Pages

வியாழன், 5 ஜூலை, 2012

இலங்கை விமானப்படை வீரர்களை திருப்பி அனுப்ப முதல்வர் ஜெயலலிதா / வைகோ வலியுறுத்தல்

-----------------------------------------------------




 மாலை மலர் 




--------------------------------------------------------

தாம்பரம் விமானப்படை நிலையத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒன்பது விமானப்படை வீரர்கள் பயிற்சி பெற வந்து இருக்கிறார்கள் என்ற செய்தி தமிழர்களின் நெஞ்சில் வேலைப் பாய்ச்சுவது போல அமைந்துள்ளது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறி உள்ளார்.


Thanks :  மாலைச்சுடர்

------------------------------------------------------------------------------------------

  Thinaboomi :


-----------------------
தமிழகத்திற்கு தொழில்நுட்ப பயிற்சி பெற வந்துள்ள இலங்கை விமானப்படை வீரர்களை, மத்திய அரசு திரும்ப அனுப்ப வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். ஈழத் தமிழர்களை படுகொலை செய்த சிங்கள அரசின் விமான படை வீரர்களுக்கு, மத்திய அரசு தொழில்நுட்ப பயிற்சி அளிப்பது வெந்த புண்ணில் சூட்டுக்கோல் திணிப்பது போன்ற செயலாக இருப்பதாக, வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

உடனடியாக இலங்கை விமானப்படை வீரர்களை, மத்திய அரசு திரும்ப அனுப்ப வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.


----------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக