செவ்வாய், 18 செப்டம்பர், 2012

மத்திய அரசுக்கு ஆதரவு விலகல் : மமதா அறிவிப்பு



இந்தியாவில், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை விலக்கிக் கொள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முடிவெடுத்திருப்பதாக அக் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.


டீசல் விலை உயர்வு, மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி மூதலிட்டை அனுமதிப்பது என மத்திய அரசு எடுத்த முடிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த முடிவை எடுத்திருப்பதாக மமதா பானர்ஜி தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை மாலை கொல்கத்தாவில் மூன்று மணி நேரம் நடைபெற்ற அக் கட்சியின் உயர்நிலைக்குழுக் கூட்டத்துக்குப் பிறகு அவர் இந்த முடிவை செய்தியாளர்களிடம் அறிவிததார்.
ஆதரவை விலக்கிக் கொள்ள முடிவெடுத்திருக்கும் நிலையி்ல், வெளியில் இருந்து அரசுக்கு ஆதரவளிப்பதற்கான சாத்தியம் இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
தற்போதுள்ள மத்திய அரசு 3 அல்லது 6 மாதங்களுக்குத்தான் நீடிக்கும் என்று கூறிய மமதா பானர்ஜி, தலை துண்டிக்கப்படும்போது அந்த அரசில் தொடர்வது சாத்தியமில்லை என்று குறிப்பிட்டார்.


வெள்ளிக்கிழமை ராஜிநாமா
அவரது கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் வெள்ளிக்கிழமையன்று பிரதமரிடம் ராஜிநாமா கடிதங்களை சமர்ப்பிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
மத்திய அரசு எந்த முடிவு குறித்தும் தங்களிடம் ஆலோசனை நடத்தவில்லை என்றும், துளி கூட மரியாதை இ்ல்லை என்றும் அவர் கவலை வெளியிட்டார்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் குறித்த பிரச்சினையை திசை திருப்புவதற்குத்தாநன் அரசு அன்னிய முதலீட்டை அனுமதித்திருப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், இ்ந்தியாவில் 50 பில்லியின் ம்ககள் அமைப்புசாரா தொழிலில் , சில்லறை வணிகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றும், மத்திய அரசு சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்தால் அவர்கள் கதி என்னவாகும் என்றும் கேள்வி எழுப்பினார்.

கறுப்புப் பணத்தை திரும்பக் கொண்டுவர அரசு தயங்குவது ஏன் என்று மமதா கேள்வி எழுப்பினார்.
ஒரு கட்சி ஆதரவளிக்காவிட்டால், இன்னொரு கட்சி ஆதரவு என்று காங்கிரஸ் கட்சியின் விளையாட்டுப் பற்றி தங்களுக்கு நன்றாகவே தெரியும் என்ற அவர், அந்தக் கட்சி பிளாக்மெயில் அரசியல் நடத்துவதாகக் குற்றம் சாட்டினார்.

மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து பல போராட்டங்களை நடத்த இருப்பதாகவும், ரயில்வே அமைச்சகத்தை இழந்ததைப் பற்றி்க் கவலைப்படவில்லை என்றும் மமதா பானர்ஜி தெரிவித்தார்.

உதயன் 18/09/2012


மாலைமலர் இ-பேப்பர் - 18-Sep-2012

 

 

 

 

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

  இங்கே படிக்கவும்   <<<

மாலைமலர் இ-பேப்பர் - 18-Sep-2012 

 

 

 

ராஜபக்சேவுக்கு கறுப்புக் கொடி காட்ட ம.பி.க்கு தொண்டர்களுடன் வைகோ பேருந்தில் பயணம்



சென்னை: மத்திய பிரதேச மாநிலம் போபாலுக்கு வருகை தர உள்ள இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு கறுப்புக் கொடி காட்டுவதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொண்டர்களுடன் 15 பேருந்துகளில் அம்மாநிலத்துக்கு சென்றுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் நடைபெற உள்ள புத்த மத நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வரும் 21-ந் தேதி இலங்கை அதிபர் ராஜபக்சே வருகை தருகிறார். ஆனால் ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த ராஜபக்சேவின் வருகைக்கு தமிழக மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன் மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சி நகரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மதிமுக அறிவித்திருந்தது. ஆனால் இந்தப் போராட்டத்தைக் கைவிடுமாறு வைகோவுக்கு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அவரது கோரிக்கையை வைகோ நிராகரித்துவிட்டார். திட்டமிட்டபடி பேருந்துகளில் தொண்டர்களுடன் மத்தியப் பிரதேசம் செல்வோம் என்று வைகோ அறிவித்திருந்தார்.


காந்தி படத்துக்கு கோட்சே மாலை போடுவதா?

இதைத் தொடர்ந்து நேற்று மத்திய பிரதேசம் செல்வதற்கு முன்பாக அண்ணா நினைவிடத்துக்கு சென்ற வைகோ அங்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மத்திய அரசு நடத்தும் விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபக்சே வருவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இலங்கை தமிழர்கள் பட்ட வேதனையை உலகத் தமிழர்களிடம் எடுத்து செல்வதற்காக இந்த போராட்டத்தை நடத்துகிறோம். நாதியில்லாமல் போய்விட்டதா தமிழ் ஜாதி.


 மகாத்மா காந்தி படத்துக்கு மாலைபோட கோட்சேவை கூப்பிடுவதா?. 


இலங்கையில் வடக்கு-கிழக்கு மாகாணத்தில், தமிழர் வாழ்ந்த பகுதியில் 1,607 இந்து கோவில்களை இடித்ததாக 1993-ம் ஆண்டு இலங்கை அரசே கூறியுள்ளது. அப்படி இருக்கும்போது, இந்து கோவில்களை இடித்த இலங்கை அரசின் அதிபரை பா.ஜ.க. ஆட்சி செய்யும் மத்திய பிரதேச அரசு அழைத்திருக்கிறது. சொரணை உள்ள தமிழன் தமிழ்நாட்டில் இருக்கிறான் என்பதை காட்டவே போராட்டம் நடத்த செல்கிறோம். எங்கள் போராட்டம் அறவழியில்தான் நடக்கும். போபால் போலீஸ் எங்களை உள்ளே விடவில்லை என்றால், எல்லையிலேயே போராட்டம் நடத்துவோம்.

தமிழ்நாடு இந்தியாவில்தான் உள்ளது என்றால், மத்தியபிரதேச மக்கள் ராஜபக்சேவை உள்ளே விடாமல் விரட்ட வேண்டும் என்றார் அவர்.
அதன் பின்னர் நேற்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தின் முன்பு இருந்து, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ம.தி.மு.க. தொண்டர்கள் 600 பேர், 15 பேருந்துகளில் புறப்பட்டு சென்றனர்.

திங்கள், 17 செப்டம்பர், 2012

மாலைமலர் இ-பேப்பர் - 17-Sep-2012

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

  இங்கே படிக்கவும்   <<<

மாலைமலர் இ-பேப்பர் - 17-Sep-2012