Pages

சனி, 22 செப்டம்பர், 2012

தொடங்கியது தூத்துக்குடி துறைமுக முற்றுகை போராட்டம்



கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு  எதிரான நெல்லை, தூத்துக்குடி மக்களின் துறைமுக முற்றுகைப் போராட்டம் இன்று ( 22Sep ) நடைப் பெற்றுவருகிறது.





கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக  இடிந்தகரை  மக்கள் பல்வேறுக் கட்டங்களாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.  இன்று 22Sep நெல்லை,  தூத்துக்குடி உள்ளிட்ட மீனவ மக்கள் தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆண்கள் நேற்றே தங்கள் மீன் பிடி படகுகள் மூலம் புறப்பட்டு வீரபாண்டி பட்டினத்தில் தங்கியிருந்து விட்டு இன்று தூத்துக்குடி துறைமுக எல்லையில் முற்றுகைப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மீன்பிடி படகின் முன்புறம் தேசியக் கொடியும், பின்புறம் கறுப்புக் கோடியும் கட்டியபடி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீன்பிடித்துறை முகத்திலிருந்து 300 விசைப்படகு மற்றும் நாட்டுப்புற படகுகளில் துறைமுகம் நோக்கி அவர்கள் புறப்பட்டு சென்றுள்ளனர். தூத்துக்குடி துறைமுகத்தை கடல் வழியாக சென்று முற்றுகையிட, 5 ஆயிரம் மீனவர்களாக படகுகளில் பயணம் சென்றுள்ளனர். 

இடிந்தகரை பெண்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க, கடற்கரை சாலையில் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுமார் 1 கிலோ மீட்டருக்கும் மேலாக இவர்களின் மனித சங்கிலிப் போராட்டம் நீண்டுள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகை இட சென்ற மீனவர்களுக்கு அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க நெய்வேலி, சேலம் ஆகிய ஊர்களின் பாதுகாப்புப் படை காவல்துறையினர் வரவழைக்கப் பட்டுள்ளனர் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக