Pages

வியாழன், 20 பிப்ரவரி, 2014

யாழ்ப்பாணம் ( பலாலி ) , திருகோணமலை - யில் இருந்து தமிழ்நாட்டுக்கு விமான சேவை ! வடக்கு மாநிலம் - தீர்மானம் !



யாழ்ப்பாணம் ( பலாலி ) , திருகோணமலை - யில் இருந்து தமிழ்நாட்டுக்கு விமான சேவை !

வடக்கு மாநிலம் - தீர்மானம் !

ஈழத் தமிழர்கள் வாழும் திருகோணமலை மற்றும்யாழ்ப்பாணம் - பலாலியில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமான சேவை இயக்கப்பட வேண்டும் என்று இலங்கையின் வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


 இலங்கை வடக்கு மாகாண சபையின் கூட்டம் கைதடியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வடக்கில் உள்ள பலாலி, கிழக்கில் உள்ள திருகோணமலையில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமான சேவை நடத்தப்பட வேண்டும். 

தலைமன்னார்- ராமேஸ்வரம் இடையே கப்பல் போக்குவரத்து மீண்டும் இயக்கப்பட வேண்டும் என சிவாஜிலிங்கம் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார். 

இதை மற்றொரு உறுப்பினரான கந்தையா சர்வேஸ்வரன் வழிமொழிந்தார். பின்னர் தீர்மானம் ஏகமனதாக நேற்று மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக