Pages

சனி, 18 அக்டோபர், 2014

பெங்களூரு சிறையிலிருந்து ஜெயலலிதா விடுதலை: சென்னை வந்தடைந்தார்


ஜாமினில் விடுவிப்பதற்கான உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நகல் வழங்கப்பட்டதையடுத்து பெங்களூரு பரப்பன அக்ரகார சிறைச்சாலையில் இருந்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார். சிறை வாசலில் குவிந்திருந்த ஏராளமான தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ஜெயலலிதாவின் விடுதலையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழந்தனர்.

விடுதலையான ஜெயலலிதா சிறை வளாகத்தில் இருந்து நேராக பெங்களூர் ஹெச்.ஏ.எல் விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானம்  சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை வரவேற்க ஏராள தொண்டர்கள் மற்றும் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் குவிந்தனர்.

ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர்.  ஜெயலலிதாவை வரவேற்க தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் பரப்பன அக்ரகார சிறைவளாகத்தில் முகாமிட்டிருந்தனர்.

ஜெயலலிதாவை வரவேற்க அவரது சென்னை போயஸ் கார்டன் இல்லம் மற்றும் அ.தி.மு.க தலைமை அலுவலகத்திலும் கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் குவிந்துள்ளனர்


லைவ்
http://www.puthiyathalaimurai.tv/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக