சுடர் ஒளி / Sudar Oli லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுடர் ஒளி / Sudar Oli லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 2 டிசம்பர், 2014

Sudar Oli ePaper 02-DEC-2014 சுடர் ஒளி

www.sudaroli.com

சிங்கள ஜனாதிபதித் தேர்தலும் ஈழ தமிழ் மக்களும்


 சிங்கள ஜனாதிபதித்  
தேர்தலும் ஈழ தமிழ் மக்களும்

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரகடனம் வெளியிடப்பட்ட பின் மஹி்ந்த அரசுக்கு இருந்த ஆதரவுத்தளம் ஆட்டம்கண்டு வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. சுகாதார அமைச்சராகவிருந்த மைத்திரிபால சிறிசேன எதிரணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட முன்வந்து எதிரணியுடன் இணைந்தபோதே அரசில் அங்கம் வகித்த மூத்த அமைச்சர்கள் சிலரும் அரசை விட்டு நீங்கி எதிரணியில் சாய்ந்துவிட்டனர்.


சுதந்திரகட்சியின் அடிமட்ட உறுப்பினரான மைத்திரிபால சிறிசேனவின் பின்னணியில் சந்திரிகா என்னும் பாரிய விருட்சம் நிழல் கொடுத்து நிற்கிறது. இரண்டு பிரதமர்களின் மகள் மட்டுமல்ல, 18 வருடகால ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த பண்டாரநாயக்க குடும்பத்தின் 3ஆவது பிரதமராகவும் பின் 11 ஆண்டுகள் ஜனாதிபதிப் பதவியை வகித்த சந்திரிகாவுக்கு சிங்கள மக்கள் மனதில் நீங்காத இடம் ஒன்றுள்ளது மட்டுமல்ல, அமரர் பண்டாரநாயக்காவின் செல்வாக்கு இன்றும் இவருக்குத் துணையாகவே நிற்கிறது. இக்காரணத்தால் சுதந்திரக் கட்சியின் இன்னும் பல அடிமட்ட உறுப்பினர்களும் தொண்டர்களும் சந்திரிகாவின் பின்னால் அணி திரளவே செய்வார்கள்.

எனவே, இன்னும் பல மக்கள் ஐக்கிய முன்னணியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசைவிட்டு விலகி எதிரணியில் இணையப் போவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. இக்காரணத்தால் ஜனாதிபதி ராஜபக்­வுக்கான சிங்கள மக்களின் ஆதரவு கணிசமாகக் குறையக்கூடிய வாய்ப்புகளே அதிகம். இதனால்தான், இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளுக்கிடையிலான அதிகாரப்போட்டி, ஏறக்குறைய சமபலமடைந்து சிறுபான்மை மக்களின் வாக்குகளே இரண்டு போட்டித் தரப்புகளுக்குமிடை யிலான வெற்றியைத் தீர்மானிக்கும் சக்திகளாகப் பரிணாமம் பெறும் சாத்தியம் அதிகரித்துள்ளதாக எதிர்வுகள் கூறப்படுகின்றன.
2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் சிறுபான்மையினரின் தயவின்றி, 75% வாக்குப்பலத்தைக்கொண்ட சிங்கள மக்கள் தமது சொந்த வாக்குகளாலேயே தாம் விரும்பிய ஆட்சியைத் தாமாகவே தெரிவு செய்ய முடியும் என்ற துணிவைச் சிங்களப் பேரினவாதத்துக்கு வழங்கியிருந்தது. இந்த மேலதிக நிலை ஆபத்துக்குள்ளாகி விடலாம் என்ற அச்சம் சிங்கள மக்களுக்குத் தோன்றுமாயின் சிறுபான்மைத் தமிழ்பேசும் மக்கள் எந்தப் பக்கம் சாய்கிறார்களோ அப்பக்கத்துக்கு முழுமையான எதிர்ப்பக்கத்தில் சாய்ந்துவிடக்கூடிய ஆபத்து உருவாகும். இது சிறுபான்மை யினரின் பேரம் பேசும் ஆற்றலைக் கேள்விக்குறியாக்கிவிடும் என்பதை தமிழ், முஸ்லிம் தரப்புகள் நன்றாக மனதிலிருத்திக்கொள்ள வேண்டும்.

எனவே, தமிழ், முஸ்லிம் தரப்புகள் தம் துணையின்றி எந்த அரசும் ஆட்சியமைத்து விட முடியாது என்று தம்பட்டம் அடிப்பதைத் தவிர்த்துக்கொண்டு, யதார்த்தத்தை நோக்கி ‡ தம் குறிக்கோளை முன் நிறுத்தி ஆரவாரமின்றி ஆழ்ந்த அமைதி யுடன் செயற்பட வேண்டும். ஏனெனில், 2010 தேர்தலில் தமிழ், முஸ்லிம் தரப்புகளும், ஏனைய சிறு சிறு அரசியற் கட்சிகளும் பெரிய கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் கைகோத்து ஓரணியில் நின்று சரத் பொன்சேகாவை ஆதரித்தும் மிகப்பாரிய தோல்வி யைக் கண்டன. ஏனெனில், இந்த நாட்டில் பேரினவாதம் என்ற ஆக்கிரமிப்புச் சிந்தனையானது, சாதாரண நாட்டுக் குடிமக்களின் நலன்கள், தேவைகள், ஜனநாயக விழுமியங்கள், நீதியுடன்கூடிய நல்லாட்சி அனைத்தையும் ஒதுக்கிவிட்டுள்ளது. பேரினவாத தீவிர மேலாதிக்கமே மக்களை ஆக்கிரமித்து அடிமையாக்கியி ருந்தது. அதன் பின்விளைவாகவே தமிழினத்தின் மேல் பெற்றுக்கொள்ளப்பட்ட யுத்த வெற்றி மாயை சிங்கள மக்களை ஆட்கொண்டிருந்தது.

ஆயினும், எதேச்சதிகார குடும்ப ஆட்சி முறை, சட்ட ஆட்சிச் சீர்குலைவு, நீதித்துறையின் முடக்கம், அதிகாரத் துஷ்பிரயோகம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்றவை மக்களின் அன்றாட வாழ்க்கையை அவலத்துக்குள்ளாக்கி விட்ட இன்றைய நிலையில், யுத்த வெற்றி மாயை சிங்கள மக்களை விட்டு கொஞ்சம் அகலத் தொடங்கியுள்ளது எனலாம். அதன் பிரதிபலிப்பே ஊவா மாகாணத் தேர்தலில் அரசின் பின்னடைவு, அரசில் முக்கிய பதவிகளை வகித்தவர்க ளின் வெளியேற்றம் போன்றவை மஹிந்த அரசை ஆட்டம் காணச்செய்து அச்சத்துக்குள்ளாக்கு வனவாகும்.
இப்பின்னடைவிலிருந்தும் அச்ச நிலையிலிருந்தும் மேலெழ, மஹிந்த அரசு கையாள முனைகின்ற தந்திரோபாயம், மீண்டும் புலிப்பூச்சாண்டியும், சர்வதேசத்தின் தனி ஈழம் அமைக்கும் சிங்களவர்களுக் கெதிரான சதிச் செயலுமே என்றே பிரசாரம் செய்ய முன்னெடுக்கப்படு கின்றது. இச்சதியிலிருந்து பெளத்த ‡ சிங்கள தேசத்தை மீட்க வேண்டுமாயின், புலிகள் மீளெழுவதைத் தடுக்கவேண்டும்; வடக்கு, கிழக்கில் இராணுவம் நிரந்தரமாக நிலைபெற வேண்டும்; தமிழர் தாயகம் என்ற சிந்தனை அடியோடு அழிக்கப்பட வேண்டும்; முழு நாடும் சிங்கள ‡ பெளத்த நாடாக வேண்டும்; இதற்காக ஐ.நா. சபையில் யுத்தக்குற்றம் சாட்டப்பட்டுள்ள மஹிந்த அரசு

அக்குற்றச்சாட்டிலிருந்து விடுபட மக்களின் பலம் தன்பின்னே திரள வேண்டும் என்பதே அரசுத் தரப் பின் முழுமூச்சான பிரசாரமாக இந்தத் தேர்தலில் இருக்கப்போகின்றது.


தமிழ், முஸ்லிம் மக்கள், அரசின் இந்தப் பிரசாரத்துக்குப் பலம் சேர்க்கும் வகையில் எதிர ணியின் பொதுவேட்பாளருக்கு வெளிப்படையான ஆதரவு வழங்கப்போகிறார்களா என்பது தான் எம்மத்தியில் உள்ள பிரதான கேள்வியாகும். ஏனெனில். சிறுபான்மையினங்கள் எதிரணி வேட்பாளருக்கு ஆதரவாக முடிவெடுக்கப் போகிறார்கள் என்று ஒரு சாடை மாடையான தகவல் கசிந்தாலே போதும், எதிரணி இவர்களுடன் நாட்டைப் பிரித்துக் கொடுக்கும் இரகசிய ஒப்பந்தம் செய்துவிட்டது என்ற பிரசாரம் உச்சம் பெறும்.
மாறாக, தற்போதைய அரசுத் தலைவரான மஹிந்த­வுக்கு சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவு கிடைக்குமானால், எதிரணியின் பிரசாரம் வேறு விதமாக அமை யும். தமிழ், முஸ்லிம் தரப்புகளை ராஜபக்­ விலைகொடுத்து வாங்கி விட்டதாகவும், மேலும் ஒரு 6 வருட பதவிக் காலத்துக்கு ஆசைப்பட்டு சிங்களவர்களையும் நாட்டையும் மஹிந்த காட்டிக்கொடுத்துவிட்டார் என்றும், தம்பக்கமுள்ள சரத் பொன்சேகாவும் படைத்தரப்பினர் கள் தமது உயிரைப் பணயம் வைத்துப் பெற்ற வெற்றியை ‡ செய்த தியாகத்தை தனது அதிகாரத்தைத் தக்க வைப்பதற் காக பணயம் வைத்துவிட்டார். அதற்கான இரகசிய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதெனவும் ரணில் விக்கிரமசிங்க d சந்திரிகா தரப்பு பிரசாரம் செய்யும்.

தமிழர்களுக்கு எதுவித தீர்வும் கிடைக்கக்கூடாதென்பதில் இந்த இருவரும் ராஜபக்­வுக்கு சளைத்தவர்கள் அல்லர் என்பது ஏற்கனவே கண்டறியப்பட்ட கசப்பான உண்மையாகும். புலிகளை வெல்ல வேறு வழியில்லை என்பதற்காக அவர்களின் போராட்டத்திலிருந்து தமிழர்களைத் திசை திருப்ப 2000ஆம் ஆண்டில் சந்திரிகா ஜனாதிபதியாக ஆட்சியிலிருந்த போது கவர்ச்சிகரமான பிராந்தி யங்களின் ஒன்றியம் என்ற ஒரு தீர்வுப்பொதியைப் புதிய அரசியல் யாப்பாக நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். ரணில் விக்கிர மசிங்கவும் ஐக்கிய தேசியக் கட்சியுமே நாடாளுமன்றத்தில் அந்த யாப்பின் பிரதியை எரித் தும், பெளத்த துறவிகளைத் தூண்டியும் அந்த யாப்பை நிறைவேற்ற முடியாமல் செய்தன.

இதே ஐக்கிய தேசியக் கட்சி தான் முன்னர் பண்டா ௦- செல்வா ஒப்பந்தத்தையும் கண்டிக்கு யாத்திரை செய்து கிழித்தெறிய வைத்தது. அதேபோல, ரணில் விக்கிரமசிங்கவும் புலிகளை வேறு வகையில் திசை திருப்ப முடியாது என்பதால் 2002இல் சமாதான போர் நிறுத்த உடன் படிக்கையை புலிகளுடன் செய்து சர்வதேச மட்டப் பேச்சு என்று 3 வருடமாக இழுத்தடித்தார்.

அதேவேளை பாதுகாப்பு உடன்படிக்கை என்ற பெயரில் புலிகளைப் பலமிழக்கச் செய்யும் செயல்களில் ஈடுபட்டிருந்ததைக் கவனத்தில் எடுக்கவேண்டும். அத்துடன், கருணாவை புலிகளிடமிருந்து பிரித்தெடுக்கும் நரி வேலையையும் செய்தார் என்று அவரே வெளிப்படுத்திய விவரத்தையும் கருத்தில் எடுக்கவேண்டும். எனினும், புலிகளும் ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைத்தபோது அரசின் 3 முக்கிய அமைச்சர்களைப் பறித்தெடுத்து சமாதானத்தை சந்திரிகா குழப்பினார். ஆக இரண்டு பெரிய சிங்களக் கட்சிகளுமே தமிழர்களுக்கான தீர்வு வழங்குவதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவு.

இக்கட்சிகள் இரண்டும் கடந்த காலங்களில் எப்படிச் செயற்பட்டாலும் தமிழ் மக்கள் தமது மோசமான எதிரி ஒருவரை, இனம் கண்டு தோற்கடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதற்குத் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டும். 


நன்றி  - சுடர் ஒளி    

http://sudaroli.com/?p=5331



வியாழன், 27 நவம்பர், 2014

மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கில் சிங்கள படை

மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கில் படையினரின் ரோந்து நடவடிக்கை கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இரவிலும் பகலிலும் பெரும் எண்ணிக்கையான படையினர் வீதிகளில் சைக் கிள்களிலும் கால்நடையாகவும் ரோந் துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


வடக்கின் நகரப் பகுதிகளில் படை யினர் கால்நடையாகவும், சைக்கிள்க ளிலும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடு பட்டு வருகின்றனர்.
வடமராட்சிப் பகுதியில் படையின ரின் ரோந்து நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளதுடன் சில இடங்களில் வீதிகளில் பயணிப்போரை வழிமறித்துச் சோதனை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் வாரத்தின் இறுதி நிகழ்வு நாள் இன்று வியாழக்கிழமை மாலை ஈகை சுடரேற்றலுடன் இடம்பெறும்.

அதேவேளை,
தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வே.பிர பாகரனின் 60ஆவது பிறந்தநாள் நேற்றாகும்.

இதனை முன்னிட்டு முதல் மாவீரர் சங்கர், தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் ஆகி யோர் பிறந்த பிரதேசமான வடமராட் சிப் பகுதியிலுள்ள வீதிகளில் இரவு நேரங்களில் சைக்கிள்களில் ரோந்துப் பணிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த காலங்களில் படையினர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வந்தாலும் கடந்த இரு தினங்களாக அளவுக்கு அதிகமான ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக வல்வெட்டித் துறை, ஊரிக்காடு, உடுப்பிட்டி, புறாப் பொறுக்கி ஆகிய பகுதிக ளில் ரோந்துப் பணிகளில் ஈடுபடும் படையினர் இரவு வேளை மற்றும் விடியற்காலைப் பொழு தில் வீதியால் பயணிப்போரை வழிமறித்து ஆள் அடையாளத்தை உறுதிப்படுத் தும் நடவ டிக்கைகளிலும் ஈடுபட்டு வரு கின்றனர்.

குறிப்பாக அல்வாய், மாலுசந்தி, நெல்லியடி, வல்லை போன்ற பகுதி களில் இத்தகைய சோதனை நடவடிக் கைகள் இடம்பெற்றதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

படையினரின் இந்த நடவடிக் கைகளால் இரவு நேரங்களில் வீதிகளில் பயணம் செய்வது அச்சமாகவுள்ளதாக வும், இதனால் நேரத்துடன் வீடுக ளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட் டது.

வியாழன், 30 அக்டோபர், 2014

செவ்வாய், 28 அக்டோபர், 2014

தீர்வு விடயத்தில் தமிழரின் மனதை அறிய சர்வஜன வாக்கெடுப்பு நடத்த அரசுக்குத் திராணியிருக்கின்றதா?

தீர்வு விடயத்தில் தமிழரின் மனதை அறிய சர்வஜன வாக்கெடுப்பு நடத்த அரசுக்குத் திராணியிருக்கின்றதா?




பிரித்தானியாவிலிருந்து ஸ்கொட் லாந்து பிரிந்து செல்வதா அல்லது இல் லையா என்று சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, அதிக அதிகாரங் களை வழங்குவதாக பிரித்தானியா உறுதி வழங்கியதையடுத்து அதிலி ருந்து பிரிந்து செல்வதை ஸ்கொட் லாந்து மக்கள் விரும்பவில்ç.

எனவே,
இவ்வாறானதொரு பொது வாக் கெடுப்பை இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் நடத்துவதற்கு அரசுக்குத் திராணியிருக்கின்றதா என்று நேற்று சபையில் சவால் விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. எஸ்.சிறிதரன்.

நாடாளுமன்றில் நேற்று நடை பெற்ற வரவு – செலவுத்திட்டத்தின் இரண் டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு சவால் விடுத்தார்.


அவர் தமதுரையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:


“”ஜனாதிபதித் தேர்தலை நோக்க மாகக்கொண்டதாகவே இந்த வரவு-செலவுத்திட்டம் இருக்கின்றது. வடக்கு, கிழக்குக்கென விசேட முன்மொழிவு கள் இல்லை. வடக்கிலுள்ள தொழிற்சாலைகள் மீள்இயக்கம், தொழில் உருவாக்கம் ஆகியன பற்றியும் குறிப் பிடப்படவில்லை.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், புலம்பெயர் தமிழர்க ளும் ஈழக் கோரிக்கையைக் கைவிட் டால் நிறைவேற்று ஜனாதிபதி முறை மையை நீக்குவதற்குத் தான் தயார் என்று கிளிநொச்சியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

ஈழக்கொள்கைக்கும், நிறைவேற்று முறைமைக்கும் இடையில் என்ன தொடர்பு இருக்கின்றது? புலம்பெயர் தமிழர்கள் மீண்டுமொரு ஆயுதக் கிளர்ச்சியை விரும்பவில்லை. இலங் கையில் வாழும் தமிழர்களுக்கு அவர் கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் கெளரவமானதொரு அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும் என்றே அவர் கள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உயர் நீதிமன் றில் சத்தியக்கடதாசி சமர்ப்பித்துள்ளது.


இந்த நாட்டில் சமஷ்டி போத னையை சிங்களத் தலைவர்கள்தான் முன்னெடுத்தனர். சலுகைகளை வழங்கி தமிழர்களின் உரிமைக் குரலை ஊமையாக்கி விடலாம் என்று அரசு நினைக்கக்கூடாது. தமிழர்கள் கெளரவ மானதொரு அரசியல் தீர்வை எதிர் பார்க்கின்றனர். அதை வழங்க முன்வர வேண்டும். அப்போதுதான் சமாதா னம் என்பது சாத்தியப்படும்.
அதேவேளை, பெரிய பிரித்தானி யாவிலிருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து செல்லவேண்டுமா அல்லது இல்லையா என்பது தொடர்பில் சர்வஜன வாக் கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பிரி வினையை மக்கள் அங்கீகரிக்க வில்லை. எனினும், ஸ்கொட்லாந்து மக்களுக்கு வெற்றி கிடைத்தது. அதாவது, அவர்களுக்கு கூடுதல் அதிகா ரம் வழங்கப்பட்டது. இலங்கைத் தமி ழர்கள் மத்தியிலும் இவ்வாறானதொரு வாக்கெடுப்பை நடத்த அரசுக்குத் திராணி இருக்கிறதா?

அதிகாரப்பரவலாக்கலுடன் கூடிய கெளரவமானதொரு தீர்வையே தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர். அவர் கள் பிரிவினைவாதத்தை விரும்ப வில்லை. இதுபற்றி அவர்களின் நிலைப்பாட்டை அறிவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த அரசுக்குத் திராணி இருக்கிறதா?” – என்றார்.

வியாழன், 16 அக்டோபர், 2014

‘foreigners’ BANNED visiting occupied Tamil Eelam இலங்கையில் வெளிநாட்டினர் தமிழர் ஈழம் பகுதிக்கு செல்ல தடை.

இலங்கையில் விடுதலைப்புலிகள் ஆதிக்கம் இருந்த காலத்தில் தமிழர்கள் வசிக்கும் வடபகுதிக்கு வெளிநாட்டினர் செல்ல தடை இருந்தது. போர் முடிவுக்கு வந்ததற்கு பிறகு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தாராளமாக வட பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் திடீரென வடபகுதிக்கு வெளிநாட்டினர் சுற்றுலா செல்ல இலங்கை அரசு தடை விதித்துள்ளது. வெளிநாட்டினர் பாதுகாப்பு துறையில் முன் அனுமதி பெற்றால் மட்டுமே வடபகுதிகளுக்கு செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடபகுதிக்கு செல்லும் பாதையில் வவுனியா, ஓமந்தை ஆகிய இடங்களில் ராணுவ சோதனை சாவடிகள் உள்ளன. சமீபகாலமாக வடபகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் இங்கிருந்து திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

இதுதொடர்பாக இலங்கை ராணுவ தளபதி ரூவான் வணிகசூரியா கூறியதாவது:–

வடபகுதிக்கு வெளிநாட்டினர் செல்ல தாராளமாக அனுமதித்து வந்தோம். ஆனால் அவர்களில் சிலர் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். வட பகுதி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி இனக்கலவரங்களை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இதனால் அமைதி குலையும் நிலை ஏற்படுகிறது. இதை தடுக்கவே வெளிநாட்டினர் வடபகுதிக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் பாதுகாப்பு துறையிடம் முன்கூட்டியே விண்ணப்பித்தால் அனுமதி அளிக்கப்படும். ஆனால் அங்கு எதற்காக செல்கிறோம் என்ற விவரங்களை முழுமையாக எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். அவர்களால் பிரச்சினை வராது என்று கருதினால் அனுமதி கொடுப்போம். இலங்கை மக்கள் நாட்டின் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் செல்லலாம். அதற்கு எந்த தடையும் இல்லை.

-------------------

TAMILNET