Pages

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

ராஜபக்ச வருகையை எ‌தி‌ர்‌த்த வைகோ டெல்லியில் கைது !

இல‌ங்கை ராஜப‌‌க்ச வருகையை க‌ண்டி‌த்து டெல்லியில் பிரதமர் இல்லம் நோக்கி பேர‌ணி செ‌ன்ற ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ உ‌ள்பட நூ‌ற்று‌க்கண‌க்கானவ‌ர்கள‌் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

இலங்கை ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தலைநகர் டெல்லி, திருப்பதி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டெல்லியில் பிரதமர் இல்லம் நோக்கி வைகோ தலைமையில் பேரணி மேற்கொள்ள ம.தி.மு.க.வினர் முயன்றனர். அப்போது, வைகோவை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக, எம்.பி.கணேசமூர்த்தி உள்பட 500க்கும் மேற்பட்ட மதிமுகவினர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பேரணிக்காக தயாராகினர்.

பேரணிக்கு போலீஸார் அனுமதி மறுத்துள்ள நிலையில், தடையை மீறி பேரி நடக்காமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டிருந்ததால் வைகோ கைது செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக