Pages

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

தமிழீழம் அமைக்க "உலகத்த்தமிழர்"களிடம் வாக்கெடுப்பு ! ADMK Election Manifesto

மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் இலங்கை தொடர்பில் பல்வேறு விடயங்கள் அடங்கியுள்ளது.
இலங்கை உள்நாட்டுப் போரின் போது, சர்வதேச விதிமுறைகளை மீறி போர்க் குற்றங்கள் நிகழ்த்தியவர்களை, இனப் படுகொலை செய்தவர்களை சர்வதேச நீதிமன்றம் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவும்,

இலங்கை வாழ் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தவும்,

தனி ஈழம் அமைந்திட இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தவும் அ.தி.மு.க உறுதிபூண்டுள்ளது.

சட்டவிரோதமாக அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்தவும்,

தமிழக மீனவர்களின் நலன்களைக் காக்கும் வகையில், இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தையை நடத்துவதற்குரிய சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.

ஆழ்கடல் மீன்பிடிப்பு, மீன்பிடி பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமையும் என்பதால், ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்கும் வகையில், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வாங்குவதற்கு மத்திய அரசு மூலம் முழு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக மீனவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் பாதுகாக்கும் வகையில், கச்சதீவினை திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் என தமிழக முதல்வர் இன்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=262932679225704547#sthash.9LPIL3op.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக