Pages

திங்கள், 14 ஜூலை, 2014

Thinakural ePaper 14July2014 தினக்குரல்

http://epaper.thinakkural.lk/
http://epaper.thinakkural.lk/

==================================================

http://www.thinakkural.lk/

 தமிழர் தாயகத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை  நடத்தவுள்ள விசாரணைகளைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் மற்றும் சிங்கள இனவாத அமைப்புக்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொள்கின்றன. அதனை முறியடிக்கும் வகையிலும் எமக்கு நேர்ந்த அநீதிகளை நிரூபிக்கும் வகையிலும் நாம் ஆவணங்களைத் திரட்டவேண்டும்.

தமிழ் இனத்தின் மீதான இன அழிப்பு,  திட்டமிட்டவகையில் நடைபெற்றுவரும் நில ஆக்கிரமிப்புக்கள் மற்றும் சிங்களக்  குடியேற்றங்கள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் உள்ளிட்ட 3 விடங்களை நிரூபிக்கும் வகையில் அந்த ஆவணங்கள் அமையவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் மூத்ததலைவரும் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான அமிர்தலிங்கத்தின் 25 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு தமிழரசுக் கட்சியின் யாழ். அலுவலகத்தில் நேற்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நிகழ்வில் தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்; ஜ.நா. மனித உரிமைகள் ஆணையகம் நடத்தவுள்ள விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டோம் என இலங்கை அரசாங்கம் கூறிவருகின்றது. அதற்கு பலமுகங்களாக  இருக்கும் சிங்கள இனவாத அமைப்புக்களும் ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருக்கின்றன. எனவே நாம் இன அழிப்பு என வெறுமனே பேசிக்கொண்டிருப்பதில் பலனில்லை.

சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடியதொரு அமைப்பு அல்லது விசாரணைக் குழு மூலமாக எமக்கு நேர்ந்த அநீதிகளை நிரூபிக்கும் வகையில் சாட்சியங்களை வழங்கி நாம் நிரூபிக்க வேண்டும். மேற்படி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை நாங்கள் வழங்குவோம் என நாங்கள் பகிரங்கமாக பல தடவைகள் கூறியிருப்பதுடன்,சர்வதேச நாடுகளின் தூதுவர்களுக்கும், ஐ.நா. பிரதிநிதிகளுக்கும் கூறியிருக்கின்றோம். அதாவது சாட்சிகளுக்கு இந்தநாட்டில் பாதுகாப்பு இல்லை என்பதை அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். அந்தவகையில் நாம் சாட்சிகளைப் பாதுகாக்கும் வகையில் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து சாட்சிகளைப் பதிவுசெய்யவேண்டும். இங்கே நடந்த உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும்.

 குறிப்பாக பலஸ்தீனம் காஸா பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.நா. சபையில் 1967 ஆம் ஆண்டிற்குப் பின்னர், காஸா பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்டுவரும் நில ஆக்கிரமிப்புக்கள், இஸ்ரேலிய இராணுவக் குடியேற்றங்கள் தொடர்பாக இன்றுவரை ஐ.நா. சபையிலே பிரேரணைகள் முன்வைக்கப்படுகின்றன.
நாங்கள் சென்றிருந்தபோதும் அங்கே பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றின் பிரதிகளை நாங்கள் பெற்றிருக்கின்றோம். அந்த நகர்வுகள் எவ்வாறு நடக்கின்றன என்பதையும் நாங்கள் அறிந்திருக்கிறோம். துருக்கி,சைப்பிரஸ் நாடுகளுக்கிடையிலும் இவ்வாறு இராணுவத்தினால் நில ஆக்கிரமிப்புக்கள் நடைபெற்ற பொழுது சைப்பிரஸ் அரசாங்க ஆதரவுடன் சிடிஸ்கோ என்ற பெண்மணி, ஒரு பிரேரணையினை முன்மொழிந்திருந்தார். அந்தப் பிரேரணை தொடர்பாக 16 நீதிபதிகள் கொண்ட ஐரோப்பிய நீதிமன்றம் விசாரணைகளை நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சார்பாக தீர்ப்பினை வழங்கியிருக்கின்றது. அதன் பிரதிகளையும் நாங்கள் பெற்றிருக்கின்றோம். அந்த பிரேரணை எவ்வாறு முன்மொழியப்பட்டது, என்ன அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டன, தீர்ப்பு வழங்கப்பட்டது, என்பது தொடர்பிலும் நாங்கள் ஆராய்ந்து பிரான்ஸ் நாட்டிலுள்ள சர்வதேச சட்டத்தரணிகளுடன் அந்த விடயங்கள் தொடர்பாகப் பேசியிருக்கின்றோம். எனவே அவற்றிலிருந்து நாங்கள் பெற்றுக்கொண்டுள்ள பாடங்கள் அல்லது படிப்பினைகளின் அடிப்படையில் எங்கள் மண்ணில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்கள், இராணுவ மற்றும் சிங்களக் குடியேற்றங்கள், தொடர்பில் பிரேரணை ஒன்றினை நாங்கள் முன்மொழியலாம். இதேபோல் ஆபிரிக்கநாட்டைச் சேர்ந்த ஜஸ்மின் சூக்கா பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளான 41பேரின் சாட்சிகளை உள்ளடக்கியதான ஒரு பிரேரணையினை ஐ.நா சபையில் முன்மொழிந்திருக்கின்றார். எனவே நாமும் வெறுமனே பேசிக்கொண்டிருப்பதில் பலனில்லை. நாம் எமக்கு நேர்ந்த அநீதிகளை நிரூபிக்கும் வகையில் சாட்சிகளைத் தேடவேண்டும்.

அவர்கள் பெறுமதிவாய்ந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைக் குழுவில் சாட்சியமளிப்பதற்கு சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். அதன் மூலமாக மட்டுமே எமக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதிகளுக்கும் எங்கள் மீது திணிக்கப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைக்கும் தீர்வினைக் காண முடியும் என்பதுடன் இனப் பிரச்சினைக்கும் தீர்வினை நாங்கள் தேட முடியும்.

எங்களுடைய போராட்டம் வெறுமனே ஆளுநரை மாற்றவேண்டும் என்பதற்கானதல்ல. எங்கள் மண்ணில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நில ஆக்கிரமிப்புக்கள்,எங்கள் தாயகக் கோட்பாட்டைச் சிதைக்கும் குடியேற்றங்கள், அவற்றைப் பாதுகாக்கும் படையினரின் செறிவாக்கல்கள் மற்றும் நீண்டகால அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு போன்ற கொள்கைகள், அதற்கான கடப்பாடுகள் அதிகம் உள்ளன.

எங்கள் மீது சிங்கள இனவாத அமைப்புக்களால் 8 வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. எங்களை முடக்குவதற்கும் அழிப்பதற்கும் எம்மைச் சுற்றி முயற்சிகள் நடக்கின்றன. நாங்கள் எங்கள் எதிரிகளை எவ்வாறு வெல்வது? எங்கள் கொள்கைகளை எவ்வாறு அடைவதுஎன்பதில் மிக அவதானமாக நடந்துகொள்ள கடமைப்பட்டிருக்கின்றோம் என்றார்.

http://www.thinakkural.lk/
 
=================================================================

- See more at: http://www.thinakkural.lk/article.php?local/f9qhsbmtql2770a7a3d70c6d9728rkzry17a73140918996d03c014ftepri#sthash.84S0oY0P.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக