Pages

வியாழன், 28 பிப்ரவரி, 2013

மாலைமலர் இ-பேப்பர் 28-FEB-2013


மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 28-FEB-2013

புதன், 27 பிப்ரவரி, 2013

மாலைமலர் இ-பேப்பர் 27-FEB-2013


மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 27-FEB-2013

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

மாலைமலர் இ-பேப்பர் 26-FEB-2013


மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 26-FEB-2013

திங்கள், 25 பிப்ரவரி, 2013

மாலைமலர் இ-பேப்பர் 25-FEB-2013


மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 25-FEB-2013

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

மாலைமலர் இ-பேப்பர் 24-FEB-2013


மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 24-FEB-2013

சனி, 23 பிப்ரவரி, 2013

மாலைமலர் இ-பேப்பர் 23-FEB-2013


மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 23-FEB-2013

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

மாலைமலர் இ-பேப்பர் 22-FEB-2013


மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 22-FEB-2013

வியாழன், 21 பிப்ரவரி, 2013

இலங்கை பங்கேற்பு- ஆசிய தடகளப் போட்டியை தமிழக அரசு நடத்தாது: முதல்வர் ஜெ. அதிரடி



இலங்கை நாடு  பங்கேற்பதால் 20-வது ஆசிய தடகளப் போட்டிகளை தமிழக அரசால் நடத்த முடியாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்துள்ளார்.




 ( மாலை மலர் 21FEB2013 )


தமிழகத்தில் 20-வது ஆசிய தடகளப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் தமிழக அரசின் ஒத்துழைப்புடன் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போட்டிகளில் 44 நாடுகளின் வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ரூ40 கோடியை தமிழக அரசு ஒதுக்கியிருந்தது. இந்நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் 12 வயதே ஆன சிறுவன் பாலச்சந்திரனை கைது செய்து இலங்கை அரசு கோரமாகப் படுகொலை செய்திருக்கிற புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. இது இலங்கையின் அப்பட்டமான போர்க் குற்றம் என்று நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் இது ஒரு இனப்படுகொலை என்றும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதன் எதிரொலியாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை நாட்டு வீரர்களும் கலந்து கொள்கின்றனர். இதனால் தமிழக அரசால் 20-வது ஆசிய தடகளப் போட்டிகளை நடத்த முடியாது என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார். சர்வதேச போட்டிகளில் இனவெறி கொண்ட தென்னாப்பிரிக்காவுக்கு தடை விதிக்கப்பட்ட வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இந்த அதிரடி நடவடிக்கை அமைந்திருப்பதாகவே கூறப்படுகிறது.




இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பேரவையில் தீர்மானம் :
எனது தலைமையிலான அரசு இருபதாவது ஆசிய தடகளப் போட்டிகளை சென்னையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்திடமுடிவு எடுத்திருந்தது. விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே சமயத்தில், இலங்கைவாழ் தமிழர்கள் சுயமரியாதையுடனும், சம உரிமையுடனும்,கவுரவத்துடனும் நடத்தப்பட வேண்டும் என்பதில் எனது தலைமையிலான அரசு எப்போதும் உறுதியாக உள்ளது.

நான் மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், இலங்கையில் உச்சக்கட்டப் போர் நடந்த போது, சர்வதேச போர் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, அப்பாவி இலங்கைத் தமிழர்கள் ஈவு இரக்கமற்ற முறையில் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு காரணமானவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும், தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கால்பந்து வீரர்களுக்கு எதிர்ப்பு :
இது மட்டுமல்லாமல், இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாடு உட்பட இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி பாரதப் பிரதமருக்கு பல கடிதங்களை நான் எழுதியுள்ளேன். இலங்கை நாட்டைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் கால்பந்து விளையாட்டில் பயிற்சி பெற்று தங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையில் நட்பு ரீதியிலான போட்டிகளில் கலந்து கொள்ள கடந்த ஆண்டு தமிழகம் வந்தனர். அப்போது அவர்களுக்கு தமிழகம் வர அனுமதி அளித்த மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தை நான் தெரிவித்ததோடு, இலங்கை கால்பந்து வீரர்களுக்காக எந்தப் போட்டிகளும் தமிழகத்தில் நடத்தக் கூடாது என்று நான்உத்தரவிட்டேன்.


"செவிடன் காதில் ஊதிய சங்கு" : இந்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசுகையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் மீண்டும் வலியுறுத்தினேன். இருப்பினும், "செவிடன் காதில் ஊதிய சங்கு" போல் தமிழர்களின் கோரிக்கைகள் அனைத்தும் மத்திய அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இந்தச் சூழலில், பிரபாகரனின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக 12 வயது சிறுவன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் சுட்டுத் தள்ளிய கோரக்காட்சிகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இது மன்னிக்க முடியாத மாபெரும் போர்க் குற்றமாகும். இது என்னுடைய மனதை மிகவும் நெகிழ வைத்துள்ளது. இதே போன்று இன்னும் பல தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டுள்ளதற்கான ஆதாரங்களும் வெளி வந்துள்ளன. இவற்றை எல்லாம் பார்க்கும் போது, ஜெர்மனியில் ஹிட்லர் நிகழ்த்திய இனப் படுகொலையை விஞ்சும் அளவிற்கு இலங்கையில் இனப் படுகொலை நடைபெற்று இருப்பது தெரிய வருகிறது.
எவ்வித பதிலும், தகவலும் இல்லை: இந்நிலையில் இலங்கை அரசு இலங்கை வாழ் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருவதைக் கருத்தில் கொண்டு, வருகிற ஜூலை மாதம் சென்னையில் நடைபெறவிருக்கும் இருபதாவது

ஆசிய தடகளப் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்றால் அது தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அமைந்துவிடும் என்பதால், இலங்கை வீரர்கள் 20-வது ஆசியத் தடகளப் போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்றும், இதை இலங்கை அரசுக்கு உரியமுறையில் தெரிவிக்குமாறும் சிங்கப்பூரிலுள்ள ஆசிய தடகள கழகத்தின் பொதுச் செயலாளருக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளரால் கடிதம் வாயிலாக தெரிவிக்கப்பட்டது.


இதன் மேல், நடவடிக்கை குறித்து தமிழக அரசுக்கு தெரிவிக்குமாறும் அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதன் நகல்கள் மத்திய அரசின் வெளியுறவுத் துறை செயலாளர் மற்றும் விளையாட்டுத் துறை செயலாளருக்கும் அனுப்பப்பட்டன. இருப்பினும், இது நாள் வரை ஆசிய தடகளக் கழகத்திடமிருந்து எவ்வித பதிலும், தகவலும் தமிழக அரசிற்கு கிடைக்கப் பெறவில்லை. ஆசிய தடகளக் கழகத்திடமிருந்து எவ்வித சாதகமான பதிலும் வராத சூழ்நிலையில், இலங்கை நாடு பங்கேற்கும் ஆசிய தடகளப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவது என்பதை எனது தலைமையிலான அரசு ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது. தமிழர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா, கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா,வின் இந்த அதிரடி நடவடிக்கை மத்திய அரசு மற்றும் சர்வதேச அளவில் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதனால் வரும் ஜூலை மாதம் தமிழகத்தில் ஆசிய தடகளப்போட்டி நடக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

 

மாலைமலர் இ-பேப்பர் 21-FEB-2013


மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 21-FEB-2013

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது



புது டெல்லி, பிப். 21 - பிப்ரவரி 20 ம் தேதிக்குள் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் இறுதிக் கெடு விதித்திருந்தது. இதையடுத்து இத்தனை காலம் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கெஜட்டில் வெளியிடாமல் சுணக்கம் காட்டி வந்த மத்திய அரசு, தற்போது சுப்ரீம் கோர்ட்டின் கெடுவுக்கு பணிந்து நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கெடு முடிவதற்கு முதல் நாள் அதாவது நேற்று முன்தினமே கெஜட்டில்(அரசிதழில்) வெளியிட்டு விட்டது.


எனவே இனிமேல் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது என்று கர்நாடகம் மறுக்கவே முடியாது. அப்படி ஒரு உத்தரவாதம் தமிழகத்திற்கு கிடைத்து விட்டது. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு கெஜட்டில் வெளியிடப்பட்டு விட்டதால் தமிழக மக்களும், டெல்டா விவசாயிகளும், அ.தி.மு.க.வினரும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியிருக்கிறார்கள். இது தனக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று முதல்வர் ஜெயலலிதாவும் கூறி உள்ளார். இப்போதுதான் தனக்கு மன நிறைவாக இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வெற்றியை அ.தி.மு.க. வினரும், விவசாயிகளும் பட்டாசு வெடித்து தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகிறார்கள்.


தமிழகத்திற்கு இந்த விஷயத்தில் நீதி கிடைத்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு கெஜட்டில் வெளியாகி விட்டதால் பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையம் மற்றும் கண்காணிப்பு குழு ஆகியவை கலைக்கப்படும். அல்லது காலாவதியாகி விடும். புதிதாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும். எனவே இனிமேல் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கர்நாடகம் ஒவ்வொரு ஆண்டும் அமல்படுத்தியே ஆக வேண்டும். அதன்படி தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 419 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் கொடுத்தே தீர வேண்டும். எனவே நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு கெஜட்டில் வெளியானதால் தமிழக விவசாயிகள், தமிழக மக்கள், அ.தி.மு.க.வினர் என பலதரப்பட்ட மக்களும் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து இந்த மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறார்கள்.


காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் என்ன கூறப்பட்டுள்ளதோ, அதன் அடிப்படையிலேயே கர்நாடகம், தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் காவிரி நீரை பங்கிட்டுக் கொள்ள வேண்டும். அவரவருக்கு உரிய நீரை கர்நாடகம் கொடுத்தே தீர வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் மறுக்க முடியாது. நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில்தான் தற்போது தண்ணீர் கொடுத்து வந்த கர்நாடகம், பல சமயங்களில் அதையும் கூட கொடுக்காமல் முரண்டு பிடித்து வந்தது.
ஆனால் இனி அப்படி நடக்காது. நடக்கவும் முடியாது.

அரசிதழில் வெளியிடப்பட்ட நாளில் இருந்து 90 நாட்களுக்குள் இந்த அறிவிக்கை அமலுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.



Thanks : Thinabhoomi News

 

புதன், 20 பிப்ரவரி, 2013

இலங்கையில் ஹிட்லர் ஆட்சி; பாலச்சந்திரன் படுகொலை குறித்து தமிழக முதல்வர் கண்டனம்



தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பன்னிரண்டு வயதுச் சிறுவனை கொன்றது மாபெரும் போர்க்குற்றம் எனக் கண்டித்துள்ளதுடன், இதற்குக் காரணமானவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்க ஐ.நாவில் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இன்று தலைநகர் சென்னையில் முதல்வர் வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு கண்டித்திருக்கிறார்.

இதைவைத்துப் பார்க்கையில் இலங்கையில் நடப்பது ஹிட்லரின் ஆட்சிதான் நினைவில் வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் இவ்விடயம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,
பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் ஈவு இரக்கமின்றி இலங்கை இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். அந்த 12 வயது குழந்தை எந்த குற்றமும் புரியவில்லை.

பிரபாகரனின் மகனாக பிறந்த ஒரே காரணத்துக்காக இலங்கைஈராணுவம் அவனை சுட்டுத் தள்ளியுள்ளது. இதற்கான ஆதாரங்கள் பல பத்திரிகைகளில், ஊடகங்களில் வெளிவந் துள்ளன.

இந்த ஆதாரங்களையும், இன்னும் பல தகவல்களையும் பார்க்கும்போது தற்போதுள்ள இலங்கை அரசின் தன்மை, மனப்பான்மை, எண்ணம் ஆகியவை முன்பு ஜெர்மனி நாட்டில் ஹிட்லரின் ஆட்சியில் நடந்ததுதான் ஞாபகத்திற்கு வருகிறது.

ஹிட்லர் ஆட்சியில் யூதர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். அதேபோல், இன்று இலங்கை அரசு தமிழர்களை இனப்படுகொலை செய்திருக்கிறது. எனவே மத்திய அரசு இதனை கவனத்தில் கொண்டு அமெரிக்கா மற்றும் ஒத்த கருத்துடைய நாடுகளுடன் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை கவனத்தில் கொண்டு இவற்றிற்கு காரணமானவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்க ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரவேண்டும்.

இதுதவிர, இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டும். வர்த்தக ரீதியான தடைகளையும் ஒத்த நாடுகளுடன் பேசி விதிக்க வேண்டும். இலங்கையில் இடம்பெயர்ந்து முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களுக்கே செல்ல வாழும் வரை, இலங்கையில் உள்ள சிங்கள பிரஜைகளுக்கு உள்ள உரிமைகள் அனைத்தும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டும் அதுவரை இந்த பொருளாதார தடை நீடிக்க வேண்டும்.

12 வயது பாலச்சந்திரன் கொல்லப்பட்டது மிகப்பெரிய போர்க்குற்றம். போர்க்குற்றம் நிகழ்த்தியவர்களை சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தி அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும் என்றார்.




Thanks : Uthayan 

 

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கடைசி மகன் பாலச்சந்திரன்

http://www.euthayan.com/indexresult.php?id=17899&thrus=0

 

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கடைசி மகன் பாலச்சந்திரன், சிறிலங்கா படையினரால்  உயிருடன் பிடிக்கப்பட்டு பதுங்குகுழி ஒன்றில் தடுத்து வைக்கப்பட்ட பின்னரே சுட்டுக்கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்தும் புதிய ஒளிப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த ஒளிப்படங்களை பிரித்தானியாவின் ‘தி இன்டிபென்டென்ட்‘ நாளேடு மற்றும் இந்தியாவின் ‘தி இந்து‘ நாளேடு என்பன வெளியிட்டுள்ளன. 
 
‘சனல் 4‘ தொலைக்காட்சிக்கு கிடைத்த இந்த ஒளிப்படங்களை, ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ காணொலி ஆவணப்படங்களை இயக்கிய கல்லும் மக்ரே, இந்த ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார். 
 
ஒரே ஒளிப்படக்கருவியால், சில மணிநேரங்களுக்குள் எடுக்கப்பட்ட பல படங்களில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயதான கடைசி மகன் பாலச்சந்திரன், சிறிலங்கா படைகளின் காவலில் பதுங்குகுழி ஒன்றில் உயிருடன் அமர்ந்திருக்கும் காட்சியும், சில மணி நேரங்களின் பின்னர், அவர் நெஞ்சில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. 
 
இந்த ஒளிப்படங்கள் 2009 மே மாதம், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் எடுக்கப்பட்டவை.

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

மாலைமலர் இ-பேப்பர் 19-FEB-2013


மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 19-FEB-2013

வியாழன், 14 பிப்ரவரி, 2013

இலங்கை அரசு மீது சர்வதேச விசாரணை; ஜெனிவா மாநாட்டுக்கு நவநீதம்பிள்ளை பரிந்துரை



இலங்கையில் மீறப்பட்ட சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் இதற்கான ஒரு பொறிமுறையை வகுக்கவேண்டும் எனவும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பரிந்துரை செய்துள்ளார்.
 
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு அவர் இந்தப் பரிந்துரையை வழங்கியுள்ளார்.
 
இலங்கை தொடர்பில் ஐ.நா. சபை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவான விளக்க அறிக்கை ஒன்றையும் அவர் வழங்கியிருக்கிறார்.
 
ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரையொட்டி ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தனது வருடாந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ள நவநீதம்பிள்ளை, சட்டம், ஒழுங்கு, நீதி நிர்வாகம், கொலைகள் மற்றும் காணாமற் போனமை தொடர்பான விசாரணைகள், தடுத்துவைப்பு தொடர்பான கொள்கைகள், உள்ளக இடம்பெயர்வு, காணி, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம், இராணுவ மயமாக்கல் குறைப்பு, நல்லிணக்கம் என்ற விடயங்கள் குறித்துத் தனித்தனியாகச் சுட்டிக்காட்டித் தனது விளக்கத்தை அளித்துள்ளார்.
 
கடந்த ஆண்டு செப்ரெம்பரில் இலங்கை வந்த ஐ.நா. நிபுணர் குழுவால் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனவும், நாற்பது ஆண்டுகளாக நிலவிவரும் இன முரண்பாட்டுக்கு நீதி வழங்க உண்மையான விசாரணைப் பொறிமுறை ஒன்றை இலங்கை அரசு விரைவில் ஏற்படுத்த வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
19 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் இலங்கை நிலைவரம் குறித்து விளக்கியிருப்பதுமட்டுமன்றி, இவை தொடர்பில் தனது பரிந்துரைகளையும் அவர் முன்வைத்துள்ளார். 
 
அதில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:
 
இலங்கை அரசுக்கு தரும் பரிந்துரைகள்
 
*மாற்றமுறும் நீதிக்கான அணுகுமுறைக்கு மிகவும் ஆக்கபூர்வமான இணைப்புப் பகுதியாக உண்மையைக் கண்டறியும் ஒரு பொறிமுறையை ஸ்தாபித்தல்.
*சர்வதேச நியமங்களுக்கு அமைவாக இலங்கையில்  நிலுவையில் உள்ள சம்பந்தப்பட்ட வழக்குகளை மீளாய்வு செய்வதற்கு பாரதூர மற்றும் மரபணு மூலம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தல்.
*சாட்சிகள், பாதிக்கப்பட்டவர்கள் சார்பாகப் பொருத்தமான சட்டங்களை வரைதல், தகவல்களுக்கான உரிமை, காணாமல் போனவர்களுக்கான சட்டங்களைத் தீவிரப்படுத்துதல், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள், சித்திரவதைகள் மற்றும் ஏனைய கொடூரச் செயல்கள், மனிதாபிமானமற்ற தரமற்ற சிகிச்சைகள் அல்லது தண்டனைகள் போன்றவற்றுக்கு சர்வதேச நியதிகளுக்கு அமைவாக நடத்தல்.
*தேசிய நிறுவகங்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துதலும், வலுவூட்டுதலும்.
*சர்வதேச நியமங்களுக்கு அமைவாக தேசிய திருத்தக் கொள்கையை அபிவிருத்தி செய்தல். 
*விசேடமாக மனித உரிமைகள் ஆணையகத்தின் 19/2 ஆம் சரத்துக்கு அமைவாக விசேட தகுதிவாய்ந்தவர்களை நாட்டு பயணத்துக்கு அனுமதித்தல்.
*கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் செய்யப்பட்ட பரிந்துரைகளை அமுல்படுத்த, தேசிய ரீதியில் திட்டமொன்றை செயற்படுத்துவதற்குப் பகிரங்க மற்றும் நிபுணத்துவ ஆலோசனைகளைப் பெறுவதன் மூலம் அதன் நோக்கங்களை விஸ்தரிப்பதும் கடப்பாடுகளையும் பொறுப்புகளையும் மீளாய்வு செய்தல்.
*காணாமல் போனவர்கள் பற்றிய புலன் விசாரணைகளைத் துரிதப்படுத்த ஆணைக்குழுவால் பரிந்துரை செய்யப்பட்டவாறு ஒரு விசேட ஆணையாளரை நியமித்தல்.
*இராணுவ நீதிமன்றங்களினதும் தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்தினரின் மீதான விசாரணைகளும் பகிரங்கப்படுத்தப்படுவதன் மூலம் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக நடப்பதும்.
*2006 ஆம் ஆண்டின் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையைப் பிரசுரிப்பதன் மூலம் அங்கு சேகரிக்கப்பட்ட சாட்சியங்களை சர்வதேச நியமங்களுக்கேற்ப மதிப்பீடு செய்து நிலுவையிலுள்ள வழக்குகளைத் தீர்த்தல்.
*சிறுபான்மை சமூகத்தினரைத் தீர்மானம் எடுக்கும் நடவடிக்கைகளில் முற்றாக ஈடுபடுத்துவதற்காக இராணுவத் தலையீடு மற்றும் அதிகாரப் பிரயோகம் ஆகியவற்றைத் தளர்த்தல்.
*நல்லிணக்க நடவடிக்கைகளில் சிவில் சமூகத்தினரையும் சிறுபான்மையினரின் பிரதிநிதிகளையும் ஈடுபடுத்துவதன் மூலம் நல்லிணக்கத்துக்கு மேலும் வலுவூட்டல்.
*இலங்கையிலுள்ள முன்னணி சமூகத் தலைவர்கள் உட்பட ஏனைய பங்களிப்பாளர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவால் காட்டப்பட்ட கரிசனையைப்பற்றி விதந்துரைத்த  கருத்துகள் தொடர்ந்தும் விவாதங்களையும் கருத்துக்கணிப்புகளையும் முன்னெடுக்க வாய்ப்பளிக்கும். எனினும் இந்தக் கட்டத்தில் அதன் எல்லை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த உந்துதலுக்கு அமைவாக ஆணையகம் தனது கரிசனையை தொடர்ந்தும் கொண்டுசெல்லவேண்டும். இது தொடர்பில் இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானம் மீறப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்கள் பற்றி சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும். அதன்மூலம் உள்நாட்டு விசாரணைகளை வழிநடத்த முடியும்  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 
---------------------------------------------------------------

------------------

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

மாலைமலர் இ-பேப்பர் -10-FEB-2013


மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 10-FEB-2013

சனி, 9 பிப்ரவரி, 2013

மாலைமலர் இ-பேப்பர் -09-FEB-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் -09-FEB-2013

ராஜபக்ஷவின் இந்திய வருகையைக் கண்டித்து பல இடங்களில் ஆர்ப்பாட்டம்




Thanks : BBC News  :


இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய வருகையைக் கண்டித்து தமிழகத்திலும், டெல்லியிலும் வேறு பல இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.


பௌத்த புனிதத் தலமான பீகாரில் உள்ள புத்த கயாவுக்கும், ஆந்திரத்திலுள்ள திருப்பதிக்கும் இலங்கை ஜனாதிபதி தனிப்பட்ட பயணமாக வந்துள்ளதை இந்தியாவின் பல்வேறு அரசியல் கட்சிகள், வழக்குரைஞர்கள் சங்கங்கள், மாணவர்கள் அமைப்புகள் போன்றவை கண்டித்துள்ளன.

சென்னை

சென்னையில் திமுக தலைமையில் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பான டெஸோவில் அங்கம் வகிக்கும் பல்வேறு கட்சிகளும் இலங்கை ஜனாதிபதியின் இந்திய வருகையை கண்டித்து கூட்டம் ஒன்றை நடத்தியது.
இந்தக் கருப்புச் சட்டை ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் உரையாற்றிய திமுக தலைவர் கருணாநிதி, தமிழையும் தமிழர்களையும் அழிக்க இலங்கை ஜனாதிபதி கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் அமைப்புகளுக்கு கருணாநிதி நன்றி தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இவ்விவகாரம் தொடர்பாக சென்னையில் ரயில் மறியல் போராட்டம் ஒன்றை நடத்தினர். அதில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத் தலைவர் தா.பாண்டியன், இலங்கைத் தமிழருக்கு நியாயம் கிடைக்க இந்திய அரசு முயல வேண்டும் என்று தெரிவித்தார்.

தில்லி

இலங்கை ஜனாதிபதி தில்லி வந்து அங்கிருந்து புத்த கயா செல்வதாக இருந்தது. ஆனால் மதிமுக தலைமையில் தில்லியில் ஆர்ப்பாட்டங்கள் நடந்ததால் அவர் தில்லி வராமல் ஒரிசா மாநிலம் கட்டாக் சென்று அங்கிருந்து புத்த கயா சென்றதாகத் தெரிகிறது
தில்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதிமுகவினர் முன்னர் பேசிய அக்கட்சியின் தலைவர் வைகோ, இந்தியா வர ராஜபக்ஷவை அனுமதித்தமைக்காக இந்திய அரசைக் கண்டித்தார்.
பிரதமர் அலுவலகத்துக்கு ஊர்வலம் செல்ல முயன்ற வைகோவையும் அவரது ஆதரவாளர்களையும் பொலிசார் கைதுசெய்தனர்.

புத்த கயா

புத்த கயாவில் உள்ள மஹாபோதி விகாரையில் இலங்கை ஜனாதிபதி பிரார்த்தனையில் ஈடுபட்டபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்ட கோஷங்களை எழுப்பினர்.
இலங்கை ஜனாதிபதிக்கு பீகார் முதல்வர் நித்தீஷ் குமார் விருந்து உபச்சாரம் வழங்கிய விடுதியின் முன்பாகவும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் மாணவர் சங்கத்தினரும் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
புத்த கயாவில் பிரார்த்தனையை முடித்துக்கொண்டு இலங்கை ஜனாதிபதி திருப்பதி சென்றுள்ளதாகத் தெரிகிறது.

திருப்பதி


திருப்பதி அமைந்துள்ள ஆந்திரத்தின் சித்தூர் மாவட்டத்திலும் தமிழக ஆந்திர எல்லையிலும் ஆர்ப்பாட்டங்களைத் தவிர்க்கும் முகமாக நூற்றுக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் விழுப்புரம், திண்டுக்கல் உட்பட பல மாவட்டங்களில் வழக்குரைஞர்களும் ராஜபக்ஷவின் வருகையைக் கண்டித்து நீதிமன்றத்தைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

ராஜபக்ச வருகையை எ‌தி‌ர்‌த்த வைகோ டெல்லியில் கைது !

இல‌ங்கை ராஜப‌‌க்ச வருகையை க‌ண்டி‌த்து டெல்லியில் பிரதமர் இல்லம் நோக்கி பேர‌ணி செ‌ன்ற ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ உ‌ள்பட நூ‌ற்று‌க்கண‌க்கானவ‌ர்கள‌் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

இலங்கை ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தலைநகர் டெல்லி, திருப்பதி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டெல்லியில் பிரதமர் இல்லம் நோக்கி வைகோ தலைமையில் பேரணி மேற்கொள்ள ம.தி.மு.க.வினர் முயன்றனர். அப்போது, வைகோவை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக, எம்.பி.கணேசமூர்த்தி உள்பட 500க்கும் மேற்பட்ட மதிமுகவினர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பேரணிக்காக தயாராகினர்.

பேரணிக்கு போலீஸார் அனுமதி மறுத்துள்ள நிலையில், தடையை மீறி பேரி நடக்காமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டிருந்ததால் வைகோ கைது செய்யப்பட்டார்.

மாலைமலர் இ-பேப்பர் -8-FEB-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் -8-FEB-2013

வியாழன், 7 பிப்ரவரி, 2013

மாலைமலர் இ-பேப்பர் -07-FEB-2013




மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் 07-FEB-2013



தமிழகத்துக்கு 2.44 டி.எம்.சி. நீரை திறந்து விட உத்தரவு !

 

--------------------------------

திங்கள், 4 பிப்ரவரி, 2013

மாலைமலர் இ-பேப்பர் -4-FEB-2013


மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் -4-FEB-2013

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

மாலைமலர் இ-பேப்பர் - 3-FEB-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் - 3-FEB-2013

சனி, 2 பிப்ரவரி, 2013

மாலைமலர் இ-பேப்பர் - 2-FEB-2013


மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் - 2-FEB-2013

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

மாலைமலர் இ-பேப்பர் - 1-FEB-2013


மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

மாலைமலர் இ-பேப்பர் - 1-FEB-2013