Pages

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

ஏற்காடு இடைத்தேர்தல் முடிவுகள் : அ.தி.மு.க 71 ஆயிரம் ஓட்டுக்களுடன் முன்னிலை

ஏற்காடு இடைத்தேர்தல் முடிவுகள் : அ.தி.மு.க 71 ஆயிரம் ஓட்டுக்களுடன் முன்னிலை ஏற்காடு சட்டசபை தொகுதி இடைத்தேர்லுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது. இதன்படி 11 வது சுற்று தவகலின்படி அ.தி.மு.க,. 71 ஆயிரத்து 577 ஓட்டுக்கள் பெற்று 37 ஆயிரத்திற்கும் மேலான ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. தி.மு.க., 34 ஆயிரத்து 248 ஓட்டுக்கள் பெற்றுள்ளது. யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை ( நோட்டோ ) என 2206 பேர் பதிவு செய்துள்ளனர். இந்த தேர்தலில் எதிர்கட்சியான தே.மு.தி.க., போட்டியிடவில்லை. ஓட்டு எண்ணிக்கை நடக்கும் சேலம் சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக் கல்லூரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.2 வது சுற்று நடந்த போது தி.மு.க., அ.தி.மு.க., இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஓட்டு எண்ணும் பணி சிறிது நேரம் நிறுதப்பட்டது,பின்னர் அரை மணி நேரம் கழித்து ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. இந்த தொகுதியில் அ.தி.மு.க,. எம்.எல்.ஏ.,வாக இருந்த பெருமாள் காலமானதை அடுத்து இங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. ஏற்காடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 9ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடந்தது. இதில், மூன்று பெண்கள் உள்பட 27 பேர் மனு தாக்கல் செய்தனர். அ.தி.மு.க. தரப்பில் சரோஜாவும், தி.மு.க., தரப்பில் மாறனும் போட்டியிட்டனர். இவர்கள் இருவருக்கும் இடையில் தான் நேரடி போட்டி இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக