Pages

திங்கள், 9 ஜூன், 2014

Uthayan epaper 09June2014 உதயன்

http://euthayan.com/indexresult.php?id=28609&thrus=0


http://euthayan.com/indexresult.php?id=28609&thrus=0



ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 715 படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். நடுக்கடலில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது 6 சிறு ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றி வளைத்தனர்.
தமிழக மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி அட்டூழியத்தில் ஈடுபட்டனர். மீன் பிடிக்காமல் கரைக்கு திரும்பிச் செல்லுங்கள் என்று மிரட்டினார்கள். தமிழக மீனவர்கள் சிலரை அவர்கள் தாக்கவும் செய்தனர்.

பிறகு 10 விசைப்படகுகளையும் அவற்றில் இருந்த 50 தமிழக மீனவர்களையும் சிறை பிடித்து சென்றனர். அவர்களை  செவ்வாய்க் கிழமை தலை மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர்.

இதே போல் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணத்தை சேர்ந்த சுமார் 1200 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த போது 8 படகுகளுடன் 32 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். அந்த 32 மீனவர்களும் காங்கேசன் துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 82 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் தமிழக கடலோர பகுதி மீனவர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கடத்தப்பட்ட 82 மீனவர்களையும் உடனே விடுவிக்க கோரி ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இருந்து முதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையே தமிழக மீனவர்கள் 82 பேரையும் உடனே மீட்க வேண்டும். எதிர்காலத்தில் தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவதை தடுக்க நிரந்தர செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.
இதையடுத்து மத்திய அரசு இந்த பிரச்சினையில் உடனடியாக கவனம் செலுத்தியது. மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், தமிழக மீனவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தார். அவரது உத்தரவின் பேரில் கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நேற்றே இலங்கை அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது 82 மீனவர்களையும் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

இன்று கொழும்பில் உள்ள தூதரக அதிகாரிகள் இரண்டாவது நாளாக இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது இலங்கை அதிகாரிகள், ‘‘தமிழக மீனவர்கள் தினமும் எங்கள் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைகிறார்கள்’’ என்றனர்.

82 மீனவர்களையும் உடனே விடுவிப்பது பற்றி இலங்கை அதிகாரிகள் எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. என்றாலும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அக்பருதீன் கூறினார்.

இதற்கிடையே தமிழக மீனவர்கள் 82 பேரில் 36 பேர் ஊர்க்காவல்துறை கோர்ட்டிலும், 46 பேர் மன்னார் கோர்ட்டிலும் ஆஜர்படுத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இதனால் 82 மீனவர்களும் எப்போது மீட்கப்படுவார்கள் என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக