ்த்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அமையவுள்ள புதிய மத்திய அரசு தமிழகத்துடன் நட்புறவோடு செயல்படும் என்றும் நம்புகிறேன். இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார். 

-------------------------------------------------------
  

 

2014 : தேர்தல் : கட்சிகளின் நிலவரம் INDIA Party Positions


மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சி 285 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. 
பாரதீய ஜனதா கூட்டணி 335 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி 48 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த கூட்டணிக்கு கிடைத்துள்ள மொத்த இடங்கள் 62. தமிழ்நாடு, புதுச்சேரி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தனித்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர்கள் ஆரம்பம் முதல் முன்னணி பெற தொடங்கினார்கள்.தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 40 தொகுதிகளில் போட்டியிட்
 
அ.தி.மு.க. 

37 இடங்களில் வென்று வரலாற்று 
சாதனை படைத்துள்ளது.

இவ்விரு கட்சிகளையும் சாராத பிராந்திய கட்சிகள் 147 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.


Malaysia : Tamil Nesan 17May2014 தமிழ் நேசன்

https://www.facebook.com/tamilnesan1924?fref=photo

2014 : BJP Wins_Modi as PM இந்தியா : வடக்கே பிஜேபி வெற்றி ! மோடி பிரதமர்

பாராளுமன்ற தேர்தலில் 283 தொகுதிகளை கைப்பற்றிய பா.ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
புதுடெல்லி, மே.17-இந்திய ஜனநாயகத்தின் திருக்கோவில் என்று வர்ணிக்கப்படக்கூடிய பாராளுமன்றத்துக்கு 9 கட்ட தேர்தல்கள் அமைதியாக நடந்து முடிந்தன.

பெரும் எதிர்பார்ப்பு

இந்த தேர்தல் முடிவுகளை நமது நாடு மட்டுமல்லாது உலக நாடுகள் அனைத்துமே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்தன. நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புடன் 989 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தபால் ஓட்டுகள் எண்ணப்பட்ட உடன் மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது முதல் ஒரு சில மாநிலங்களை தவிர்த்து பெரும்பாலான மாநிலங்களில் பாரதீய ஜனதாவும், அதன் கூட்டணி கட்சிகளும் முன்னிலை பெற்று வெற்றி முகம் காட்டத்தொடங்கின.


தமிழ்நாடு, புதுச்சேரி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தனித்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர்கள் ஆரம்பம் முதல் முன்னணி பெற தொடங்கினார்கள்.தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 40 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. 37 இடங்களில் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.இதே போன்று கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியும், ஒடிசாவில் பிஜூ ஜனதா தளமும், மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசும் முன்னிலை பெற தொடங்கியது.


தலைவர்கள் வெற்றி

இந்த தேர்தலில் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தான் போட்டியிட்ட வதோதரா, வாரணாசி ஆகிய இரு தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து வாரணாசியில் களம் இறங்கிய ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியைத் தழுவினார். 

பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் (லக்னோ), அதன் முன்னணி தலைவர்கள் அத்வானி (காந்திநகர்), சுஷ்மா சுவராஜ் (விதிஷா), உமாபாரதி (ஜான்சி), நிதின் கட்காரி (நாக்பூர்), டாக்டர் ஹர்சவர்தன் (சாந்தினி சவுக்), பொன் ராதாகிருஷ்ணன் (கன்னியாகுமரி) உள்பட பலர் அபார வெற்றி பெற்றனர்.இதே போன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி (ரேபரேலி), துணைத்தலைவர் ராகுல் காந்தி (அமேதி), சசி தரூர் (திருவனந்தபுரம்), வீரப்ப மொய்லி (சிந்துவாரா), மல்லிகார்ஜூன கார்கே (குல்பர்கா), சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் (மெயின்புரி, அசம்கார்), வெற்றி பெற்றனர்.


கைகொடுத்த உ.பி.

இந்த தேர்தலில் உத்தரபிரதேசம் பாரதீய ஜனதாவுக்கு கைகொடுத்தது. இந்த மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றால் மத்தியில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற கணிப்பு, இம்முறையும் உண்மையாகி உள்ளது. இங்கு பாரதீய ஜனதா கட்சி 71 தொகுதிகளில் வெற்றி பெற்றது. டெல்லி, குஜராத், ராஜஸ்தான், உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களில் பாரதீய ஜனதா அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியது.

பீகார், அரியானா

ஐக்கிய ஜனதாதளத்தின் ஆட்சி நடக்கிற பீகாரிலும், காங்கிரஸ் ஆட்சி நடக்கிற அரியானாவிலும் கூட பாரதீய ஜனதா நல்லதொரு வெற்றி பெற்றிருக்கிறது. இதே போன்று வட மாநிலங்களில் சத்தீஷ்கார், ஜார்கண்ட், மத்தியபிரதேசம் மாநிலங்களிலும் பாரதீய ஜனதா கட்சி கணிசமான வெற்றி கண்டுள்ளது.
 


இறுதி நிலவரம்

முடிவில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சி 285 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. 1984-ம் ஆண்டுக்கு பிறகு இனி இந்தியாவில் கூட்டணி ஆட்சிதான் என்ற அரசியல் வல்லுனர்களின் கணிப்பை பொய்யாக்கி, தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. 

பாரதீய ஜனதா கூட்டணி 335 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.காங்கிரஸ் கட்சி 48 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த கூட்டணிக்கு கிடைத்துள்ள மொத்த இடங்கள் 62. இவ்விரு கட்சிகளையும் சாராத பிராந்திய கட்சிகள் 147 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.மோடி பிரதமர் ஆகிறார்அகில இந்திய அளவில் பாரதீய ஜனதா தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், தேர்தலுக்கு முன்பே அறிவிக்கப்பட்டபடி நரேந்திர மோடி பிரதமர் ஆகிறார். அவருக்கு பதவி விலகும் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.இந்த வெற்றியை நாடு முழுவதும் பாரதீய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
வெள்ளி, 16 மே, 2014

2014 : ADMK third Largest Party அதிமுகவுக்கு தேசிய அளவில் 3வது இடம்!


Thanks : Vikatan news.


நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அமோக வெற்றி பெற்ற அ.தி.மு.க., தேசிய அளவில் மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

16வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த மாதம் (மே) 7ஆம் தேதி தொடங்கி இந்த மாதம் 12 ஆம் தேதி வரை 9 கட்டங்களாக நடைபெற்றது. கடந்த மாதம் 24ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டது.

இதையடுத்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா தமிழகமெங்கும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அவரது பிரசாரத்தில், காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வை டெபாசிட் இழக்க வைக்க வேண்டும் என்ற கோரிக்கையே முக்கிய இடம் பிடித்திருந்தது.

இந்நிலையில், நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் அதிமுக போட்டியிட்ட 39 தொகுதிகளில் 37 தொகுதிகளில் அமோக வெற்றிபெற்றுள்ளது.  தி.மு.க.வின் முக்கிய புள்ளிகளான டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன் மற்றும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டவர்களை தோற்கடித்து அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது.

தேசிய அளவில் 3வது இடம்

இதேபோல், தேசிய அளவில்  பா.ஜ.க. பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்க உள்ளது. நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.  இரண்டாம் இடத்தை காங்கிரஸ் பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் அமோக வெற்றி பெற்ற அ.தி.மு.க. தேசிய அளவில் 3வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

