Pages

வெள்ளி, 31 ஜனவரி, 2014

வேலைவாய்ப்பு இணையதளம் Dailythanthi epaper 31Jan2014





வேலைவாய்ப்பு இணையதளம்
சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்பு முதலீடுகளை உயர்த்த இந்த அரசு முனைந்துள்ளது. மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்குவது இதற்கான முன்னோடி திட்டங்களில் ஒன்றாகும். நமது இளைஞர்களை வேலைவாய்ப்பு பெற தகுதியுடைவர்களாக்குவதில் உள்ள சவால்களை எதிர்கொண்டு, அவர்களது திறன் அளவை மேம்படுத்த தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கம் என்ற தனிச்சிறப்புடைய முன்முயற்சி அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, வேலை தேடுபவர்களையும் வேலைவாய்ப்பு அளிப்பவர்களையும் இணைக்கும் தளமாக, மாநில வேலைவாய்ப்பு இணைய தளம் ஒன்று தொடங்கப்படும். வேலைவாய்ப்பு ஆலோசனைகள், பயிற்சிகள் மற்றும் பணியமர்வு உதவிகள் குறித்த தகவல்களை ஒரே இடத்தில் இது வழங்கும். மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கத்திற்காக, சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை நமது மாநிலம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கவர்னர் ரோசய்யா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக