Pages

சனி, 26 மே, 2012

இலங்கை அரசின் உரிமை மீறல்களை நீண்ட பட்டியலிட்டது அமெரிக்கா



இலங்கையில் தமிழர்கள் பெரும்பாலும் வசிக்கும் பகுதிகளில் அரச படைகளினதும், அரச ஆதரவு துணை ஆயுதக்குழுக்களினதும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளே பிரதானமான மனித உரிமைப் பிரச்சினையாக உள்ளது என்று அமெரிக்கா வெளியிட்டுள்ள மனித உரிமை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
சர்வதேச மனித உரிமை நிலவரம் குறித்து அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் அறிக்கை நேற்றுமுன்தினம் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த அறிக்கையில் இலங்கையின் மனித உரிமை விவகாரம் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
 
வொஷிங்டனில் நேற்று முன்தினம் காலை அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் சுமார் 200 நாடுகளின் மனித உரிமை நிலைவரம் குறித்த 2011 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டார்.
 
இலங்கை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள 44 பக்க அறிக்கையில் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.


மேலும் படிக்க  :

1) உதயன் இணையத்தளம்

 2) உதயன் e_Paper26MAY2012


---------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக