தினமணி / Dinamani லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தினமணி / Dinamani லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

Dinamani Kathir தினமணிக்கதிர் : 21 ஆம் நூற்றாண்டுத் தமிழ் வகுப்பறை'



'21 ஆம் நூற்றாண்டுத் தமிழ் வகுப்பறை' : 

தினமணிக்கதிர் :(25.09.2016)

மலேசியா - வாசுதேவன் இலட்சுமணன் 
- தர்மபுரி மாவட்ட ஊடகவியலாளர் திரு.சா.ஜெயப்பிரகாஷ் & படம் : யூ.கே.ரவி 



=======================================================
நன்றி
தினமணிக்கதிர் :(25.09.2016)


செவ்வாய், 10 டிசம்பர், 2013

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் - சீமாந்திரா பகுதி காங்கிரஸ் எம்.பி.க்கள்



http://epaper.dinamani.com/196332/Dinamani-Chennai/10-12-2013#page/1/1

தெலங்கானா விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேர் சபாநாயகரிடம் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

தனி தெலங்கானா மாநிலம் அமைக்க அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, ஆந்திராவை சேர்ந்த மத்திய அமைச்சரும், நடிகருமான சிரஞ்சீவி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும், ஆந்திராவை பிரிக்க ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஆந்திர மாநிலம் சீமாந்திரா பகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேர் சபாநாயகர் மீராகுமாரிடம் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி.க்களே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் கொடுத்துள்ள சம்பவம் அக்கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

புதன், 13 நவம்பர், 2013

தினமணி : புதிய இ-பேப்பர் வடிவில்

தினமணி புதிய இ-பேப்பர் வடிவில் !

LINK : <<<

80ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள உங்கள் தினமணி நாளிதழ், இ-பேப்பர் வடிவில் மின்னிதழாக வெளிவந்து கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். இப்போது மின்னிதழ் பல தனிச் சிறப்புகளுடன் கவர்ச்சிகரமான வடிவமைப்புடன் வெளிவருகிறது.


தினமணி இ-பேப்பரின் தனிச்சிறப்புகள்: 

தினமணியின் அனைத்து பதிப்புகளையும் ஒரே பக்கத்தில் படித்து மகிழலாம். தினமணியின் வெள்ளிமணி, சிறுவர்மணி, தினமணிக் கதிர், ஞாயிறு கொண்டாட்டம் என, அனைத்து இணைப்பு இதழ்களையும் நீங்கள் மின்னிதழாகப் படித்து மகிழலாம்.

முந்தைய இதழ்களையும் ( 28-MARCH-2013 >> ) இணையத்திலேயே படிக்க வாய்ப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது.

பத்திரிகையை அப்படியே பக்கம் பக்கமாகத் திருப்பிப் படிக்கும் அதே அனுபவத்தை உங்களுக்குத் தருகிறது மின்னிதழ்.

வேண்டிய செய்தியை, அல்லது கட்டுரையை, படங்களை நீங்கள் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்க்க வசதி; வேண்டிய பக்கங்களை டிஜிட்டல் வடிவில் சேமித்து வைக்க வாய்ப்பு; உங்களுக்கு வேண்டிய பக்கங்களை சேமித்து அச்சு (பிரிண்ட்) எடுத்துக் கொள்ள வசதி... ஜிபிஆர்எஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் தொழில்நுட்பம் கொண்ட மொபைலில் இபேப்பரை அப்படியே படிக்க வசதி...

அனைத்தும் உங்கள் தினமணி இ-பேப்பரில் இப்போது!


Blog Link :   http://tamilepaper.blogspot.in/p/blog-page_10.html

Direct Link :   http://epaper.dinamani.com/


--- Thanks Dinamani

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

கூடங்குளம் : எரிபொருள் நிரப்ப தடை இல்லை - உச்சநீதி மன்றம்



புது தில்லி, செப்.13: 

கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்குத் தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை கூறிவிட்டது. 


இருப்பினும் அணு மின் நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான பிரச்னைகளை ஆராய்வதற்கு நீதிமன்றம் ஒப்புக் கொண்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை இம்மாதம் 20-ம் தேதி நடைபெறும் என நீதிபதிகள் கூறினர்.கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படுவதற்குத் தடையில்லை என கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை எதிர்த்து ஜி. சுந்தர்ராஜன் என்பவர் தொடர்ந்த மேல் முறையீட்டு மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அணு உலை அமைப்பதற்கு அப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு உள்ளது என்றும் கூறினார். இந்த வழக்கு தொடர்பாக அரசு தரப்பு வாதம் பதிவு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.இதைக் கேட்ட நீதிபதிகள், ""நீங்கள் அணு உலை அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பது புரிகிறது. உங்களது கவலை முழுவதும் அணு மின் நிலையத்தால் அப்பகுதி மக்களுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என்பதுதான். உங்களது எதிர்ப்பு அணு மின் நிலையத்துக்கு எதிரானதல்ல, நிபுணர் குழுவின் 17 பாதுகாப்பு பரிந்துரைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதுதான். அத்தகைய பாதுகாப்பு அம்சங்களை நீதிமன்றம் நிச்சயம் பரிசீலிக்கும்,'' என்றனர்.

பாதுகாப்புப் பரிந்துரைகளில் 6 பரிந்துரைகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறிய பூஷண், இந்நிலையில் எரிபொருள் நிரப்பும் பணியைத் தொடர அனுமதிக்கக் கூடாது என்றார்.அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் கூலம் இ. வாகனவதி, சொலிசிட்டர் ஜெனரல் ரோஹின்டன் நாரிமன், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் ஆகியோர் ஆஜராகி, மனுதாரரின் கோரிக்கையை ஏற்கக் கூடாது என வாதாடினர். அணு உலை மிகவும் பத்திரமானது என்றும், எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கினாலும் அது செயல்படுவதற்கு இரண்டு மாதம் ஆகும் என்று தெரிவித்தனர்.அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ""நாங்கள் அணு உலைக்கு எதிரானவர்களோ அல்லது மனுதாரருக்கு ஆதரவாக செயல்படக்கூடியவர்களோ அல்லர். ஆனால், அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் (ஏஇஆர்பி) அறிவுறுத்திய பரிந்துரைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பது தெரிய வேண்டும்'' என்று கூறினர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முழுமையாக பரிசீலிக்க வேண்டியுள்ளது. 

அத்துடன் இந்த வழக்கை முழுமையாக ஆரம்பம் முதல் விசாரிக்க வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டனர்.அரசுத் தரப்பில் வாதாடிய ரோஹின்டன் நாரிமன், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. அதன் பிறகே அணு உலையில் எரிபொருள் நிரப்ப முடிவு செய்யப்பட்டது. ஆய்வுக்குழு அளித்த அனைத்து பரிந்துரைகளையும் ஒரே சமயத்தில் செயல்படுத்த முடியாது. 


இப்போது தொடங்கினால்தான் இரண்டு ஆண்டுகளுக்குள் அனைத்து நடவடிக்கைளையும் செயல்படுத்த முடியும் என்றார்.பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டிலான இத்திட்டத்தைச் செயல்படுத்தும் முன்பு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு குழுக்களை அமைத்து பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்தன. தொடக்கத்தில் இத்திட்டத்துக்கு எதிராக இருந்த தமிழக அரசு பின்னர் முழு அளவில் திட்டத்தை ஏற்றுக் கொண்டது. இத்திட்டத்தில்இதுவரை எந்தப் பிரச்னையும் இல்லை. மின் தட்டுப்பாட்டைப் போக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. எனவே நல்ல நோக்கத்துடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்துக்கு தடை விதிக்கக் கூடாது என்று வாதாடினார்.


இதை ஏற்ற நீதிபதிகள், அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்புவதால் மின் உற்பத்தி தொடங்கிவிடாது என்ற மத்திய அரசின் விளக்கத்தை நீதிமன்றம் ஏற்கிறது. எனவே எரிபொருள் நிரப்பத் தடை கோரும் மனுதாரரின் வாதம் ஏற்புடையதல்ல. 


அதேசமயம், மனுதாரர் தரப்பில் சுட்டிக் காட்டப்பட்ட பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவது மிகவும் அவசியம் என்பதை நீதிமன்றம் உணர்கிறது. எனவே அணு மின் நிலைய பாதுகாப்பு தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வறிக்கைகள், மத்திய அணுசக்திக் குழுவின் பரிந்துரைகளின் அமலாக்கம் குறித்த ஆவணங்களை அடுத்த விசாரணை நடைபெறும் 20-ம் தேதியன்று மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டனர்.

புதன், 12 செப்டம்பர், 2012

கூடங்குளத்தில் பதற்றம் நீடிப்பு




திருநெல்வேலி, செப். 11: கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் 2-வது நாளாக செவ்வாய்க்கிழமையும் பதற்றம் நீடித்ததால் கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. கூடங்குளம் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக இதுவரை 51 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.இப் பகுதிகளில் மீண்டும் வன்முறை வெடிக்காமல் இருக்க வெளிமாவட்டங்களில் இருந்து கூடுதலாக ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே திங்கள்கிழமை நடைபெற்ற மோதல் பெரும் வன்முறையாக மாறியது. 


போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் கூட்டத்தைக் கலைத்தனர். பதிலுக்கு போராட்டக்காரர்களும் போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர்.இச்சம்பவத்தில் போராட்டக்காரர்களும், தென் மண்டல ஐ.ஜி. ராஜேஷ்தாஸ் உள்பட போலீஸார் சிலரும் காயமடைந்தனர். இச் சம்பவத்தையடுத்து கூடங்குளம், வைராவிகிணறு, உவரி, கூத்தங்குழி உள்ளிட்ட பகுதிகளில் கலவரம் மூண்டது. போலீஸ் படையினர் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்று கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.ஊராட்சி அலுவலகம் மீண்டும் சூறை: இந்நிலையில், 2-வது நாளாக செவ்வாய்க்கிழமை இடிந்தகரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பதற்றம் நீடித்தது.கூடங்குளத்தில் உள்ள ஊராட்சி அலுவலகத்தை அதிகாலை 4 மணி அளவில் அடையாளம் தெரியாத கும்பல் சூறையாடி அங்கிருந்த பொருள்களை நாசப்படுத்தியது. இதில் அங்கிருந்த ஆவணங்கள் அனைத்தும் நாசமாயின. ஏற்கெனவே திங்கள்கிழமையும் இந்த அலுவலகம் சூறையாடப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஊராட்சித் தலைவர் சாண்டல் முத்துராஜ் போலீஸில் புகார் செய்துள்ளார்.இச்சம்பவத்தை அடுத்து திருநெல்வேலி மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதரி தலைமையிலான அதிரடிப் படை போலீஸார் கூடங்குளம் பகுதிக்குள் தேடுதல் வேட்டை நடத்தி 17 பேரை பிடித்தனர். 


கூடங்குளத்தில் சாலைகளில் போராட்டக்காரர்களால் ஏற்படுத்தப்பட்டிருந்த தடுப்புகளை போலீஸார் அப்புறப்படுத்தினர்.2 இடங்களில் உண்ணாவிரதம்: இடிந்தகரையில் லூர்துமாதா ஆலயம் முன் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் திங்கள்கிழமை மாலையில் தொடங்கிய 48 மணி நேர தொடர் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்தது. இதில் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். உண்ணாவிரதத்தை போராட்டக் குழுவைச் சேர்ந்த மை.பா.ஜேசுராஜ் வழிநடத்தினார்.இதற்கிடையே, போலீஸாரின் தாக்குதலைக் கண்டித்தும், அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தியும், தங்களுக்குச் சொந்தமான 7 படகுகளை ஒப்படைக்கக் கோரியும் உவரியில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்குத் தந்தை கிருபாகரன், ம.தி.மு.க மாவட்டப் பொருளாளர் ரைமண்ட், முன்னாள் ஊராட்சித் தலைவர் அந்தோனி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமையும் போக்குவரத்து முடங்கி இருந்தது. கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மாவட்டத்தில் உள்ள 10 கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனிடையே, இடிந்தகரைக்குச் செல்லும் அனைத்து சாலைகளிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கூடங்குளம் செல்லும் அனைத்து வாகனங்களும் கடும் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

பல்வேறு ஊர்களிலும் போராட்டம்: 
கூடங்குளத்தில் போராட்டக்காரர்களின் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்து சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். துப்பாக்கிச் சூட்டை கண்டித்து ராமேசுவரம், பாம்பனில் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். 



போராட்டம் தொடரும்


 "நான் கைதான பின்னரும் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டம் தொடரும்' என போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமார் கூறினார்.தப்பிச் சென்றதாக கூறப்பட்ட உதயகுமார் செவ்வாய்க்கிழமை மாலை இடிந்தகரைக்கு வந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் உதயகுமார் கூறியதாவது:நாங்கள் யாரையும் கொலை செய்யவில்லை; கொள்ளையடிக்கவில்லை. காந்திய வழியில் போராடினோம்.போராட்டத்தில் பங்கேற்ற பெண்களையும் குழந்தைகளையும் போலீஸார் கொடூரமாகத் தாக்கினார்கள். அணுமின் நிலைய முற்றுகைக்குச் சென்ற மக்கள் நிராயுதபாணியாகத்தான் சென்றனர். காவல் துறையினர்தான் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர்.நாங்கள் கைதான பின்னரும் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக தமிழக அளவில் போராட்டம் தொடரும் என்றார் உதயகுமார்.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ‎



----------------------------------------------------------------------

கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. 

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள அணு உலையில் எரிபொருள் நிரப்பலாம் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தவர்களில் ஒருவரான ஜி. சுந்தர்ராஜன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.மனுவில் கூறியிருப்பதாவது: ""அணு விபத்து ஏற்படாமல் இருக்க அணுமின் நிலையத்தில் முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்படவில்லை. 

--------------------------------------------------

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

சிவகாசி வெடிவிபத்து: விசாரணைக்கு உத்தரவு









 தினத்தந்தி
 --------------------------

விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.





விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளிப்பார் என அவர் கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: விருதுநகர் அருகே முதலிப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில் புதன்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 38 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற மூத்த அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில், இதுபோன்ற நிகழ்வுகள் இனி நிகழாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் வி.எஸ்.விஜய், தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, நிதித் துறை செயலாளர் க.சண்முகம், சுகாதாரத் துறை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விபத்து நடந்த தொழிற்சாலைக்கு நாகபுரியில் உள்ள தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி 2006-ம் ஆண்டு அனுமதி வழங்கியுள்ளார். அந்த ஆலையில் ஆகஸ்ட் 28-ம் தேதி ஆய்வு நடத்தப்பட்டது.

சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் மண்டல இயக்குநர் ஆய்வு செய்தபோது, அங்கு அளவுக்கு அதிகமாக ரசாயனப் பொருள்கள் இருப்பு, அளவுக்கு அதிகமான பணியாளர்கள், பாதுகாப்புக்காக விடப்பட வேண்டிய இடங்களில் ஆக்கிரமிப்பு போன்ற பல்வேறு விதிமீறல்கள் இருந்தது சுட்டிக்காட்டப்பட்டு அந்த ஆலைக்கான அனுமதி கடந்த 4-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. இந்த உத்தரவின் நகல் கடந்த புதன்கிழமை விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவரால் பெறப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து நடைபெற்ற விரிவான விவாதத்துக்குப் பிறகு, சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. விபத்து நிகழ்ந்த பட்டாசுத் தொழிற்சாலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த புதன்கிழமை பட்டாசுத் தொழிற்சாலை இயங்கியது குறித்தும், இந்த விபத்துக்கான காரணம் குறித்தும் மாவட்ட வருவாய் அலுவலர் நீதி விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

சிவகாசி அரசு மருத்துவமனையை மேம்படுத்த ரூ.4.5 கோடி ஒதுக்கீடு: சிவகாசி அரசு மருத்துவமனையில் தீக்காயப் பிரிவை மேம்படுத்த ஏற்கெனவே தமிழக அரசால் ரூ.1.13 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தீக்காயப் பிரிவை மேலும் வலுப்படுத்தும் வகையில், தீவிர சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கம், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைப் பிரிவு, எலும்பு முறிவு பிரிவு, பிசியோதெரபி, மறுவாழ்வுப் பிரிவு ஆகியவற்றை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தீக்காயப் பிரிவை உயர் சிகிச்சை மையமாக மாற்றி, மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கென ரூ.4.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

அனைத்து ஆலைகளிலும் ஆய்வு: இதுபோன்ற வெடி விபத்து துயரச் சம்பவங்கள் இனி நிகழாமல் தடுக்கும் வகையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர், மாவட்டத்திலுள்ள அனைத்து பட்டாசுத் தொழிற்சாலைகளையும் உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று அரசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


 உயர்நிலை விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு


  புது தில்லி, செப். 6: விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து மத்திய தொழிற்துறைக் கொள்கை விவகாரங்கள் துறை இணைச் செயலர் சைதன்ய பிரசாத் தலைமையில் உயர்நிலை விசாரணை நடத்த மத்திய தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா உத்தரவிட்டார். இது தொடர்பாக அவரது அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விபத்தின் பாதிப்பைக் கருத்தில் கொண்டு வெடிமருந்து சட்டத்தின்படி உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. மத்திய தொழிற்துறை கொள்கை விவகாரங்களுக்கான இணைச் செயலர் சைதன்ய பிரசாத் இந்த விசாரணையை நடத்துவார். சிவகாசியில் உள்ள வெடிமருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் புதன்கிழமை மாலையில் இருந்து சம்பவ இடத்தில் உள்ளனர். வெடிமருந்து தலைமைக் கட்டுப்பாட்டாளரும் இணை கட்டுப்பாட்டாளரும் சம்பவ இடத்தில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.

-------------------

தினமணி

----------------------

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

காவிரி ஆணையத்தைக் கூட்டாதது ஏன்? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்







காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்டுவதில் மத்திய அரசு அலட்சியப் போக்கை கடைப்பிடிப்பதாகக் கூறி உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இந்தக் கூட்டத்தை விரைவில் நடத்த பிரதமர் அலுவலகம் நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றமே தேதியை நிர்ணயித்து அறிவிக்கும் நிலை ஏற்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையே நீண்டகாலமாக பிரச்னை இருந்து வருகிறது. இப்பிரச்னைக்குத் தீர்வுகாண காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுவை ஆகிய மாநிலங்களின் முதல்வர்களின் கூட்டத்தைக் கூட்டுவதில் மத்திய அரசு மெத்தனமாகச் செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். 


காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.கே. ஜெயின், எம்.பி. லோகுர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரேண்  ராவல், ""காவிரி நதி நீர் ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்க வசதியான தேதியைத் தெரிவிக்குமாறு சம்பந்தபட்ட மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஒரு வாரம் ஆகியும் பதில் வரவில்லை'' என்று கூறினார்.  அப்போது குறிக்கிட்ட தமிழக அரசின் மூத்த வழக்குரைஞர் சி.எஸ். வைத்தியநாதன், கூட்டத்தின் தேதி குறித்து தகவல் தெரிவிக்குமாறு மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்தின் சார்பில் மாநில தலைமைச் செயலர்களுக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. 

ஆனால், பிரதமர் அலுவலகம் அதற்கான முயற்சியை மேற்கொள்ளவில்லை. கூட்டத்துக்கான தேதியை தொலைபேசி அல்லது விடியோ கான்பரன்ஸ் மூலம் பேசி இறுதி செய்திருக்கலாம் என்றார்."நீதிமன்றமே தேதியை தீர்மானிக்கும்':  இதைக் கேட்ட நீதிபதிகள், பிரதமரின் வசதிக்கு ஏற்ப கூட்டத்தின் தேதியை நிர்ணயிக்காமல் மற்றவர்களின் வசதியை ஏன் கேட்கறீர்கள்?. இவ்வாறு மெத்தனமாக இருந்தால் யாருடைய வசதியையும் கவனத்தில் கொள்ளாமல் நீதிமன்றமே கூட்டத்தின் தேதியை அறிவிக்கும் நிலை ஏற்படக்கூடும் என்றனர்.  இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவுக்கு மத்திய அரசின் கருத்து என்ன என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், "கர்நாடக அரசின் பதில் மனு இதுவரை கிடைக்கவில்லை' என்றார்."மத்திய அரசின் போக்கால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது': இதைக் கேட்ட நீதிபதிகள், ""கர்நாடக அரசின் பதில் மனுவின் 39-வது பக்கத்தில் கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன ("டூத்லெஸ் சிஆர்ஏ' - அதிகாரமில்லா ஆணையம்). அதைக்கூட பிரதமர் அலுவலகம் படிக்கவில்லையா? கடந்த விசாரணையின்போதே மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து நாங்கள் (நீதிமன்றம்) கவலை தெரிவித்திருந்தோம். அதன் பின்பும் அலட்சியமாக இருக்கிறது மத்திய அரசு. 

இந்தப் போக்கு எங்களின் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது; பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. நீர்வளத் துறை அமைச்சகத்தின் உதவிச் செயலர், துணைச் செயலர், ஆணையர் போன்ற அதிகாரிகள் இந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்கிறார்கள். ஆனால், பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. இந்த விவகாரத்தில் உயர் பதவியில் இருப்பவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். அதனால், மேலும், கண்டிக்க நா எழவில்லை'' என்று கூறினர். இதை தொடர்ந்து, ""இந்த விவகாரம் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் மத்திய அரசு சார்பில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 7) பதில் அளிக்கப்படும்'' என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் உறுதியளித்தார். இதையடுத்து, காவிரி விவகாரம் தொடர்பான அடுத்த விசாரணையை செப்டம்பர் 7-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

இம்மாத இறுதியில் காவிரி ஆணையக் கூட்டம்காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் இம்மாத இறுதியில் கூட்டப்படலாம் என்று மத்திய நீர் வளத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சல் தெரிவித்தார். உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்து பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "பிற மாநில முதல்வர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தும்போது, அந்தந்த மாநில முதல்வர்களுக்கு வசதியான தேதியை மத்திய அரசு கேட்கும். அதுதான் நடைமுறை. மாநில முதல்வர்களை ஒருங்கிணைப்பது கடினமானது. என்றாலும், இம்மாத இறுதியில் காவிரி நதி நீர் ஆணையத்தின் கூட்டத்தைக் கூட்ட வாய்ப்புள்ளது'' என்று பதிலளித்தார்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~`

---------------------------------

திங்கள், 3 செப்டம்பர், 2012

புதன், 29 ஆகஸ்ட், 2012

இலங்கை வீரர்களுக்கு தொடர் பயிற்சி: மத்திய அமைச்சர் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது






Dinamani :



 சென்னை, ஆக. 28: இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி தொடரும் என்று மத்திய அரசு கருத்து தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


 தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, இலங்கை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பதை நிறுத்திக்கொண்டு அவர்களை மத்திய அரசு உடனடியாகத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.


 இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் அளிக்கப்பட்டு வரும் பயிற்சி தொடரும் என்று மத்திய அரசு சார்பில், மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பல்லம் ராஜு தில்லியில் திங்கள்கிழமை கருத்துத் தெரிவித்திருந்தார்.


 தமிழக அரசு மற்றும் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி இலங்கை கடற்படை வீரர்களுக்கு உதகையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "இலங்கை நமது நட்பு நாடு, எனவே இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது தொடரும்' என்று அவர் பதில் கூறியிருந்தார்.


 இந்த நிலையில் மத்திய அரசின் சார்பில், மத்திய இணை அமைச்சர் பல்லம் ராஜு கூறியுள்ள கருத்து அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


 தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், நீலகிரியில் பயிற்சி பெற்று வரும் இலங்கை ராணுவ வீரர்களைத் திருப்பி அனுப்ப வேண்டுமென்று என்று வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 28) மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
 அதன் விவரம்: நீலகிரி மாவட்டம், வெலிங்டனில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்தில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்து கடந்த 25-ம் தேதி தங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். வீரர்கள் இருவரையும் திருப்பி அனுப்ப வேண்டுமென கடிதத்தில் வலியுறுத்தியிருந்தேன்.


 இந்தக் கோரிக்கையை ஏற்பதற்குப் பதிலாக, இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு வெளிப்படையாகக் கருத்து தெரிவித்துள்ளதாக அறிகிறேன். இந்தக் கருத்து எனக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.


 அதாவது, இலங்கை நட்பு நாடாகத் தொடரும் வரையிலும் அந்த நாட்டு வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளதாகத் தெரிகிறது.


 எனது அரசின் நோக்கங்களையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் மத்திய அரசு முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத நிலையையே இது காட்டுகிறது.


 எனவே, இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது போன்ற கண்டனத்துக்குரிய செயல்களை மத்திய அரசு மேற்கொள்ளாமல் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் பயிற்சி பெற்று வரும் வீரர்களை உடனடியாகத் திருப்பி அனுப்ப வேண்டும் என தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
 
கருணாநிதி:
மத்திய அமைச்சரின் பதில் தமிழகத்தையும், தமிழர்களின் உணர்வையும் காயப்படுத்துவதுபோல் உள்ளது.இந்தியாவைவிட ஆறு மடங்கு அதிகமான பல்வேறு உதவிகளை இலங்கைக்கு சீனா செய்துள்ள நிலையில், இந்தியா எதை நம்பி இன்னமும் இலங்கையை நட்பு நாடு என்று சொல்கிறது. இதை ஒருதலைபட்சமான நட்பு என்றுதான் சொல்லமுடியுமே தவிர, இருநாடுகளுக்கிடையே சுமுகமான நட்பு என்று எப்படிச் சொல்ல முடியும்?



 விஜயகாந்த்:தமிழகத்தையும், தமிழர்களையும் பணயம் வைத்து இலங்கையுடன் ஒருதலைபட்ச நட்புகொள்ள மத்திய அரசு துடிப்பது ஏன் என்பது புரியவில்லை. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இதுதான் நட்பின் லட்சணமா?



 தா.பாண்டியன்:இலங்கை வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதன் மூலம் தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு கொச்சைப்படுத்தி வருகிறது. பயிற்சி பெறும் இலங்கை வீரர்களை வெளியேற்ற வலியுறுத்தி செப்டம்பர் 1-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.



 ராமதாஸ்:இலங்கை வீரர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளிப்போம் என மத்திய இணையமைச்சர் பல்லம் ராஜு கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்கவில்லை என்பதையே அமைச்சரின் பேச்சு காட்டுகிறது.
   

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

ஈழத்தமிழர் பிரச்சனையில் "மத்திய காங்கிரஸ் அரசு பாராமுகம் ஏன் ?? - டெசோ மாநாட்டில் கருணாநிதி கேள்வி



ஈழத்தமிழர் பிரச்சனையில் "மத்திய காங்கிரஸ் அரசு  பாராமுகம்  ஏன் ?? -  டெசோ மாநாட்டில் கருணாநிதி கேள்வி 


 ==========================================


 தினத்தந்தி




===========================================

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

ஈழத்தமிழர் பிரச்னைக்கு ஐ.நா. தீர்மானம்: டெசோ




டெசோ மாநாட்டில், தமிழர் மறுவாழ்வு நடவடிக்கைகளை கண்காணிக்க பன்னாட்டு குழு அமைக்க வேண்டும், ( இலங்கை ) ஈழத்தமிழர் பிரச்னையை ஐ.நா. தீர்மானம் மூலம் நிறைவேற்ற வேண்டும் என்று டெசோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

TESO டெசோ அமைப்பின் சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபேற்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு ( டெசோ)  மாநாட்டை திமுக தலைவர் கருணாநிதி தலைமையேற்று நடத்தினார்.


இந்த மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


  •  போர் குற்றவாளிகள் ஐ.நா., சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் & தண்டிக்க பட வேண்டும் 
  • இலங்கையில் தமிழ்மொழி அடையாளங்கள் அழிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். 
  • சிங்களர்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வீடு மற்றும் நிலங்களை மீட்க வேண்டும். 
  • தமிழர் மறுவாழ்வு நடவடிக்கைகளை கண்காணிக்க பன்னாட்டு குழு தேவை.
  • இலங்கை தமிழர் பிரச்னையில் அரசியல் தீர்வு காண ஜ.நா.சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.இந்த தீர்மானத்தை நிறைவேற்ற மத்திய அரசு ஐ.நாவை வலியுறுத்த வேண்டும்.
  • தமிழர் பகுதியிலிருந்து ராணுவத்தை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.
  • இலங்கை ராணுவத்திற்கு இந்தியா எந்த மாநிலத்திலும் பயிற்சி அளிக்கக்கூடாது.
  • இந்தியாவின் நிர்வாக எல்லைகளுக்குட்பட்டிருந்த கச்சத் தீவு இலங்கை வசம் ஒப்படைக்கப்பட்டதால், தமிழ் மீனவர்கள் அப்பகுதிக்குச் சென்றாலே, சுட்டுக் கொல்கின்றனர். எனவே, இக்கொடுமைக்கு முடிவு கட்ட, கச்சத் தீவை இந்தியா மீட்க வேண்டும். 
  • மேலும், தனுஷ்கோடி அல்லது மண்டபம் முகாமில் கடற்படை தளத்தை இந்தியா அமைக்க வேண்டும்

இவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிபந்தனை அடிப்படையில் டெசோ மாநாடு நடத்த அனுமதி: உயர்நீதிமன்றம்.

நிபந்தனை அடிப்படையில் டெசோ மாநாடு நடத்த அனுமதி: உயர்நீதிமன்றம்




சென்னை, ஆக.12:


டெசோ மாநாட்டை சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்த அனுமதி மறுத்து காவல் துறை பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.




சென்னை ராயப்பேட்டை மைதானத்தில், நிபந்தனையின் அடிப்படையில் மாநாட்டை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நிபந்தனைகளை காவல்துறை மாநாட்டு அமைப்பாளர்களிடம் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது.



இதை அடுத்து, மாநாடு ராயப்பேட்டை மைதானத்தில் நடத்தப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.



12-Aug-2012 பிற்பகல் 12 மணிக்குக் கூடிய நீதிமன்றம் சிறப்பு வழக்காக இதனை எடுத்து விசாரித்தது. நீதிபதி தர்மாராவ், வேணுகோபால் ஆகியோர் அடங்கிய டிவிஷன பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது இந்த வழக்கு. இதில், மாநாட்டுக்கு நிபந்தனையுடன் கூட் அனுமதி அளிக்குமாறு நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.

----------------------------------

சனி, 11 ஆகஸ்ட், 2012

TESO டெசோ மாநாட்டுக்கு அனுமதி மறுப்பு:


TESO  :  டெசோ மாநாட்டுக்கு அனுமதி வழங்க காவல்துறை மறுத்து விட்டது. இதற்கான உத்தரவை வெள்ளிக்கிழமை நள்ளிரவு தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகனிடம் போலீஸôர் அளித்தனர். 

முன்னதாக தமிழக டி.ஜி.பி. கே.ராமானுஜத்துடன் ஆணையர் திரிபாதி, கூடுதல் ஆணையர் பி.தாமரைக்கண்ணன் ஆகியோர் இரவு ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து அனுமதி மறுப்பு உத்தரவு அளிக்கப்பட்டது.

TESO  : Tamil Eelam Supporters Organisation

------------------------------------------------------------------------
டெசோ மாநாட்டுக்கு அனுமதி வழங்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. எனினும் டெசோ மாநாட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவு எடுக்குமாறு சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  டெசோ அமைப்பு சார்பில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஆகஸ்ட் 12-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் இந்த மாநாட்டுக்கு காவல் துறையினர் அனுமதி அளிக்கக் கூடாது என்று கோரி சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எலிபி தர்மாராவ், எம்.வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.  அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஆர். முத்துகுமாரசாமி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு நேர் எதிரே உள்ள மைதானத்தில் மாநாடு நடத்த உள்ளனர். அங்கு மாநாடு நடத்த அனுமதி அளித்தால், அதனால் எழும் சப்தத்தால் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்று வாதிட்டார்.  



பொது மக்களுக்கு பாதிப்பு: தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் ஏ. நவநீதகிருஷ்ணன், பொதுப்பணித் துறை நடத்திய ஆய்வின்படி ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வெறும் 8 ஆயிரம் பேர் மட்டுமே கூட முடியும். ஆனால், சுமார் 1,250 வாகனங்களில், 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் டெசோ மாநாட்டுக்கு வருவார்கள் என்று தி.மு.க. நாளேடான முரசொலியில் கூறப்பட்டுள்ளது.  மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் சூழலில், இவ்வளவு பேர் திரண்டால் அதனால் பொதுமக்களுக்கும், ராயப்பேட்டை மருத்துவமனை நோயாளிகளுக்கும் பல பாதிப்புகள் ஏற்படும். ஆகவே, மாநாட்டுக்கு காவல் துறை அனுமதி வழங்க சாத்தியமில்லை என்று குறிப்பிட்டார்.  ஒய்.எம்.சி.ஏ. நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் வி.ஆர். தங்கவேல், ஒய்.எம்.சி.ஏ. மைதானம் 99 கிரவுண்ட பரப்பளவு கொண்டது. இதற்கு முன்னர் தி.மு.க., அ.தி.மு.க. உள்பட பல அரசியல் கட்சிகள் பல மாநாடுகளை இந்த மைதானத்தில் நடத்தியுள்ளனர் என்று தெரிவித்தார்.  


 உள்நோக்கமே காரணம்: டெசோ மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி. வில்சன், முதல்வர் ஜெயலலிதா நடத்தி வைத்த மெகா திருமண நிகழ்ச்சி, தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் நிகழ்ச்சி உள்பட ஏராளமான நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள், மாநாடுகள், கண்காட்சிகள் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடத்தப்பட்டுள்ளன. 

