Pages

வெள்ளி, 1 ஏப்ரல், 2016

TN2016 Elections ADMK தமிழகத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஜெயலலிதா முதலமைச்சராக நீடிப்பார் : சி ஓட்டர் கருத்துக்கணிப்பு முடிவு






தமிழகத்தில் அ.தி.மு.க.

-  சி ஓட்டர் கருத்துக்கணிப்பு முடிவு




தமிழகத்தில் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியா டிவி-சி ஓட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. 

234 தொகுதிகள் கொண்ட தமிழகத்தில் அ.தி.மு.க. 

அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று 

ஜெயலலிதா முதலமைச்சராக நீடிப்பார் என 

கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அ.தி.மு.க. 130 தொகுதிகளில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


தி.மு.க. 70 தொகுதிகளிலும், விஜயகாந்த் தலைமையிலான அணி 30 முதல் 34  தொகுதிகள் வரை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 


பா.ஜ.க. எந்த தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த வாக்குகளில் அ.தி.மு.க. 39 சதவீத வாக்குகளையும், தி.மு.க. 32 சதவீத வாக்குகளையும் பெறும் என அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.




புதுவையைப் பொருத்தவரையில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி 17 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் என்.ஆர். காங்கிரஸ் 7 தொகுதிகளிலும், அ.தி.மு.க. ஒரு தொகுதியிலும் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக