Pages

வெள்ளி, 9 ஜனவரி, 2015

சரிந்தது மகிந்த அரசு !

இலங்கையில் நடைபெற்று வந்த குடும்ப ஆட்சியை நாட்டு மக்கள் முடிவுக்குக் கொண்டு வந்து மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
 
ஜனாதிபதித் தேர்தல் நேற்று நடைபெற்று முடிவுகளும் அறிவிக்கப்பட்டு பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 7ஆவது ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார். கடந்த கால அராஜக ஆட்சிக்கு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளனர். 
 
அம்பாந்தோட்டையில் பிறந்த மகிந்த ராஜபக்ச தனது தந்தையாரின் அரசியல் வழியிலேயே தானும் அரசியலில் நுழைந்தவர்.
 
1970 ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சியில் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினரானார். எனினும் 1977 ஆம் உறுப்பினர் பதவியை இழந்தார். மீண்டும் 2004 ஆம் ஆண்டில் இருந்து 2005 ஆம் ஆண்டு வரை இலங்கையின் பிரதமராக இருந்தார். 
 
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகச் சந்திரிக்கா பண்டாரநாயக்க இருந்தார். எனினும் அவரது ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்த நினைத்த சிங்கள மக்கள் தேர்தலில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்சவை வாக்கிட்டு வெற்றிபெறச் செய்தனர்.
 
அதேவேளை, 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் கோரியிருந்தனர்.  இதற்கமைய தமிழ் மக்கள் 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை புறக்கணித்திருந்தனர்.
 
இருப்பினும் தமிழர்களது வாக்குகள் இன்றி 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு ஆட்சிப் பீடம் ஏறினார் மஹிந்த.
 
அவர் தனது ஆட்சியில் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதற்குப் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தார். அவரது காலப் பகுதியில் வடக்கு-கிழக்கில் பலர் காணாமல்போயினர்.கடத்தப்பட்டனர். சுடப்பட்டனர்.
 
தனது ஆட்சியில் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டிருந்த மகிந்தவுக்கு மாவிலாறு தண்ணீர் விநியோகம் முதலாவது காய் நகர்த்தலாக அமைந்தது.  அது மாவிலாற்றில் ஆரம்பித்து முள்ளிவாய்க்காலில் முடிவுற்றது.
 
பல்லாயிரக்காண மக்கள் கொல்லப்பட்டும் , அங்கவீனர்களாகியும், காணாமல்போகச் செய்யப்பட்டும் 2009 மே 18 ஆம் திகதி போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
 
போர் முடிந்து பல ஆண்டுகள் கடந்த நிலையிலும் தமிழ் மக்களின் தீர்வுக்கான செயற்பாடுகள் எவையும் மகிந்தவால் முன்னெடுக்கப்படவில்லை.
 
இந்தநிலையில், மீண்டும் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்றது. அப்போது வடக்கு மக்கள் வாக்களிக்கும் நிலையில் இருக்கவில்லை.
 
முகாம்களிலும், தடுப்புக்களிலும், காணாமல்போனவர்களாகவும் ,நலிவடைந்தவர்களாகவும் அவர்கள் காணப்பட்டனர். இதனால் மகிந்தவை எதிர்த்து முழுமையாக வாக்களிக்க முடியவில்லை.
 
ஆனால் தென் பகுதியில் உள்ள மக்கள்,  பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தினார், அபிவிருத்தியைக் கொண்டு வருகின்றார் என்ற எண்ணப்பாட்டில் மகிந்தவுக்கு வாக்களித்து அவரை இரண்டாம் முறையாக ஆட்சிப் பீடம் ஏற்றினர். 
 
அன்றைய காலப் பகுதியில் இருந்து குடும்ப ஆட்சி மேலும் வலுப்பெற்றது. தனது அண்ணனை, தம்பிகளை, மகனை , மருமகனைப் பதவிகளில் அமர்த்தி ஆட்சியைப் பலமாக நகர்த்திச் சென்றார். 
 
இந்தக் குடும்ப ஆட்சிக்குக் காலப்போக்கில் தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும் பலிக்கடா ஆக்கப்பட்டனர்.
 
அபிவிருத்தி என்ற அடிப்படையில் தனது ஊருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மேற்கொண்டதுடன்.தங்களது பதவியும், பெயரும் எக்காலத்திலும் நிலைத்து நிற்கவேண்டும் என்பதற்காகத் தங்களது பெயர்களில் கட்டங்களை அமைத்தும், பெரும் முதலீடுகளையும் மேற்கொண்டனர்.
 
இவை அனைத்தும் அம்பாந்தோட்டையிலேயே நடைபெற்றன. ஏனைய மாகாணங்களுக்கு மகிந்த வழங்கிய அபிவிருத்தி வீதி திருத்தல் தான். அதிலும் பெருந்தெருக்களே புனரமைக்கப்பட்டன. இன்னும் எத்தனை ஆயிரம் வீதிகள் திருத்தப்படாது உள்ளன.
 
இது ஒரு புறமிருக்க 2009 ஆண்டு இடம்பெற்ற போரில் மனித உரிமை மீறல்களில் மகிந்த அரசு ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டு உள்நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகளாலும் சர்வதேசத்தினாலும் முன் வைக்கப்படுகின்ற நிலையில் இதுவரை எந்த முன்னேற்றமான விசாரணைகளோ தீர்வுகளோ மேற்கொள்ளப்படவில்லை. 
 
இதற்கு நீதியாக தீர்வு ஒன்றினைப் பெற மகிந்த சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனத் தமிழர்கள் எண்ணுகிறார்கள்.
 
இந்த மகிந்த அரசு பயங்கரவாதத்தை ஒழித்துச் சமாதானத்தை ஏற்படுத்தியதாக அறிவிக்கப்பட்டு 5 வருடங்களைக் கடந்துள்ள நிலையிலும் சிறுபான்மையினருக்கு நிலையான தீர்வு ஒன்று பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
 
மென்மேலும் 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல' மகிந்த அரசு சிறுபான்மையினருக்கு அநீதிகளை இழைத்து வந்தது.
 
இந்த அரசினால் பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த நாட்டு மக்களும் ஒன்றிணைந்து சிறந்த பாடம் ஒன்றைப் புகட்டியுள்ளனர். 
சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல பெரும்பான்மையினருக்கும் மகிந்தவை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு.
 
அத்துடன் அராஜகத்திற்கு கிடைக்கும் மக்களின் பதில் இன்றும் என்றும் எவருக்கும் இதுவே என்பதை இன்றைய ஜனாதிபதித் தேர்தலின் முடிவு தெட்டத் தெளிவாகக் காட்டியுள்ளது. 
 
எனவே எதிர்காலத் தலைவர்களும் இதனைக் கருத்திற்கொண்டு நாட்டையும் ,மக்களையும் ஆட்சி செய்யவேண்டும் என்பதே மக்கள் ஆணை. 
- See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=815483795909316252#sthash.PPFAwY4y.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக