Pages

வெள்ளி, 31 ஜனவரி, 2014

Uthayan epaper 31Jan2014 இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையே தேவை.




"இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையே தேவை. இதுவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தரும். சர்வதேச விசாரணையைக் கோரும் தீர்மானத்தை எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் அனைத்துலக நாடுகளின் ஆதரவுடன் அமெரிக்கா கட்டாயம் நிறைவேற்றியே ஆகவேண்டும்."   இவ்வாறு இன்று உத்தியோக பூர்வப் பயணம் மேற்கொண்டு கொழும்பு வரும் தெற்கு மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வாலிடம் சம்பந்தன் எம்.பி. தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று மாலை "உதயனி'டம் தெரிவித்தார்.     தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை இலங்கை அரசு ஒருபோதும் வழங்கமாட்டாது. எனவே, சர்வதேச சமூகம் தான் தமிழருக்கான கெளரவமான அரசியல் தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் நிஷாவிடம் கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.    


தெற்கு மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், பதவியேற்ற பின்னர் முதல் தடவையாக இன்று இலங்கை வருகின்றார். அவர் வந்த கையோடு இன்றிரவு 7 மணிக்கு கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.   இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறும் இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.   இந்தச் சந்திப்பு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.    இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,    எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா மாநாடு நடைபெறவுள்ள நிலையில் இலங்கையின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பில் நேரில் ஆராய்வதற்காக தெற்கு மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலர் இங்கு வருகின்றார். இவரிடம் முக்கிய பல விடயங்களை நாம் எடுத்துக்கூறவுள்ளோம்.


    இறுதிக்கட்டப் போரில் இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது இழைத்த போர்க்குற்றங்கள், இன அழிப்புக்கு ஒப்பான மானிடத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் உள் நாட்டு விசாரணை நீதியைப் பெற்றுத்தராது.    எனவே, இது தொடர்பில் சர்வதேச விசாரணை கோரும் தீர்மானம் ஜெனிவாவில் கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டும்.   மன்னார் - திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாபெரும் மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும். காணாமல்போன தமது சொந்தங்களைத் தேடி அலையும் உறவுகளுக்கு சர்வதேச சமூகம் ஐ.நாவில் நீதியைப் பெற்றுக்கொடுக்கவேண்டும்.    சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் விடுதலை கிடைக்க வேண்டும். அரசின் அனுமதியுடன் வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் காணி சுவீகரிப்புகள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். 


   தமிழ் மக்களின் வாழ் விடங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும். இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழும் வலிகாமம் வடக்கு, சம்பூர் மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட வேண்டும்.    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள வடக்கு மாகாணசபை அரசின் முட்டுக்கட்டைகள் எதுவுமின்றி முறையாக இயங்கக்கூடிய சூழல் ஏற்படவேண்டும்.    வடக்கு, கிழக்கு மக்கள் தமது தாயகத்தில் கெளரவமாக - சுதந்திரமாக வாழக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வை சர்வதேச சமூகம் பெற்றுக்கொடுக்க வேண்டும். இவ்வாறு பல முக்கிய விடயங்களை நிஷா தேசாய் பிஸ்வாலிடம் எடுத்துரைக்கவுள்ளோம் - என்றார்.   இலங்கைக்கு இன்று வரும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலர் அரச தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். அதன் பின்னர் நாளை சனிக்கிழமை அவர் வடக்கு செல்கின்றார்.    அங்கு சிவில் சமூகப் பிரதிநிதிகள், வடக்கு ஆளுநர் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.   இவர், இலங்கைப் பயணத்தை முடித்துக்கொண்டு பிரிட்டனுக்கும் பின்னர் ஜெனிவாவுக்கும் செல்லவுள்ளார் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.   


 இலங்கை அரசு மீது சர்வதேச விசாரணை நடத்துமாறு கோரவுள்ளதாக எச்சரித்துள்ள பிரிட்டனுக்கு, இலங்கை தொடர்பிலான தற்போதைய நிலைமைகளை உதவிச் செயலர் விளக்குவார் என்றும் அதன் பின்னர், பிரிட்டனின் அனுசரணையுடன் அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான தீர்மா னத்தை ஜெனிவாவில் சமர்ப்பிக்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபடுவார் என்றும் தெரியவருகின்றது.   இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரிட்டன் அரசுப் பிரதிநிதிகளை சந்திப்பதற்காக நிஷா எதிர்வரும் 3 ஆம் திகதி லண்டன் செல்வார்.   பின்னர் அவர் ஜெனிவா சென்று, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் எதிர்வரும் மார்ச் மாத அமர்வில் இலங்கை மீது கொண்டுவரவுள்ள தீர்மானம் குறித்த சந்திப்புகளை நடத்தவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=117182612031272212#sthash.3hZZ1H4x.dpuf

மாலைமலர் இ-பேப்பர் Maalaimalar epaper 31-JAN-2014

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  31-JAN-2014




   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

வேலைவாய்ப்பு இணையதளம் Dailythanthi epaper 31Jan2014





வேலைவாய்ப்பு இணையதளம்
சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்பு முதலீடுகளை உயர்த்த இந்த அரசு முனைந்துள்ளது. மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்குவது இதற்கான முன்னோடி திட்டங்களில் ஒன்றாகும். நமது இளைஞர்களை வேலைவாய்ப்பு பெற தகுதியுடைவர்களாக்குவதில் உள்ள சவால்களை எதிர்கொண்டு, அவர்களது திறன் அளவை மேம்படுத்த தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கம் என்ற தனிச்சிறப்புடைய முன்முயற்சி அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, வேலை தேடுபவர்களையும் வேலைவாய்ப்பு அளிப்பவர்களையும் இணைக்கும் தளமாக, மாநில வேலைவாய்ப்பு இணைய தளம் ஒன்று தொடங்கப்படும். வேலைவாய்ப்பு ஆலோசனைகள், பயிற்சிகள் மற்றும் பணியமர்வு உதவிகள் குறித்த தகவல்களை ஒரே இடத்தில் இது வழங்கும். மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கத்திற்காக, சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை நமது மாநிலம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கவர்னர் ரோசய்யா தெரிவித்தார்.

மாலைமலர் இ-பேப்பர் Maalaimalar Epaper30-JAN-2014

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  30-JAN-2014




   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

மாலைமலர் இ-பேப்பர் Maalaimalar epaper 29-JAN-2014

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  29-JAN-2014




   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

2014: தமிழ்நாட்டில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு ஆகிறார்கள்

http://www.dailythanthi.com/2014-01-27--delhi-mp-poll-petition-filing-completed-6-selected-as-unopposed-admik-4-dmk-1-cpm-1



டெல்லி மேல்–சபையில் தமிழகத்தை சேர்ந்த 6 உறுப்பினர்களின் (ராஜ்ய சபா எம்.பி.) பதவிக்காலம் ஏப்ரல் மாதம் நிறைவு பெறுகிறது.
அந்த காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் பிப்ரவரி 7–ந்தேதி நடைபெறும் என்று மத்திய தேர்தல் கமிஷன் அறிவித்தது.

டெல்லி மேல்–சபை எம்.பி.க்களை மாநில சட்டசபை உறுப்பினர்கள் ஒட்டு போட்டு தேர்வு செய்ய வேண்டும். இதன்படி இந்த தேர்தலை நடத்தும் அதிகாரியாக அ.மு.பி.ஜமாலுதீன் (தமிழக சட்டசபை செயலாளர்), தேர்தல் நடத்தும் உதவி அதிகாரியாக அ.வீரராஜேந்திரன் (சட்டசபை துணைச்செயலாளர்) ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

வேட்புமனு தாக்கல்
இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 21–ந்தேதி தொடங்கியது. முதல் நாளில் தி.மு.க.வை சேர்ந்த திருச்சி சிவா, அந்த கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தேர்தல் அதிகாரி ஜமாலுதீனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் மேட்டூரைச்சேர்ந்த கே.பத்மராஜன், வீரவன்னியர் மக்கள் இயக்கத்தின் நிறுவனர் பி.என்.ஸ்ரீராமச்சந்திரன் ஆகியோர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தனர்.

27–ந்தேதி அன்று அ.தி.மு.க.வை சேர்ந்த எஸ்.முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த், சசிகலா புஷ்பா, ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அதைத்தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த டி.கே.ரங்கராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

மனு தாக்கல் முடிந்தது
வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள். பிற்பகல் 3 மணிக்கு மனு தாக்கல் முடிவடையும் வரை நேற்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று(புதன்கிழமை) நடைபெறுகிறது. இதுபற்றி தேர்தல் அதிகாரி கூறியதாவது:–
29–ந்தேதி (இன்று) காலை 11 மணிக்கு வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படும். அப்போது வேட்பாளரோ அல்லது அவரை முன்மொழிந்தவரோ அல்லது ஏஜெண்டோ இருக்க வேண்டும். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் முன்னிலையில் வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும்.

பரிசீலனைக்கு பின்னர், விதிகளின்படி தாக்கல் செய்யப்படாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கு 31–ந் தேதி பிற்பகல் 3 மணி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அன்று மாலையில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.


போட்டியின்றி தேர்வு
தற்போது 2 சுயேச்சை மனுக்களை சேர்த்து 8 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இரண்டு சுயேச்சை வேட்பாளர்களை எம்.எல்.ஏ.க்கள் யாரும் முன்மொழியவில்லை என்பதால் 2 மனுக்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.


அந்த சூழ்நிலையில் அ.தி.மு.க சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த், முத்துக்கருப்பன், செல்வராஜ், தி.மு.க. வேட்பாளர் திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் டி.கே.ரெங்கராஜன் ஆகிய 6 வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் இருப்பார்கள். 6 உறுப்பினர் பதவிக்கு 6 வேட்புமனுக்கள் மட்டுமே இருக்கும் சூழ்நிலையில் ஓட்டுப்பதிவு நடைபெறாது. அந்த 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவர். 31–ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு மேல் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கான சான்றிதழ்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வழங்குவார்.

செவ்வாய், 28 ஜனவரி, 2014

Uthayan epaper 28Jan2014 Northern Council seeks international war crimes probe போர்குற்றம் குறித்த சர்வதேச விசாரணை









போர்குற்றம் குறித்த சர்வதேச விசாரணை



http://www.euthayan.com/indexresult.php?id=25891&thrus=0


இலங்கை வட மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி நட்டைபெற்று வருகிறது.இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, வடக்கு மாகாண சபை  கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கை தமிழர் பிரச்னைகளை தீர்ப்பதற்கு அந்த நாட்டு அரசு நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக, சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில் மூன்று அம்ச தீர்மானங்கள் வடக்கு மாகாண சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தங்களது கவலைகள் குறித்து இலங்கை அரசு உண்மையிலேயே நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை தமிழர்களுக்கு இல்லை என்பதால், இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக மாகாண உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின் போது நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணைக்கு ஐ.நா உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானிக்கப்பட்டதாக, சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

மாலைமலர் இ-பேப்பர் MaalaiMalar epaper 28-JAN-2014

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  28-JAN-2014




   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

திங்கள், 27 ஜனவரி, 2014

மாலைமலர் இ-பேப்பர் Maalaimalar epaper 27-JAN-2014

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  27-JAN-2014




   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

மாலைமலர் இ-பேப்பர் Maalaimalar Epaper 26-JAN-2014

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  26-JAN-2014




   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

2014 : Padmabhusan Awards Kamal & Vairamuthu பத்மபூஷன் விருது : கமல், வைரமுத்து

குடியரசு தினத்தையொட்டி, பல்வேறு துறைகளில் சேவை மற்றும் சாதனை செய்தவர்களுக்கு, மத்திய அரசின் சார்பில், ஆண்டு தோறும், பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டுக்கான, பத்ம விருதுக்கு, 127 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.


இதில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், சினிமாவில் 50 ஆண்டுகளாக பணியாற்றி வரும் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், நடன அமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக அடையாளங்களை கொண்டு, உலகநாயகன் என அனைவராலும் அழைக்கப்படும் கமல்ஹாசனுக்கு இந்தாண்டு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 1990-ம் ஆண்டு கமல்ஹாசனுக்கு மத்திய அரசு, பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது.

இதேப்போல் சினிமாவில் 7,500 பாடல்களுக்கு மேல் எழுதி சாதனைப்படைத்த கவிப்பேரரசு வைரமுத்துவுக்கும் இந்தாண்டு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கும் 2003ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது.

சனி, 25 ஜனவரி, 2014

மாலைமலர் இ-பேப்பர் Maalaimalar epaper 25-JAN-2014



மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  25-JAN-2014

   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Jan25 சனவரி 25 - மொழிப் போர் ஈகியர் நாள்



சனவரி 25 - மொழிப் போர் ஈகியர் நாள்

தமிழ்நாட்டில் இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியைக் கண்டித்து, 1938இலும், 1965இலும் நடைபெற்ற மொழிப் போரில் உயிரீகம் செய்த ஈகியரின் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் சனவரி 25 அன்று கடைபிடிக்கப்படுகின்றது.

அ.தி.மு.க  &   தி.மு.க  / MDMK சார்பில் 25–ந்தேதி "வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள்" நடைபெற உள்ளன.





தமிழர்களுக்கு மொழிப் போர் ஈகியர் நாள் மிக முக்கியமானது.

இந்தியின் ஆதிக்கத்தை எதிர்த்து 500 க்கும் மேற்பட்ட தமிழர்கள் உயிர் நீத்தனர்.


பலர் தங்களை தீயிட்டு கொளுத்திக் கொண்டனர். பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர் . இப்படியான தியாகத்தை உலகில் வேறு எந்த இனமும் செய்ததில்லை. தங்கள் உயரிய மொழி காக்க தங்கள் இன்னுயிரை ஈந்தவர்கள் இவர்கள். ஈழத்தில் மாவீர்களுக்கு நிகரானவர்கள் இவர்கள். இவர்கள் இல்லையெனில் தமிழகத்திலும் இந்தியே அலுவல் மொழியாக இருந்திருக்கும். தகவல்கள் அனைத்தும் இந்தியில் பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கும்.

இவர்கள் செய்த ஒப்பற்ற போராட்டத்தின் விளைவாக இந்தியோடு ஆங்கிலமும் இந்தியாவின் அலுவல் மொழியாக மக்கள் விரும்பும் வரை நீடிக்கலாம் என்று இந்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தது. இது இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களுக்கும் விடியலை தேடித் தந்தது. இந்தி அல்லாத மாநிலங்கள் நடுவண் அரசோடு ஆங்கிலத்தில் தகவலை பரிமாறிக் கொள்ளலாம் என்ற நிலை வந்தது. அதனால் பல மாநில மொழிகள் காப்பாற்றப்பட்டது.

ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெரும் நன்மையை செய்து விட்டு மறைந்தனர் இந்த ஈகிகள். இருப்பினும் இவர்கள் செய்த தியாகத்தின் பலனை நாம் முழுமையாக அனுபவிக்க வில்லை. இந்தித் திணிப்பு இந்தியாவில் ஓயவில்லை . 


அனைத்து மாநில மக்களையும் இந்தி பேசும் மக்களாக மாற்றும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது . அந்த செயல்திட்டத்தை நிறைவேற்ற எங்கும் இந்தி எதிலும் இந்தி என்ற அறிவிக்கப்படாத இந்தித் திணிப்பை நடைமுறைப்படுத்தியுள்ளது . 


வங்கிகள் , தொடர்வண்டி நிலையங்கள் , விமான நிலையங்கள் , அஞ்சல் நிலையங்கள் , வருமான வரி அலுவலகம் , ராணுவம் , கப்பல் படை , ஊடகங்கள், பள்ளிகள் என மக்கள் பயன்படுத்தும் அனைத்து இடங்களிலும் இந்தி அல்லாத மக்களிடம் இந்தியை திணித்து வருகிறது இந்திய அரசு. 

தேசிய இன மக்களின் தாய் மொழி உரிமையை இதுநாள் வரை மறுத்து வருகிறது . இந்தியை மட்டும் ஒற்றை ஆட்சி மொழியாக அறிவித்து விட்டு தேசிய இனங்களின் அடையாளத்தை சிறுது சிறிதாக அழித்து வருகிறது இந்திய அரசு.

மொழி அழிந்தால் இனம் அழியும் என்ற கூற்றுக்கு இணங்க நம் தாய் மொழிகளை அழித்து ஒரு இன அழிப்பையே நடத்தி வருகிறது இந்திய அரசு . இந்த நிலையை நாம் தான் மாற்ற வேண்டும் . 'நம் மொழி நம் உரிமை' என்பதை நிலைநாட்டுவோம் . நம் மொழி உரிமையை கேட்டுப் பெறுவோம்.

வெள்ளி, 24 ஜனவரி, 2014

மாலைமலர் இ-பேப்பர் Maalaimalar epaper 24-JAN-2014

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  24-JAN-2014




   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

DMK suspends Azhagiri மு.க. அழகிரி தி.மு.க.வில் இருந்து தற்காலிக நீக்கம்




தி.மு.க.வில் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியில் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி நியமனம் செய்யப்பட்டிருந்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு மத்திய மந்திரியாகவும் பொறுப்பேற்ற மு.க.அழகிரிக்கு மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஆதரவாளர்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக மு.க.அழகிரி ஆதரவாளர்களுக்கும் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கும் இடையே கோஷ்டி பூசல் இருந்து வந்தது.

தி.மு.க. தலைமை இரு தரப்பினரையும் பல தடவை அழைத்து சமரசம் செய்தும், மதுரையில் ஏற்பட்ட கோஷ்டி பூசலை தீர்க்க முடியவில்லை. இந்த நிலையில் கடந்த மாதம் இந்த கோஷ்டி பூசல் பூதாகரமாக வெடித்தது. மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களும், மு.க.அழகிரி ஆதரவாளர்களும் போட்டி போட்டிக் கொண்டு பரபரப்பு வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டினார்கள்.

பாராளுமன்றத்துக்கு தேர்தல் நெருங்கும் நிலையில் தென் மண்டல கோஷ்டி பூசல் நீடித்தால், அது தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்று தி.மு.க. தலைமையிடம் புகார்கள் கூறப்பட்டன. இந்த நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு மு.க.அழகிரி அளித்த பேட்டியும் விமர்சனத்துக்குள்ளானது.

இதையடுத்து மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க.வை கலைத்து தி.மு.க. மேலிடம் நடவடிக்கை எடுத்தது. அழகிரி ஆதரவாளர்கள் அனைவரும் நீக்கப்பட்டு, ஸ்டாலின் ஆதரவாளர்களைக் கொண்ட புதிய பொறுப்புக் குழுவும் அமைக்கப்பட்டது. அழகிரி ஆதரவாளர்களில் முன்னாள் துணை மேயர் மன்னன், கவுன்சிலர் முபாரக் மந்திரி, நிர்வாகிகள் பாலாஜி, எழில்மாறன், அன்பரசு, இளங்கோவன் ஆகியோர் நீக்கப்பட்டது அழகிரி ஆதரவாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகும் அழகிரி ஆதரவாளர்கள் மதுரையில் பரபரப்பு போஸ்டர்களை ஒட்டுவதை கைவிட வில்லை.

சமீபத்தில் மதுரை மாநகரிலும், புறநகரிலும் அழகிரி ஆதரவாளர்கள் நோட்டீசு ஒட்டிய போது, அதை ஸ்டாலின் ஆதரவாளர்கள் தடுத்தனர். இது மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே மோதலாக மாறியது. தங்களை சாதியைச் சொல்லி திட்டியதாக ஆண்டாள்புரம், மேலூர் போலீஸ் நிலையங்களில் அழகிரி ஆதரவாளர்கள் புகார் கொடுத்தனர். அதை ஏற்று போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த வார தொடக்கத்தில் மதுரையில் அழகிரி– ஸ்டாலின் ஆதரவாளர்கள் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. இதைத் தொடர்ந்து மதுரையில் இருந்து கருணாநிதிக்கு 2500–க்கும் மேற்பட்ட புகார்கள் பேக்ஸ் மூலம் அனுப்பப்பட்டது. இது பற்றி விசாரணை நடத்திய தி.மு.க. மேலிடம் நேற்று அழகிரி ஆதரவாளர்கள் 5 பேரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து அறிவித்தது. அதன்படி அழகிரி ஆதரவாளர்களான மாவட்ட துணை செயலாளர் எம்.எல்.ராஜ் (மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் குழு தலைவர்), மதுரை மாவட்ட முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அசோக்குமார், கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மேலூர் முத்துவேல், வெள்ளையன் ஆகிய 5 பேரை கட்சியில் இருந்து சஸ்பெண்டு (தற்காலிக நீக்கம்) செய்யப்பட்டனர்.

அழகிரி ஆதரவாளர்கள் அடுத்தடுத்து நீக்கப்பட்டதால் மதுரை தி.மு.க.வில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் பாங்காங் நாட்டுக்கு சென்றிருந்த மு.க.அழகிரி இன்று (வெள்ளி) காலை சென்னை திரும்பினார். காலை 7 மணிக்கு கோபாலபுரம் சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். இருவரும் சுமார் 45 நிமிடம் பேசிக் கொண்டிருந்தனர். அதன் பிறகு தயாளு அம்மாளையும் சந்தித்து பேசிவிட்டு அழகிரி புறப்பட்டு சென்றார்.

கடந்த தடவை கருணாநிதியை சந்தித்த அழகிரி மிகவும் மகிழ்ச்சியுடன் நிருபர்களிடம் பேசி விட்டு சென்றார். எனவே இன்று அவர் கருணாநிதியை சந்தித்த போது தன் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டதை மறு பரிசீலினை செய்ய கோரிக்கை விடுத்திருப்பார் என்று கூறப்பட்டது.

அழகிரி ஆதரவாளர்கள் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படலாம் என்றும் ஒரு தரப்பினர் ஆவலுடன் இருந்தனர். ஆனால் சந்திப்பு முடிந்த அடுத்த 4 மணி நேரத்துக்குள் அழகிரியையும் தற்காலிக நீக்கம் செய்த நடவடிக்கை தகவல் வெளியானது. இன்று அழகிரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

கட்சிக்குள் ஏற்படும் அபிப்பிராயப் பேதங்கள், கோபதாபங்கள் இவை களைப் பற்றி முறையிட, கட்சிக்குள்ளேயே முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் தலைமைக் கழகத்தில் இருக்கின்ற நிலையில்; தங்கள் எண்ணங்களை வெளியிடவும், கட்சியின் கட்டுப்பாட்டைக் குலைக்காமல் காப்பாற்றவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் முறைப்படியுள்ள கழக அமைப்புகளைக் கலந்து பேசாமலும், அந்த அமைப்புகளை மதிக்காமலும், வேண்டுமென்றே திட்டமிட்டு, கழக அணியோடு கூட்டணி சேர நினைக்கின்ற கட்சிகளின் தலைமையைப் பற்றி அவதூறு கூறி கூட்டணி ஏற்படுவதைக் குலைக்க முயற்சித்தும் - திராவிட இயக்கம் தொடக்க முதல் இதுவரையில் விரும்பாததும், வெறுத்து ஒதுக்குவதுமான சாதிச் சச்சரவுகள்; இயக்கத்திற்குள் ஏற்பட்டிருப்பது போன்ற ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்கி; தங்கள் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு சிலர் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் தி.மு. கழகத் தோழர்கள் சிலர் மீது பி.சி.ஆர் எனும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி, நடவடிக்கை எடுக்க, துணை போகிற துரோகச் செயலில் ஈடுபட்ட சிலர் மீதெல்லாம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு துரோகச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தும், முறையற்ற விவாதங்களில் நேரிடையாகவே ஈடுபட்டும், கழகச் செயல் வீரர்களை தொடர்ந்து பணியாற்ற வேண்டாமென்று கூறியும், குழப்பம் விளைவிக்க முயன்ற தென் மண்டலக் கழக அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரி இனியும் தொடர்ந்து கழகத்தில் நீடிப்பது முறையல்ல என்ற காரணத்தாலும் - அது கழகத்தின் கட்டுப்பாட்டை மேலும் குலைத்து விடும் என்பதாலும் - அவர், தி.மு. கழக உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.

கழகத்தின் நன்மைக்காக தெரிவித்துள்ள முடிவான இந்தக் கருத்தினை, கழக உடன்பிறப்புகள் அனைவரும் ஏற்று, ஒற்றுமையோடும், கட்டுப்பாட்டோடும் கழகம் நடப்பதற்கு உடன்பிறப்புகள் அனைவரும் துணை நிற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விஜயகாந்துடன் கூட்டணி சேருவதை விமர்சித்து அழகிரி பேட்டி கொடுத்திருந்த போது அதை கருணாநிதி கண்டித்தார். கட்சி நலனுக்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கருணாநிதி எச்சரித்திருந்தார். அதன் தொடர்ச்சியாகவே அழகிரி தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

மு.க.அழகிரி நீக்கப்பட்ட பிறகு கோபால புரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது பேராசிரியர் அன்பழகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கே.என்.நேரு ஆகியோரும் உடன் இருந்தனர்.

பின்னர் வெளியே வந்த அன்பழகன் நிருபர்களிடம் கூறுகையில் கட்சியில் அழகிரி குழப்பம் விளைவிக்க முயன்றதால் கட்சி கட்டுப் பாட்டை காப்பாற்ற அவர் நீக்கப்பட்டதாகவும் இது தொடர்பாக விளக்கமாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


=====================================================


 Thanks : Maalaimalar


 

ADMK Announces Candidates : அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு

மாநிலங்களவைத் தேர்தல்களில் அஇஅதிமுக சார்பாக நால்வர் போட்டியிடவிருப்பதாக தமிழக முதல்வரும் கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இன்று வியாழக்கிழமை அறிவித்திருக்கிறார்.

தூத்துக்குடி மேயர் சசிகலா புஷ்பா, நெல்லை மேயர் விஜிலா சத்யானந்த், நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் முத்துக்கருப்பன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் சின்னத்துரை ஆகியோரே அஇஅதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நால்வரும் திருநெல்வேலி மற்றும் அதன் அண்டை மாவட்டமான தூத்துக்குடியைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெயலலிதா தனது அறிக்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை அஇஅதிமுக ஆதரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் அறிக்கை வெளியான பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தற்போது பதவிக் காலம் முடிவடைந்த டி.கே.இரங்கராஜனே மீண்டும் போட்டியிடுவார் என அறிவித்திருக்கிறது.

ஐவருமே வெற்றி பெறும் அளவுக்கு சட்டமன்றத்தில் அஇஅதிமுக மற்றும் இடதுசாரிக் கட்சிகளுக்கு போதுமான உறுப்பினர் எண்ணிக்கை இருக்கிறது.

திமுக சார்பில் அந்த கட்சியைச் சேர்ந்த திருச்சி சிவா ஏற்கெனவே மனு தாக்கல் செய்திருக்கிறார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வகிக்கும் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவர் விஜயகாந்த் இந்த தேர்தலில் தன் கட்சியின் நிலைப்பாட்டை இன்னமும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாலைமலர் இ-பேப்பர் Maalaimalar Epaper 23-JAN-2014



மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  23-JAN-2014

   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Netaji : நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம் (ஜன. 23)

மக்களால் நேதாஜி என்று மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் 1897-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதேநாளில் வங்காள இந்து குடும்பத்தில் பிறந்தார்.


இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.

இலங்கையில் நடந்தது " இனப்படுகொலை" & இந்தியா உடந்தை





இலங்கையில் நடந்தது " இனப்படுகொலை"  &  இந்தியா உடந்தை!




23-JAN-2014    ( Thanks to :  புதிய தலைமுறை /puthiyathalaimurai  )


புதன், 22 ஜனவரி, 2014

மாலைமலர் இ-பேப்பர் Maalaimalar epaper 22-JAN-2014



மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  22-JAN-2014

   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

செவ்வாய், 21 ஜனவரி, 2014

மாலைமலர் இ-பேப்பர் MaalaiMalar epaper 21-JAN-2014





மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  21-JAN-2014

   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மாலைமலர் இ-பேப்பர் 20-JAN-2014





மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  20-JAN

   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஞாயிறு, 19 ஜனவரி, 2014

மாலைமலர் இ-பேப்பர் 19-JAN





மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  19-JAN

   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மாலைமலர் இ-பேப்பர் 18-JAN-2014



மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  18-JAN

   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வெள்ளி, 17 ஜனவரி, 2014

மாலைமலர் இ-பேப்பர் 17-JAN



மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  17-JAN

   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வியாழன், 16 ஜனவரி, 2014

மாலைமலர் இ-பேப்பர் 16-JAN



மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  16-JAN

   இங்கே படிக்கவும் !


அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~