Pages

வியாழன், 16 அக்டோபர், 2014

‘foreigners’ BANNED visiting occupied Tamil Eelam இலங்கையில் வெளிநாட்டினர் தமிழர் ஈழம் பகுதிக்கு செல்ல தடை.

இலங்கையில் விடுதலைப்புலிகள் ஆதிக்கம் இருந்த காலத்தில் தமிழர்கள் வசிக்கும் வடபகுதிக்கு வெளிநாட்டினர் செல்ல தடை இருந்தது. போர் முடிவுக்கு வந்ததற்கு பிறகு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தாராளமாக வட பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் திடீரென வடபகுதிக்கு வெளிநாட்டினர் சுற்றுலா செல்ல இலங்கை அரசு தடை விதித்துள்ளது. வெளிநாட்டினர் பாதுகாப்பு துறையில் முன் அனுமதி பெற்றால் மட்டுமே வடபகுதிகளுக்கு செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடபகுதிக்கு செல்லும் பாதையில் வவுனியா, ஓமந்தை ஆகிய இடங்களில் ராணுவ சோதனை சாவடிகள் உள்ளன. சமீபகாலமாக வடபகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் இங்கிருந்து திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

இதுதொடர்பாக இலங்கை ராணுவ தளபதி ரூவான் வணிகசூரியா கூறியதாவது:–

வடபகுதிக்கு வெளிநாட்டினர் செல்ல தாராளமாக அனுமதித்து வந்தோம். ஆனால் அவர்களில் சிலர் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். வட பகுதி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி இனக்கலவரங்களை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இதனால் அமைதி குலையும் நிலை ஏற்படுகிறது. இதை தடுக்கவே வெளிநாட்டினர் வடபகுதிக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் பாதுகாப்பு துறையிடம் முன்கூட்டியே விண்ணப்பித்தால் அனுமதி அளிக்கப்படும். ஆனால் அங்கு எதற்காக செல்கிறோம் என்ற விவரங்களை முழுமையாக எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். அவர்களால் பிரச்சினை வராது என்று கருதினால் அனுமதி கொடுப்போம். இலங்கை மக்கள் நாட்டின் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் செல்லலாம். அதற்கு எந்த தடையும் இல்லை.

-------------------

TAMILNET

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக