Pages

வெள்ளி, 17 அக்டோபர், 2014

ஜெயலலிதாவுக்கு இடைக்கால பிணை

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் இருந்து வரும் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்திய உச்சநீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை ஜாமின் வழங்கியிருக்கிறது.


இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி அன்று நடைபெறும் என்றும், அதுவரை அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரியும், ஜாமின் வழங்கக் கோரியும் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து மற்றும் நீதிபதிகள் மதன் பி லோக்கூர், ஏ.கே. சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்த போது அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
மேல் முறையீடு தொடர்பிலான அனைத்து நகல்களும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் தேதிக்குள் தயார் செய்யப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் வயது மற்றும் உடல்நலம் ஆகிய காரணங்களின் அடிப்படையில் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.


தமிழகத்தின் ஆதிமுக அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் ஆதிமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுlithaபட்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக