Pages

செவ்வாய், 26 மார்ச், 2013

ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் கலந்துகொள்ள தடைவிதிக்குமாறு பிரதமர் மன்மோகனுக்கு ஜெயலலிதா கடிதம்



தமிழகத்தில் நடைபெறுகின்ற ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாடுவதற்கு தடைவிதிக்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்களும் தமிழர்களுக்கான ஆதரவுக் குரல்களும் தற்போது தொடர்ந்து வருகின்றன. இப் போராட்டங்களின் போது இலங்கையைச் சேர்ந்த எந்த விளையாட்டு வீரர்களையும் தமிழகத்துக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற குரலும் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந் நிலையிலேயே முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், இலங்கைக்கு எதிரான தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

இதேவேளை, தமிழகத்தில் நடைபெறுகின்ற ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்களுக்கும் இலங்கையைச் சேர்ந்த நடுவர்களும் பங்குபற்றுவதற்கு தடை விதிக்க இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்திற்கு அறிவுறுத்துமாறும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக