Pages

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - இந்திய வெளிவிவகார அமைச்சர் - சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ;மா சுவராஜுக்கும் இடையிலான சந்திப்பு 22-08-2014 புதுடில்லியில் இடம்பெற்றது.

 =============================
இந்தியா சென்றுள்ள இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு சற்று முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவரஜை சந்தித்து கலந்துரையாடியுள்ளது. 
 
சுமார் ஒன்றரை மணி நேரம் இடம்பெற்ற இச் சந்திப்பில் வடக்கு, கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக எடுத்துக் கூறப்பட்டதாகவும் அப்போது இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
குறித்த சந்திப்பு தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறுகையில்:-
 
இலங்கை தமிழர் பகுதியில் சிங்களர் குடியேற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சுஷ்மா சுவராஜிடம் முறையிட்டதாக தெரிவித்தார். 
 
சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த சுஷ்மா, :-
 
இலங்கையில் உள்ளவர்கள் பலர் இந்தியாவை பிறப்பிடமாக கொண்டவர்கள். அவர்களின் கலை, கலாசாரம் ஆகியவை இந்தியாவை ஒட்டியே உள்ளது. எனவே, அவர்களுக்காக உதவ வேண்டிய பெரிய பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளது,' என்றார்.
 
இதேவேளை இக் குழுவினர் நாளை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வடமாகாணச்சபை அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=893643359022250212#sthash.BPht6aB9.dpuf

இந்தியா சென்றுள்ள இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு சற்று முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவரஜை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

சுமார் ஒன்றரை மணி நேரம் இடம்பெற்ற இச் சந்திப்பில் வடக்கு, கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக எடுத்துக் கூறப்பட்டதாகவும் அப்போது இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பு தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறுகையில்:-

இலங்கை தமிழர் பகுதியில் சிங்களர் குடியேற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சுஷ்மா சுவராஜிடம் முறையிட்டதாக தெரிவித்தார்.

சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த சுஷ்மா, :-

இலங்கையில் உள்ளவர்கள் பலர் இந்தியாவை பிறப்பிடமாக கொண்டவர்கள். அவர்களின் கலை, கலாசாரம் ஆகியவை இந்தியாவை ஒட்டியே உள்ளது. எனவே, அவர்களுக்காக உதவ வேண்டிய பெரிய பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளது,' என்றார்.

இதேவேளை இக் குழுவினர் நாளை 23-AUG-2014 இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வடமாகாணச்சபை அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக