Pages

புதன், 30 ஏப்ரல், 2014

மாலைமலர் இ-பேப்பர் 30-APRIL-2014 Maalaimalar ePaper

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  30-APRIL-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

செவ்வாய், 29 ஏப்ரல், 2014

மாலைமலர் இ-பேப்பர் 29-APRIL-2014 Maalaimalar ePaper

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  29-APRIL-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

TN Vote : 72.8% தமிழகம், புதுச்சேரியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது; மொத்தம் 72.83 சதவீத ஓட்டுகள் பதிவானது

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நேற்று 24/04/2014 தேர்தல் நடந்தது. தமிழகம், புதுச்சேரியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் 72.83 சதவீத ஓட்டுகள் பதிவானது. பாராளுமன்றத்துக்கு 6-வது கட்ட தேர்தலாக தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. விறுவிறுப்பான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. வாக்குச்சாவடிகளில் காலை முதலே ஏராளமான ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்கு அளித்தனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்கு அளித்ததால், ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. நேரம் ஆக ஆக வெயில் அதிகரித்ததால், வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்தது. பின்னர், பிற்பகல் 4 மணிக்கு வெயிலின் தாக்கம் குறைந்த பிறகு மீண்டும் வாக்குச்சாவடியில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இதனால், வாக்குப்பதிவு மீண்டும் சுறுசுறுப்படைந்தது. சரியாக மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்தது. அப்போது வாக்குச்சாவடிகளின் முன்பு வரிசையில் நின்றிருந்த வாக்காளர்கள் அனைவரும் ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டனர். இதனால் சில வாக்குச்சாவடிகளில் இரவு 7 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. முதல் முறை வாக்காளர்கள் இந்த தேர்தலில் குறிப்பாக முதல்முறை வாக்காளர்கள் உற்சாகத்துடன் அதிக அளவில் வந்து ஓட்டுப்பதிவு செய்தனர். இதேபோல வயதானவர்கள் கூட தங்கள் உடல்நலம் பற்றி கவலைப்படாமல் ஆர்வத்துடன் வந்து ஓட்டுப்போட்டதை பார்க்க முடிந்தது. தேர்தலுக்காக விடுமுறை விடப்பட்டு இருந்ததால் அனைத்து தரப்பினரும் பெரும் அளவில் வந்து ஓட்டு பதிவு செய்தனர். 73 சதவீதம் தமிழ்நாட்டில் கடந்த 1967-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது மிக அதிகமாக 76.59 சதவீத ஓட்டு பதிவாகி இருந்தது. கடந்த 2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் 72.46 சதவீத ஓட்டு பதிவானது. நேற்று நடைபெற்ற தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் சராசரியாக 72.8 சதவீத ஓட்டுகள் பதிவானது. தர்மபுரி தொகுதியில் மிக அதிக அளவாக 81.15 சதவீத ஓட்டு பதிவானது. தென்சென்னையில் மிக குறைந்த அளவாக 59.86 சதவீத ஓட்டு பதிவாகி இருந்தது. அமைதியாக நடந்தது தேர்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். இதனால் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறாததால் போலீசார் நிம்மதி அடைந்தனர். தொகுதி வாரியாக வாக்குப்பதிவு சதவீதம் தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் சதவீதம் வருமாறு:- 1. திருவள்ளூர் (தனி)-74.75 2. வடசென்னை-64.63 3. தென்சென்னை-59.86 4. மத்திய சென்னை-62.25 5. ஸ்ரீபெரும்புதூர்-67.68 6. காஞ்சீபுரம் (தனி)-75.2 7. அரக்கோணம்-77.77 8. வேலூர்-72.32 9. கிருஷ்ணகிரி-77.74 10. தர்மபுரி-81.15 11. திருவண்ணாமலை-78 12. ஆரணி-78.66 13. விழுப்புரம் (தனி)-76.02 14. கள்ளக்குறிச்சி-78 15. சேலம்-77.29 16. நாமக்கல்-80 17. ஈரோடு-75.61 18. திருப்பூர்-76.27 19. நீலகிரி (தனி)-74.3 20. கோயம்புத்தூர்-68.94 21. பொள்ளாச்சி-72.84 22. திண்டுக்கல்-78.29 23. கரூர்-80.33 24. திருச்சி-70.43 25. பெரம்பலூர்-80.12 26. கடலூர்-80.15 27. சிதம்பரம் (தனி)-79.85 28. மயிலாடுதுறை-80 29. நாகப்பட்டினம்(தனி)-78 30. தஞ்சாவூர்-77 31. சிவகங்கை-72 32. மதுரை-67.90 33. தேனி-74 34. விருதுநகர்-75.48 35. ராமநாதபுரம்-70 36. தூத்துக்குடி-69.90 37. தென்காசி(தனி)-74.3 38. திருநெல்வேலி-67.40 39. கன்னியாகுமரி-68 40. புதுச்சேரி-82.15 மே 16-ந்தேதி வாக்கு எண்ணிக்கை வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூடி Ôசீல்Õ வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. சென்னையில், 3 தொகுதிகளில் பதிவான வாக்குகள் 3 மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன. நாடு முழுவதும் இன்னும் 3 கட்ட தேர்தல் பாக்கி உள்ளது. அந்த தேர்தல்கள் மே மாதம் 12-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால் இந்தியா முழுவதும் ஓட்டு எண்ணிக்கை மே மாதம் 16-ந்தேதி நடக்கிறது. அன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்திலேயே முடிவுகள் தெரியத் தொடங்கிவிடும். பிற்பகலுக்குள் கிட்டத்தட்ட முடிவுகள் அனைத்தும் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

மாலைமலர் இ-பேப்பர் 20-APRIL-2014 Maalaimalar ePaper

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  20-APRIL-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

சனி, 19 ஏப்ரல், 2014

மாலைமலர் இ-பேப்பர் 19-APRIL-2014 Maalaimalar ePaper

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  19-APRIL-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

மாலைமலர் இ-பேப்பர் 18-APRIL-2014 Maalaimalar ePaper

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  18-APRIL-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

வியாழன், 17 ஏப்ரல், 2014

மாலைமலர் இ-பேப்பர் 17-APRIL-2014 Maalaimalar epaper

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  17-APRIL-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

புதன், 16 ஏப்ரல், 2014

மாலைமலர் இ-பேப்பர் 16-APRIL-2014 Maalaimalar ePaper

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  16-APRIL-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

மாலைமலர் இ-பேப்பர் 15-APRIL-2014 Maalaimalar ePaper

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  15-APRIL-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

திங்கள், 14 ஏப்ரல், 2014

மாலைமலர் இ-பேப்பர் 14-APRIL-2014 Maalaimalar ePaper

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  14-APRIL-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

“காவிரி பிரச்சினையில் இரு கட்சிகளும் ( காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகள் ) தமிழக மக்களை வஞ்சிக்கின்றன”




கரூர் தொகுதி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, காவிரி பிரச்சினையில் காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆகிய இரு கட்சிகளுமே தமிழக மக்களை வஞ்சித்து வருவதாக குற்றம் சாட்டினார்.

 
கரூர், ஏப்.14- முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று, கரூர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் மு.தம்பிதுரையை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தார்.ராயனூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:- காவிரி பிரச்சினைதமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்சினையாக விளங்குவது காவிரி நதிநீர் பிரச்சினை. காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய ஆட்சியாக இருந்தாலும், பா.ஜ.க. தலைமையிலான மத்திய ஆட்சியாக இருந்தாலும், காவிரி பிரச்சினையை பொறுத்தவரையில் தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.


1998-ம் ஆண்டு எனது தலைமையிலான அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து, மத்திய கூட்டணி ஆட்சியிலும் பங்கு பெற்றது. அப்போது காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை வரப்பெறவில்லை. இடைக்கால ஆணை தான் அமலில் இருந்தது.காவிரி ஆணையம் அந்த இடைக்கால ஆணையை செயல்படுத்த அதிகாரிகள் கொண்ட ஓர் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும், அந்த அமைப்பிற்கு காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையை செயல்படுத்துகின்ற அதிகாரம் மற்றும் கர்நாடகத்தில் உள்ள அணைகளை இயக்கும் அதிகாரம் ஆகியவை வழங்கப்பட வேண்டும் என்றும் நான் கோரிக்கை வைத்தேன்.அதை செய்வதற்கு பதிலாக அன்றைய பாரத பிரதமர் வாஜ்பாய், இந்திய பிரதமரை தலைவராகவும், சம்பந்தப்பட்ட 4 மாநில முதல்-அமைச்சர்களை உறுப்பினர்களாகவும் கொண்ட காவிரி நதிநீர் ஆணையத்தை அமைத்தார். இதனை, அப்போதே நான் எதிர்த்தேன். விலகியது ஏன்?இப்படிப்பட்ட ஓர் ஆணையத்தால் எந்த பயனும் இருக்காது என்று உணர்ந்ததால் தான் அதை நான் கடுமையாக எதிர்த்தேன். அதிகாரம் படைத்த அதிகாரிகள் குழுவை மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு அமைக்க மறுத்ததால் தான், இனி அந்த அரசால் தமிழ்நாட்டிற்கு எந்த நீதியும் கிடைக்காது என்பதால் தான், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இருந்து அ.தி.மு.க. விலகி கொண்டதோடு, அந்த பா.ஜ.க. கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் 1999-ம் ஆண்டு நான் திரும்ப பெற்றேன். அப்போது, தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சி நடைபெற்றுவந்தது. அந்த தருணத்தில் பா.ஜ.க. கருணாநிதியை அணுகி காவிரி நதிநீர் ஆணையம் அமைப்பதற்கான ஒப்புதலை பெற்றது. இதனைத்தொடர்ந்து பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்த தி.மு.க. மத்திய அமைச்சரவையிலும் அங்கம் வகித்தது. நான் தெரிவித்தது போலவே காவிரி நதிநீர் ஆணையத்தால் தமிழ்நாட்டிற்கு நீதி வழங்கப்படவே இல்லை. காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையை செயல்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையையும் காவிரி நதிநீர் ஆணையத்தால் மேற்கொள்ள இயலவில்லை. அந்த அமைப்பால் தமிழகத்திற்கு எந்தவித பயனும் ஏற்படவில்லை. 


தமிழக மக்கள் வஞ்சிப்பு 

 கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும், ஆட்சி அமைக்கின்ற வாய்ப்பு சம அளவிலேயே உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் மாறி மாறி ஆட்சி அமைக்கின்றன. ஆனால், 

தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் 

காங்கிரஸ் கட்சியாலும், பா.ஜ.க.வாலும் 

ஆட்சி அமைக்கவே முடியாது. 

 தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்க முடியாது. தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் பா.ஜ.க.வாலும் ஆட்சி அமைக்க முடியாது.எனவே தான், மத்தியில் பா.ஜ.க. தலைமையில் ஆட்சி அமைந்தாலும், காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தாலும் இரு கட்சிகளிடையே வேறு எந்த பிரச்சினைகளில் மாறுபாடு இருந்தாலும், வேறு எது எப்படி இருந்தாலும் காவிரி நதிநீர் பிரச்சினையை பொறுத்தவரை பா.ஜ.க.வும், காங்கிரசும் ஒரே விதமான கொள்கையைத்தான் கடைபிடித்து வருகின்றன. 

தமிழ்நாட்டை, தமிழக மக்களை இரு கட்சிகளுமே வஞ்சித்து வருகின்றன. அதை போலவே, கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. இருந்தாலும், காங்கிரஸ் ஆட்சி இருந்தாலும், வேறு எதில் அவை மாறுபட்டு இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு காவிரி நீர் கூட திறந்து விடக்கூடாது என்பதில் இரு கட்சிகளுமே உறுதியாக உள்ளன, தீவிரமாக செயல்படுகின்றன. எனவே, காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்றால், வாக்காள பெருமக்களாகிய நீங்கள், நடைபெறவுள்ள பாராளுமன்ற மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கும் வாக்களிக்க கூடாது. பா.ஜ.க.வுக்கும் வாக்களிக்க கூடாது என்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்; ‘டெபாசிட்’ இழக்க வேண்டும்

காவிரி நதிநீர் பிரச்சினையில் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களையும், பா.ஜ.க. வேட்பாளர்களையும், இந்த தேர்தலில் அவர்கள் போட்டியிடுகின்ற அனைத்து தொகுதிகளிலும் நீங்கள் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் காவிரி நதிநீர் பிரச்சினை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. பா.ஜ.க. தலைவர்கள் இதைப்பற்றி எதுவும் பேசுவதில்லை. பா.ஜ.க. தலைவர்கள் தமிழகத்திற்குரிய காவிரி நீரை திறந்து விடுவதாக சொன்னாலே, கர்நாடக மாநிலத்தில், பா.ஜ.க.வுக்கு வாக்குகள் கிடைக்காது. தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்து விடுகிறோம் என்று பா.ஜ.க. சொன்னாலே கர்நாடகத்தில் இந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. எனவே, இதைப்பற்றி பா.ஜ.க.வினர் எதுவுமே பேச மாட்டார்கள்.பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள வைகோ, டாக்டர் ராமதாஸ் மற்றும் இதர கட்சியினர் நமக்குரிய காவிரி நதிநீரை பெறுவதற்கு பா.ஜ.க.விடம் இருந்து என்ன உத்தரவாதத்தினை பெற்றுள்ளனர்?. 

அவர்கள் தமிழக மக்களுக்கு அதனை தெரிவிக்க வேண்டும். நமக்குரிய காவிரி தண்ணீரை அளிக்காமல், நம்மை ஏமாற்றியது தான் கடந்த கால வரலாறு. நமக்கு உரிய காவிரி நீரை திறந்து விடாமல் நம்மை வஞ்சித்தது தான் கடந்த கால அனுபவம். தமிழகத்திற்கு துரோகம்எனவே, பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளால் நமது ஜீவாதார பிரச்சினையான காவிரி நதிநீர் பிரச்சினையில் எந்த தீர்வையும் காண முடியாது. அவர்களால், நமக்குரிய காவிரி தண்ணீரை பெறவே இயலாது. இது அவர்களுக்கும் தெரியும். அப்படியானால், பா.ஜ.க. உடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகள் நமக்குரிய காவிரி நதிநீர் கிடைக்காவிட்டாலும் கவலை இல்லை என்று முடிவு செய்துவிட்டார்களா? இதைவிட பெரிய துரோகம் வேறு என்ன இருக்க முடியும்? இதைவிட பெரிய துரோகம் இருக்க முடியுமா?. வாக்காளப் பெருமக்களே. காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் 

காங்கிரஸ், தி.மு.க., பா.ஜ.க. மற்றும் 

அதன் கூட்டணி கட்சிகளை வரும் 

மக்களவை பொதுத்தேர்தலில் நீங்கள் 

படுதோல்வி அடைய செய்ய வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

மாலைமலர் இ-பேப்பர் 13-APRIL-2014 Maalaimalar ePaper

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  13-APRIL-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

சனி, 12 ஏப்ரல், 2014

மாலைமலர் இ-பேப்பர் 12-APRIL-2014 Maalaimalar ePaper

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  12-APRIL-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

2014 கோடை : இயற்கை குளிர்பானங்கள்



மோர், இளநீர்,  நுங்கு,  தர்பூசணி, கம்மங்கூழ்

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

மாலைமலர் இ-பேப்பர் 11-APRIL-2014 Maalaimalar ePaper

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  11-APRIL-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !


வியாழன், 10 ஏப்ரல், 2014

மாலைமலர் இ-பேப்பர் 10-APRIL-2014 Maalaimalar ePaper

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  10-APRIL-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !


ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

மாலைமலர் இ-பேப்பர் 06-APRIL-2014 Maalaimalar Epaper

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  06-APRIL-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

சனி, 5 ஏப்ரல், 2014

மாலைமலர் இ-பேப்பர் 05-APRIL-2014 Maalaimalar ePaper

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  05-APRIL-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

மாலைமலர் இ-பேப்பர் 04-APRIL-2014 Maalaimalar ePaper

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  04-APRIL-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

வியாழன், 3 ஏப்ரல், 2014

மாலைமலர் இ-பேப்பர் 03-APRIL-2014 Maalaimalar Epaper

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  03-APRIL-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

புதன், 2 ஏப்ரல், 2014

மாலைமலர் இ-பேப்பர் 02-APRIL-2014 Maalaimalar ePaper

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  02-APRIL-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

மாலைமலர் இ-பேப்பர் Maalaimalar Epaper1-APRIL-2014

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  1-APRIL-2014


   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !