Pages

வியாழன், 6 மார்ச், 2014

ஆலந்தூர் : அதிமுக வேட்பாளர் வி.என்.பி. வெங்கட்ராமன்: ADMK Alandur



சென்னை: ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மாநகராட்சி கவுன்சிலர் வி.என்.பி வெங்கட்ராமன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆலந்தூர் எம்.எல்.ஏ.வாக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இதனால் அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். 
 அவர் ராஜினாமா செய்ததை அடுத்து அந்த பதவி காலியாக இருந்தது. இந்நிலையில் ஆலந்தூர் தொகுதிக்கு வரும் ஏப்ரபல் மாதம் 24ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. 
 
 
 
ஆலந்தூர் தொகுதிக்கான வேட்பாளரை அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார். அதன்படி ஆலந்தூர் சட்டசபை தொகுதியில் மாநகராட்சி கவுன்சிலர் வி.என்.பி வெங்கட்ராமன் போட்டியிடுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக