Pages

செவ்வாய், 12 நவம்பர், 2013

காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்: தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் தீர்மானம்

போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை நடந்த இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்றும், காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் தொடர்ந்து குரல் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக சட்டசபையிலும் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



ஆனால், இதனை புறந்தள்ளிய மத்திய அரசு, காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்பதை உறுதி செய்தது. வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் மற்றும் அதிகாரிகள் இலங்கை செல்ல உள்ளனர்.

இது தொடர்பாக விவாதிப்பதற்காக இன்று மாலை சட்டமன்ற பேரவை சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், காமன்வெல்த் மாநாட்டுக்கு குர்ஷித் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.


அப்போது அவர் பேசுகையில், காமன்வெல்த் மாநாட்டில் வெளியுறவுத் துறை மந்திரி சல்மான் குர்ஷித் உள்பட யாரும் கலந்து கொள்ளக் கூடாது. குர்ஷித்தை அனுப்பி வைப்பது தமிழக மக்களை காயப்படுத்தும். ஒட்டுமொத்த தமிழர்களை காலில் போட்டு மிதிப்பதற்கு சமம். மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அரசு தனது வருத்தத்தை தெரிவிக்கிறது.



<object width="960" height="720"><param name="movie" value="//www.youtube-nocookie.com/v/g14MXlmQwtk?hl=en_US&amp;version=3"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="//www.youtube-nocookie.com/v/g14MXlmQwtk?hl=en_US&amp;version=3" type="application/x-shockwave-flash" width="960" height="720" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object>

எனவே, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். இந்தியாவில் இருந்து யாரும் பங்கேற்கக்கூடாது என்று பேரவை மீண்டும் வலியுறுத்துகிறது. இலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கவேண்டும்.
இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து 2011-ல் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், இலங்கை அரசின் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிராக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று குற்றம் சாட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக