Pages

புதன், 5 பிப்ரவரி, 2014

தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு: இலங்கை தூதரை அழைத்து கண்டனம் தெரிவிக்க வேண்டும் பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்





பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பாரம்பரியம் மிக்க பாக் ஜலசந்தி பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 57 பேரை இரு வேறு சம்பவங்களில் அவர்களது 11 படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்தது. இது குறித்து தங்களுக்கு கடந்த ஜனவரி 30-ந் தேதியும், கடந்த 3-ந் தேதியும் கடிதங்கள் எழுதி யிருந்தேன்.
கடந்த ஜனவரி 27-ந் தேதி சென்னையில் மீன வர்கள் மட்டத்தில் நடந்த பேச்சு வார்த்தையின் பே£து தமிழக மீனவர்கள் கைது  செய்யப்பட்டனர். எதிர்காலத்தில் இது பே£ன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தூதரக மூலம் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் வலியுறுத்தி இருந்தேன்.
மேலும், தாங்கள் தனிப் பட்ட முறையில் இதில் தலையிட்டு கைது செய்யப் பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.
மேற்கண்ட 2 கடிதங்கள் எழுதிய மை காய்வதற்குள் இது பே£ன்ற மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் வடக்கு மீன்பிடி பகுதியில் உள்ள ராமேசுவரம் மற்றும் மண்டபம், நாகபட்டினம் மாவட்டம் ஆறுகோட்டுதுறை மீன்பிடி பகுதியை சேர்ந்த 30 மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி 8 படகுகளுடன் கைது செய்துள்ளனர்
இச்சம்பவம் நேற்று (4-ந் தேதி) அதிகாலையில் நடந்துள்ளது. அவர்கள் அனைவரும் வருகிற 13-ந் தேதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் வடக்கு மீன்பிடி பகுதியில் உள்ள ராமேஸ்வரம் மண்டபம், நாகபட்டினம் மாவட்டம் ஆறுகோட்டுத்துறையில் இருந்து கடந்த 3-ந் தேதி 7 எந்திர படகுகள் மற்றும் ஒரு மோட்டார் படகில் இவர்கள் மீன் பிடிக்க சென்றனர். அவர்களை 4-ந் தேதி அதிகாலை பாக்ஜலசந்தி கடல் பகுதியில் இலங்கை கடற்படை கைது செய்து யாழ்ப்பாணம் மாவட்டம் கய்ட்ஸ் மாஜிஸ்திரேட்டு கோர்ட்ல் ஆஜர்படுத்தி வருகிற 13-ந் தேதி வரை காவலில் வைத்துள்ளனர்.
எதிர்காலத்தில் நமது அப்பாவி மீனவர்கள் கைது செய்யப்படுதல் மற்றும் தாக்குதல் நடவடிக்கை களில் இருந்து காக்கப்பட வேண்டும் என்ற எண்ணத் தில் எனது அரசு தமிழ்நாடு மற்றும் இலங்கை மீனவர்கள் இடையே நேரடி பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்தது.
ஆனால் இந்தியாவை சேர்ந்த தமிழக மீனவர்களின் உரிமையை காப்பதில் மத்திய அரசு கடுமையாக தோல்வி அடைந்து விட்டது. மீனவர்கள் இடையேயான பேச்சு வார்த்தை நடந்த பிறகும் இது பே£ன்ற சம்பவங்கள் நடைபெறுவது மீனவ சமுதாயத்தினரிடையே பதட்டத்தையும், அச்ச உணர்வையும் அதிகரிக்க செய்துள்ளது.
நமது மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப் படுவது எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இச்சம்பவங்கள் மீனவர்கள் மட்டத்தில் பேச்சு வார்த்தை நடத்தி உருவாக் கப்பட்ட நல்லெண்ணத்துக்கு எதிராக உள்ளது.
மீனவர்களிடையே இது பே£ன்ற பதட்டம் தொடர வேண்டும் என்பது இலங்கை அரச மற்றும் இலங்கை கடற்படையின் உண்மையான நோக்கமாக இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்சினையில் மத்திய அரசுக்கு கடும் பொறுப்பு உள்ளது. மேல்மட்ட அளவில் தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வெளியுறவு அமைச்சகம் மூலம் டெல்லியில் உள்ள இலங்கை தூதரை வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு அழைத்து கண்டனம் தெரிவிக்க வேண்டும். இதன்மூலம் நமது கடுமையான எதிர்ப்¬ப பதிவு செய்ய வேண்டும்.
இப்பிரச்சினையை எந்த வித தாமதமும் இன்றி இலங்கை அரசின் உயர் மட்ட அதிகாரிகளிடம் கொண்டு செல்ல வேண்டும் என தங்களை கேட்டுக் கொள்கிறேன்.
உடனடி நடவடிக்கை மேற் கொள்ளாவிடில் மீனவர்கள் மட்டத்தில் ஆன பேச்சு வார்த்தை நடவடிக்கைகள் தடம் புரளும் சூழ்நிலை ஏற்படும். அதனால் தமிழக மீனவர்களின் வாழ்வா தாரம் மிக மோசமான நிலைக்கு சென்று விடும்.
எனவே, கடந்த வாரம் இலங்கை கடற்படையில் கைது செய்யப்பட்ட 87 மீனவர்களையும், அவர்களது 19 மீன் பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக