Pages

ஞாயிறு, 29 மே, 2011

சிங்கப்பூர் தமிழ் முரசு: சாதனை 2011


தமிழ் முரசு: சாதனை



Saturday, May 28th, 2011



சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு, வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் விற்பனையில் தனது 75 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத சாதனையை இம்மாதம் 14ம் தேதி படைத்துள்ளது.


2011 மே 14ம் தேதி சனிக்கிழமை வெளிவந்த முரசு நாளிதழ் 29,361 பிரதிகள் விற்பனையாயின. இதற்கு முன் 2010ம் ஆண்டு ஆகஸ்டு 9ம் தேதியன்று 21,928 பிரதிகள் விற்றதே முரசின் விற்பனையில் சாதனையாக இருந்தது.


முரசு, இந்த சாதனையை “சாதனை மேல் சாதனையாக” நிகழ்த்தி இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் வார நாட்களில் சராசரி விற்பனையில் 14 விழுக்காடும் ஞாயிறு விற்பனையில் 16 விழுக்காடும் வளர்ச்சி கண்டு முரசு சாதனை படைத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக