Pages

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

"ஈழம்" என்ற வார்த்தையை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது.



சென்னை:


திமுக ஆதரவுடன் டெசோ அமைப்பின் சார்பாக சென்னையில் நாளை மறுநாள் நடைபெற உள்ள ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் "ஈழம்" என்ற வார்த்தையை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது.


தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பு என்ற டெசோ 1985-ல் தீவிரமாக இயங்கியது. ஆனால் அதன் பினன்ர் அந்த அமைப்பு செயல்படவில்லை. இந்த நிலையில் ஈழத்தில் பெரும்துயர்மிகுந்த போர் முடிவுக்கு வந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென டெசோ அமைப்பை புதுப்பிப்பதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். மேலும் தமிழீழத்தை அடைவதற்காக டெசோ சார்பில் மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.


இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து பேசினார். இச்சந்திப்புக்குப் பின்னர் "தமிழீழம் கோரி" தமீழீழ ஆதரவாளர்கள் அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் போட மாட்டோம் என்று கருணாநிதி அறிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் டெசோ சார்பில் ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாடு நடத்துகிறோம் என்றார்.



இப்பொழுது "ஈழம்" என்ற வார்த்தையையே டெசோ மாநாட்டில் பயன்படுத்தக் கூடாது என்று டெசோவின் அமைப்பாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது சர்ச்சையை பெரிதாக்கியுள்ளது.




NEWS  <<<<

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக