Pages

புதன், 1 ஆகஸ்ட், 2012

இந்தியாவிற்கு 4வது முறையாக நிதி அமைச்சரானார் ப.சிதம்பரம்





நிதி அமைச்சராக பதவியிலிருந்த பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியானதுடன் அப்பொறுப்பை கூடுதலாக பிரதமர் மன்மோகன் சிங் கவனித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மத்திய அமைச்சரவையில் மூன்று துறைகளில் மாற்றம் செய்யப்பட்டது.அதன்படி உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம், நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மின்துறை அமைச்சராக இருந்த சுஷீல்குமார் ஷிண்டே, மத்திய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது மத்திய அமைச்சரவையில் கம்பெனி விவகாரங்கள்துறை அமைச்சராக இருக்கும் வீரப்ப மொய்லி, கூடுதல் பொறுப்பாக மத்திய மின்துறையை கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பிரதமர் மன்மோகன் சிங் அளித்த பரிந்துரையின்பேரில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இதற்கான நியமன உத்தரவை பிறப்பித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



More news .............


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக