Pages

சனி, 5 ஜூலை, 2014

Virakesari epaper 05July2014 வீரகேசரி

http://epaper.virakesari.com:8080/home/index?editionId=13&editionDate=05/07/2014

http://epaper.virakesari.com:8080/home/index?editionId=13&editionDate=05/07/2014


இலங்­கையில் வாக்­கா­ளர்­களை தெளி­வுப­டுத்தும் நோக்கில் அமெ­ரிக்­காவின் யூ.எஸ்.­எயிட் நிறு­வ­னத்தின் உதவித்
திட்­டத்தின் கீழ் நடத்­தப்­ப­ட­வி­ருந்த நிகழ்ச்சி திட்டம் இலங்­கை அர­சாங்­கத்தின் எதிர்ப்பு கார­ண­மாக இரத்து செய்­யப்­பட்­டுள்­ளது.
 
''வாக்­காளர் கல்­வி­யூ­டாக தேர்தல் ஒத்­து­ழைப்பு'' என்ற தொனிப்­பொ­ருளில் தேர்தல் நட­வ­டிக்­கைகள் மற்றும் வாக்­கு­ரிமை தொடர்­பாக நாட்டு மக்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்­து­வ­தற்­காக நிகழ்ச்சித் திட்­டங்­களை நடத்­து­வ­தற்கு யூ.எஸ்.­எயிட் நிறு­வனம் தீர்­மா­னித்­திருந்தது. இத்­த­கைய நிகழ்ச்சித் திட்­டங்­களை நடத்த விரும்பும் சிவில் அமைப்­புக்கள் தங்­களின் யோச­னை­களை முன்­வைக்­கு­மாறு யூ.எஸ்.­எயிட் நிறு­வனம் ஊட­கங்­களில் விளம்­பரம் செய்­தி­ருந்­தது. இத­னை­ய­டுத்து இந்த நிகழ்ச்சித் திட்­டத்­திற்கு அர­சாங்கம் கடும் எதிர்ப்பு தெரி­வித்­தி­ருந்­தது. நேற்று முன்­தினம் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தலை­மை
யில் நடை­பெற்ற அமைச்­ச­ரவை கூட்­டத்­திலும் இந்த விட
யம் குறித்து ஆரா­யப்­பட்­ட­துடன் இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூது­வரை அழைத்து இந்த விடயம் தொடர்பில் கண்­டனம் தெரி­விப்­பது என்றும் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டி­ருந்­தது.
 
இந்த நிலையில் இவ்­வி­டயம் குறித்து விளக்கம் அளிப்­ப­தற்­காக வெளி­வி­வ­கார அமைச்­சுக்கு வரு­மாறு அமெ­ரிக்க தூதுவர் மிச்சேல் ஜே சிஸ­னுக்கு வெளி­வி­வ­கார அமைச்சு அழைப்பு விடுத்­துள்­ளது.
 
வாக்­காளர் கல்­வி­யூ­டாக தேர்தல் ஒத்­து­ழைப்­பு­என்ற தொனிப்­பொ­ரு­ளி­லான நிகழ்ச்சித் திட்­டத்­திற்கு அர­சாங்கம் எதிர்ப்பு தெரி­வித்­த­தை­ய­டுத்து இந்த திட்­டத்தை யூ.எஸ்­.எயிட் நிறு­வனம் இரத்து செய்­துள்­ளது. சிவில் அமைப்­புக்­க­
ளுக்கு நேற்று வெள்ளிக்­கி­ழமை மின்­னஞ்­ச­லொன்றை அனுப்­பி­யுள்ள
அரசாங்கத்தின்...
 
யூஎஸ்­எயிட் நிறு­வனம், குறித்த நிகழ்ச்சி திட்டம் இரத்து செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் தொடர்ந்தும் இது குறித்த யோச­னைகள் ஏற்றுக் கொள்­ளப்­ப­ட­மாட்­டாது என்றும் தெரி­வித்­துள்­ளது.
 
இலங்­கையில் வாக்­கா­ளர்­க­ளுக்கு அறி­வூட்டும் நிகழ்ச்சி திட்­டங்­க­ளுக்கு அமெ­ரிக்க நிதி­யு­தவி அளிப்­பது உள்­நாட்டு விவ­கா­ரங்­களில் தலை­யீடும் செயற்­பா­டாகும். இதற்கு அனு­ம­திக்க முடி­யாது என்று அமைச்­ச­ரவை தீர்­மா­னித்­துள்­ளது. இதற்­கி­ணங்க அமெ­ரிக்க தூதுவர் மிச்சேல் சிஸனை அழைத்து விளக்கம் கேட்­க­வி­ருப்­ப­தாக வெளி­யு­றவு அமைச்சர் ஜி எல் பீரிஸ் அமைச்­ச­ர­வைக்கு அறி­வித்­துள்ளார். என்று அமைச்­ச­ர­வையின் பேச்­சாளர் ஹெக­லிய ரம்­புக்­கொல தெரி­வித்­துள்ளார்.
 

இதே­வேளை யூஎஸ்­எயிட் நிறு­வனம் இவ்­வா­றான நிகழ்ச்சி திட்­டங்­களை நீண்ட கால­மாக இலங்­கை­யிலும் மற்றும் பல நாடு­க­ளிலும் உள்ள சிவில் அமைப்­புக்­க­ளுடன் இணைந்து நடாத்தி வந்­தி­ருக்­கின்­றது என்று அமெ­ரிக்க தூத­ர­கத்தின் பேச்­சாளர் ஒருவர் கூறி­யுள்ளார்.
இந்த நிகழ்ச்சி திட்­டத்­திற்கு இலங்கை அர­சாங்­கத்­திடம் இருந்து எதிர்ப்பு கிளம்­பி­யி­ருக்­கின்­றமை தொடர்­பிலும் இந்த நிகழ்ச்சி திட்டம் இரத்­தா­கி­யமை குறித்தும் கருத்து தெரி­விக்க அமெ­ரிக்க தூத­ர­கத்தின் பேச்­சாளர் மறுத்­து­விட்டார். 
 
வாக்­கா­ளர்­களை தெளி­வூட்டும் இத்­த­கைய நிகழ்ச்சி திட்­டங்கள் 2010 ஆண்டில் இருந்து நடத்­தப்­பட்­டு­வ­ரு­கின்­றது. இலங்­கையில் பல தேர்தல் கண்­கா­னிப்பு குழுக்கள் இவ்­வா­றான நிதி­யு­த­வி­களை கொண்டே இயங்­கு­கின்­றன. அர­சாங்கம் குற்றம் சாட்­டு­வதை போல அவற்­றினால் அர­சியல் செயற்­பா­டுகள் எதுவும் நடப்­ப­தில்லை என்று பெயர் குறிப்­பி­ட­வி­ரும்­பாத சிவில் அமைப்பின் செயற்­பாட்­டாளர் ஒருவர் தெரி­வித்தார்.

வாக்­கா­ளர்­க­ளுக்கு வாக்­க­ளிப்­பதன் முக்­கி­யத்­து­வத்தை தெளி­வுப்­ப­டுத்­துதல், வாக்­க­ளிப்­ப­தற்கு தேவை­யான அடை­யாள ஆவ­ணங்கள் பற்றி தெளி­வுப்­ப­டுத்­துதல் , பெண்­களை அர­சி­யலில் ஊக்­கு­வித்தல் போன்ற பணி­களை இந்த செயற் திட்­டத்தின் மூலம் இடம் பெற்­று­வந்­தன. இலங்­கையின் மனித உரி­மைகள் நில­வரம் மற்றும் போர்க்­கால குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் ஐ.நா.நடத்­த­வுள்ள விசா­ரணை கார­ண­மாக இலங்கை அர­சாங்­கத்­திற்கும் அமெ­ரிக்­கா­விற்கும் இடையே நிலவும் முறுகல் நிலையே அர­சாங்கம் யூஎஸ்­எயிட் நிகழ்ச்சி திட்­டத்­திற்கு எதிர்ப்பு தெரிவிக்க காரணம்இன்றி பெயர் குறிப்பிட விரும்பாத சிவில் அமைப்பொன்றை பிரதிநிதியொருவர் கூறினார். 

 
இதேவேளை அமெரிக்கா இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயல்வதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ குற்றம் சாட்டியுள்ளார். ஆங்கில பத்திரிகையொன்றிற்கு கருத்து தெரிவித்த அவர், யூஎஸ்எயிட் நிகழ்ச்சி திட்டம் இலங்கையில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவருவதற்கான முயற்சியென்று வருணித்துள்ளார்.

=============================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக