Pages

வியாழன், 19 ஜூன், 2014

மோடி இந்தி திணிப்பில் ஆர்வம் காட்டக்கூடாது கருணாநிதி அறிக்கை

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-


'பிரதமர் நரேந்திர மோடியின் முன்னுரிமைப் படி வெளியிடப் படும் ஆணை - சமூக வலைத் தளங்களில் அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன் படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் உள்துறை கேட்டுக்  கொள்கிறது” என்ற தலைப்பில் ஒரு ஆங்கில நாளேடு  அன்று செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டுமென்று கட்டளை யிடுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முதன் முறையாக முடிவெடுத்துள்ளது.
வெளிநாடுகளின் தலை வர்களுடன் உரையாடு வதற்கு இந்தி மொழியையே பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுத்துக் கொள் கிறார். அவரது விருப் புரிமையையட்டி, அரசு அதிகாரிகள் சமூக வலைத் தளங்களில் தங்க ளுடைய கருத்துகளைப் பதிவு செய்வதற்கு இந்தி மொழியையே பயன்படுத்திட வேண்டும்.

27--5--2014 அன்று மத்திய உள்துறை அமைச்சகம், அரசும் அரசு அதிகாரி களும் சமூக வலைத் தளங் களில் இந்தியைப் பயன் படுத்துவதைக் கட்டாயமாக்கி ஆணை பிறப்பித்துள்ளது. அனைத்து அமைச்சகங் கள், அரசுத் துறைகள், அரசு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஆகியவற்றில் பணிபுரியும் அதிகாரிகளும், அலுவலர்களும் “ட்விட்டர்”, ”பேஸ்புக்” போன்ற தங்களு டைய சமூக வலைத் தளங் களில் இந்தியை அல்லது இந்தி மற்றும் ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம்; ஆனால் இந்தியைப் பயன்படுத்து வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

மத்திய உள்துறை அமைச் சகத்தின் இந்த உத்தரவு அனைத்து அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டு, அது நடை முறைப்படுத்தப்படுவது உறுதி செய்யப்படுதல் வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி, “டிவிட்டரில்” இந்தி மொழியைத் தான் பயன் படுத்துகிறார் என்று ஆங்கில நாளேட்டின் செய்திக் கட்டுரையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
ஒருவரது விருப்பத்திற்கு மாறாக, அவர் மீது அர சாணையின் மூலம் இந்தி மொழியைத் திணிப்பதற் கான செயலின் ஆரம்பம்தான் இது என்பதை யாரும் மறுத்து விட முடியாது.

1938ஆம் ஆண்டில் இந்தியைக் கட்டாய பாடமாக்கிய போதும், 1965ஆம் ஆண்டில் இந்தி ஆட்சி மொழிச் சட்டம் நடைமுறைக்கு வருமென்று அறிவித்த போதும் ஏற்பட்ட பேரெழுச்சியையும், கிளர்ச் சியையும் சரித்திரம் விரி வாகப் பதிவு செய்து வைத் திருக்கிறது.

 மொழிப் போர்க் களங்கள் இன்னும் உலர்ந்து போய் விடவில்லை. “அரசியல் அமைப்புச் சட்டத்தின் 17வது பிரிவு - ஆட்சி மொழி பற்றிய பிரிவு- கட்டாயமாக அரபிக் கடலிலே தூக்கி எறியப்பட வேண்டு”மென்றும்; “நல்ல நாட்டுப் பற்றுள்ள, நுண் ணறிவுள்ள இந்தியக் குடிமக்களான தமிழ் மக்களை, கோபம் கொண்ட பிரிவினைக்காரர்களாக மாற்றும் சட்டமே இது” என்றும்; மூதறிஞர் ராஜாஜி எடுத்துரைத்து எச்ச ரித்ததை யாரும் மறந்து விடவில்லை.

4-3-1965 அன்று மாநிலங் களவையில் குடியரசுத் தலைவர் உரை மீது நடந்த விவாதத்தின்போது, பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் முன்னிலையில், பேரறிஞர் அண்ணா “மொழிப் பிரச்சினையை புனராலோசனை செய்து ஒரு திருப்திகரமான முடிவு காணும் வரை, ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சி மொழியாக நீடிக்கட்டும்; எல்லா தேசிய மொழிகளும், ஆட்சிமொழிகளாகும் வரை, ஆங்கிலம் இருக்கட்டும்; பிறகு இந்திய மொழி ஒன்று வளர்ந்து தகுதி பெற்றுத் தொடர்பு மொழியாகும் வாய்ப்பைக் காலப் போக்குக்கு விட்டு விடலாம்“” என்று அனைத்துத் தரப் பினரும் உணர்ந்து ஏற்றுக் கொள்ளும் வகையில் விளக்கியதை மறந்து விடத் தான் முடியுமா?

இந்தியத் திருநாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பேணிக்காத்து வளர்த்திடும் நோக்கில், அரசியல் சட்டம் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள மொழிகள் அனைத்தையும் சமமாகப் பாவிக்காமல், அவற்றில் ஒன்றான இந்தி மொழிக்கு மட்டும் முன்னுரிமையும், முதல் இடமும் கொடுத்திட முற்படுவது, இந்தி பேசாத இந்தியக் குடிமக்களிடையே பேதத்தைப் புகுத்தி, அவர் களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கிடும் முயற்சி யின் முதற்கட்டமாகவே கருதப்பட நேரிடும்.  இந்தியாவில் உள்ள தேசிய இனங்களின் ஒருமித்த எதிர்பார்ப்புகளை நிறைவு செய்திட ஆக்கப்பூர்வமான முயற்சிகள் அடுக்கடுக்காகத் தேவைப்படும் நிலையில், அவசரப்பட்டு தொடர்பு மொழிப் பிரச்சினையில் ஈடுபாடு காட்டுவது கால விரயத்தையும், கவனச் சிதறலையும் ஏற்படுத்தி விடும்.

எனவே பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதார வளர்ச்சியையும், சமூக மேம்பாட்டையும் முன் னெடுத்துச் செல்வதி லேயே கருத்தூன்றிச் செயல் படவேண்டுமென்பதே நாட்டின் நலன் நாடுவோர் அனைவரது விருப்பமும் வேண்டுகோளுமாகும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக