Tamil Newspapers & ePaper,தமிழ்ச் செய்திதாள்கள் & இ பேப்பர் ,Journaux Tamouls, Tamilisch Zeitung, Kranten, Aviser
Pages
▼
வெள்ளி, 6 டிசம்பர், 2013
நெல்சன் மண்டேலா காலமானார்
தென் ஆப்ரிக்காவின் சுதந்திர போராட்ட வீரரும்,கறுப்பின தலைவருமான நெல்சன் மண்டலோ தனது 95-வயதில் மரணமடைந்தார். கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். அவரின் மரணம் குறித்து தற்போதைய அதிபர் ஜேக்கப் ஜூமா முறைப்படி அறிவித்தார்.
பிறப்பும் இளமையும்:@@ தென்னாப்பரிக்காவில் உள்ள குலு கிராமத்தில்1918-ம் ஆண்டு ஜூலை மாதம் பிறந்த நெல்சன் மண்டேலா சிறுவயது முதல் குத்து சண்டை வீரராக அறியப்பெற்றார். இவரது முழுபெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா. லண்டன் மற்றும் தென்னாப்பரிக்காவில் படிப்பை மேற்கொண்ட பின்னர் 1941-ம் ஆண்டு சட்ட கல்வியை முடித்தார். பி்ன்னர் தங்க சுரங்கம் ஒன்றில் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து ஆப்பரிக்க தேசி்ய காங்கிரஸ் கட்சியி்ல் சேர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தினார்.
அரசியல் போராட்டம்: @@தென்னாப்பிரிக்காவில் பெரும்பான்மையினராக கறுப்பினர் வசித்த வந்த போதிலும், சிறுபான்மையினராக உள்ள வெள்ளையர்களே ஆட்சி பொறப்பு வகித்தனர். இதனை கண்ட மண்டேலா 1956ல் அறவழிப்போராட்டத்தை நடத்தினார். போரட்டத்தின் வளர்ச்சியை கண்ட அரசு மண்டேலா மற்றும் அவரின் சகாக்களை கைது செய்து சிறையி்ல் அடைத்தது. 1961-ல் சிறையை விட்டு வெளியே வந்த பின்னர் கொரில்லா போர் முறையில் போரட்டத்தை துவக்கினார். இதன் காரணமாக 1964 ஜூன் 12-ல் கைது செய்யப்பட்ட ஆயுள்தண்டனை விதி்க்கப்பட்டது.
தொடர்ந்து 27 ஆண்டுகளாக சிறை வாசத்தை அனுபவித்த பின்னர் 1990-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். அதே ஆண்டில் இந்தியாவின் பாரத ரத்னா விருதும் தொடர்ந்து அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. பின்னர் 1998-ம் ஆண்டு அதிபராக தேர்வு செய்யப்பட்டார். 99-ம் ஆண்டு வரை பதவியில் இருந்தார். இவரி்ன் பதவிக்காலத்தில் தென்னாப்பரிக்கா பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, குஜராத், உருது மொழிகளை கற்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டது. இவரின் போராட்ட முறையை கண்ட அமெரிக்க அரசு 2008-ம் ஆண்டு வரையில் தன்னுடைய நாட்டிற்கு வருவதற்கு அனுமதி வழங்கவில்லை.
மண்டேலாவின் மறைவிற்கு ஐ.நா., வின் பொது செயலாளர் பான்-கி-மூன் ,அமெரிக்க அதிபர் ஒபாமா, முன்னாள் அதிபர் பில் கிளிண்டன்உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு நாட்டு தலைவர்களும் மண்டோலாவின் மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக