Pages

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

கூடங்குளம் மின்சாரம் தமிழகத்துக்கே தர வேண்டும் ! ஜெயலலிதா கடிதம்




கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே தர வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் !





















சென்னை, மார்ச் 31: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரு யூனிட்டுகளிலும் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே தர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தின் விவரம்:
கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு யூனிட்டுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இரண்டிலும் சேர்த்து 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. அதில், தமிழகத்துக்கு 925 மெகாவாட் மின்சாரம் அளிக்கப்படவுள்ளது.
மத்திய மின் தொகுப்பில் இருந்து தமிழகத்துக்குக் கூடுதலாக ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டுமென்று தங்களிடம் கடந்த ஆண்டு கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால், 100 மெகாவாட் மின்சாரமே அளிக்கப்பட்டுள்ளது.






தமிழகம் கடுமையான மின் பற்றாக்குறையைச் சந்தித்து வரும் நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் அனைத்தையும் தமிழகத்துக்கே வழங்குவதுதான் சரியாக இருக்கும்.
மின்பாதையில் பிரச்னை: மேலும், வெளிமாநிலங்களில் இருந்து பெறும் மின்சாரத்தை தமிழகத்துக்குக் கொண்டு வருவதற்கான மின்பாதையில் பிரச்னை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதையும் தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.
தமிழகத்தின் கோரிக்கையை சாதகமான வகையில் பரிசீலிக்கும்படி தங்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.





-----





தினத்தந்தி





-----





தினமணி





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக