Tamil Newspapers & ePaper,தமிழ்ச் செய்திதாள்கள் & இ பேப்பர் ,Journaux Tamouls, Tamilisch Zeitung, Kranten, Aviser
Pages
▼
ஞாயிறு, 31 மார்ச், 2013
சனி, 30 மார்ச், 2013
வெள்ளி, 29 மார்ச், 2013
வியாழன், 28 மார்ச், 2013
புதன், 27 மார்ச், 2013
தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த சட்டப்பேரவையில் தீர்மானம்
தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கைக்கு
எதிராக தமிழகத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக, தமிழக சட்டப்
பேரவையில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய
மக்கள் கட்சி போன்ற கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு கொண்டு வந்தன. இதற்கு
பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழீழம் அமைய பொது
வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார்.
தீர்மானம் விபரம்:
“தமிழன் யாருக்கும் தாழாமல் – யாரையும்
தாழ்த்தாமல், எவரையும் சுரண்டாமல் – எவராலும் சுரண்டப்படாமல், எவருக்கும்
எசமானனாக இல்லாமல் – உலகில் எவருக்கும் அடிமையாக இல்லாமல் நல்வாழ்வு வாழ
வேண்டும் என்பதே எங்களது தலையாய கொள்கை” என்றார் பேரறிஞர் அண்ணா.
பேரறிஞர் அண்ணா அவர்களின்
பொன்மொழிக்கேற்ப, இலங்கை வாழ் தமிழர்களுக்கு நல்வாழ்வு ஏற்படுத்தித் தர
வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, இலங்கை நாட்டை “நட்பு நாடு” என்று
சொல்வதை இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும்;
இலங்கை இனப் போரின் போது நிகழ்த்தப்பட்ட
இனப் படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான
சர்வதேச புலன் விசாரணை நடத்திடவும்;
இந்த சர்வதேச விசாரணையின் அடிப்படையில்,
போர்க்குற்றம் நிகழ்த்தியவர்கள் சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு
அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்திடவும்;
தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதித்திடவும்;
ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனைக்
கருத்தில் கொண்டு “தனி ஈழம்” குறித்து இலங்கைவாழ் தமிழர்களிடமும்,
இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது
வாக்கெடுப்பு நடத்திடவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில்
தீர்மானத்தினை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்;
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.”
முதல்வர் வேண்டுகோள்:
இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தை மாணவர்கள் கைவிட வேண்டும் என்றும்,
கல்விக்கு முக்கியத்துவம் அளித்து கவனம் செலுத்தும் வகையில் போராட்டத்தை
கைவிட வேண்டும் என்றும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
----------------------------------------------
--------------------------
http://puthiyathalaimurai.tv/resolution-for-referendum-in-srilanka-tamils-moved-in-tn-assembly
சென்னையில் நடக்கும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்களுக்கு தடை
தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் அதிகரித்து வரும்
நிலையில், சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள்
விளையாடினால் பிரச்சினை மேலும் அதிகமாகும் சூழ்நிலை உருவானது. எனவே,
இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
அதில், இலங்கை வீரர்களை சென்னை போட்டிகளில் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று பி.சி.சி.ஐ.க்கு அரசு அறிவுறுத்த வேண்டும். இலங்கையைச் சேர்ந்த வீரர்கள், நடுவர்கள், அதிகாரிகள் மற்றும் களப்பணியாளர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று போட்டி அமைப்பாளர்கள் உறுதி அளித்தால் மட்டுமே, ஐ.பி.எல். போட்டிகளை தமிழ் நாட்டில் நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்கும் என்று ஜெயலலிதா திட்டவட்டமாக கூறியிருந்தார்.
இதுதொடர்பாக ஐ.பி.எல் தலைவரும் மத்திய இணை மந்திரியுமான சுக்லா கூறுகையில், “உள்ளூர் நிர்வாகத்தின் அறிவுரையை புறக்கணிக்க முடியாது. ஆனால், திட்டமிட்டபடி சென்னை மைதானத்தில் அனைத்து போட்டிகளும் நடக்கும். வேறு இடத்திற்கு மாற்ற முடியாது” என்றார்.
இந்நிலையில், தமிழகத்தில் இலங்கை வீரர்களுக்கு உள்ள எதிர்ப்பு தொடர்பாகவும், முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கை தொடர்பாகவும் இன்று ஐ.பி.எல். நிர்வாக குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, பாதுகாப்பு பிரச்சினை உள்ளதால், சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாட அனுமதிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதில், இலங்கை வீரர்களை சென்னை போட்டிகளில் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று பி.சி.சி.ஐ.க்கு அரசு அறிவுறுத்த வேண்டும். இலங்கையைச் சேர்ந்த வீரர்கள், நடுவர்கள், அதிகாரிகள் மற்றும் களப்பணியாளர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று போட்டி அமைப்பாளர்கள் உறுதி அளித்தால் மட்டுமே, ஐ.பி.எல். போட்டிகளை தமிழ் நாட்டில் நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்கும் என்று ஜெயலலிதா திட்டவட்டமாக கூறியிருந்தார்.
இதுதொடர்பாக ஐ.பி.எல் தலைவரும் மத்திய இணை மந்திரியுமான சுக்லா கூறுகையில், “உள்ளூர் நிர்வாகத்தின் அறிவுரையை புறக்கணிக்க முடியாது. ஆனால், திட்டமிட்டபடி சென்னை மைதானத்தில் அனைத்து போட்டிகளும் நடக்கும். வேறு இடத்திற்கு மாற்ற முடியாது” என்றார்.
இந்நிலையில், தமிழகத்தில் இலங்கை வீரர்களுக்கு உள்ள எதிர்ப்பு தொடர்பாகவும், முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கை தொடர்பாகவும் இன்று ஐ.பி.எல். நிர்வாக குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, பாதுகாப்பு பிரச்சினை உள்ளதால், சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாட அனுமதிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
செவ்வாய், 26 மார்ச், 2013
ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் கலந்துகொள்ள தடைவிதிக்குமாறு பிரதமர் மன்மோகனுக்கு ஜெயலலிதா கடிதம்
தமிழகத்தில் நடைபெறுகின்ற ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள்
விளையாடுவதற்கு தடைவிதிக்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்களும் தமிழர்களுக்கான ஆதரவுக்
குரல்களும் தற்போது தொடர்ந்து வருகின்றன. இப் போராட்டங்களின் போது
இலங்கையைச் சேர்ந்த எந்த விளையாட்டு வீரர்களையும் தமிழகத்துக்குள்
அனுமதிக்கக் கூடாது என்ற குரலும் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந் நிலையிலேயே முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்,
இலங்கைக்கு எதிரான தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
இதேவேளை, தமிழகத்தில் நடைபெறுகின்ற ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை
வீரர்களுக்கும் இலங்கையைச் சேர்ந்த நடுவர்களும் பங்குபற்றுவதற்கு தடை
விதிக்க இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்திற்கு அறிவுறுத்துமாறும்
குறிப்பிட்டுள்ளார்.
திங்கள், 25 மார்ச், 2013
ஞாயிறு, 24 மார்ச், 2013
சனி, 23 மார்ச், 2013
வெள்ளி, 22 மார்ச், 2013
வியாழன், 21 மார்ச், 2013
இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம் !!!
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறலுக்கு எதிராக, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.
இதில், பங்கேற்ற 47 உறுப்பு நாடுகளில், இந்தியா உட்பட 26 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். எதிராக 13 நாடுகள் வாக்களித்தன. இதையடுத்து இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது.
ஜெனிவாவில் இன்று அமெரிக்கத் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. பின்னர் திருத்தப்பட்ட தீர்மானத்தின் நகல் அனைத்து நாடுகளுக்கும் வழங்கப்பட்டது.
இதன் மீதும் சில நாடுகள் தங்களின் கருத்துகளைப் பதிவு செய்தன. பின்னர் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில், தீர்மானத்திற்கு ஆதரவாக, இந்தியா, அமெரிக்கா, ஆஸ்ட்ரியா, அர்ஜெண்டினா, பிரெசில், சிலி, கோட் திவோர், பெனின், லிபியா, சியரா லியோன், ஜெர்மனி, அயர்லந்து, இத்தலி, ஸ்பெயின், ஸ்விசர்லந்து, செக் குடியரசு, எஸ்டோனியா, மாண்டி நிக்ரோ, போலந்து, மால்தேவா குடியரசு, ருமேனியா, கவுதமாலா, பெரு, கொரியா, கோஸ்ட ரிகா ஆகிய நாடுகள் வாக்களித்தன.
அதே சமயத்தில், பாகிஸ்தான், காங்கோ, மவுரிடேனியா, உகாண்டா, ஈக்வெடார், வெனிசுவேலா, இந்தோனேஷியா, குவைத், மாலத்தீவு, பிலிப்பின்ஸ், கத்தார், தாய்லந்து, ஐக்கிய அரசு குடியரசு ஆகிய நாடுகள் அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன.
ஜப்பான், போட்ஸ்வானா, புர்கினோ ஃபாசோ, எத்தியோபியா, கஜகஸ்தான், மலேசியா, அங்கோலா, கென்யா ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன.
அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவாக 25 வாக்குகளும், எதிராக 13 வாக்குகளும், நடுநிலையாக 8 வாக்குகளும் முதலில் பதிவாகின. மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 46 மட்டுமே வந்தது. உறுப்பு நாடுகளில் ஒன்றான கபோன், கடைசியாக தீர்மானத்திற்கு ஆதரித்து வாக்களித்ததால், ஆதரவு நாடுகளின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது.
புதன், 20 மார்ச், 2013
செவ்வாய், 19 மார்ச், 2013
தினக்குரல் epaper 19March2013
தினக்குரல் epaper 19March2013
http://epaper.thinakkural.com
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
* கொழும்பு பதிப்பு ( இடது பக்கம்)/ யாழ்ப்பாணம் பதிப்பு ( வலது பக்கம்)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~