Pages

சனி, 21 செப்டம்பர், 2013

தினத்தந்தி : 25 ஆண்டுகளுக்கு பிறகு...வரலாற்றுச்சிறப்பு மிக்க வடக்கு மாகாண தேர்தல்


தினத்தந்தி : 21-09-2013

தினத்தந்தி : 21-09-2013



5 ஆண்டுகளுக்கு பிறகு, இலங்கை தமிழர் பகுதியில் 21-09-2013 இன்று (சனிக்கிழமை) ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. தமிழ் தேசிய கூட்டணி ஆதரவாளர்களை ராணுவம் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

 
கொழும்பு, செப்.21-இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே 30 ஆண்டுகளாக நடைபெற்று வந்த போர், கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.இன்று ஓட்டுப்பதிவுஅதன்பிறகு, இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மாகாணத்தில் முதல் முறையாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, இன்று 21-09-2013  (சனிக்கிழமை) ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. 


அத்துடன் வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கும் இன்று தேர்தல் நடத்தப்படுகிறது.3 மாகாணங்களிலும் மொத்தம் 43 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 24 ஆயிரம் போலீசார் உள்பட 40 ஆயிரம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மிக அதிக அளவில், யாழ்ப்பாணத்தில் 7 லட்சத்து 14 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.தமிழ் தேசிய கூட்டணிவடக்கு மாகாண கவுன்சில் தேர்தலில், தமிழர் கட்சியான தமிழ் தேசிய கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறுவது உறுதி. இந்த கட்சிக்கு முக்கிய போட்டியாக, அதிபர் ராஜபக்சே தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி கட்சி உள்ளது.வடக்கு மாகாணத்தில் உள்ள 36 தொகுதிகளில் மொத்தம் 906 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

தேர்தல் பிரசாரத்தின்போது ராணுவத்தினர் மிகவும் கெடுபிடியில் ஈடுபட்டு வருவதாக, தமிழர் கட்சி சார்பில் புகார் கூறப்பட்டு வந்தது. சில தொகுதிகளில் ஆளும் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் ராணுவத்தினர் பிரசாரம் செய்து வந்தனர்.ராணுவம் தாக்குதல்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ் தேசிய கூட்டணி ஆதரவாளர்களை ராணுவம் தாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டணி வேட்பாளரான ஆனந்தி சசிதரன் என்பவருடைய வீடு, நள்ளிரவில் ராணுவத்தினரால் தாக்கப்பட்டது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 9 பேர், யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். ஆனந்தியை கொலை செய்யும் முயற்சியில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. 


சமீபத்தில் கொழும்பு வந்த ஐ.நா.சபை மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளையிடம் புகார் கூறியதால், தனக்கு எதிராக இந்த தாக்குதல் நடந்துள்ளதாக ஆனந்தி கூறி இருக்கிறார்.தேர்தல் பார்வையாளர் தாக்கப்பட்டார்யாழ்ப்பாணம் மாவட்ட தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள கனகரத்னம் சுகாஷ் என்ற யாழ்ப்பாணம் மாவட்ட சட்ட ஆலோசகரும், மர்ம நபர்களால் நேற்று முன்தினம் பலமாக தாக்கப்பட்டார். துப்பாக்கி முனையில் அவரை முழங்காலிட வைத்து, இந்த தகவலை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்றும் அவர்கள் மிரட்டல் விடுத்தனர். தான் ஒரு வக்கீல் என்று கூறியதையும் பொருட்படுத்தாமல் தாக்கப்பட்டதாக தெரிவித்த அவர், சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவு தொண்டர்கள் சிலரும் ராணுவத்தினரால் தாக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

விக்னேஸ்வரன் கண்டனம்

ராணுவத்தினரின் இந்த தாக்குதலுக்கு தமிழ் தேசிய கூட்டணியின் தலைமை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன், மக்களை ஓட்டுப்போட விடாமல் ராணுவத்தினர் தடுக்கக்கூடும் என்றும் கவலை தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நடந்த நள்ளிரவு தாக்குதல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், நியாயமான சுதந்திரமான தேர்தலை உறுதி செய்ய வேண்டும் என்றும், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

25 ஆண்டுகளுக்கு பிறகு...வரலாற்றுச்சிறப்பு மிக்க வடக்கு மாகாண தேர்தல்

25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 1987-ம் ஆண்டு ஏற்பட்ட இந்தியா-இலங்கை ஒப்பந்தப்படி, மாகாண கவுன்சில்கள் உருவாக்கப்பட்டன. அதன்பிறகு முதன் முதலில் 1988-ம் ஆண்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கவுன்சில்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது, தனித்தமிழ் ஈழம் கோரி, விடுதலைப்புலிகளின் ஆயுதம் தாங்கிய போராட்டம் தீவிரம் அடைந்திருந்ததால் ஒரே ஒரு அரசியல் கட்சி மட்டுமே தேர்தலில் போட்டியிட்டது. 

மாகாண கவுன்சில்களுக்கு நில உரிமை மற்றும் போலீஸ் அதிகாரம் வழங்கப்படவில்லை. இந்த இரு அதிகாரங்களையும் வழங்க வேண்டும் என்பது சிறுபான்மை தமிழர்களின் முக்கிய கோரிக்கைகளாகும். 

---------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக