Pages

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

இலங்கை கடற்ப்படைக்கு பொறியல் கல்வி & பயிற்சி ! - முதல்வர் ஜெயலலிதா கண்டனம்



இலங்கை கடற்ப்படைக்கு பயிற்ச்சி ! - முதல்வர் ஜெயலலிதா கண்டனம் !

இலங்கை கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கும் முயற்சிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கையில் தமிழர்களுக்கு மறுவாழ்வு என்பது கேள்விக் குறியாக உள்ளதாகவும், தமிழக மீனவர்களும் இலங்கை படையால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மீனவர்கள் மீதான தாக்குதல் தொடரும் நிலையில், இலங்கை வீரர்களுக்கு பயிற்சி தர இந்திய கடற்படை முடிவு செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே வெலிங்டனில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி தருவதை கண்டித்து 4 முறை கடிதம் எழுதியுள்ளதாகவும், இந்நிலையில் இலங்கை வீரர்க-ளுக்கு இந்தியாவில் பி.டெக் பயிற்சி அளிக்கபடும் முடிவை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் கூறியுள்ளார்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக