தினத்தந்தி / Thina Thanthi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தினத்தந்தி / Thina Thanthi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

Sasikala சொத்து குவிப்பு வழக்கு சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என தீர்ப்பு 4 ஆண்டுகள் சிறை உறுதி

வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 லட்சத் துக்கு சொத்து சேர்த்ததாக மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது பெங்களூரு தனிக்கோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டது.

இந்த வழக்கில் அவர்கள் நான்கு பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து தனிக்கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு, தனிக்கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்ததோடு, நால்வரையும் விடுதலை செய்தது.

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசின் சார்பிலும், தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங் கிய அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 7-ந் தேதி இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முதல்- அமைச்சர்  ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்தார்.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பினாகி சந்திரகோஷ் தலைமையிலான அமர்வு கடந்த 6-ந் தேதி அறிவித்தது.

அதன்படி, நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று  தீர்ப்பு வழங்கியது. இதற்காக நீதிபதிகள் இன்று காலை 10. 30 மணிக்கு  நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய்  ஆகியோர் நீதிமன்றம் வந்தனர். தீர்ப்பு வழங்கும் 6-வது எண் அறையில் கூட்டநெரிசலாக உள்ளது.

நீதிபதிகள் தீர்ப்பை வாசிக்க தொடங்கி உள்ளனர். அதன் முக்கிய அம்சம் வருமாறு:-

இந்த வழக்கில் அடுத்தடுத்த குற்றவாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும்  குற்றவாளிகள் என்று அறிவிக்கிறோம். அவர்களை விடுவித்து கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு செல்லாது. அந்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது.

நீதிபதி குன்கா இந்த வழக்கில் அளித்த தீர்ப்பு செல்லும். எனவே அதன்படி  வருமானத்துக்கு அதிகமாக முறைகேடாக சொத்து சேர்த்த  வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் தலா 4 ஆண்டுகள்  ஜெயில் தண்டனை உறுதி செய்யப்படுகிறது.



3 பேருக்கும் தலா ரூ. 10 கோடி விதிக்கப்பட்ட அபராதம் உறுதி செய்யப்படு கிறது. தண்டனை வழங்கப்பட் டுள்ள 3 பேரும் கோர்ட்டில் உடனடியாக சரண் அடைய வேண்டும். 

அவர்களை ஜெயிலில் அடைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு  நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள்.


( Thanks தினத்தந்தி / Thina Thanthi,  )

செவ்வாய், 6 டிசம்பர், 2016

TN CM JJ தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா




# ஜெயலலிதா
#JAYALALITHA
#RIP

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்- அமைச்சருமான ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார்.

திடீர் மாரடைப்பு
அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் கடந்த மாதம் 19-ந் தேதி அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டில் உள்ள தனி அறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று முன்தினம் மாலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால், உடனடியாக அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

ஜெயலலிதாவின் இதயம் மற்றும் நுரையீரல் செயல் இழந்ததால் அவற்றை இயங்கச் செய்யும் வகையில் அவருக்கு ‘எக்மோ’ என்னும் அதிநவீன கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. என்றாலும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் அவருக்கு இருதய ஆபரேஷன் செய்யப்பட்டது.

உயிரை காப்பாற்ற முயற்சி
இந்த நிலையில், நேற்று மதியம் 12.45 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மாலை 4.40 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் டாக் டர்கள் குழுவினர் ஆஸ்பத்திரிக்கு வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர். ஜெயலலிதாவின் உயிரை காப்பாற்றும் முயற்சியில் டாக்டர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி அறிந்துகொள்வதற்காக மத்திய மந்திரி வெங்கையா நாயுடு மாலை 5.30 மணி அளவில் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

ஜெயலலிதா மரணம்
டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி ஜெயலலிதா மரணம் அடைந்தார். இரவு 11-30 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது.

ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சர் மரணம் அடைந்தால் அதை வெளியிடுவதற்கு என்று இந்திய அரசியல் சாசனத்தில் சில அறிவுறுத்தல்கள் உள்ளன.

இது சட்டம்-ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால், மாநில முதல்-அமைச்சர் இறந்தது உறுதியானவுடன், அந்த மாநில கவர்னரும் அதை உறுதி செய்ய வேண்டும். பின்னர் அந்த தகவலை மத்திய உள்துறை மந்திரி, பிரதமர் ஆகியோருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமையை உறுதி செய்து கொண்ட பிறகு, மத்திய அரசின் அனுமதியோடு நள்ளிரவு அல்லது அதிகாலை கவர்னர் அல்லது தலைமைச் செயலாளர் முறையாக, முதல்-அமைச்சர் இறந்த தகவலை மக்களுக்கும், ஊடகங்களுக்கும் தெரிவிப்பார்.

இந்த வழிமுறையின்படி முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்த செய்தி நள்ளிரவு 12-15 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவிக் கப்பட்டது.

முன்னதாக நேற்று இரவு 11-30 மணி அளவில் அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். திடீரென தெரு விளக்குகள் அணைக்கப்பட்டன.

அதே சமயம் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து ஜெயலலிதா வீடு உள்ள போயஸ் கார்டன் வரை ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். இதைத்தொடர்ந்து சற்று நேரத்தில் ஜெயலலிதா காலமானார் என்ற அறிவிப்பு வெளியானது.

தொண்டர்கள் கதறல்
அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் திரண்டு இருந்தனர். ஜெயலலிதா மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டதும், அவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். துக்கத்தை தாங்க முடியாமல் அவர்கள் முகத்திலும், தலையிலும் அடித்துக்கொண்டு ‘அம்மா, அம்மா’ என்று கதறி அழுதார்கள். சில பெண்கள் தரையில் விழுந்து புரண்டு அழுதார்கள்.

ஜெயலலிதா மரணம் அடைந்த தகவல் வெளியானதும் சென்னை நகரில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் அ.தி.மு.க. தொண்டர்கள் கண்ணீரும், கம்பலையுமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியை நோக்கி கதறி அழுதபடி சாரை, சாரையாக வந்தனர். போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டை நோக்கியும் கூட்டம், கூட்டமாக வந்தனர்.

காட்டுத்தீ போல் பரவியது
ஜெயலலிதா இறந்த தகவல் தமிழகம் முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் அ.தி.மு.க.வினர் அதிர்ச்சியும், பெரும் சோகமும் அடைந்தனர். பலர் துக்கம் தாங்க முடியாமல் கதறி துடித்தனர். ஜெயலலிதாவின் புகைப்படங்களை தெருக்களில் ஆங்காங்கே அலங்கரித்து வைத்து அஞ்சலி செலுத்த தொடங்கினார்கள்.

செவ்வாய், 8 நவம்பர், 2016

500 1000 Rupees 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது பிரதமர் மோடி அறிவிப்பு


08-NOV-2016 இரவு 12 மணி முதல் ரூ. 500, 1000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என்று பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். புதியதாக புது வடிவத்துடன் ரூ. 2,000 மற்றும் 500 நோட்டுகள் வெளியிடப்பட உள்ளது.






கருப்பு பணம், ஊழல் ஒழிக்கப்படும் என்ற கோஷத்துடன் 2014-ம் தேர்தலை சந்தித்து, வெற்றிப்பெற்று பிரதமர் ஆன நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். பிரதமர் மோடி தன்னுடைய உரையில் இன்று இரவு 12 மணி முதல் ரூ. 500, 1000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என்று அறிவித்தார்.  

மத்தியில ஆட்சியில் அமர்ந்ததை தொடர்ந்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் குவிக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் பலனாக, ரூ.65 ஆயிரம் கோடி கருப்பு பணம் வெளியே வந்தது. பிரதமர் மோடி சமீபத்தில் பேசுகையில் ‘பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடத்தியதுபோல், கருப்பு பணத்துக்கு எதிராகவும் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடத்தப்படும்’ என்றார். அதன்படி 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.

அப்பாவிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துகிறார்கள். அவர்களுக்கு யார் நிதி உதவி செய்வது? எல்லை தாண்டி, நமது எதிரிகள் கள்ள நோட்டுகளை பயன்படுத்தி, பயங்கரவாதிகளுக்கு உதவுகிறார்கள். இது பலதடவை நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறிய பிரதமர் மோடி, கருப்பு பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பியவர்களை அடையாளம் கண்டறியும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. கருப்பு பணத்துக்கு எதிராக புதிய உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது என்றார். 


பிரதமர் மோடி பேசுகையில், மத்தியில் ஆட்சியில் அமர்ந்ததை தொடர்ந்து உடனடியாக நாங்கள் போராடியது ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிராகவே. தேசத்தில் பண சுழற்சி செயல்முறையானது நேரடியாக ஊழலுடன் தொடர்பு உடையதாக உள்ளது, இது நம்முடைய சமூகத்தில் கீழ்மட்ட மக்களை பாதிக்கிறது. இன்று இரவு 12 மணிக்கு மேல் ரூ. 500 மற்றும் 1000 நோட்டுகள் வாபஸ் பெறப்படும். இந்நோட்டுகளை வங்கிகளில் ஒப்படைக்க 50 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. நவம்பர் 10-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதிவரையில் ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகளை தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளில் டெபாசிட் செய்யலாம். 

வங்கிகளில் ஏற்றுக் கொள்ளப்படாத நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் ஒப்படைக்கலாம்.  

நவம்பர் 11-ம் தேதி நள்ளிரவு வரையில் மருத்துவமனைகளில் இந்நோட்டுகள் பெற்றுக் கொள்ளப்படும். பெட்ரோல் பங்குகளில் ஏற்றுக் கொள்ளப்படும். விமானம், ரெயில் டிக்கெட்கள் மற்றும் மருந்தகங்களில் நோட்டுகள் அதுவரையில் பெறப்படும். நவம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நாட்டில் வங்கிகளில் ஏ.டி.எம். செயல்படாது. நவம்பர் 9-ம் தேதி நாளை அனைத்து வங்கிகளும் மூடப்படும். பொதுமக்கள் சேவைக்காக அந்த ஒருநாள் மட்டும் செயல்படாது. பண பரிவர்த்தனையில் பிற முறைகளான, ’செக்’, டி.டி., கிரிடிட், டெபிட் கார்டுகள் முறையில் எந்தஒரு மாற்றமும் கிடையாது. 

விரைவில் புதிய 2,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும். அதிக மதிப்புடைய நோட்டுகளை, குறிப்பிட்ட அளவில் வெளியிட ஆர்.பி.ஐ. முடிவு செய்து உள்ளது. 

ஊழலை ஒழிப்பதற்கான பணியை தொடர்ந்து செய்வோம், ஊழல் மற்றும் கருப்பு பணம் விவகாரத்தில் தொடங்கப்பட்ட முயற்சியை வெற்றிகரமாக முடிக்க இணைந்து பணியாற்றுவோம். ஊழலுக்கு எதிராக போராட நாங்கள் விரும்புகின்றோம். அனைவருக்கும் நன்றி என்று பிரதமர் மோடி பேசினார். மத்திய அரசின் இந்நடவடிக்கைக்கு பாரத ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கிஉள்ளது.

புதிய ரூபாய் நோட்டுகள் வெளியீடு

நாளை மறுநாள் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

பிரதமர் மோடி இன்று நள்ளிரவு முதல் 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் அந்த நோட்டுகளை டிசம்பர் 30-ந் தேதிக்குள் வங்கிகள் மற்றும் தபால் நிலைய கணக்குகளில் செலுத்தலாம் என்று அறிவித்துஉள்ளார். மத்திய அரசின் இந்நடவடிக்கைக்கு பாரத ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கிஉள்ளது. 

பிரதமர் மோடியை அடுத்து ரிசர்வ் வங்கி தலைவர் உர்ஜித் படேல் பேசினார். அவர் பேசுகையில், போலி இந்திய ரூபாய் நோட்டுகள் பெருகி வரும் விவகாரத்தினான் ஆபத்து பற்றி கவலையை எழுப்பினார், இதுபோன்ற ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. புதிய ரூபாய் நோட்டுகள் தயாரிப்பை அதிகரித்து உள்ளோம், எவ்வளவு விரைவில் புதிய ரூபாய் நோட்டுகளை வழங்க முயற்சி செய்து வருகிறோம் என்றார். நாளை மறுநாள் புதுபாதுகாப்பு அம்சங்களுடன் 500 நோட்டுகள் வெளிவரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

கள்ள நோட்டுகள் தயாரிக்க முடியாதபடி புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் நோட்டுக்கள் உள்ளன. போதிய எண்ணிக்கையில் நோட்டுக்கள் தயாராக உள்ளது. புதிய ரூபாய் நோட்டுகள் தயாரிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்றன. கள்ள நோட்டு கருப்பு நோட்டு பணம் அதிகரித்துள்ளதை தடுக்க இந்த நடவடிக்கையானது அவசியம். புதிய நோட்டுக்களை வங்கிகளுக்கு கொண்டு சேர்க்கவே வங்கிகளுக்கு நாளை விடுமுறை என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

புதிய ரூபாய் நோட்டுகள் புதிய அம்சங்கள், வடிவமைப்பு மற்றும் பரிமாணங்களை கொண்டு உள்ளது. புதிய ரூபாய் நோட்டின் மாதிரி வெளியிடப்பட்டு உள்ளது. நாங்கள் நவம்பர் 24-ம் தேதி நிலையை ஆய்வு செய்து வருகிறோம், புதிய ரூபாய் நோட்டுகளை நவம்பர் 10-ம் தேதி வெளியிடப்படும் என்று ஆர்.பி.ஐ. அறிவித்து உள்ளது.

புதன், 21 செப்டம்பர், 2016

காவிரி : தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட் உத்தரவு



சுப்ரீம் கோர்ட்டில் காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இருப்பினும் 21-ந் தேதி(இன்று) முதல் 27-ந்தேதி வரை 7 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

புதன், 19 ஆகஸ்ட், 2015

இலங்கை : ரனில் மீண்டும் பிரதமர் ஆனார்

 இலங்கை பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி ராஜபக்சேவின் பிரதமர் கனவு தகர்ந்தது

ரனில் மீண்டும் பிரதமர் ஆனார்

இலங்கை பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்றதால், ரனில் மீண்டும் பிரதமர் ஆனார். இதன் மூலம் ராஜபக்சேவின் பிரதமர் கனவு தகர்ந்தது.

கொழும்பு, ஆக.19-

இலங்கை பாராளுமன்றத்தில் 225 இடங்கள் உண்டு. இவற்றில் 196 இடங்கள் தேர்தல் மூலமும், மீதி 29 இடங்கள் தேர்தலில் கட்சிகள் பெறுகிற ஓட்டுகளின் விகிதாச்சார அடிப்படையிலும் நிரப்பப்படுகின்றன.

விறுவிறுப்பான தேர்தல்

இதன்படி அங்கு நேற்று முன்தினம் 22 தேர்தல் மாவட்டங்களில் உள்ள 196 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவு செய்த 21 அரசியல் கட்சிகள் களம் இறங்கின. அவற்றின் சார்பில் மொத்தம் 6 ஆயிரத்து 151 வேட்பாளர்களும், சுயேச்சையாக 2 ஆயிரத்து 498 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

இந்த தேர்தல் அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடந்து முடிந்தது. உடனடியாக ஓட்டுகளை எண்ணும் பணி தொடங்கியது. நேற்று ஓட்டு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று முடிந்தது. முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ரனில் அணி வெற்றி

இந்த தேர்தலில் 113 இடங்களை பெறுகிற கட்சிதான் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில், எந்தவொரு கட்சியும் அந்த தகுதியை பெற வில்லை.

எனினும் தனிப்பெரும் அணியாக ரனில் விக்ரம சிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி உருவாகி உள்ளது. இந்த கூட்டணி தேர்தல் நடந்த 196 இடங்களில் 93 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. முன்னாள் அதிபர் ராஜபக்சே, தற்போதைய அதிபர் சிறிசேனா ஆகியோரின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி 83 இடங்களை கைப்பற்றியது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு

தமிழர்கள் பெருவாரியாக வாழ்கிற வட பகுதியில் 3 தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அபார வெற்றி பெற்றது. இந்த அமைப்பு 14 இடங்களை கைப்பற்றி உள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் திரிகோணமலை மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை பாராளுமன்ற தேர்தலில், தமிழ் மக்களின் குரலை இவர்கள் ஓங்கி ஒலிக்க வழி பிறந்துள்ளது.

இறுதி நிலவரம்

மொத்த இடங்கள் - 225

தேர்தல் நடந்தவை - 196

ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி - 93

ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி - 83

தமிழ் தேசிய கூட்டமைப்பு- 14

ஜனதா விமுக்த பெரமுனா - 4

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் - 1

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 1

விகிதாச்சாரம்

இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணிக்கு 11 இடங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணிக்கு 9 இடங்களும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 2 இடங்களும் கிடைக்கும்.

இந்த இடங்களுடனும் சேர்த்து ஐக்கிய தேசிய கட்சி கூட்டணிக்கு மொத்தம் 104 இடங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணிக்கு 92 இடங்களும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 16 இடங்களும் கிடைக்கும்.

கட்சி தாவல்?

தனிப்பெரும்பான்மை பலம் பெற ஐக்கிய தேசிய கட்சி கூட்டணிக்கு இன்னும் 9 இடங்களே தேவை.

அதே நேரத்தில் ராஜபக்சே தலைமையிலான எதிர் அணியில் இருந்து 25 முதல் 40 எம்.பி.க்கள் வரை ரனில் விக்ரம சிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணிக்கு தாவக்கூடும் என தகவல்கள் கசிந்துள்ளன. இலங்கையில் கட்சிதாவல் தடைச்சட்டம் அமலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரனில் விக்ரம சிங்கே கருத்து

தேர்தல் வெற்றி குறித்து ரனில் விக்ரம சிங்கே கருத்து தெரிவிக்கையில், “நல்லாட்சிக்கு மக்கள் தந்த தீர்ப்பு இது. மக்களுக்காக இந்த வெற்றியை உறுதி செய்வதற்கு ஓய்வின்றி உழைத்த அனைத்து கட்சிகள், தனிபட்ட நபர்கள் என அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறினார்.

அவர் மேலும் கூறும்போது, “புதிய சகாப்தத்தின் சவால்களை எதிர்கொண்டு, நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்து செல்வதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம். சவால்களை எதிர்கொள்வதற்கு நீங்கள் அனைவரும் எங்களுடன் கரம் கோர்க்க அழைப்பு விடுக்கிறேன்” என கூறினார்.

ராஜபக்சே கனவு தகர்ந்தது

கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில் படுதோல்வி அடைந்த ராஜபக்சே, இந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் பதவியை பிடித்து விடலாம் என கனவு கண்டார். ஆனால் அந்த கனவு தகர்ந்து தவிடுபொடியாய் ஆகிவிட்டது.

இலங்கை தேர்தல் முடிவுகள் குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ராஜபக்சே, “பிரதமராகும் எனது கனவு கலைந்து விட்டது” என ஒப்புக்கொண்டார். மேலும், “நான் ஒப்புக்கொள்கிறேன். கடும் போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்து விட்டோம்” என கூறினார்.

பதவி ஏற்பு

மீண்டும் பிரதமர் ஆகியுள்ள ஐக்கிய தேசிய கூட்டணியின் தலைவரான ரனில் விக்ரம சிங்கே, உடனடியாக நாட்டின் 15-வது பிரதமராக பதவி ஏற்பார், அவருக்கு அதிபர் மாளிகையில் நடக்கிற எளிய விழாவில் அதிபர் சிறிசேனா பதவி பிரமாணம் செய்து வைப்பார் என அறிவிக்கப்பட்டது.

மந்திரிகள் பின்னர் ஓரிரு நாளில் பதவி ஏற்பார்கள் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

சிறிசேனா தேசிய அரசுதான் அமைப்பார் என தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் இந்த அரசில் சேரப்போவதில்லை, எதிர்க்கட்சி வரிசையில் நாங்கள் அமர்வோம் என ராஜபக்சேயின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி உறுப்பினர் உதய கம்மான் பிள்ளை தெரிவித்துள்ளார். ஆனால் சிறிசேனாவின் ஆதரவாளர்கள் ரனில் விக்ரம சிங்கேயின் மந்திரிசபையில் இடம் பெறுவார்கள் என மற்றொரு தகவல் கூறுகிறது.

புதிய பாராளுமன்றம்

புதிய பாராளுமன்றம் அடுத்த மாதம் 1-ந் தேதி கூடும் என கொழும்பில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
 

============== தினத்தந்தி =========================

சனி, 10 ஜனவரி, 2015

DMK Leader தி.மு.க. தலைவராக கருணாநிதி 11-வது முறையாக தேர்வு

 தி.மு.க. தலைவராக கருணாநிதி 11-வது முறையாக தேர்வு

கனிமொழி எம்.பி. மகளிரணி செயலாளர் ஆனார்

சென்னை, ஜன.10-

தி.மு.க. தலைவர் பதவிக்கு 11-வது முறையாக கருணாநிதி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல், பொதுச் செயலாளராக க.அன்பழகனும், பொருளாளராக மு.க.ஸ்டாலினும், மகளிரணி செயலாளராக கனிமொழி எம்.பி.யும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பொதுக்குழு கூட்டம்

தி.மு.க.வில் 14-வது உள்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு, மாநில நிர்வாகிகளை தவிர, மாவட்ட, ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை நடைபெற்றது.

பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, காலை 9.35 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வந்தார். பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்பட மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு - செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 1500 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தலைவர் பதவிக்கு தேர்தல்

கூட்டம் தொடங்கியதும், தி.மு.க. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. தேர்தல் நடத்தும் அதிகாரியாக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சற்குணபாண்டியன் நியமிக்கப்பட்டிருந்தார்.

தேர்தல் தொடங்கியபோது, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் கீழே அமர்ந்திருந்தனர். தேர்தலை நடத்திய சற்குணபாண்டியன், ‘‘தி.மு.க. தலைவர் பதவிக்கு கருணாநிதி மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவை 603 பேர் முன்மொழிந்தும், வழிமொழிந்தும் உள்ளனர். கருணாநிதியை தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, போட்டியின்றி தி.மு.க. தலைவராக கருணாநிதி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று அறிவித்தார்.

மேடையில் கருணாநிதி

இதனைத் தொடர்ந்து, பொதுக்குழுவில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அதன்பின்னர், கருணாநிதி மேடைக்கு வந்தார். அதனைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் பதவிக் கும், பொருளாளர் பதவிக்குமான தேர்தல் நடந்தது.

பொதுச் செயலாளர் பதவிக்கு க.அன்பழகன் பெயரிலும், பொருளாளர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் பெயரிலும் மட்டுமே மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்ததால், அவர்கள் இருவரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, க.அன்பழகன், மு.க.ஸ்டாலின் ஆகியோர் மேடைக்கு வந்தனர்.

சட்ட திருத்த தீர்மானம்

தொடர்ந்து, தணிக்கை குழு உறுப்பினர்களாக காசிநாதன், குழந்தைவேலு, பலராமன், சுப.சீதாராமன் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பின்னர், கருணாநிதி, க.அன்பழகன், மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு ஆளுயர மாலைகள் அணிவிக்கப்பட்டன.

தி.மு.க. தலைவராக தொடர்ந்து 11-வது முறையாக கருணாநிதியும், பொதுச்செயலாளராக 9-வது முறையாக க.அன்பழகனும், பொருளாளராக 2-வது முறையாக மு.க.ஸ்டாலினும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர், பொருளாளர் மு.க.ஸ்டாலின் 3 சட்ட திருத்த தீர்மானத்தை கொண்டுவந்து பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலை பெற்றார். அதன்பிறகு, கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகளை தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:-

புதிய நிர்வாகிகள் யார்?

முதன்மை செயலாளர் - துரைமுருகன். துணை பொதுச் செயலாளர்கள் - சற்குண பாண்டியன், வி.பி.துரைசாமி, திண்டுக்கல் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன். கொள்கை பரப்பு செயலாளர்கள் - திருச்சி சிவா, ஆ.ராசா. மகளிர் அணி செயலாளர் - கனிமொழி எம்.பி. மாணவர் அணி செயலாளர் - இள.புகழேந்தி. தொழிலாளர் அணி செயலாளர் - சிங்கார ரத்தின சபாபதி.

இவ்வாறு அறிவித்த கருணாநிதி, ‘‘இதுதவிர பல்வேறு அணிகளின் செயலாளர்கள், இணை செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளன’’ என்று தெரிவித்தார்.

அதன்பிறகு, பொதுக்குழு கூட்டத்தில் ஒரு சிறப்பு தீர்மானம் உள்பட 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கனிமொழி

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநில நிர்வாகிகளில், துணைப் பொதுச் செயலாளராக இருந்த துரைமுருகன் முதன்மை செயலாளர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். துணைப் பொதுச் செயலாளர்களாக ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை கட்சி பொறுப்பு வகிக்காத கனிமொழி எம்.பி.க்கு, மாநில மகளிரணி செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

சிரிசேனா - இலங்கை அதிபர் ஆனார் !


சிரிசேனா - இலங்கை அதிபர் ஆனார் !

வியாழன், 18 டிசம்பர், 2014

ஜாமீன் 4 மாதங்கள் நீடிப்பு



புதுடெல்லி, டிச.19-

பெங்களூரு தனிக்கோர்ட்டில் நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ,100 கோடி அபராதமும் விதித்து கடந்த செப்டம்பர் 27-ந் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

கர்நாடக ஐகோர்ட்டில் மனு

இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர் கள் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 10 கோடியும் அபராதமாக விதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி கர்நாடக ஐகோர்ட் டில் மனு தாக்கல் செய்தனர்.

சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன்

கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்க மறுத்ததை தொடர்ந்து, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து அங்கு ஜாமீன் பெற்றனர். தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு கடந்த அக்டோபர் 17-ந் தேதி ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு கர்நாடக தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை நிறுத்தி வைத்து இடைக்கால ஜாமீன் வழங்கியது.

அத்துடன் விசாரணையை டிசம்பர் 18-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

விசாரணை

இந்த நிலையில், ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தபடி ஜெயலலிதா உள்ளிட்டோரின் ஜாமீன் மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ்.துளசி ஆஜரானார். அவர் வாதாடுகையில், ‘‘இந்த வழக்கில் மேல்முறையீடு தொடர்பாக எனது கட்சிக்காரர் சார்பில் 173 தொகுப்புகள் (சுமார் 2 லட்சத்து 72 ஆயிரம் பக்கங்கள்) கொண்ட ஆவணங்கள் ஏற்கனவே கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நாங்கள் வழக்கை சந்திக்க தயாராக இருக்கிறோம். எங்கள் தரப்பு வாதங்களை வைக்க 30 அலுவலக நாட்கள் தேவைப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்கும் வகையில் உத்தரவு வழங்க வேண்டும்’’ என்று கூறினார்.

சுப்பிரமணியசாமி

இதற்கிடையே எதிர்மனுதாரர்களில் ஒருவரான பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியசாமி, கர்நாடக ஐகோர்ட்டில் இந்த வழக்கை எதிர்த்து தான் வாதாடப் போவதால் ஜெயலலிதா தரப்பினர் தாக்கல் செய்துள்ள ஆவணங்களின் இரு பிரதிகளை தனக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும், ஏற்கனவே ஜெயலலிதாவின் கைது மற்றும் ஜாமீன் தொடர்பாக தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து போனதாகவும் அப்போது அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், சுப்பிரமணியசாமிக்கு அவர் கோரியுள்ள படி மேல்முறையீடு தொடர்பான அனைத்து ஆவணங்களின் பிரதி ஒன்றை வழங்குமாறு ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞரிடம் கூறினர். அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக ஏதாவது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் தாராளமாக சுப்ரீம் கோர்ட்டை அணுகலாம் என்றும் சுப்பிரமணியசாமியிடம் அவர்கள் தெரிவித்தனர்.

ஜாமீன் 4 மாதங்கள் நீடிப்பு

பின்னர், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு கடந்த அக்டோபர் 17-ந் தேதி அன்று வழங்கப்பட்ட ஜாமீனை மேலும் 4 மாதங்களுக்கு அதாவது 18.4.2015-ந் தேதி வரை நீடித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஜெயலலிதா உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தனி அமர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், இந்த அமர்வு மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை தினசரி விசாரித்து 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவு பிறப்பித்தனர்.

ஜெயலலிதா தரப்பு தங்கள் வாதங்களை 2 மாதங்களுக் குள் முடிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க ஒரு மாத கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறினார்கள். ஏதேனும் காரணங்களால் ஒரு மாதத்துக்குள் உத்தரவு வழங்க முடியவில்லை என்றால், மேலும் 15 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

செவ்வாய், 9 டிசம்பர், 2014

Daily Thanthi Dubai Edition : தினத்தந்தி நாளிதழ் துபாய் நகரில் தனது புதிய பதிப்பை துவங்க உள்ளது.

துபாய்: 
 
தினத்தந்தி நாளிதழ் துபாய் நகரில் தனது புதிய பதிப்பை துவங்க உள்ளது. இதன் மூலம் துபாயில் அச்சாகும் முதல் தமிழ் பத்திரிகை என்ற பெருமையை அந்த நாளிதழ் பெற்றுள்ளது,. 
 
முன்னணி தமிழ் நாளிதழான தினத்தந்தி ஏற்கனவே, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, வேலூர், கடலூர், ஈரோடு, நாகர்கோவில், தஞ்சை, திண்டுக்கல், புதுச்சேரி, பெங்களூரு, மும்பை ஆகிய 16 நகரங்களில் இருந்து வெளி வருகிறது. 
 
17வது பதிப்பு துபாய் நகரில் தொடங்கப்படுகிறது. அபுதாபி, துபாய், சார்ஜா, அஜ்மான், புஜேரா, உம் அல் குவைன், நாசல் கைமா ஆகிய 7 நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏராளமான இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் பணியாற்றி வருகின்றனர். 
 
இந்நிலையில் தினத்தந்தி நாளிதழ் துபாயில் பதிப்பை ஆரம்பிக்க உள்ளது. துபாயில் அச்சாகும் முதல் தமிழ் பத்திரிகை என்ற பெருமையும் இதன் மூலம் அப்பத்திரிகைக்கு கிடைக்க உள்ளது. 
 
இதற்கான தொடக்கவிழா துபாய் அல்கூஸ் தொழில்பேட்டை பகுதியிலுள்ள கலீஜ் டைம்ஸ் பத்திரிகை அலுவலகத்தில் இன்று நடக்கிறது. தினத்தந்தி துபாய் பதிப்பின் இதழ், நாளை புதன்கிழமை ( 10-12-2014 ) முதல் வெளியாகிறது.

Read more at: http://tamil.oneindia.com/news/international/dailythanthi-news-paper-starts-its-new-edition-dubai-216623.html?utm_source=article&utm_medium=fb-button&utm_campaign=article-fbshare

வியாழன், 4 டிசம்பர், 2014

SCourt rejects Kerala plea to review Mullaperiyar verdict கேரள அரசின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி !

புதுடெல்லி, டிச.4-

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது.

சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மே மாதம் 7-ந் தேதி தீர்ப்பு கூறியது. அத்துடன் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் பணியை கண்காணிக்க 3 உறுப்பினர்கள் கொண்ட கண்காணிப்பு குழு ஒன்றையும் அமைக்க உத்தரவிட்டது.

மேலும், நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு எதிரான கேரள அரசின், நீர்ப்பாசனம் மற்றும் அணை பாதுகாப்பு சட்டம் செல்லாது என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தது.

142 அடியாக உயர்வு

இதைத்தொடர்ந்து, 142 அடி உயரத்துக்கு தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் அணையில் பராமரிப்பு பணிகளை தமிழக அரசு மேற்கொண்டது.

சமீபத்தில் பெய்த பருவமழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் பல ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக 142 அடியை எட்டியது. இந்த நிலையில், நிபுணர்கள் முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்து, அணை பலமாக இருப்பதாக தெரிவித்தனர்.

கேரள அரசு மனு

இதற்கிடையே, அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதி அளித்து வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஜூன் 30-ந் தேதி கேரள அரசு மனு ஒன்றை தாக்கல் செய்தது.

அதில், நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவது அணையின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் என்றும், அணையின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்த முடிவை ஏற்க முடியாது என்றும், தாழ்வான பகுதியில் வசிக்கும் சுமார் 40 லட்சம் மக்களின் பாதுகாப்பை கோர்ட்டு கவனத்தில் கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டு இருந்தது.

நீதிபதிகள் விசாரணை

இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், மதன் பி.லோகுர், எம்.ஒய்.இக்பால், சி.நாகப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தலைமை நீதிபதியின் அறையில் விசாரணை நடந்தது. மூடிய அறைக்குள் விசாரணை நடைபெற்றதால் இருதரப்பு வழக்கறிஞர்கள் உள்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை.

கேரள அரசின் மறுஆய்வு மனு மீது நீதிபதிகள் எடுத்த முடிவு சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் அலுவலகத்துக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் அது பற்றிய விவரம் வெளியானது.

மனு தள்ளுபடி

கேரள அரசின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்து அவர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துமாறு கடந்த மே 7-ந் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் தாங்கள் குறுக்கிட விரும்பவில்லை என்றும், கேரள அரசின் மறுஆய்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் அதை தள்ளுபடி செய்ததாகவும் நீதிபதிகள் கூறி உள்ளனர்.

புதன், 3 டிசம்பர், 2014

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு பொறுப்பை தமிழக காவல்துறை வசமே ஒப்படைக்க வேண்டும்: வைகோ



முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு பொறுப்பை தமிழக காவல்துறை வசமே ஒப்படைக்க வேண்டும்: வைகோ
 
 
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 
 
 
கடந்த 2 நாட்களாக முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை கண்காணிக்கும் கடமையைச் செய்ய தமிழக அதிகாரிகள் சென்றபோது அணைக்கு செல்ல விடாமல் கேரள வனத்துறை அதிகாரிகள் தடுத்து விட்டனர். ஏற்கனவே அணைப்பகுதியில் பணியில் ஈடுபட்டுள்ள தமிழக அதிகாரிகளுக்கு உணவு கொண்டு செல்லவும் அனுமதிக்கவில்லை.

அணை கட்டப்பட்ட நாளில் இருந்து 1968-ம் ஆண்டு வரை முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு தமிழக காவல்துறையின் வசமே இருந்தது. அதன் பின்னர் கேரள அரசின் போலீஸ் வசம் தமிழகம் தானாக ஒப்படைத்தது. முல்லைப்பெரியாறு அணைக்கு சேதம் ஏற்படுத்த கேரளத்தின் சில சக்திகள் முயன்று வருகின்றன.

எனவே முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு பொறுப்பை தமிழக காவல்துறை வசமே ஒப்படைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிக ஏற்பாடாக அணையின் பாதுகாப்பை மத்திய ரிசர்வ் போலீஸ் வசம் ஒப்படைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

'எல்லைகள் திரும்பவும் வகுக்க முடியாது' பாகிஸ்தானுக்கு அருண் ஜெட்லி திட்டவட்டம் !

இந்தியாவுடனான எல்லையை திரும்பவும் வகுக்க முடியாது என்பதை பாகிஸ்தான் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று திட்டவட்டமாக கூறிய மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி, ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று தெரிவித்துள்ளார்.

1990-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயால் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று லாகூர் பஸ் போக்குவரத்தை குறிப்பிட்டு பேசிய மத்திய மந்திரி அருண் ஜெட்லி, இந்தியா, பாகிஸ்தானுடனான நட்புறவை விரிவடைய செய்தது. என்றார். "நமது அண்டைய நாடு, அவர்கள் பயன்படுத்தும் அர்த்தத்தினை புரிந்துக் கொள்ள வேண்டும், அவர்கள் இந்த நாட்டில் எந்தஒரு பகுதியையும் இனிபெற முடியாது. நாடுகளுக்கு இடையிலான எல்லைகள் மாற்றிக் கொண்ட காலம் மாறிவிட்டது. எல்லைகள் திரும்பவும் வகுக்க முடியாது. ஏற்கனவே உள்ளபடியே எல்லைகள் இருக்கும்."

"ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பகுதி என்பதை நாட்டில் வாழும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நான் தெளிவுபடுத்துகிறேன்."
என்று பாரதீய ஜனதா ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய அருண் ஜெட்லி கூறினார்.

இந்தியாவில் பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது, நட்புறவுக்கு முயற்சிகளை மேற்கொண்டார், லாகூருக்கு பஸ்சில் சென்றார். பாகிஸ்தானுக்கு நட்பு கரத்தை விரிவடைய செய்தார். பாகிஸ்தானில் அவர் பேசுகையில், வரலாறு வேண்டுமெனால் மாறலாம், ஆனால் புவியியலை மாற்ற முடியாதது. அண்டை நாடுகள் எப்போதுமே அண்டைய நாடாகவே இருக்கும். அந்த நாடுகள் இடையிலான உறவுகள் நல்லது அல்லது மோசமானது என்பதை மாற்ற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் பாகிஸ்தானிடம் இருந்தும் இதுபோன்ற பதில்வரும் என்று நாங்கள் நம்புகிறோம். என்று அருண் ஜெட்லி வாஜ்பாயின் பேச்சை குறிப்பிட்டு பேசினார்.

தீவிரவாதம் விவகாரத்தில் பாகிஸ்தானின் பெயரை குறிப்பிடாத அருண் ஜெட்லி, இந்தியா அதை சமாளிக்க திறனை பலப்படுத்தியுள்ளது. உலக மக்கள் தொகையில் 6-ல் ஒரு பங்கு மக்கள் வசிக்கும் இந்தியா ராணுவம் மற்றும் பொருளாதார வலிமையை கொண்டுள்ளது, தீவிரவாதம், ஊடுருவல் மற்றும் வன்முறையை மாற்றம் கொண்டு வருவதற்கு பயன்படுத்த முடியாது. என்று அருண் ஜெட்லி கூறினார்.

வியாழன், 20 நவம்பர், 2014

தமிழக மீனவர்கள் 5 பேரும் விடுதலை

 தமிழக மீனவர்கள் 5 பேரும் விடுதலை



கொழும்பு, நவ.20-

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட்.

தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை

கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி, கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இவர்களை, போதைப்பொருள் கடத்தியதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவர்களுடன் இலங்கையைச் சேர்ந்த மேலும் 3 பேரும் கைது ஆனார்கள். கொழும்பு நகரில் உள்ள வெலிக்கடை சிறையில் இவர்கள் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் மீதான வழக்கை விசாரித்த கொழும்பு ஐகோர்ட்டு, 8 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து கடந்த அக்டோபர் 30-ந் தேதி தீர்ப்பு கூறியது.


இது தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மீனவர்கள் போராட்டத்தில் குதித்தார்கள். தமிழக மீனவர்கள் 5 பேரையும் மீட்கக் கோரி தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வற்புறுத்தின.

 இதற்கிடையே, தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து கொழும்பு நகரில் உள்ள இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் இந்திய அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

5 பேரும் விடுதலை

ஆனால் இந்த அப்பீல் வழக்கு நடைபெறுவதை விரும்பாத அதிபர் ராஜபக்சே, தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பொதுமன்னிப்பு வழங்கி 5 மீனவர்களையும் விடுதலை செய்ய விருப்பம் தெரிவித்தார். பொதுமன்னிப்பு வழங்குவதற்கு வசதியாக இந்திய அரசு தனது மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அதன்பேரில், இந்திய தூதரகத்தின் சார்பில் இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த மேல்முறையீட்டு மனு நேற்று முன்தினம் வாபஸ் பெறப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அதிபர் ராஜபக்சே நேற்று தமிழக மீனவர்கள் 5 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ததோடு, பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்தார். இதற்கான அறிவிப்பை ராஜபக்சே வெளியிட்டு இருப்பதாக அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் மோகன் சமரநாயகே தெரிவித்தார்.

இதே போல் தமிழக மீனவர்களுடன் கைதான இலங்கை மீனவர்கள் 3 பேரும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

ஒப்படைப்பு

பின்னர் இந்த தகவல் கொழும்பு வெலிக்கடை சிறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகிய 5 பேரையும் சிறையில் இருந்து அவர்கள் விடுதலை செய்தனர். 5 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு குடியுரிமை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்பிறகு 5 பேரும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, இந்திய தூதரகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இரவில் அவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டனர்.


இந்திய தூதர் சந்திப்பு

5 இந்திய மீனவர்களின் தண்டனையையும் ரத்து செய்து அவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்ததற்காக இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நன்றி தெரிவிப்பதாக இந்திய தூதர் ஒய்.கே.சின்கா கூறினார். 5 மீனவர்களையும் அவர் சந்தித்து பேசினார்.

இந்திய தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், விடுதலை செய்யப்பட்டு இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள 5 மீனவர்களையும் இந்தியாவுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அவர்களுக்கு இந்தியாவில் தண்டனை எதுவும் விதிக்கப்படமாட்டாது என்றும் தெரிவித்தார்.

குடும்பத்தினர் மகிழ்ச்சி

தூதரகத்தில் இருந்தபடி, மீனவர் லாங்லெட் தங்கச்சிமடத்தில் உள்ள தனது குடும்பத்தினருடன் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, தாங்கள் 5 பேரும் விடுதலையான தகவலை தெரிவித்தார்.

இதை அறிந்ததும் 5 பேரின் குடும்பத்தினரும், மீனவர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

சனி, 15 நவம்பர், 2014

மீனவர்களின் தூக்கு தண்டனை ரத்து !





கொழும்பு, நவ.15-

ராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட்.

5 பேருக்கு தூக்கு தண்டனை

கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 5-ந் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற இவர்களை, போதைப்பொருள் கடத்தியதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவர்களுடன் இலங்கை மீனவர்கள் இருவரும் கைதானார்கள். இவர்கள் மீதான வழக்கை விசாரித்த கொழும்பு ஐகோர்ட்டு 7 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து கடந்த மாதம் 30-ந் தேதி தீர்ப்பு கூறியது.

இதற்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக மீனவர்கள் 5 பேரையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அரசியல் கட்சிகள் மத்திய அரசை வற்புறுத்தின. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார்.

இந்தியா மேல்முறையீடு


இந்த நிலையில், இந்த பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடி இலங்கை அதிபர் ராஜபக்சேயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதைத்தொடர்ந்து, 5 மீனவர்களையும் தமிழக சிறைக்கு மாற்ற ராஜபக்சே சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

இதற்கிடையே, தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து கொழும்பு நகரில் உள்ள இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் இந்திய அரசின் சார்பில் கடந்த 11-ந் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த அப்பீல் வழக்கு நடைபெறுவதை அதிபர் ராஜபக்சே விரும்பவில்லை. பொதுமன்னிப்பு வழங்கி 5 மீனவர்களையும் விடுதலை செய்ய விருப்பம் தெரிவித்த அவர், அதற்கு முன்னதாக இந்திய அரசு தனது மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற வேண்டும் என்றும் கூறினார்.

விடுதலை செய்ய முடிவு


இந்த நிலையில், 5 மீனவர்களையும் விடுதலை செய்ய அதிபர் ராஜபக்சே சம்மதம் தெரிவித்து விட்டதாக நேற்று தகவல் வெளியானது.

இதுபற்றி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், உவா மாகாண உள்கட்டமைப்பு துறை மந்திரியுமான செந்தில் தொண்டமான் ‘தந்தி‘ டி.வி.க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், கால்நடை அபிவிருத்தி துறை மந்திரியுமான ஆறுமுக தொண்டமானும், நானும் அதிபர் ராஜபக்சேயை சந்தித்து, தமிழக மீனவர் பிரச்சினை குறித்து பேசினோம். அப்போது, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களும் ஏற்கனவே 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டதால், அவர்களது தண்டனையை குறைத்து விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். இந்திய பிரதமர் மோடியும் ஏற்கனவே இதேபோல் கேட்டுக் கொண்டு உள்ளார்.

ராஜபக்சே ஆணை

அதன் அடிப்படையில், மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கான ஆணையை அரசு அதிகாரிகளுக்கு அதிபர் ராஜபக்சே வழங்கி உள்ளார்.

இலங்கையின் அரசியலமைப்பு சட்டப்படி, கோர்ட்டு விதித்த தண்டனையை குறைக்கவோ அல்லது ரத்து செய்யவோ அதிபருக்கு அதிகாரம் உண்டு. ஆனால் அது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருந்தால், அதிபர் தலையிட முடியாது. தற்போது, மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி இந்திய அரசு தாக்கல் செய்த மனு இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், அதிபர் அதில் தலையிடுவதில் சிக்கல் உள்ளது.

மனுவை வாபஸ் பெற யோசனை

எனவே அந்த மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெறுமாறு இந்திய தூதரக அதிகாரிகளை இலங்கை வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டு உள்ளது.

இந்திய அரசு தனது மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றவுடன், சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் 5 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள். அனேகமாக வருகிற திங்கட்கிழமைக்குள் அவர்கள் விடுதலையாக வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு செந்தில் தொண்டமான் கூறினார்.

எனவே, இந்திய அரசு தனது மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றதும், 5 மீனவர்களும் இலங்கை சிறையில் இருந்து விடுதலையாகி தமிழகம் திரும்புவார்கள்.

ஞாயிறு, 2 நவம்பர், 2014

Tamil Maanila Congress தமிழ் மாநில காங்கிரஸ் மீண்டும் உதயம் ஆகிறது

 த.மா.கா. மீண்டும் உதயம் ஆகிறது

ஜி.கே.வாசன் நாளை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார்

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி உடைகிறது. கட்சி மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக ஜி.கே.வாசன் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரசில் இருந்து விலகி மீண்டும் த.மா.கா.வை தொடங்குகிறார். இதுபற்றி அவர் நாளை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார்.






சென்னை, நவ.2-

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஜி.கே.மூப்பனார், கடந்த 1996-ம் ஆண்டில் தமிழ் மாநில காங்கிரஸ் (த.மா.கா.) என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

காங்கிரசில் இணைந்த த.மா.கா

அப்போது நடந்த சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூப்பனார் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரசில் இருந்து வெளியேறி த.மா.கா.வை தொடங்கினார். அந்த தேர்தல்களில் த.மா.கா., தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றது.

மூப்பனாரின் மறைவுக்கு பிறகு அவரது மகன் ஜி.கே.வாசன் த.மா.கா. கட்சியை தலைமை தாங்கி நடத்தினார். கடந்த 2002-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மதுரையில் நடைபெற்ற விழாவில் அவர், தாய் கட்சியான காங்கிரசுடன் த.மா.கா.வை இணைத்தார். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசிலும் அவர் மந்திரியாக இடம் பெற்றார்.

மீண்டும் உதயமாகிறது

இந்த நிலையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி உடைந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் த.மா.கா. உதயமாகிறது. ஜி.கே.வாசன் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரசில் இருந்து விலகி த.மா.கா.வை மீண்டும் தொடங்க ஆலோசனை நடத்துகிறார்.

காங்கிரஸ் மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை ஞானதேசிகன் கடந்த வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்தார். ஜி.கே.வாசனின் தீவிர ஆதரவாளரான இவர் கட்சி மேலிடத்தின் மீது பல்வேறு புகார்களை கூறி இருந்தார்.

ஜி.கே.வாசன் ஆதரவு

ஞானதேசிகனின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த ஜி.கே.வாசன், லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களின் எண்ணங்களை ஞானதேசிகன் பிரதிபலித்து இருப்பதாக கூறினார்.

ஞானதேசிகனை தொடர்ந்து ஜி.கே.வாசனின் மற்றொரு ஆதரவாளரான கோவை தங்கம் மாநில காங்கிரஸ் பொருளாளர் பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார்.

முக்கிய ஆலோசனை

ராஜினாமா செய்த ஞானதேசிகனும், கோவை தங்கமும் ஜி.கே.வாசனின் ஆதரவாளர்கள் என்பதால், தமிழ்நாட்டில் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் உதயமாகப் போவதற்கு இது அச்சாரம் என்று காங்கிரஸ் கட்சியினரால் ஆரூடம் கூறப்பட்டது.

அதை மெய்ப்பிக்கும் வகையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் ஜி.கே.வாசன் நேற்று தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், முன்னாள் மாநில பொருளாளர் கோவை தங்கம், முன்னாள் எம்.பி.ஆருண், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஞானசேகரன், விடியல் சேகர், ஈ.எஸ்.எஸ்.ராமன் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்த ஆலோசனை கூட்டத்தில், மீண்டும் த.மா.கா.வை தொடங்குவது பற்றி தனது ஆதரவாளர்களின் கருத்துகளை ஜி.கே.வாசன் கேட்டு அறிந்தார். அப்போது, த.மா. கா.வை மீண்டும் தொடங்குவதற்கு ஒட்டுமொத்த நிர்வாகிகளும் ஆதரவு தெரிவித்தனர். இதனால், 13 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் மீண்டும் த.மா.கா. உதயமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை நாளை (திங்கட்கிழமை) பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ஜி.கே.வாசன் வெளியிட உள்ளார்.

வளமான தமிழகம்

நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ‘‘தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய தலைவர்களை சந்தித்து நான் கருத்துகளை கேட்டுக்கொண்டு இருக்கிறேன். தமிழகத்தை பொறுத்தவரை பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் மூப்பனார் மற்றும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் மறைந்த தலைவர்கள் வழியில் தமிழக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் ‘வளமான தமிழகம், வலிமையான பாரதம்’ அமைக்க பாடுபடுவோம்’’ என்றார்.

மறைந்த தலைவர் ஜி.கே.மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கியபோது, ‘வளமான தமிழகம், வலிமையான பாரதம்’ என்ற கோஷத்தை முன்வைத்துத்தான் தொடங்கினார். அதே கோஷத்தை ஜி.கே.வாசன் ஞாபகப்படுத்தியபோது, அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில், மக்கள் தலைவர் மூப்பனார் வாழ்க என கோஷம் எழுப்பினார்கள்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறுவது குறித்து, ஜி.கே.வாசனின் நெருங்கிய ஆதரவாளர் ஒருவர் கூறியதாவது:-

உறுப்பினர் அட்டையால் சர்ச்சை

காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர்களை சேர்ப்பதற்காக கடந்த 2011-ம் ஆண்டே 7 லட்சம் உறுப்பினர்கள் அட்டை அச்சடிக்கப்பட்டது. அதில், 2½ லட்சம் உறுப்பினர்கள் அட்டை மட்டுமே இதுவரை வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அட்டையில் காமராஜர், ஜி.கே.மூப்பனார் ஆகியோரின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்டதை காரணம் காட்டி, உறுப்பினர் அட்டை வழங்குவதை நிறுத்துமாறு கட்சி மேலிடம் அறிவித்தது. இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில நிர்வாகிகளை நியமனம் செய்ய கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் முயற்சி மேற்கொண்டார். அதற்கான சூழ்நிலை ஏற்படாதபோதும், தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைவர்களை சமாதானம் செய்து, நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார்.

தேர்தல் தோல்வி

புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு, ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பிறகு மீண்டும் மாநில நிர்வாகிகள் பட்டியல் சிறிது மாற்றப்பட்டது. அதாவது, கே.வி.தங்கபாலு ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் சேர்க்கப்பட்டனர்.

இந்த அசாதாரண சூழ்நிலை யில்தான், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற தேர்தலில் தனித்துவிடப்பட்டது. 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு தோல்வி அடைந்தது.

இதேநிலை, நீடித்தால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி அழிந்துவிடும். எனவே, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மீண்டும் தொடங்க ஜி.கே.வாசன் முடிவு செய்து உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ளி, 31 அக்டோபர், 2014

5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை





 5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை

கொழும்பு, அக்.31-

கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி வந்ததாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது
.



5 தமிழக மீனவர்கள் கைது

இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி, ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தீவில் உள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்த எமர்சன் (வயது 35), அகஸ்டஸ் (35), வில்சன் (40), பிரசாத் (30), லாங்லெட் (22) ஆகிய 5 பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ஹெராயின் என்ற போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தி வந்ததாக கூறி 5 பேரையும் கைது செய்தனர். அவர்களுடன், இலங்கையைச் சேர்ந்த மேலும் 3 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.

கொழும்பு ஐகோர்ட்டில் வழக்கு

பின்னர் அவர்கள் 8 பேரும் இலங்கையில் உள்ள வெலிக்கடை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அடைக்கப்பட்டனர்.

அவர்கள் மீதான வழக்கு விசாரணை கொழும்பு ஐகோர்ட்டில் நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனா முன்னிலையில் நடைபெற்று வந்தது.

கைதான தமிழக மீனவர்கள் சார்பில் வக்கீல்கள் அனில் சில்வா, ஷராபி மொகிதீன், ஸ்ரீகாந்த் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். விசாரணையின் போது, இந்திய அரசு தரப்பில், தமிழக மீனவர்கள் 5 பேரும் அப்பாவிகள் என்றும், குற்றவாளிகள் அல்ல என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.

தூக்கு தண்டனை

3 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

தமிழக மீனவர்களான எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகியோரும் மற்றும் அவர்களுடன் கைதான இலங்கை மீனவர்கள் 3 பேரும் குற்றவாளிகள் என்றும், அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனா தீர்ப்பு கூறினார்.


தூக்கு தண்டனையை எதிர்த்து நவம்பர் 14-ந் தேதிக்குள் அவர்கள் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளார்.


மீனவர்கள் கொந்தளிப்பு

இலங்கையில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இதற்கிடையே, இந்திய அரசுக்கும் இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளித்து இருக்கிறது.

இந்திய அரசு மேல்முறையீடு

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

‘‘5 இந்திய மீனவர்களுக்கு கீழமை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்ததை எதிர்த்து, கொழும்பு நகரில் உள்ள இந்திய தூதரகம் வக்கீல்கள் மூலம் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும்’’ என்று வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சையது அக்பரூதீன் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

அதேசமயம், ‘‘நமது மீனவர்கள் குற்றவாளிகள் அல்ல என்று நாம் கருதுவதால் இந்த பிரச்சினையை இலங்கை அரசிடமும் இந்தியா கொண்டு செல்லும்’’ என்று அவர் கூறினார். அத்துடன் இந்த பிரச்சினையை சட்டரீதியாகவும், தூதரக உறவுகள் மூலமாகவும் இந்திய அரசு கையாளும் என்றும் அவர் தெரிவித்தார்.

தூக்கு தண்டனை விதித்து வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஐகோர்ட்டு நவம்பர் 14-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கி இருப்பதால் அதற்குள், இந்தியாவின் சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிகிறது.

இலங்கை தூதருடன் பேச்சு

இதற்கிடையே, வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் டெல்லியில் உள்ள இலங்கை தூதரை நேற்று தொடர்பு கொண்டு இந்த விவகாரம் குறித்து பேசினார். மேலும் கொழும்பு நகரில் உள்ள இந்திய தூதரும் இந்த விவகாரம் குறித்து இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

உற்சாக வெள்ளம் கரைபுரண்டது கொட்டும் மழையில் பூமாரி பொழிந்து ஜெயலலிதாவை வரவேற்ற தொண்டர்கள்

 பெங்களூர் சிறையில் இருந்து 22 நாட்களுக்கு பிறகு நேற்று விடுதலையான ஜெயலலிதா தனி விமானத்தில் சென்னை திரும்பினார். விமான நிலையம் முதல் போயஸ் கார்டன் இல்லம் வரை கொட்டும் மழையிலும் பல்லாயிரக் கணக்கான தொண்டர்கள் திரண்டு நின்று ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

http://epaper.dailythanthi.com/


சென்னை, அக்.19-

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக் கப்பட்ட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த மாதம் 27-ந் தேதி பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன்
ஜெயலலிதாவுக்கு கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்க மறுத்ததால் கடந்த 9-ந் தேதி அவரது சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு ஜெயலலிதாவை ஜாமீனில் விடுதலை செய்தது. மேலும் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை யும் நிறுத்திவைத்த நீதிபதிகள், கர்நாடக ஐகோர்ட்டில் நடைபெறும் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை தாமதப்படுத்தக்கூடாது என்றும், வழக்கு விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் டிசம்பர் 18-ந் தேதிக் குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இதேபோல் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் நீதிபதிகள் ஜாமீன் வழங்கினார்கள்.

விடுதலையானார் ஜெயலலிதா

ஜாமீன் நடைமுறைகள் நிறைவடையாததால் ஜெயலலிதா நேற்று முன்தினம் விடுதலை ஆகவில்லை.

ஜாமீன் நடைமுறைகள் முடிவடைந்து 22 நாட்களுக்கு பிறகு ஜெயலலிதா நேற்று பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலை ஆனார்.

நேற்று காலை 11 மணிக்கு தனிக்கோர்ட்டு கூடியதும், நீதிபதி மைக்கேல் டி.குன்கா இருக்கையில் வந்து அமர்ந்தார். அப்போது ஜெயலலிதா தரப்பில் குமார், அசோகன், மணிசங்கர், நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட வக்கீல்கள் ஆஜராகி, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியும், தண்டனையை நிறுத்திவைத்தும் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் நகலை தாக்கல் செய்தனர். அதை நீதிபதி மைக்கேல் டி.குன்கா படித்து பார்த்தார்.

நீதிபதி குன்கா உத்தரவு

பின்னர் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, ஜெயலலிதாவுக்கு பரத், குணஜோதி ஆகியோர் தலா ரூ.1 கோடிக்கான சொத்து பத்திரங்களை உத்தரவாதமாக தாக்கல் செய்தனர். இதேபோல் மற்ற 3 பேருக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

அவற்றை பரிசீலித்த நீதிபதி மைக்கேல் டி.குன்கா, ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார். இது தொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

“தனிக்கோர்ட்டு வழங்கிய தண்டனையை நிறுத்திவைத்து, ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. ஒரு குற்றவாளிக்கு2 பேர் வீதம் 8 தனி நபர்கள் தலா ரூ.1 கோடி வீதம் ரூ.8 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களை உத்தரவாதமாக வழங்கும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவில் கூறி உள்ளது. உத்தரவாதத்துக் கான சொத்து ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. எனவே சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை ஏற்று ஜெயலலிதா உள்பட 4 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்ய பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடுகிறேன். மேலும் இந்த கோர்ட்டு விதிமுறைப்படி கோர்ட்டு ஊழியர் ஒருவர் உத்தரவை எடுத்துச்சென்று, சிறை கண்காணிப்பாளரிடம் நேரடியாக வழங்கும்படி உத்தரவிடுகிறேன்.”

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.

சிறையில் இருந்து வெளியே வந்தார்

இந்த நடைமுறைகள் அனைத்தும் மதியம் 12.30 மணிக்கு முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, நீதிபதியின் உத்தரவு ‘டைப்’ செய்யப்பட்டு, அதில் பிற்பகல் 2 மணிக்கு சிட்டி சிவில் கோர்ட்டு பதிவாளர் சந்திரசேகர மருகூர், நீதிபதி மைக்கேல் டி.குன்கா ஆகியோர் கையெழுத்திட்டு அனுப்பிவைத்தனர். அந்த உத்தரவை கோர்ட்டு ஊழியர் வெங்கடேஷ் போலீஸ் வாகனத்தில் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு எடுத்துச் சென்றார். அவருடன் அ.தி.மு.க. வக்கீல் ஒருவரும் சென்றார்.

நீதிபதியின் உத்தரவை பிற்பகல் 2.45 மணிக்கு சிறை கண்காணிப்பு அதிகாரியிடம் கோர்ட்டு ஊழியர் வெங்கடேஷ் வழங்கினார். அதன்பிறகு ஜெயலலிதாவிடம் கையெழுத்து வாங்குவது உள்ளிட்ட நடைமுறைகள் முடிந்தது.

இதைத்தொடர்ந்து, பிற்பகல் 3.15 மணிக்கு ஜெயலலிதா சிறையில் இருந்து விடுதலை ஆகி வெளியே வந்தார். 3.20 மணிக்கு அவர் சிறை வளாகத்தில் இருந்து காரில் பெங்களூர் எச்.ஏ.எல். விமான நிலையத்துக்கு புறப்பட்டார். இதேபோல் விடுதலையான சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் வெளியே வந்தனர்.

உற்சாக வரவேற்பு


கறுப்பு பூனை பாதுகாப்பு படையினர் புடை சூழ ஜெயலலிதாவின் கார் விமான நிலையம் நோக்கி விரைந்தது. புன்னகையுடன் காணப்பட்ட ஜெயலலிதா எப்போதும் போல் உற்சாகமாக இருந்தார். அவருடன் சசிகலா, இளவரசி ஆகியோரும் காரில் இருந்தனர். மற்றொரு காரில் சுதாகரன் சென்றார்.

ஜெயலலிதாவின் காரை பின்தொடர்ந்து பாதுகாப்பு படை வாகனங்கள், முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை ஆகியோரது கார்கள் அணிவகுத்து சென்றன.

ஜெயலலிதாவை வரவேற்க பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை அருகே இருந்து எச்.ஏ.எல். விமான நிலையம் வரை ஆங்காங்கே சாலையின் இருபுறமும் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் திரண்டு இருந்தனர்.

அவர்கள் கட்சி கொடியை அசைத்தும், ஜெயலலிதாவின் உருவப்படங்களை ஏந்தியும் ‘அம்மா வாழ்க!’ ‘புரட்சித்தலைவி வாழ்க!’ ‘தங்கத்தலைவி வாழ்க!’ என்று கோஷங்களை எழுப்பினார்கள்.

அவர்களை பார்த்து ஜெயலலிதா கை கூப்பி வணங்கியபடி சென்றார். விமான நிலைய ரோட்டில் சாலையின் இருபுறமும் திரண்டு நின்ற கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் ஜெயலலிதாவின் கார் மீது மலர் தூவி உற்சாகமாக வரவேற்றனர். அப்போது லேசாக மழை தூறிய போதிலும், அதை பொருட்படுத்தாமல் தொண்டர்கள் மழையில் நனைந்தபடி மகிழ்ச்சியில் திளைத்தனர். அவர்களை நோக்கி ஜெயலலிதா கை அசைத்தபடியும், கைகூப்பி வணங்கியபடியும் சென்றார்.

ஜெயலலிதாவின் விடுதலையை தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினார்கள்.

சென்னை வந்தார்


பிற்பகல் 3.20 மணிக்கு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து புறப்பட்ட ஜெயலலிதா, 3.55 மணிக்கு எச்.ஏ.எல். விமான நிலையத்தை அடைந்தார். அங்கிருந்து 4.20 மணிக்கு தனி விமானம் மூலம் ஜெயலலிதா சென்னை புறப்பட்டார். அதே விமானத்தில் சசிகலா, இளவரசி ஆகியோரும் வந்தனர்.

ஜெயலலிதாவை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, மந்திரிகள் நத்தம் விசுவநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வழியனுப்பிவைத்தனர்.

ஜெயலலிதா வந்த தனி விமானம் மாலை 4.50 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தது.

விமான நிலையத்தில் ஜெயலலிதாவை அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன், அமைப்புச் செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க் கள் ஆகியோர் வரவேற்றனர். முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், தே.மு. தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க் கள் மா.பா.பாண்டியராஜன், அருண்பாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோரும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கொட்டும் மழையில் உற்சாக வெள்ளம்


வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் ஜெயலலிதா அங்கிருந்து காரில் போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்துக்கு புறப்பட்டார். காரின் முன் இருக்கையில் அவர் அமர்ந்து இருந்தார். பின் இருக்கையில் சசிகலா, இளவரசி ஆகியோர் அமர்ந்து இருந்தனர்.

ஜெயலலிதாவின் காரை தொடர்ந்து ஏராளமான கார்கள் அணிவகுத்து சென்றன.

ஜெயலலிதாவின் வருகையை எதிர்பார்த்து சென்னை விமான நிலையத்தில் ஏராளமான தொண்டர்கள் குவிந்து இருந்தனர். ஜெயலலிதாவின் கார் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் உற்சாகம் மிகுதியால் துள்ளிக்குதித்து ஆரவாரமிட்டனர்.

ஜெயலலிதாவின் வாகனத்தின் மீது பூக்களை தூவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சாலையோரம் திரண்டு இருந்த தொண்டர்கள் ஜெயலலிதாவுக்கு உற்சாகம் அளித்தனர். ஜெயலலிதா புன்னகையுடன் இரு விரல்களை காட்டியபடி தொண்டர்களின் வரவேற்பை ஏற்றபடி சென்றார்.

தொண்டர்களின் அன்பு மழையில் நனைந்தபடி ஜெயலலிதா மாலை 6.02 மணிக்கு போயஸ் கார்டன் இல்லம் வந்தடைந்தார். அங்கும் ஏராளமாக தொண்டர்கள் திரண்டு இருந்து அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

சனி, 18 அக்டோபர், 2014

ஜாமீனுக்குப் பிறகு ஜெயலலிதா என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கிய நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரான ஜெயலலிதா என்னவெல்லாம் செய்யலாம் அல்லது செய்ய முடியாது என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் சில வழக்கறிஞர்களிடம் விசாரித்த போது அவர்கள் கூறிய தகவல் வருமாறு:–

தற்போது தண்டனை மீதான இடைக்காலத் தடை மற்றும் ஜாமீன் பெற்ற நிலையில் ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராகவோ முதல்–அமைச்சராகவோ ஆகமுடியாது.

ஆனால் அவருடைய ஜாமீன் குறித்து எந்த நிபந்தனையையும் நீதிமன்றம் விதிக்காததால், அவரால் முழுமையாக கட்சிப்பணியாற்ற முடியும்.

தேர்தலில் பிரச்சாரம் செய்ய முடியும். கட்சி கூட்டங்களை தலைமையேற்று நடத்த முடியும்.

தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அவருடைய கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாகவும் பொறுப்புகளில் உள்ளதாலும் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அனைத்து அமைச்சர்களையும் அழைத்து கட்சித்தலைவர் என்ற முறையில் ஆலோசனைகள் நடத்த எந்தத் தடையும் இல்லை.

ஆனால் அரசாங்க விஷயத்தில் எந்தவிதமான பணிகளையும் மேற்கொள்ள முடியாது. எந்த வகையான அதிகாரத்தையும் செலுத்த முடியாது.


மேலும் சுப்ரீம் கோர்ட்டு எந்த வகையான நிபந்தனையும் விதிக்காததால் பெரிய அரசியல் கட்சி ஒன்றின் தலைவி என்ற முறையில் தமிழக மக்களின் நலனுக்காக அல்லது ஏதாவது ஒருநலத்திட்டம் தொடர்பாகவோ நிதி ஒதுக்கீடு தொடர்பாகவோ ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் அல்லது மத்திய அமைச்சர்களையோ சந்திக்க எந்தவகையான தடையும் இல்லை.

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் கட்சித்தலைவி என்ற முறையில் கட்சித் தலைமையகத்தில் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்த முடியும்.

கட்சித்தலைவி என்ற முறையில் மாநில அரசு மற்றும் மத்திய அரசின் கீழ் உள்ள ஆணையங்களின் கூட்டங்களில் கலந்து கொள்ளவும் எந்தவகையான தடையும் இல்லை.

ஜெயலலிதா இன்று சிறையில் இருந்து விடுதலையாகிறார் !

சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூர் தனிக்கோர்ட்டில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, பரப்பனஅக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டார். இந்த நிலையில், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவு பிறப்பித்தது.


http://epaper.dailythanthi.com/

ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர இருந்த நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் ஜெயலலிதா எழுந்ததாகவும், சிறிது நேரம் நடைபயிற்சி செய்து விட்டு, பின்னர் சிறையில் உள்ள துளசி செடியை வணங்கியதோடு மைசூர் சாமூண்டீஸ்வரி, மூகாம்பிகை அம்மனை வழிப்பட்டதாகவும், செய்திதாள்களை படித்ததாகவும், ஜாமீன் மனு பற்றி சில வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது

இந்த நிலையில், மதியம் ஜாமீன் மனு மீதான விசாரணை தொடர்பான செய்தியை சிறையில் உள்ள தொலைகாட்சியில் ஜெயலலிதா பார்த்ததாகவும், ஜாமீன் கிடைத்தவுடன் மகிழ்ச்சி அடைந்ததாகவும், மற்ற பெண் கைதிகளுக்கு இனிப்பு வழங்கியதாகவும் சிறையில் இருந்து வெளியான தகவல்கள் கூறுகின்றன. அதன்பிறகு, மதிய உணவாக ஜெயலலிதா தயிர்சாதம் சாப்பிட்டதாகவும், பழரசம் குடித்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.மேலும் ஜாமீன் பெற வசதி இல்லாத 3 ஏழை பெண் கைதிகளுக்கு நிதி உதவி அளிப்பதாக அவர் உறுதி அளித்ததாகவும் தகவல் வெளியானது.

பெங்களூர்: சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வர உள்ள ஜெயலலிதா இன்று மிகுந்த உற்சாகத்துடன் அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். பெங்களூர் மத்திய சிறையில் இன்று காலை 6.30 மணிக்குதான் ஜெயலலிதா வழக்கமாக 5.30 மணிக்கெல்லாம் எழுந்துகொள்ளும் ஜெயலலிதா நிம்மதியாக தூங்கியதாலோ என்னவோ, இன்று ஒரு மணி நேரம் காலதாமதமாக எழுந்துள்ளார்.

சிறிது வாக்கிங் சென்ற பிறகு தமிழ், ஆங்கில பத்திரிகைகளை வாசித்துள்ளார் ஜெயலலிதா. ஒரு பக்கம் விடாமல் அனைத்து பத்திரிகைகளையும் கவனமாக படித்துள்ளார். இதன்பிறகு குளித்துவிட்டு, சிறை வளாகத்திலுள்ள துளசி மாடத்திற்கு பூஜைகள் நடத்தியுள்ளார். பூஜைக்கு பிறகு, இட்லி, பொங்கல் ஆகியவற்றை சாப்பிட்டுவிட்டு மேற்கொண்டு பழச்சாறு பருகியுள்ளார்.
இவற்றை ராஜ்யசபா அதிமுக எம்.பி செல்வகுமார் வாங்கி கொடுத்துள்ளார். மொத்தத்தில், வழக்கத்தைவிட இன்று ஜெயலலிதா மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு கூறிய தீர்ப்பின் நகல் நேற்று மாலை வரை பெங்களூர் தனிக்கோர்ட்டுக்கு கிடைக்காததால், அவரால் நேற்று சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை.

பணி முடிந்து வழக்கமாக மாலை 5 மணிக்கு புறப்பட்டு செல்லும் தனிக்கோர்ட்டு நீதிபதி மைக்கேல் டி.குன்கா 5.30 மணி வரை கோர்ட்டு அறையில் இருந்தார். ஜெயலலிதாவுக்கு ஜாமீன் உத்தரவாத பத்திரம் வழங்குபவர்களும் தயாராக இருந்தனர். ஆனால் டெல்லியில் இருந்து தீர்ப்பின் நகல் வந்து சேரவில்லை. இதனால் 5.30 மணிக்கு நீதிபதி மைக்கேல் டி.குன்கா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

எனவே, ஜாமீன் நடைமுறைகள் பூர்த்தி செய்யப்பட்டு, இன்று (சனிக்கிழமை) ஜெயலலிதா பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வருகிறார். கடந்த மாதம் 27-ந் தேதி சிறையில் அடைக்கப்பட்ட அவர் இன்று 22 நாட்களுக்கு பிறகு விடுதலையாகி அங்கிருந்து சென்னை திரும்புகிறார். அதற்கான துரித பணிகளி அவரது வக்கீல் குழு ஈடுபட்டு உள்ளது.

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

தமிழ் நாடு முதல்வருக்கு ( ஜெயலலிதா ) 4 ஆண்டு சிறை !



தமிழ் நாடு முதல்வருக்கு  4 ஆண்டு சிறை !