Pages

ஞாயிறு, 3 நவம்பர், 2013

உதயன் 02-NOV-2013 இசை பிரியா






விடுதலைப் புலிகளின் தமிழ்ச் செய்தி அறிவிப்பாளரும், கலைஞருமான இசைப் பிரியா இறுதி யுத்த களத்தில் மோதலின் போதே கொல்லப்பட்டார் என இன்று வரை இலங்கை அரச படைத்தரப்பால் சொல்லப்படுகிறது.
ஆனால் இசைப்பிரியா எவ்வாறு கொல்லப்பட்டிருக்கலாம் என வலுவான போர்க்குற்ற வீடியோ ஆதாரங்களை நேற்று முதன்முறையாக வெளியிட்டுள்ளது பிரித்தானியாவின் சேனல் 4 ஊடகம்.

இதில் ஒரு கட்டத்தில் விடுதலைப் புலிகலின் தலைவர் பிரபாகரனின் மகளா நீ என கேள்வி எழுப்பப்படுவதும், 'ஐயோ அது நான் இல்லை' என இசைப் பிரியா பதில் கூறுவதும் பதிவாகியுள்ளது.  (முழுமையான வீடியோ கீழ் இணைக்கப்பட்டுள்ளது. இதயம் பலவீனமானவர்கள் தயவு செய்து பார்வையிட வேண்டாம்.)

காமன்வெல்த் மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் கலந்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ள நிலையில், இவ்வீடியோ ஆதாரங்கள் இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றிருப்பதற்கு மேலும் வலுவான ஆதாரங்களாக பதிவாகியுள்ளன. டேவிட் கெமரூன் மற்றும் பிற நாட்டுத் தலைவர்கள் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும். இல்லையேல் குறைந்தது  இப்போர்க்குற்றங்கள் தொடர்பில் தமது விமர்சனக் கருத்துக்களை வெளிப்படையாக அறிவியுங்கள் என இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படத்தின் இயக்குனர் கெலும் மெக்ரே தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ.04) மாலை பிரித்தானிய நேரம் மாலை 10.50 மணிக்கு இலங்கையின் கொலைக்களம் ஆவணத்திரைப்படத்தை முதன்முறையாக தனது தொலைக்காட்சியில் நேரடியாக வெளியிடுகிறது சேனல் 4 ஊடகம்.

இலங்கையின் இறுதி யுத்த மோதல் களத்தின் இறுதி 138 நாட்களை எண்ணியபடியே இத்திரைப்படம் இலங்கையின் சிவில் யுத்ததின் வரலாற்றைக் கூறுகிறது. 2009 இல் அமைதிக்கான நோபல் பரிசுக்காக இத்திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் நவம்பர் 15-17 காலப்பகுதியில் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுகிறது.

அத்துடன் No Fire Zone எனும் புதிய ஸ்மார்ட் ஃபோன் அப்ளிகேஷனையும் வெளியிட்டுள்ளது சேனல் 4 ஊடகம். இதை நீங்கள் உங்களது Google play அல்லது  iTunes டவுன்லோட் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

1956ம் ஆண்டிலிருந்து இலங்கையின் வரலாறு, யுத்தம் நடைபெற்ற புவிவியல் பிரதேசங்கள், போர்க்குற்றத்திற்கான வீடியோ ஆதாரங்கள், செவ்விகள், பார்வையாளர்களின் கருத்துக்கள் என்பவற்றை பார்வையிடலாம். ஆப்ளிகேஷனை உங்களை ஸ்மார்ட்ஃபோனுக்கு தரவிறக்கம் செய்ய இணைப்பு : http://splashurl.com/o3wdw4o

இதேவேளை இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு நீதி கோரும் பொருட்டு, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கெமரூன், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என வலியுறுத்தி இங்கிலாந்தின் தமிழ் இளைஞர் அமைப்பினர் உருவாக்கியுள்ள கையொப்ப மனு இது. இணைப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக