Pages

வியாழன், 17 ஜூலை, 2014

நான் பதவி விலகமாட்டேன் - வடமாகாண முதலமைச்சர் திட்டவட்டம்

நான் பதவி விலகமாட்டேன் வடக்கு முதல்வர் திட்டவட்டம்
2014-07-17 11:14:47 |

இலங்கை அரசாங்கம் வடமாகாண முதலமைச்சர் பதவி விலகவேண்டும் என எதிர்பார்க்கிறது. ஆனால், வட மாகாண மக்களும் அந்த மக்களுடைய பிரதிநிதிகளாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் என்னை பதவி விலகுமாறு கூறும் வரையில் நான் பதவி விலகப்போவதில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்.

வடமாகாண முதலமைச்சர்  விக்னேஸ்வரன் பதவி விலகப்போவதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பாக நேற்றைய  தினம் கருத்துக்கேட்டபோதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கம் நான் பதவி விலகவேண்டும் என நினைப்பதாக  கருதுகின்றேன். அதனடிப்படையிலேயே முதலமைச்சர் பதவி விலகப்போவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், நான் வடக்கு மாகாண மக்களுக்கு சேவையாற்றவே வந்திருக்கின்றேன்.
உதாரணமாக சொல்லப்போனால், ஒரு சட்டத்தரணியை ஒரு தரப்பு தமக்கு நியமித்திருக்கின்றார்கள் என்றால் அந்தக் கட்சிக்காரர் எமக்கு நீர் வேண்டாம் என அந்த சட்டத்தரணியிடம் கூறும்வரையில் அவர் தனது கட்சிக்காரரை விட்டுச்செல்ல முடியாது. அதேபோன்று என்னுடைய கட்சிக்காரர்கள் வடமாகாண மக்கள், அவர்களுடைய பிரதிநிதிகளாக இருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். எனவே அவர்கள் என்னை பதவி விலகுமாறு கூறும் வரையில் நான்  செல்லமுடியாது.

செல்லவும் போவதில்லை.மேலும் அரசாங்கம் என்னை வெளியேற்ற வேண்டும் என நினைப்பதைப்போன்று இங்கேயும் யாரும் வருவார்களானால் அவர்களாலும் என்னை வெளியேற்ற முடியாது என்பதே உண்மை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
மேலும் என்னுடைய அரசியல் வாழ்வில் உண்டாக்கப்பட்டிருக்கும் தோல்விகள், பின்னடைவுகளைக் கண்டு ஒருபோதும் பின்னடையப் போவதில்லை. நான் என்னுடைய கடமையினை சரிவரச் செய்து கொண்டிருக்கின்றேன். என்மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. நான் பதவி விலகவேண்டும் என செய்திகள் வெளியாகின்றன என்றால் நான் என்னுடைய கடமையினை சரிவரச் செய்கின்றேன் என்பதே அதன் அர்த்தமாக இருக்கும். நான் பதவி விலகிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே நான் கூறாத பல விடயங்களை கூறியதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், ஒன்றை மட்டும் தெளிவாகக் கூற விரும்புகின்றேன். நான் பொறுப்பேற்றிருக்கும் முதலமைச்சர் பதவி   தனிப்பட்ட முறையில் எனக்கு தேவையற்றது.

ஆனால், நான் மாகாண மக்களுக்கு சேவையாற்றுவதற்காக இந்தப் பதவியினை அல்லது பொறுப்பினை எடுத்திருக்கின்றேன். எனவே அதனை சரியாகவும் சிறப்பாகவும் செய்கின்றேன் என்பதையே என் மீதான பொய்யான பிரசாரங்களும் பொய்யான செய்திகளும் கோடிட்டுக் காட்டுகின்றன என்பதனை மட்டுமே என்னால் கூறிக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கும் விவகாரம் இதேவேளை, அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் கூட்டத்தில் கலந்துகொள்வீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு முதலமைச்சர் பதிலளிக்கையில், ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள அமைச்சரவைக்  கூட்டத்தின் பின்னர் முதலமைச்சர்களுக்கான கூட்டம் நடத்தப்போவதாகக் கூறியிருக்கின்றார்கள்.
மேலும் அடுத்த வாரம் அவ்வாறான கூட்டம் ஒன்றினை நடத்தப்போவதாகவும் கூறியிருக்கின்றார்கள். ஆனால், அந்தக் கூட்டத்தில் என்னால் கலந்துகொள்ள முடியாது. இங்கே எனக்கான வேலைப்பளு அதிகமாக இருக்கின்றது என்பதை நான் எழுத்து மூலமாக அறிவித்திருக்கின்றேன். எனவே அந்த விடயத்தில் பெரியளவில் சிக்கல்கள் எவையும் இல்லை என்றார்.
- See more at: http://www.thinakkural.lk/article.php?local/cx5urrwefo365614678db82811594vaiuv74f1456031fcc05a3afaf6xtpul#sthash.9mvdE5vB.dpuf
நான் பதவி விலகமாட்டேன் வடக்கு முதல்வர் திட்டவட்டம்
2014-07-17 11:14:47 | General

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக