Pages

சனி, 24 மார்ச், 2012

தீர்மானம் வெற்றி - கொண்டாடிய தமிழர் மீது இலங்கை ராணுவம் துப்பாக்கிச் சூடு


தமிழர் மீது இலங்கை ராணுவம் துப்பாக்கிச் சூடு

( தினச்சுடர் - 24March2012)

http://www.dinasudar.co.in/e_paper/krishnagiri/img/01.htm

---------------------------------------------------------------------------

இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி !!!


இலங்கைக்கு எதிரான பிரேரணை ஐ.நா. பேரவையில் வெற்றி :
ஆதரவாக 24 நாடுகள்; எதிராக 15 நாடுகள்!



ஜெனீவா, மார்ச் 22:ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்துக்கு இந்தியா உள்பட 24 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போரின்போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றம், மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.

போர்ப்படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.


மொத்தம் 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள இந்தக் கவுன்சிலில், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரியா, பெல்ஜியம், செக் குடியரசு, இத்தாலி, ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, உருகுவே உள்ளிட்ட 24 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன.


 1) தினத்தந்தி


  
 3) மக்கள் ஓசை 23-March-2012








சீனா, ரஷியா, வங்கேதசம், மாலத்தீவு, குவைத், செüதி அரேபியா, இந்தோனேசியா உள்ளிட்ட 15 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன.

8 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதையடுத்து 24 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

"மனித உரிமை தொடர்பான சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்? இது தொடர்பாக உங்களது விளக்கம் என்ன? போர்ப்படிப்பினை மற்றும் நல்லிணக்கக் குழு அறிக்கையின் பரிந்துரைகளை எவ்வாறு அமல்படுத்தப்போகிறீர்கள்?' என்று ஐ.நா. தீர்மானத்தில் இலங்கை அரசுக்கு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்காத இந்தியா, வாக்கெடுப்பில் பங்கேற்றது. முன்னதாக, "இத்தீர்மானத்தின் மீதான நடவடிக்கை, இலங்கையில் வலுக்கட்டாயமாக தலையீடு செய்வதாக இருக்கக்கூடாது; அரசியல் நல்லிணக்கம் ஏற்படுத்துகிற வகையில் இருக்க வேண்டும்' என்று இந்தியா கொண்டுவந்த திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில், நல்லிணக்கத்தைக் கொண்டு வருவதற்காக ஆலோசனையும், தொழில்நுட்ப உதவியும் ஐ.நா. அளிக்கும் என்று தெரிவித்திருந்தது. இதை, "இலங்கையின் ஒப்புதலும், அனுமதியும் பெற்ற பின்பே ஐ.நா. உதவி செய்ய வேண்டும்' என்ற திருத்தத்தை இந்தியா கொண்டு வந்தது.நாடுகளின் கருத்துகள்: முன்னதாக தீர்மானத்தை முன்மொழிந்து அமெரிக்காவின் பிரதிநிதி எய்லீன் டோனாஹோ கூறுகையில், ""மனித உரிமை மீறல் புகார் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க, போர் முடிந்து 3 ஆண்டுகள் அவகாசம் அளித்தபோதிலும், இலங்கை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிரந்தரமான அமைதி ஏற்பட நல்லிணக்க நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது அவசியம். இந்தத் தீர்மானத்தை இலங்கையின் பக்கத்து நாடான இந்தியா ஆதரிப்பதை ஆக்கப்பூர்வமான அணுகுமுறையாக நாங்கள் பார்க்கிறோம்'' என்றார்.

"இதுபோன்ற தீர்மானங்கள், ஒருநாட்டின் பிரச்னையில் மற்ற நாடுகள் தலையிடக்கூடாது என்ற கொள்கையை பலவீனப்படுத்துவதாக அமையும்' என்று சீனா, ரஷியா ஆகிய நாடுகள் கருத்துத் தெரிவித்தன."

"இலங்கை, உள்நாட்டில் தனது எதிரிகளை அச்சுறுத்தி வருகிறது; பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது. இதை நிறுத்த வேண்டும்'' என்று ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் கருத்துத் தெரிவித்தனர்."

"இலங்கையில் போர் முடிவடைந்து 3 ஆண்டுகளே ஆகியுள்ளது. மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும். இந்தத் தீர்மானம் தவறான நேரத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதன் மூலம் மனித உரிமை கவுன்சில் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது. இது வளர்ந்து வரும் நாடுகளைப் பாதிக்கும்'' என்று தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.


இந்தியாவின் நிலையில் மாற்றம்:முன்னதாக தனியொரு நாட்டுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க முடியாது என்று இந்தியா தெரிவித்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து குரல் கொடுத்தன. கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக, ஆதரவை விலக்கிக் கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. அரசியல் நெருக்கடியை அடுத்து மத்திய அரசு தனது நிலையை மாற்றிக்கொண்டது. இலங்கைக்கு எதிராக வாக்களித்துள்ளது.


----------------------



BBC Tamil - Read here  


-------------------------

திங்கள், 19 மார்ச், 2012

India 'inclined' to back UN Sri Lanka war crimes vote இலங்கைக்கு எதிரான தீர்மானம் - இந்தியா ஆதரிக்கும் !



மாலை மலர் - 19March2012


தினச்சுடர் / DinaSudar 19March




இலங்கைக்கு எதிரான தீர்மானம் - இந்தியா ஆதரிக்கும் !


India 'inclined' to back UN Sri Lanka war crimes vote ! BBC News English


அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்கத் தயார்-மன்மோகன் சிங்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்மொழிந்துள்ள தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கக் தயார் என்று பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

-----------------------------------------------------------------------
20-March தினத்தந்தி

-----------------------------------------------------------------------










-----------------

சனி, 17 மார்ச், 2012

தமிழ் நம்பர் 1 நாளிதழ் : தினத்தந்தி

தினத்தந்திக்கு வாழ்த்துக்கள் !!!

தமிழ் நம்பர் 1 நாளிதழ்  தினத்தந்தி

தமிழில் மட்டுமல்ல இந்தியாவிலும் அதிக வாசகர்களை கொண்ட நாளிதழ் ஆக எங்கள் வாழ்த்துக்கள் !


WEB தினத்தந்தி இணைய தளம் : படிக்கவும்

ePaper தினத்தந்தி இ-பேப்பர் : படிக்கவும்
 
------------------------------------------------------
 
 
reference :  IRS Q4 2011 survey  ( Best media info ) . Thanks.

வெள்ளி, 9 மார்ச், 2012

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானத்தை முன்வைத்துள்ளது


ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத் தொடரில் - இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானத்தை முன்வைத்துள்ளது.







புதன், 7 மார்ச், 2012

காங்கிரஸ் படு தோல்வி !

காங்கிரஸ்   படு தோல்வி


மக்கள் ஓசை 7-march

http://216.15.199.42/makkalosai/showtext.aspx?parentid=18387&boxid=223144531&issue=732012




2)


----

சனி, 3 மார்ச், 2012

இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை !

 இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை !
"இந்தி'யா மற்றும் சீனா இலங்கைக்கு ஆதரவு !