Pages

வெள்ளி, 9 ஜனவரி, 2015

'தெரிந்த பிசாசு' ராஜபக்சேவை ஓட ஓட "வாக்குகளால்" விரட்டியடித்த ஈழத் தமிழர்கள் !!



'தெரிந்த பிசாசு' ராஜபக்சேவை ஓட ஓட "வாக்குகளால்" விரட்டியடித்த ஈழத் தமிழர்கள்!!


https://www.facebook.com/oneindiatamil/photos/a.10150266416913579.336314.45898273578/10152741765358579/?type=1&permPage=1 

http://tamil.oneindia.com/news/srilanka/maithiripala-expected-poll-4-6-times-more-than-rajapaksa-north-218629.html


இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ராஜபக்சே மிக மிக மோசமான தோல்வியைத் தழுவியுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மைத்ரிபால ஸ்ரீசேன மிக மிக அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார். 
 
இலங்கை அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது தமிழர் பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்த மகிந்த ராஜபக்சே, தெரியாத தேவதையைவிட தெரிந்த பிசாசாகிய என்னையே தேர்ந்தெடுங்கள் என்று கெஞ்சிப் பார்த்து தமிழில் வாக்கு கேட்டார். ஆனால் தமிழ் மக்கள் ராஜபக்சேவை முற்று முழுதாக நிராகரித்து விட்டனர்.

மேலும் அதிபர் தேர்தலில் மைத்ரிபால ஸ்ரீசேனவையே ஆதரிக்கப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய தமிழ்க் கட்சிகள் அறிவித்திருந்தன. இதனை ஏற்று தமிழர்களும் வாக்களித்துள்ளனர். ராஜபக்சேவை விட பல மடங்கு வாக்குகளை தமிழர் பகுதிகளில் மைத்ரிபால அள்ளியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக