Pages

வெள்ளி, 6 ஜூலை, 2012

தமிழகத்திலிருந்து 'சிங்கள' விமானப்படையினரை திருப்பியனுப்ப இந்தியா முடிவு





தாம்பரம் விமானப்படைப் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வரும் சிங்கள விமானப்படை அதிகாரிகளைத் திருப்பி அனுப்ப இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிங்கள விமானப்படையினருக்கு இந்திய மத்திய அரசால் -  தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கப்படுவதற்கு தமிழகத்தில் பாரிய எதிர்ப்பு எழுந்தது.

தமிழ்நாட்டில் சிங்கள விமானப்படையினருக்கு பயிற்சி அளிக்கப்படுவதை நிறுத்தக் கோரி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

அத்துடன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கட்சி வேறுபாடுகளின்றி இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே இந்திய மத்திய அரசு சிறிலங்கா விமானப்படையினருக்கு பயிற்சி அளிக்காது தமிழ்நாட்டில் இருந்து திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளதுள்ளதாக் கூறப்படுகிறது.


------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக