Pages

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் ஓன்றரை மணி நேரம் துப்பாக்கிச் சூடு !



27-OCT-2013


கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தங்கள் மீது இலங்கைக் கடற்படையினர் ஓன்றரை மணி நேரம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கரை திரும்பிய ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தும் நோக்கில் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர். 20 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 400 படகுகளில் நேற்று காலை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், மீனவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக