Pages

சனி, 8 பிப்ரவரி, 2014

தெலுங்கானா மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் Teleganana







ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா உருவாக்குவதற்கான மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடந்த  அமைச்சரவை கூட்டத்தில் தெலுங்கானா மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது
அமைச்சர்கள் குழு அனுப்பிய மசோதாவில் சில திருத்தங்களுடன் மசோதவை அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய பின் தெலுங்கானா மசோதா குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஐதராபாத்திற்கு யூனியன் பிரதேசம் அந்தஸ்து வழங்கப்படவில்லை.
தெலுங்கானா பிரிவதால் சீமாந்திராவுக்கு பெரும் தொகை இழப்பீடாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தெலுங்கானா, சீமாந்திரா பொது தலைநகராக  ஐதாராபாத் தொடரும். ஐதாராபாத்தின் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பு ஆளுநர் வசம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மசோதா திங்களன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக