Pages

திங்கள், 7 டிசம்பர், 2015

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

சனி, 5 டிசம்பர், 2015

செவ்வாய், 1 டிசம்பர், 2015

Maalaimalar ePaper 01DEC2015 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  01-DEC-2015


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

சனி, 14 நவம்பர், 2015

வெள்ளி, 13 நவம்பர், 2015

ஞாயிறு, 1 நவம்பர், 2015

Maalaimalar ePaper 01-NOV-2015 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  01-NOV-2015


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

வியாழன், 1 அக்டோபர், 2015

Maalaimalar ePaper 01-OCT-2015 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  01-OCT-2015


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

புதன், 16 செப்டம்பர், 2015

இலங்கை போர்க்குற்றம் பற்றி சர்வதேச விசாரணை கோரி ஐ.நா.வில் தீர்மானம்: பிரதமருக்கு ஜெயலலிதா வலியுறுத்தல்

http://epaper.maalaimalar.com/epaperhome.aspx?issue=1692015



இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்றபோது சர்வதேச சட்டம் மற்றும் ஜெனிவா ஒப்பந்தத்தில் உள்ள போர் விதிமுறைகளை முற்றிலும் மீறி போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலை நிகழ்த்தியவர்கள் அனைவர் மீதும் சர்வதேச விசாரணை நடத்தும் வகையிலான வலுவான தீர்மானத்தினை இந்தியாவே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு முன்பு அமெரிக்கா உள்பட மற்ற நாடுகளுடன் இணைந்து கொண்டு வர வேண்டும் என்றும், அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவான நிலையை எடுத்தால், அதனை மாற்ற ராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தின்படி நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

“இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது தாங்கள் அறிந்ததே. தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் மனித உரிமை ஆணையர் இது தொடர்பாக விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக 1-10-2015 மற்றும் 2-10-2015 ஆகிய நாட்களில் விவாதம் நடத்தப்பட உள்ளது.

இந்த சூழ்நிலையில், இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தக்கோரி ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தியா வலுவான தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் அடிப்படையில் மத்திய அரசு உடனடியாக நடவடிகை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பட்டுள்ளார்

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் போரில் ஈடுபட்ட இரு தரப்பினராலும், போர்க்குற்றமும், மனித குலத்துக்கு எதிரான குற்றமும் செய்யப்பட்டிருப்பதாக ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை கூறுகின்றது.

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் 2002 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டுவரை போரில் ஈடுபட்ட இரு தரப்பினராலும், போர்க்குற்றமும், மனித குலத்துக்கு எதிரான குற்றமும் செய்யப்பட்டிருப்பதாக ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை கூறுகின்றது


அங்கு இந்தக்காலப்பகுதியில் கொடூரமான வன்செயல்கள் திரும்பத் திரும்ப இடம்பெற்றிருப்பதாக அடையாளம் காணப்பட்டிருப்பது, இந்த குற்றங்களை உறுதிப்படுத்துவதாகவும் ஐநா இன்று வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.
சர்வதேச நீதிபதிகள், சட்ட நடவடிக்கை அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளடங்கலான சர்வதேச மற்றும் உள்நாட்டு அம்சங்கள் அடங்கிய சிறப்பு கலப்பு நீதிமன்றம் இந்தக் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்றும் அது பரிந்துரைத்துள்ளது.

சட்டத்துக்கு முரணான படுகொலைகள், பாலியல் வன்முறை மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை, கட்டாயமாக காணாமல் போகச் செய்தல், சித்ரவதை, கட்டாயமாக சிறாரைப் படைக்குச் சேர்த்தல், பொதுமக்கள் மற்றும் பொதுச் சொத்துக்கள் மீதான தாக்குதல், மனிதநேய உதவிகளை மறுத்தல், தடுத்து வைத்தலின் போதான வன்முறைகள், என இலங்கை அரசாங்கம், விடுதலைப்புலிகள், அரசோடு சேர்ந்து இயங்கிய துணை இராணுவக் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் வன்முறைகளை வகைப்படுத்தி விளக்கியுள்ள ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு, ஆண்டுக்கணக்கில் இதற்கான நீதி மறுக்கப்பட்டு, மறைக்கப்பட்டு வந்ததாகவும் கூறியுள்ளது.

இலங்கையில் இந்த வன்செயல்களுக்கு காரணமான பல கட்டமைப்புக்கள் இன்னமும் தொடருகின்ற நிலையில் அங்கு இவற்றை விசாரிப்பதற்கான உள்நாட்டு பொறிமுறைகள் தொடர்ச்சியாக தோல்வியடைந்து வந்துள்ளதாக கூறியுள்ள ஐநா அறிக்கை, இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில், ஐயப்பாடும், கோபமும், நம்பிக்கையீனமும் அதிகரித்திருப்பதாகவும் கூறியுள்ளது.

உள்நாட்டுப் பொறிமுறை மூலம் இவற்றை விசாரிப்பதற்கான புதிய அரசாங்கத்தின் கரிசனை குறிப்பிடத்தக்கதாக இருந்த போதிலும், இலங்கையின் நீதித்துறை இன்னமும் இதற்கு தயாரானதாக இல்லை என்றும் ஐநா கூறியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகளுக்கு போதிய பாதுகாப்பின்மை, இந்த அளவு பாரிய சர்வதேச குற்றங்களை விசாரிக்கும் அளவுக்கு உள்நாட்டு நீதிக்கட்டமைப்பு போதாமை, தசாப்தகால அவசர நிலை, மோதல் மற்றும் குற்றத்துக்கு தண்டிக்கப்படாத நிலை ஆகியவற்றால் இலங்கையின் பாதுகாப்புத்துறை மற்றும் நீதித்துறை சீர்கெட்டு, ஊழல் மயப்பட்டு இருப்பதும்

இவற்றை உள்நாட்டில் உரிய வகையில் விசாரிக்க முடியாமல் போனமைக்கான காரணம் என்றும் ஐநா அறிக்கை கூறுகின்றது.
கடந்த ஜனவரி முதல் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் சாதகமான நடவடிக்கைகளை பாராட்டியுள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையர் ஷைத் ரா அத் அல் ஹுசைன் அவர்கள், ஆனால், இலங்கை, அடக்குமுறை சார்ந்த கட்டமைப்புகளையும், நிறுவன கலாச்சாரத்தையும் கலைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்.

இலங்கை போர்க்குற்றம் குறித்த ஐநா அறிக்கை - காணொளி


இலங்கையில் இறுதிப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிபதிகள் மற்றும் விசாரணையாளர் அடங்கிய சர்வதேச, உள்நாட்டு கலப்பு நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை ஒன்று பரிந்துரைத்துள்ளது.



<iframe width="400" height="500" frameborder="0" src="http://emp.bbc.co.uk/emp/embed/smpEmbed.html?playlist=http%3A%2F%2Fwww.bbc.co.uk%2Ftamil%2Fmeta%2Fdps%2F2015%2F09%2Femp%2F150916_unlankavt.emp.xml&title=BBCTamil.com&product=news&lang=ta"></iframe>


போரில் ஈடுபட்ட அரசாங்கப் படைகள், விடுதலைப்புலிகள் மற்றும் துணை இராணுவக் குழுக்களுக்கு இந்த போர்க்குற்றம் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களில் தொடர்பு இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
இவை குறித்த பிபிசியின் காணொளி.


Thanks - BBC TAMIL

http://www.bbc.com/tamil/sri_lanka/2015/09/150916_unlankavt

http://www.bbc.com/tamil/
====================================================

வியாழன், 3 செப்டம்பர், 2015

இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார் இரா சம்பந்தர்

இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று வியாழக்கிழமை காலை நாடாளுமன்றம் கூடியபோது சபாநாயகர் கரு ஜெயசூரிய இதனை அறிவித்தார்.

நாடாளுமன்றம் கூடியதும் இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் கரு ஜெயசூரிய எதிர்க்கட்சித் தலைவரின் நியமனம் சம்பந்தமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் வேண்டுகோள்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் ஆகக்கூடிய ஆசனங்களை பெற்றுள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் ஆர். சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதன்படி இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஆர் சம்பந்தன் கடமையாற்றவுள்ளார்.

தமிழ் அரசியல் தலைவர் ஒருவர் இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது இது இரண்டாடவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஏ. அமிர்த்தலிங்கம் 1977ஆம் ஆண்டு முதல் 1983 ஆண்டுவரை எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டிருந்தார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் 16 ஆசனங்கள் கிடைத்தன.

எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் நியமிக்கப்பட்டிருப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருக்கும் கட்சிகளில் ஒன்றான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ நாடாளுமன்றத்தில் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம நியமிக்கப்படவேண்டுமென்று

அந்த கூட்டமைப்பின் ஐம்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று புதன்கிழமை எழுத்துப்பூர்வமாக ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்த பின்னிணியில் எதிர்க்கட்சி தலைவராக ஆர். சம்பந்தன் நியமிக்கப் பட்டுள்ளார்.

சம்பந்தர் நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 2 செப்டம்பர், 2015

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

Maalaimalar ePaper 01-SEP-2015 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  01-SEP-2015


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

BERSIH 4 Malaysia பெர்சே




மலேசிய அரசாங்கத்துக்கு எதி ராக நேற்று பெர்சே அமைப்பு நடத் திய பெர்சே-4 பேரணியில் சுமார் இரண்டு லட்சம் பேர் திரண்டனர். இதனை அந்த அமைப்பே கூறியது.

பிற்பகல் 2 மணிக்கு ஒன்று திரளுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் காலை 10 மணி முதலே ஒவ்வொரு பகுதியினராக வரத் தொடங்கினார்.
கோலாலம்பூரின் பங்சார், மத்திய சந்தை, பிரிக்ஃபீல்ட்ஸ், மஸ்ஜித் நெகரா, சோகா, மெனாரா மேபேங் ஆகிய சந்திப்பு முனை களில் மக்கள் ஒன்றுகூடினர். அதன் பிறகு மெர்டேக்கா சதுக்கத்தை நோக்கி அவர்கள் ஊர்வலமாகச் செல்லத் தொடங் கினர்.

இலங்கை : ரனில் மீண்டும் பிரதமர் ஆனார்

 இலங்கை பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி ராஜபக்சேவின் பிரதமர் கனவு தகர்ந்தது

ரனில் மீண்டும் பிரதமர் ஆனார்

இலங்கை பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்றதால், ரனில் மீண்டும் பிரதமர் ஆனார். இதன் மூலம் ராஜபக்சேவின் பிரதமர் கனவு தகர்ந்தது.

கொழும்பு, ஆக.19-

இலங்கை பாராளுமன்றத்தில் 225 இடங்கள் உண்டு. இவற்றில் 196 இடங்கள் தேர்தல் மூலமும், மீதி 29 இடங்கள் தேர்தலில் கட்சிகள் பெறுகிற ஓட்டுகளின் விகிதாச்சார அடிப்படையிலும் நிரப்பப்படுகின்றன.

விறுவிறுப்பான தேர்தல்

இதன்படி அங்கு நேற்று முன்தினம் 22 தேர்தல் மாவட்டங்களில் உள்ள 196 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவு செய்த 21 அரசியல் கட்சிகள் களம் இறங்கின. அவற்றின் சார்பில் மொத்தம் 6 ஆயிரத்து 151 வேட்பாளர்களும், சுயேச்சையாக 2 ஆயிரத்து 498 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

இந்த தேர்தல் அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடந்து முடிந்தது. உடனடியாக ஓட்டுகளை எண்ணும் பணி தொடங்கியது. நேற்று ஓட்டு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று முடிந்தது. முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ரனில் அணி வெற்றி

இந்த தேர்தலில் 113 இடங்களை பெறுகிற கட்சிதான் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில், எந்தவொரு கட்சியும் அந்த தகுதியை பெற வில்லை.

எனினும் தனிப்பெரும் அணியாக ரனில் விக்ரம சிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி உருவாகி உள்ளது. இந்த கூட்டணி தேர்தல் நடந்த 196 இடங்களில் 93 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. முன்னாள் அதிபர் ராஜபக்சே, தற்போதைய அதிபர் சிறிசேனா ஆகியோரின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி 83 இடங்களை கைப்பற்றியது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு

தமிழர்கள் பெருவாரியாக வாழ்கிற வட பகுதியில் 3 தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அபார வெற்றி பெற்றது. இந்த அமைப்பு 14 இடங்களை கைப்பற்றி உள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் திரிகோணமலை மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை பாராளுமன்ற தேர்தலில், தமிழ் மக்களின் குரலை இவர்கள் ஓங்கி ஒலிக்க வழி பிறந்துள்ளது.

இறுதி நிலவரம்

மொத்த இடங்கள் - 225

தேர்தல் நடந்தவை - 196

ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி - 93

ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி - 83

தமிழ் தேசிய கூட்டமைப்பு- 14

ஜனதா விமுக்த பெரமுனா - 4

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் - 1

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 1

விகிதாச்சாரம்

இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணிக்கு 11 இடங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணிக்கு 9 இடங்களும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 2 இடங்களும் கிடைக்கும்.

இந்த இடங்களுடனும் சேர்த்து ஐக்கிய தேசிய கட்சி கூட்டணிக்கு மொத்தம் 104 இடங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணிக்கு 92 இடங்களும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 16 இடங்களும் கிடைக்கும்.

கட்சி தாவல்?

தனிப்பெரும்பான்மை பலம் பெற ஐக்கிய தேசிய கட்சி கூட்டணிக்கு இன்னும் 9 இடங்களே தேவை.

அதே நேரத்தில் ராஜபக்சே தலைமையிலான எதிர் அணியில் இருந்து 25 முதல் 40 எம்.பி.க்கள் வரை ரனில் விக்ரம சிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணிக்கு தாவக்கூடும் என தகவல்கள் கசிந்துள்ளன. இலங்கையில் கட்சிதாவல் தடைச்சட்டம் அமலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரனில் விக்ரம சிங்கே கருத்து

தேர்தல் வெற்றி குறித்து ரனில் விக்ரம சிங்கே கருத்து தெரிவிக்கையில், “நல்லாட்சிக்கு மக்கள் தந்த தீர்ப்பு இது. மக்களுக்காக இந்த வெற்றியை உறுதி செய்வதற்கு ஓய்வின்றி உழைத்த அனைத்து கட்சிகள், தனிபட்ட நபர்கள் என அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறினார்.

அவர் மேலும் கூறும்போது, “புதிய சகாப்தத்தின் சவால்களை எதிர்கொண்டு, நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்து செல்வதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம். சவால்களை எதிர்கொள்வதற்கு நீங்கள் அனைவரும் எங்களுடன் கரம் கோர்க்க அழைப்பு விடுக்கிறேன்” என கூறினார்.

ராஜபக்சே கனவு தகர்ந்தது

கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில் படுதோல்வி அடைந்த ராஜபக்சே, இந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் பதவியை பிடித்து விடலாம் என கனவு கண்டார். ஆனால் அந்த கனவு தகர்ந்து தவிடுபொடியாய் ஆகிவிட்டது.

இலங்கை தேர்தல் முடிவுகள் குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ராஜபக்சே, “பிரதமராகும் எனது கனவு கலைந்து விட்டது” என ஒப்புக்கொண்டார். மேலும், “நான் ஒப்புக்கொள்கிறேன். கடும் போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்து விட்டோம்” என கூறினார்.

பதவி ஏற்பு

மீண்டும் பிரதமர் ஆகியுள்ள ஐக்கிய தேசிய கூட்டணியின் தலைவரான ரனில் விக்ரம சிங்கே, உடனடியாக நாட்டின் 15-வது பிரதமராக பதவி ஏற்பார், அவருக்கு அதிபர் மாளிகையில் நடக்கிற எளிய விழாவில் அதிபர் சிறிசேனா பதவி பிரமாணம் செய்து வைப்பார் என அறிவிக்கப்பட்டது.

மந்திரிகள் பின்னர் ஓரிரு நாளில் பதவி ஏற்பார்கள் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

சிறிசேனா தேசிய அரசுதான் அமைப்பார் என தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் இந்த அரசில் சேரப்போவதில்லை, எதிர்க்கட்சி வரிசையில் நாங்கள் அமர்வோம் என ராஜபக்சேயின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி உறுப்பினர் உதய கம்மான் பிள்ளை தெரிவித்துள்ளார். ஆனால் சிறிசேனாவின் ஆதரவாளர்கள் ரனில் விக்ரம சிங்கேயின் மந்திரிசபையில் இடம் பெறுவார்கள் என மற்றொரு தகவல் கூறுகிறது.

புதிய பாராளுமன்றம்

புதிய பாராளுமன்றம் அடுத்த மாதம் 1-ந் தேதி கூடும் என கொழும்பில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
 

============== தினத்தந்தி =========================

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

யாழ்ப்பாண மாவட்டத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி

தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. 

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள கிளிநொச்சி, யாழ்ப்பாணம், பருத்தித்துறை, காங்கேசன்துறை, ஊர்காவற்றுறை, உடுப்பிட்டி, சாவகச்சேரி, நல்லூர், கோப்பாய், மானிப்பாய், வட்டுக் கோட்டை ஆகிய அனைத்துத் தொகுதிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.




இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்ட 20 தொகுதிகளில், 14 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.



தற்போதைய தேர்தலில் அது குறைந்தபட்சம் 15 இடங்களை வெல்வது உறுதியாகிவிட்ட நிலையில், தேசியப் பட்டியலில் கிடைக்கக்கூடிய இடங்கள் இரண்டாக உயர்ந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மொத்த உறுப்பினரின் எண்ணிக்கை இந்த நாடாளுமன்றத்தில்16ஐத் தொடக்கூடும் என்று அந்தக் கட்சியின் தரப்பில் நம்பிக்கை நிலவுகிறது.

தேர்தல் ஆணையத்தால் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின்படி,

யாழ். மாவட்டத்தில் 5 இடங்களும்,
வன்னி மாவட்டத்தில் 4 இடங்களும்,
திருகோணமலை மாவட்டத்தில் 1 இடமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்திருக்கிறது.

இவை தவிர மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 இடங்களும்
அம்பாறை மாவட்டத்தில் 1 இடமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைப்பது உறுதியாகிவிட்டதாக பிபிசி தமிழோசையின் செய்தியாளர் தெரிவிக்கிறார்.

ஆக மொத்தம் 14 இடங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலில் வென்றால் அதற்கு தேசியப்பட்டியலில் குறைந்தது ஒரு இடம் கிடைக்கும் என்றும், அது சில வேளை இரண்டு இடங்களாக அதிகரிக்கலாம் என்றும் நமது செய்தியாளர் குறிப்புணர்த்துகிறார்.

உறுப்பினர் எண்ணிக்கை மட்டுமல்லாமல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாங்கிய ஒட்டுமொத்த வாக்குகளின் எண்ணிக்கையும் கணிசமான அளவு இந்தத் தேர்தலில் அதிகரித்திருப்பதாகவே இதுவரையிலான தேர்தல் திணைக்களத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வென்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கை ஆகிய இரண்டு அளவுகோள்களின் கீழும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலைவிட இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களிடமான தனது ஆதரவை தக்கவைத்துக்கொண்டது மட்டுமல்ல, அதிகரித்திருப்பதாகவுமே அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள்.


--------thanks பிபிசி தமிழோசை

புதன், 5 ஆகஸ்ட், 2015

Unilever Kodaikanal கொடைக்கானல் பாதரச கழிவு




கொடைக்கானல்


ஆன்லைனில் கலக்கும் தமிழக ராப் இசை பாடகி... கொடைக்கானல் பாதரச கழிவு பிரச்சனையை முன்வைத்து பிரசாரம்
Sofia Ashraf's song "Kodaikanal won't"



சமூக சீர்கேடுகளைப் பற்றிய பாடல் வரிகளுடன் சென்னையைச் சேர்ந்த 27 வயது இளம் பெண் பாடிய ராப் இசை அமெரிக்கா வரை பரவி பல லட்சம் ரசிகர்களைத் தேடித் தந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ராப் இசை பாடகி நிக்கி மினாஜ். இவருக்கு டுவிட்டரில் 2 கோடி ரசிகர்கள் உள்ளனர். 
இவரது அனகோண்டா என்ற வீடியோ ஆல்பத்தின் இசையை அடிப்படையாக கொண்டு சென்னையை சேர்ந்த ராப் இசை பாடகியான சோபியா அஷ்ரப் வீடியோ ஒன்றை உருவாக்கி உள்ளார்.





இதனை பார்த்த கிராமி விருது வென்றவரான நிக்கி மினாஜ் கடந்த சனிக்கிழமை கட்டுரை ஒன்றுடன் சோபியாவின் வீடியோவை இணைத்து மீண்டும் டுவிட் செய்துள்ளார். 
அதில் மினாஜ் தனது பாராட்டுதலை சோபியாவுக்கு தெரிவித்துள்ளார். 
இந்த வீடியோ யூடியூப்பில் வெளியான 3 நாட்களில் 7 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. அதன்பின் ரெடிட் போன்ற சமூக ஊடக தளங்களிலும் பகிரப்பட்டுள்ளன. 
இதற்கு முன்பு பல்லாயிரம் பேரை பலிகொண்ட போபால் வாயு கசிவு சம்பவத்தை கொண்டு டவ் கெமிக்கல்ஸ் நிறுவனத்தை தாக்கி ராப் பாடல் ஒன்றை சோபியா அஷ்ரப் பாடியுள்ளார். தற்பொழுது வெளியாகியுள்ள இந்த வீடியோ பாடலில் சோபியா புதிய வரிகளை கொண்டு எழுதியுள்ளார். 
கொடைக்கானலில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனம் ஒன்றை சாடும் வகையில் வரிகள் எழுதப்பட்டுள்ளன. தனது பணியாளர்கள் மற்றும் மண், நீரை முறையாக சுத்தம் செய்யாத அந்த நிறுவனத்தை சாடியுள்ளதுடன் தனது பொறுப்பில் இருந்து அந்நிறுவனம் தவறியுள்ளதையும் எச்சரிக்கையுடன் சுட்டி காட்டியுள்ளார் சோபியா. 
அந்த வீடியோவில், விஷத் தன்மை கொண்ட பாதரச ஆலை மூடப்பட்டு கடந்த 14 வருடங்களாக சுத்தம் செய்யப்படாமல் கால்வாய் ஒன்று உள்ளது. தொழிற்சாலையின் முன்னாள் தொழிலாளர்கள் மற்றும் கிராமத்தினர் பின்தொடர அந்த கால்வாயை சுற்றி அந்த பகுதியில் அஷ்ரப் முன்னோக்கி செல்வது போன்று வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. ஜட்கா என்ற அரசு சாரா அமைப்பொன்றின் பிரசாரத்தின் ஒரு பகுதியாக உள்ள இந்த பாடல் 3 நிமிடம் ஓடுகிறது. சோபியா அஷ்ரப் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசைமைப்பில் சில சினிமா பாடல்களையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sign the petition asking for Unilever to clean up the mercury poisoning in Kodaikanal: http://www.jhatkaa.org/unilever/.

Written by Chennai-born rapper Sofia Ashraf and set to Nicki Minaj's “Anaconda,” the video takes an undisguised jab at Unilever for its failure to clean up mercury contamination or compensate workers affected by its thermometer factory in Kodaikanal.





திங்கள், 3 ஆகஸ்ட், 2015

Maalaimalar ePaper 03-AUG 2015 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  3-AUG-2015


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

Maalaimalar ePaper 02-AUG 2015 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  02-AUG-2015


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

சனி, 1 ஆகஸ்ட், 2015

Maalaimalar ePaper 01-AUG-2015 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  01-AUG-2015


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

புதன், 29 ஜூலை, 2015

பேரறிவாளன், சாந்தன், முருகன் மரண தண்டனை ரத்து சரியே !



பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்தது சரியே என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக குறைத்தது.

இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவை கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது.

பின்னர், நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பை திருத்தக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மே மாதம் மத்திய அரசு மனு ஒன்றை தாக்கல் செய்தது.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து தலைமையிலான நீதிபதிகள் டி.எஸ்.தாகூர், அனில் ஆர்.தவே, ரஞ்சன் கோகேய், சிவகீர்த்திசிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தீர்ப்பில் திருத்தம் கோரும் மத்திய அரசின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறிய நீதிபதிகள், பேரறிவாளன் உள்பட 3 பேரின் மரண தண்டனையை ரத்து செய்தது சரியே என்று கூறி, மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

 

திங்கள், 27 ஜூலை, 2015

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மாரடைப்பால் காலமானார் !

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மாரடைப்பால் காலமானார். 
 
 
கருத்தரங்கு ஒன்றில் பேசிக் கொண்டிருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம்.-ல் இன்று கருத்தரங்கு நடைபெற்றது. அதில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாலை சுமார் 6 மணியளவில் மேடையில் பேசிக் கொண்டிருந்தார்.
 
அவரது எழுச்சி உரையை மாணவர்களும் பேராசிரியர்களும் ஆவலுடன் கேட்டுக்கொண்டிருந்தனர். சுமார் 6.30 மணியளவில் மேடையில் பேசிக் கொண்டிருந்த கலாம் திடீரென மார்பை பிடித்துக் கொண்டு அப்படியே சரிந்தார். இதனால் மேடையில் இருந்தவர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, மயங்கி விழுந்த அப்துல் கலாம் நாங்ரிம் மலைப் பகுதியில் உள்ள பெத்தானி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் செயற்கை சுவாசம் அளித்தனர். எனினும் இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 
 
இதையடுத்து கலாம் மாரடைப்பால் காலமானதாக மருத்துவர்கள் அறிவித்தனர். தகவல் அறிந்த மேகாலயா ஆளுநர் ஷண்முகநாதன் மருத்துவமனைக்கு விரைந்து சென்றார். நாளை காலை ஹெலிகாப்டர் மூலம் கவுஹாத்தியிலிருந்து டெல்லியில் உள்ள ராணுவ தலைமை அலுவலகத்திற்கு அப்துல் கலாம் உடல் கொண்டுவரப்படுகிறது.
 
83 வயதான அப்துல் கலாம் தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் 1931 ஆம் ஆண்டு பிறந்தார். ஜுலை 25- 2002 முதல் ஜுலை 25- 2007 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக கலாம் பதவி வகித்தார். பொக்ரான் அணுகுண்டு சோதனையின் போது பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராக அவர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 13 ஜூலை, 2015

Maalaimalar ePaper 13-JULY 2015 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  13-JULY-2015


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

ஞாயிறு, 12 ஜூலை, 2015

Maalaimalar 12-JULY-2015 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  12-JULY-2015


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

சனி, 11 ஜூலை, 2015

Maalaimalar ePaper 11-JULY-2015 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  11-JULY-2015


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

வியாழன், 9 ஜூலை, 2015

Maalaimalar ePaper 09-JULY-2015 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  09-JULY-2015


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

புதன், 8 ஜூலை, 2015

Maalaimalar ePaper 08-JULY-2015 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  08-JULY-2015


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

Makkal Kural ePaper மக்கள் குரல் இ-பேப்பர்

மக்கள் குரல் இ-பேப்பர்  


சென்னை, கோவை மற்றும் மதுரை பதிப்புகளை இ-பேப்பர் வடிவில் பார்க்கலாம் ! படிக்கலாம் !


 மக்கள் குரல் இ-பேப்பர்

 


வலைப்பக்கம் ! http://makkalkural.net/news/

-------------------------------------------------------

புதன், 1 ஜூலை, 2015

Maalaimalar ePaper 01-JULY-2015 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  01-JULY-2015


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

செவ்வாய், 30 ஜூன், 2015

Maalaimalar ePaper 30-JUNE-2015 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  30-JUNE-2015


  
http://epaper.maalaimalar.com/epaperhome.aspx?issue=3062015

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

எம்.எல்.ஏ.வாக ஜெயலலிதா இன்று மாலை பதவி ஏற்கிறார்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.



அவரை எதிர்த்து போட்டியிட்ட 27 பேருக்கும் டெபாசிட் பறிபோனது.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெற்றி பெற்றதை தேர்தல் அதிகாரி இன்று மதியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அவர் ஜெயலலிதாவின் முகவரிடம் ஒப்படைத்தார்.

இதையடுத்து அந்த வெற்றி சான்றிதழ் போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதை அ.தி. மு.க. மூத்த தலைவர்கள் ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்றே எம்.எல்.ஏ. ஆக பதவி ஏற்க முடிவு செய்துள்ளார். இதற்காக இன்று மாலை 4 மணிக்கு அவர் தலைமை செயலகத்துக்கு செல்கிறார்.

சபாநாயகர் அறையில் ஜெயலலிதா பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறும். மாலை 4.30 மணிக்கு ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. ஆக பதவி ஏற்றுக்கொள்கிறார்.

அவருக்கு சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
எம்.எல்.ஏ. ஆக பதவி ஏற்ற பிறகு முதல்–அமைச்சர் ஜெயலலிதா புதிய திட்ட தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்.

போடி முதல் ஆர்.கே. நகர் வரை ! ஜெயலலிதா

 போடி முதல் ஆர்.கே. நகர் வரை !
1)  1989 போடி
போடியில் முதல் வெற்றி 1989 ம் ஆண்டு அண்ணா தி.மு.க. இரண்டாக பிளவுபட்ட போது தென் தமிழகத்தின் போடிநாயக்கனூர் தொகுதியில் சேவல் சின்னத்தில் ஜெயலலிதா போட்டியிட்டு வென்றார். அத்தொகுதியில் ஜெயலலிதா 57,603 வாக்குகளையும் அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வின் முத்து மனோகரன் 28,872 வாக்குகளையும் பெற்றிருந்தார். 
வாக்கு வித்தியாசம் 28731. 
--------------------------------------------------------------
2)  1991 பர்கூர் - காங்கேயம்

1991ம் ஆண்டு எல்லை பகுதியான பர்கூர் மற்றும் மேற்கு பகுதியான ஈரோடு மாவட்டத்தின் காங்கேயம் தொகுதிகளில் ஜெயலலிதா போட்டியிட்டார். பர்கூரில் ஜெயலலிதா 67,680 வாக்குகளையும் அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழக முன்னேற்றக் கழகத்தின் டி.ராஜேந்தர் 30,465 வாக்குகளையும் பெற்றார். வாக்கு வித்தியாசம் 37215.
-------------------------------------------------------------------------
காங்கேயம் தொகுதியில் ஜெயலலிதா 69,050 வாக்குகளையும் அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வின் ராஜ்குமார் மன்றாடியார் 35,759 வாக்குகளையும் பெற்றிருந்தார். வாக்கு வித்தியாசம் 33291. எனினும் காங்கேயம் தொகுதியை ராஜினாமா செய்தார் ஜெயலலிதா.

--------------------------------


3)   1996 பர்கூரில் தோல்வி

1996ம் ஆண்டு மீண்டும் பர்கூர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். தி.மு.க.வின் சுகவனம் 59,418 வாக்குகளையும் ஜெயலலிதா 50,782 வாக்குகளையும் பெற்று 8639 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

4) 
2001 ல் வேட்புமனுக்கள் தள்ளுபடி

2001 ல் வேட்புமனுக்கள் தள்ளுபடி 2001ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கிருஷ்ணகிரி, ஆண்டிப்பட்டி, புவனகிரி, புதுக்கோட்டை ஆகிய தொகுதிகளில் ஜெயலலிதா வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தார். 2 தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாலும் ஜெயலலிதாவின் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.


5) 2002  ஆண்டிபட்டி

ஆண்டிபட்டி 2002ம் ஆண்டு தென்மாவட்டத்தின் ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றார் ஜெயலலிதா. இத்தேர்தலில் ஜெயலலிதா 78.437 வாக்குகளையும், தி.மு.க.வின் வைகை சேகர் 37,236 வாக்குகளையும் பெற்றார்.
6) 
2006 ஆண்டிபட்டி    ( மீண்டும் )

2006ம் ஆண்டு மீண்டும் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா 73,927 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார் தி.மு.க.வின் சீமான் பெற்ற வாக்குகள் 48,741 வாக்குகள். வாக்கு வித்தியாசம் 25186.

7) 2011 ஸ்ரீரங்கம்

2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு, 1,05,328 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வின் ஆனந்த் 63,480 வாக்குகளைத்தான் பெற்றிருந்தார். வாக்கு வித்தியாசம் 41848.

8) 2015 - ஆர்.கே.நகர் தொகுதி

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பதவியிழந்த ஜெயலலிதா, கர்நாடகா உயர்நீதிமன்றம் வழக்கில் இருந்து விடுதலை செய்ததை அடுத்து கடந்த மே மாதம் 23ம் தேதி 5வது முறையாக மீண்டும் முதல்வராக பதவியேற்றார் ஜெயலலிதா. இதனையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா பெற்ற வாக்குகள் 1,60,921. அவரை எதிர்த்து போட்டியிட்ட சி.மகேந்திரன் பெற்ற வாக்குகள் 9,669. ஜெயலலிதா 1,51,252 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்துள்ளார்.



ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதா 1,51,215வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதா 1,51,215வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.


பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்ததற்கு ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்கள் மற்றும் தோழமை கட்சியினருக்கும் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். வாக்காளப் பெருமக்கள் தம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ப பாடுபடுவேன் என ஜெயலலிதா உறுதியளித்துள்ளார்.


மேலும் ஜெயலலிதா வெற்றி பெற்றதை அடுத்து அதிமுக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இன்று மாலை சபாநாயகர் முன்னிலையில் எம்.எல்ஏ.வாக பதவி ஏற்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர். 

சமூக ஆர்வலர் டிராபிக் ராசாமி 2,939 வாக்குகள் பெற்று 3-வது இடத்தை பிடித்தார்.

திங்கள், 29 ஜூன், 2015

சனி, 27 ஜூன், 2015

Thinakkural ePaper 27-JUNE-2015 இலங்கை பாராளுமன்றம் - கலைப்பு

http://epaper.thinakkural.lk/

இலங்கை பாராளுமன்றம் - கலைப்பு -  ஆகஸ்ட் 17-இல் தேர்தல் !
http://epaper.thinakkural.lk/

ஞாயிறு, 21 ஜூன், 2015

Maalaimalar ePaper 21-JUNE-2015 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  21-JUNE-2015


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

சனி, 20 ஜூன், 2015

Maalaimalar ePaper 20-JUNE-2015 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  20-JUNE-2015


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !