ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

கச்சதீவை மீட்போம் ஜெயலலிதா சூளுரை

சென்னை: 


கச்சதீவு மீட்கப்பட்டு தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் நிலைநாட்டப்படும் என்பதை உறுதிபட தெரிவிப்பதாக தமிழகத்தின் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.  


அருப்புக்கோட்டையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு      இடம்பெற்ற, தேர்தலில் போட்டியிடும் 14 வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜெயலலிதா  இவ்வாறு சூளுரைத்தார். அவர் இங்கு மேலும் உரையாற்றுகையில்;  பாக்கு நீரிணைப் பகுதியில் கடல் எல்லையை தாண்டி தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர் என்று குற்றம் சாட்டப்பட்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் பிரச்சினை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  அவ்வாறு, தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம் அவர்களை விடுதலை செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் நான் எடுத்து வருகிறேன். 

 ஆனால், முன்பு ஆட்சிப் பொறுப்பில் இருந்த கருணாநிதி, மீனவர்கள் பேராசையினால் தான் கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடிக்கச் செல்கின்றனர் என்று மீனவர்களை கொச்சைப்படுத்தி பேசி உள்ளார் என்பதை மறந்துவிடாதீர்கள்.  கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்தாலும், இலங்கை அரசு மீனவர்களின் படகுகளை திரும்பக் கொடுப்பதில்லை. மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி படகுகளை திரும்பப் பெற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.  இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் கச்சதீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது தான்.  


இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சதீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வாய்மூடி மௌனியாக இருந்தவர் தான் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி.  

கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போது தான், 1974 ஆம் ஆண்டு இந்திய  இலங்கை உடன்பாட்டின்படி இலங்கைக்கு அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசால் கச்சதீவு தாரை வார்க்கப்பட்டது.  இதைத் தடுப்பதற்கு தேவையான எந்தவித நடவடிக்கையும் கருணாநிதி அப்போது எடுக்கவில்லை. அப்போதே இது தொடர்பாக கருணாநிதி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பாரேயானால் உச்சநீதிமன்றம் மூலம் கச்சதீவு 
இலங்கைக்கு தாரை வார்த்த நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை பெற்றிருக்க முடியும். பின்னர், வாதங்களின் மூலம் நமது பாரம்பரிய உரிமையை நிலைநாட்டியிருக்க முடியும்.  தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் துன்புறுத்தப்படும் நிலை எழாமலே இருந்திருக்கும். 

ஆனால், கருணாநிதி அவ்வாறு உச்சநீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார்.  கச்சதீவுப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமும் தீர்வு காணப்பட வேண்டும். உச்சநீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த வழக்கில் சாதகமான தீர்ப்பு பெற்று மீனவர்கள் பயன் பெற வேண்டும் என்பது தான் என்னைப் பொறுத்தவரை இந்த பிரச்சினையில் என்னுடைய நிலைப்பாடு.  


எனவே தான் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரு நாட்டு மீனவர்களிடையே சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதே ஆண்டு மே மாதம் கொழும்பு நகரில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.  2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் பாரம்பரிய மீன்பிடி உரிமை வலியுறுத்தப்பட்டதுடன், தமிழக மீனவர் மீதான தாக்குதல்கள் கைவிடப்பட வேண்டும் என்றும், கைது செய்யப்படும் மீனவர்கள் படகுகளுடன் விரைவாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும், இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் மீன்பிடி முறைகள் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.  இருப்பினும் எந்த முடிவுகளும் எட்டப்படவில்லை. இந்த முயற்சிகள் தொடர்ந்து நடத்தப்படும். அத்துடன், உச்சநீதிமன்றத்தின் மூலம் கச்சதீவு மீட்கப்பட்டு பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் நிலைநாட்டப்படும் என்பதை நான் உறுதிபட இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன் என்றார். - See more at: http://www.thinakkural.lk/article.php?world/fgoadwoge01367a223c6b37113712mxuer0f85df22e9377d6c4f7553makqz#sthash.hRkPyvNO.dpuf

திங்கள், 4 ஏப்ரல், 2016

ADMK 2016 : Jayalalitha contests RK Nagar Again ! ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் ஜெயலலிதா போட்டி !

ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் ஜெயலலிதா போட்டி !





தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் முதல் கட்ட பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டு வருகிறார்.
வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்கே நகர் தொகுதியில் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மீண்டும் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 227 தொகுதிகள் அதிமுக-வுக்கும், கூட்டணி கட்சிகளுக்கு 7 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதேபோல், புதுச்சேரியில் 30 தொகுதிகளில் அதிமுக களமிறங்குகிறது.

ADMK List 2016 அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக 227 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் முதல்வர் ஜெயலலிதா.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 227 தொகுதிகள் அதிமுக-வுக்கும், கூட்டணி கட்சிகளுக்கு 7 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக தேர்தல் களத்தில் பிரதான கட்சிகள் ஏதும் இன்னும் வேட்பாளர் பட்டியலை இதுவரை அறிவிக்காத நிலையில் அதிமுக சார்பில் இன்று முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் முதல்வர் ஜெயலலிதா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்
1. ஆர்.கே நகர் -  மீண்டும் ஜெயலலிதா போட்டி
2. பண்ருட்டி - சத்யா பன்னீர்செல்வம்;
3. .கடலூர் - எம்.சி. சம்பத்;
4. குறிஞ்சிப்பாடி - சொரத்தூர் ராஜேந்திரன்
5. புவனகிரி -  செல்வி ராமஜெயம்;
6. சிதம்பரம் - கே.ஏ. பாண்டியன்
7. திருச்சி - ஆர். மனோகரன்;
8. திருவெறும்பூர் - கலைச்செல்வன்
9. பெரம்பலூர் - இரா. தமிழ்ச்செல்வன்;
10. குன்னம் - ஆர்டி ராமச்சந்திரன்

11. திருச்செந்தூர் -  நடிகர் சரத்குமார்
12. திருவாடனை- நடிகர் கருணாஸ்
13. ஆத்தூர் - நத்தம் விஸ்வநாதன்;
14. நிலக்கோட்டை - ஆர். தங்கதுரை
15. திண்டுக்கல் - சீனிவாசன்;
16. நத்தம் - ஷாஜகான்
17. வேடசந்தூர் - டாக்டர் வி.பி.பி. பரமசிவம்
18. அரவக்குறிச்சி - செந்தில்பாலாஜி
19. கரூர்- விஜயபாஸ்கர்; கீதா- கிருஷ்ணராயபுரம்

20. கிணத்துகடவு- சண்முகம்
21. பொள்ளாச்சி - பொள்ளாச்சி ஜெயராமன்
22. வால்பாறை - கஸ்தூரி வாசு
23. உடுமலை - உடுமலை ராதாகிருஷ்ணன்
24. கோவை தெற்கு - அர்ச்சுணன்;
25. சிங்காநல்லூர் - சிங்கை முத்து
26. கோவை வடக்கு - அருண்குமார்
27. தொண்டாமுத்தூர் - வேலுமணி
28. பல்லடம் - ஏ. நடராஜன்
29. திருப்பூர் தெற்கு - குணசேகரன்
30. சூலூர்- ஆர். கனகராஜ்
31. கவுண்டம்பாளையும் - விசி ஆறுக்குட்டி

32. உதகை - வினோத்
33. கூடலூர்- கலைச்செல்வன்
34. குன்னூர் - ராமு

35. மேட்டுப்பாளையம் - ஓ.கே.சின்னராஜ்
36. அவினாசி - ப. தன்பால்
37. திருப்பூர் வடக்கு - விஜயகுமார்
38. கோபி - கே.ஏ. செங்கோட்டையன்
39. பவானிசாகர்- ஈஸ்வரன்
40. பவானி- கருப்பணன்

41. அந்தியூர்- ராஜா கிருஷ்ணன்
42. மொடக்குறிச்சி- வி.பி. சுப்பிரமணி
43. தாராபுரம்- பொன்னுசாமி
44. பெருந்துறை - தோப்பு வெங்கடாசலம்

45. மயிலாப்பூர் -  முன்னாள் டிஜிபி நட்ராஜ்
46. ஆயிரம் விளக்கு வளர்மதி
47. சேப்பாக்கம்- நூர்ஜஹான்;

48. மனிதநேய ஜனநாயக கட்சிக்கு நாகை, ஒட்டன்சத்திரம்

49. திருச்செந்தூர் - நடிகர் சரத்குமார்
50. திருவாடனை - நடிகர் கருணாஸ்

51. விக்கிரவாண்டி- சேவல் ஆர் வேலு
52. உளுந்தூர்பேட்டை- குமரகுரு
53. திருக்கோயிலூர் சேவல் ஜி. கோதண்டராமன்
54. சங்கராபுரம் - ராஜசேகர்
55. கள்ளக்குறிச்சி - பிரபு

56. போடிநாயக்கனூர் - ஓ. பன்னீர்செல்வம்
57. ஆத்தூர் - நத்தம் விஸ்வநாதன்
58. வானூர்- எம். சக்கரபாணி;
59. விழுப்புரம்- சி.வி. சண்முகம்
60. மைலம்- அண்ணாதுரை;

61.திண்டிவனம்; எஸ்பி ராஜேந்திரன்
62. வந்தவாசி- மேகநாதன்;
63. செஞ்சி- கோவிந்தசாமி
64. ஆரணி- சேவூர் ராமச்சந்திரன்;
65. செய்யார்; தூசி கே. மோகன்
66. கலசப்பாக்கம்- பன்னீர்செல்வம்-
67. போளூர்- சி.எம். முருகன்
68. தருமபுரி- பு. தா. இளங்கோவன்;
69. அரூர்- ஆர்.ஆர். முருகன்
70. செங்கம்- எம். தினகரன்

71. திருவண்ணாமலை- கே. ராஜன்
72. கீழ்பென்னாத்தூர்- கே. செல்வமணி
73. பர்கூர்- சி.வி.ராஜேந்திரன்
74. ஊத்தங்கரை- மனோரஞ்சிதம் நாகராஜ்
75. தளி- நாகேஷ்;
76. ஓசூர்- பாலகிருஷ்ணாரெட்டி;
77. ராயபுரம் - டிஜெயக்குமார்
78. பென்னாகரம்- வேலுமணி;
79. பாலக்கோடு- அன்பழகன்

80. ஆலந்தூர்- பண்ருட்டி ராமச்சந்திரன்
81. வாணியம்பாடி- டாக்டர் நீலோபர் கபீல்;
82. ஆம்பூர்- ஆர். பாலசுப்பிரமணி
83 கீழ்வைத்தியநாதன்குப்பம்- லோகநாதன்
84. குடியாத்தம்- ஜெயந்தி பத்மநாபன்
85. ராணிப்பேட்டை- சுமைதாங்கி ஏழுமலை
86. ஆற்காடு- கேவி ராமதாஸ்
87. வேலூர்- நீலகண்டன்;
88. அணைக்கட்டு - ம. கலையரசு
89. காஞ்சிபுரம்- மைதிலி திருநாவுக்கரசி
90. அரக்கோணம்- கோ.சி. மணிவண்ணன்

91. செங்கல்பட்டு- கமலகண்ணன்;
92. திருப்போரூர்- கோதண்டபாணி
93. செய்யூர்- முனுசாமி;
94. உத்திரமேரூ - வாலஜாபாத் கணேசன்
95. பல்லாவரம்- இளங்கோவன்
96. தாம்பரம்- சிட்லபாக்கம் ராசேந்திரன்
98. ஆம்பூர்- பாசுப்பிரமணி
99. ஜோலார்பேட்டை- கேசி வீரமணி
100. திருப்பத்தூர்- டிடி குமார்

101. ஊத்தங்கரை- மனோரஞ்சிதம் நாகராஜ்
102. அண்ணநகர்- கோகுல இந்திரா
103. விருகம்பாக்கம்- விருகை ரவி
104. சைதாப்பேட்டை- பொன்னையன்
105. தி.நகர்- சரஸ்வதி
106. எழும்பூர்- பரிதி இளம்வழுதி;
107. துறைமுகம்- சீனிவாசன்
108. வில்லிவாக்கம்- தாடி ம. ராசு
109. திருவிக நகர்- நீலகண்டன்
110. மாதவரம்- தட்சிணாமூர்த்தி
111. பெரம்பூர்- வெற்றிவேல்
112. கொளத்தூர்- ஜேசிடி பிரபாகர்
113. ஆவடி- க. பாண்டியராஜன்
114. அம்பத்தூர் - அலெக்சாண்டர்
115. திருத்தணி நரசிம்மன்
116. திருவள்ளூர் - பாஸ்கரன்

2016 ADMK இன்று அ. தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் தொண்டர்களிடையே பரபரப்

மிழக சட்டசபை தேர்தலையொட்டி அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், இன்று 12.15 மணியளவில் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வருகிற  மே 16ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை முடித்து தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. தி.மு.க. முகாமில் நேர்காணல் முடிந்து, கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதிப் பங்கீடு என பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 

அதிமுகவில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் சென்னையில் நேர்காணல் நடந்து வருகிறது. கடந்த மார்ச் 6ம் தேதி முதற்கட்ட நேர்காணல் நடைபெற்றது. 2ம் கட்ட நேர்காணல் கடந்த 21ம் தேதி தொடங்கியது. போயஸ்கார்டனில் இன்று 14வது நாளாக நேர்காணல் நடைபெறுகிறது விடுபட்ட தொகுதிகளுக்கு இன்று நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் போயஸ்கார்டனில் அதிமுகவினர் பலரும் குவிந்துள்ளனர். 

அதிமுகவில் வேட்பாளர்கள் தேர்வுக்கான நேர்காணல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் அமாவாசை தினமான ஏப்ரல் 7ம்தேதி தேர்தல் அறிக்கையும், ஏப்ரல் 11ம் தேதி வேட்பாளர் பட்டியலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்  அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், இன்று 12.15 மணியளவில் வெளியாகலாம் எனவும் அ.தி.மு.க வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

Maalaimalar ePaper 03-APR-2016 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  03-APRIL-2016


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !



=======================================================