ஆட்சியில் பங்கெடுக்க முடியாத வெற்றி

அதே சமயம் எந்த ஒரு கட்சியின் தயவையும் எதிர்பார்த்து ஆட்சியமைக்க கூடிய நிலையில் பா.ஜனதா இல்லை என்பதால், அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்றும் மத்திய அமைச்சரவையில் இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. "மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கிற அரசு அமைய வேண்டும்" என்றும், " செய்வீர்களா...செய்வீர்களா?"  என்றும் அவர் மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தை மக்கள் ஏற்றுக்கொண்டு அக்க்கட்சிக்கு 37 இடங்களை வாரி வழங்கிய போதிலும், அதனால் பயன் ஏற்படாத நிலைதான் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் ஜெயலலிதாவுக்கு இருக்கும் வருத்தத்தை விட, அதிமுக வெற்றிபெற்றால் மத்திய அமைச்சராகிவிடலாம் என்ற கனவில் இருந்த அக்கட்சியின் முக்கிய தலைவர்களுக்குத்தான் நிரம்ப வருத்தம் இருக்கும்.

2014 தேர்தல் : Elections அ.தி.மு.க. 37 ADMK 37 in TAMILNADU

நடந்து முடிந்த 16வது இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் இன்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அ.தி.மு.க. 37 இடங்களைக் கைப்பற்றி பெரும் வெற்றிபெற்றுள்ளது.


இந்தத் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பாரதீய ஜனதாக் கூட்டணி, இடதுசாரிகள் என தமிழ்நாட்டில் ஐந்து முனைப் போட்டி நிலவியது. ஏப்ரல் 24ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இந்த வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கான வாக்குகள் 42 மையங்களில் எண்ணப்பட்டன. அதேபோல புதுச்சேரி தொகுதிக்கான வாக்குகள் நான்கு மையங்களில் எண்ணப்பட்டன. 


பலத்த பாதுகாப்புக்கு இடையில், காலை எட்டு மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கிய நிலையில், துவக்கம் முதலே அ.தி.மு.க. முன்னிலை வகித்துவந்தது. தற்போதைய நிலவரப்படி 20 தொகுதிகளுக்கு அதிகாரபூர்வமாக முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 19 தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது. மீதமுள்ள தொகுதிகளில் 18 தொகுதிகளில் அக்கட்சி முன்னிலை வகிக்கிறது. தர்மபுரி தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் முன்னிலை வகிக்கிறார். கன்னியாகுமரி தொகுதியில் பாரதீய ஜனதாக் கட்சியின் பொன். ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றுள்ளார். புதுச்சேரியில் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸின் 2 லட்சத்து 55 வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறார்.


37 இடங்களைக் கைப்பற்றியதன் மூலம் பாரதீய ஜனதாக் கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதையடுத்து, அக்கட்சியின் தலைமையகத்திலும் முதல்வர் ஜெயல்லிதாவின் இல்லம் அமைந்திருக்கும் போயஸ்கார்டனிலும் தொண்டர்கள் காலை முதலே குவிந்தனர். அக்கட்சியின் அபார வெற்றியை, வெடிவெடித்தும் கோஷங்களை எழுப்பியும் அவர்கள் உற்சாகமாக்க் கொண்டாடினர்.
இந்த வெற்றி குறித்து பிற்பகலில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, தமிழக மக்கள் என் மீது வைத்த நம்பிக்கைகாக நாங்கள் உழைப்போம். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சியாக செயல்படுவீர்களா என்ற கேள்விக்கு பொறுப்புள்ள கட்சியாக செயல்படுவோம் என்று பதிலளித்தார் ஜெயலலிதா. அதோ போல, தன் சொந்த முயற்சியின் காரணமாகவே அ.தி.மு.க. இந்த வெற்றியைப் பெற்றிப்பதாகவம் அவர் கூறினார்.

இந்தத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி 8 இடங்களில் போட்டியிட்டு ஒரு தொகுதியை மட்டுமே வெல்லும் சூழல் காணப்பட்டாலும், நாடு முழுவதும் அக்கட்சி வெற்றிபெற்றிருப்பதையடுத்து, அக்கட்சியின் மாநிலத் தலைமையகமான கமலாலயத்தில் தொண்டர்கள் குவிந்தனர். மேளம் முழங்க வெடிவெடித்து, அவர்கள் கொண்டாடினர்
தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் தொண்டர்கள் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. இன்று நள்ளிரவுக்குள் தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

வியாழன், 15 மே, 2014

2014 LTTE விடுதலை புலிகள் மீதான தடை நீட்டிப்பு

LTTE விடுதலை புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து CONGRESS   மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது ! 
15-MAY-2014

திங்கள், 12 மே, 2014

2014 - முள்ளிவாய்க்கால் நினைவு தினம்- யாழ்.பல்கலைக்கழக ஆசிரிய சங்கம் திட்டவட்டம்!!
Banner

அரச தடைகளை தாண்டி முள்ளிவாய்க்கால் மே 18ஐ  நினைவு தினத்தினை நினைவுகூர வருமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'அன்பான எம் உறவுகளே. மே மாதம் என்றதும் எமது உறவுகள் கொத்துக் கொத்தாக தமது உயிர்களைக் காவு கொடுத்த அந்தக் காட்சிகளே எமது மனதின் முன் தோன்றும். பலர் எம் கண் முன்னாலும் இன்னும் பலர் எவ்வாறு என்று தெரியாமலும் தமது உயிர்களைக் காவு கொடுத்தனர்.

இக்கொடூரக் காட்சிகளை இதயமுள்ள எவருமே மறக்கமாட்டார்கள். இலங்கையில் இவ்வாறு பல தடவைகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்குச் சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லீம்கள் என்ற வேறுபாடு காட்டப்படவில்லை. ஆனால் 2009 மே மாதம் வன்னியில் நடந்தது போல் எந்தவொரு காலகட்டத்திலும் நடந்ததில்லை.

இங்கு குழந்தைகள், சிறுவர்கள் சிறுமியர்கள், பெண்கள், வயோதிபர்கள், நோயாளிகள், இளைஞர்கள் என எந்தவொரு பாகுபாடுமின்றி ஆயிரக்கணக்கானவர்கள் துடிதுடித்து மாண்டனர்.

எனவே மே மாதம் என்பது சொல்லொணாத் துன்பங்களை நாம் அனுபவித்த துன்பங்களில் மாதங்களில் மிகவும் துயரம் மிகுந்த மாதமாகும்.

எம்மவர்கள் மறைந்ததையிட்டு அவர்களின் இறுதிச் சடங்குகளைக்கூட நாம் செய்ய முடியவில்லை. எம்மவர் ஒருவர் இறந்துவிட்டால். வருடா வருடம் திவசம் செய்வோம். இதை அவர்கள் இறந்த திதியில் தான் செய்வோம்.

ஆனால் ஒருவர் இறந்த திதி தெரியாவிட்டால், நாம் மாயம் என்ற ஒன்றைப் பயன்படுத்தி ஒரே நாளில் செய்வோம்.அதேபோல் வன்னியில் இறந்த எமது உறவுகளுக்காக ஒருநாள் பிரார்த்திப்போம். இது இலங்கையின் சட்டத்திற்கு முரணானதொன்று இல்லை. நாம் இலங்கையின் சட்டங்களை மதிப்போம். நாம் இலங்கையின் சட்டங்களை மீறாத வகையில் எம்மவர்களை எங்கும் நினைவு கூருவோம்.

வீடுகள், பாடசாலைகள், கோவில்கள், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் அமைதியான முறையில் ஆத்மா சாந்திப் பிரார்த்தனையில் ஈடுபடுவோம். எந்தவொரு கட்டத்திலும் சட்டத்திற்கு முரணான செயல்களில் ஈடுபடாது பிரார்த்திப்போம்' என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பலாலியினில் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி நடத்திய சந்திப்பினில் பல்கலைக்கழக சமூகத்தினை இவ்வாறான நினைவு கூரல்களை நடத்தக்கூடாதென மிரட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Banner