  இப்போது நடத்த உத்தேசித்துள்ள டெசோ மாநாடு பற்றிய செய்திகள் ஜூலை மாதத்திலிருந்து வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஆகஸ்ட் 12-ம் தேதி மாநாடு நடக்கவுள்ள சூழலில், ஆகஸ்ட் 7-ம் தேதிதான் மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். மாநாட்டைத் தடுக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் கூடிய இந்த வழக்கில், அரசு அதிகாரிகளும் மனுதாரருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர் என்று வாதிட்டார்.

சனி, 7 ஜூலை, 2012

போர் குற்றவாளிகள் சிங்கள காடைய வீரர்கள் வெளியேற்றம்.



தினத்தந்தி  epaper 




-------------------------------------------------------
தமிழக மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பலத்த எதிர்ப்பு- 


போர் குற்றவாளிகள் சிங்கள காடைய வீரர்கள் வெளியேற்றம்

முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசை கண்டனம் செய்து முன்பு 'மடல்' அனுப்பிருந்தார்.

 
------------------------------------------------------------------


தினகரன் :

சிங்கள வீரர்களுக்கு தாம்பரம் விமானப் படை தளத்தில் பயிற்சி அளிப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பல்வேறு கட்சிகளும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து, போராட்டத்தில் இறங்கின. இதனையடுத்து மத்திய பாதுகாப்பு துறை உத்தரவின் பேரில் பயிற்சிக்காக வந்துள்ள, 9 சிங்கள வீரர்களும் பெங்களூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.



-----------------------------------------------------------------


Dinamani :

சென்னையில் பயிற்சி பெறும் இலங்கை விமானப் படை வீரர்களை பெங்களூருக்கு மாற்றியதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  அவர்களுக்கு பெங்களூர் மட்டுமல்ல, நாட்டின் எந்தவொரு இடத்திலும் பயிற்சி அளிக்கக் கூடாது எனவும், உடனடியாக இலங்கைக்கே திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் மத்திய அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.  


இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக மக்களை அவமானப்படுத்தும் வகையில், இலங்கையின் 9 விமானப் படை வீரர்களுக்கு தமிழகத்திலுள்ள தாம்பரம் விமானப் படை நிலையத்தில் ஒன்பது மாதம் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தேன்.  

தமிழர்களின் உணர்வுகளை சற்றும் மதிக்காமல், தமிழர்களுக்கு எதிரான இந்த செயலை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தேன். தமிழகத்திலுள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் இதே கருத்தைத் தெரிவித்திருந்தன. ஒட்டுமொத்த தமிழ் மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  தமிழ் இனத்துக்கு எதிராக...: இலங்கையின் ஒன்பது வீரர்களையும் பெங்களூரில் உள்ள எலகங்கா விமானப் படை நிலையத்தில் பயிற்சி அளிப்பதற்காக விமானம் மூலம் மத்திய அரசு வெள்ளிக்கிழமை அனுப்பி வைத்துள்ளது. இதன் மூலம், தமிழர்களுக்கும் தமிழ் இனத்துக்கும் எதிராகச் செயல்படுபவர்களுக்கு சாதகமாக திமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு செயல்படுகிறதோ என்ற எண்ணம் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.  

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக, போர் விதிமுறைகளை மீறி செயல்பட்டவர்கள் போர்க் குற்றவாளிகள் என ஐக்கிய நாடுகள் சபை மூலம் தீர்மானிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பம். இலங்கை விமானப் படை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பதைத் தவிர்த்து விட்டு, பெங்களூரில் பயிற்சி அளிப்பதை தமிழர் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றார் ஜெயலலிதா. 






புதன், 4 ஜூலை, 2012

பிரணாப் முகர்ஜி அளித்த கடிதம், மோசடியாக தயாரிக்கப்பட்டது - பா.ஜனதா



ஆதாயம் தரும் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததாக என்று பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது. 



 தினத்தந்தி :

தினமணி :


பிரணாப் முகர்ஜியின் ராஜிநாமா 100 சதவிகிதம் போலியானது என்று எங்கள் கட்சி குற்றம்சாட்டுகிறது. இப்படிப்பட்ட ஒருவர் இந்தியாவின் உயர் பதவிக்குப் போட்டியிடவிருப்பது துரதிருஷ்டவசமானது. தேர்தல் ஆணையத்திடமிருந்து நீதியை எதிர்பார்க்கிறோம்.  

தேர்தல் அதிகாரியின் சான்றளிக்கப்பட்ட கடிதத்துக்காக காத்துக்கொண்டிருக்கிறோம். அதன் பிறகு, சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வது பற்றி தீர்மானிப்போம் என்றார் அனந்த் குமார்.  பிரணாபின் வேட்பு மனுவைக் காப்பாற்றுவதற்காக, சங்மாவின் குற்றச்சாட்டுக்குப் பிறகு ராஜிநாமா கடிதம் எழுதப்பட்டுள்ளது என்று சங்மாவின் வழக்குரைஞர் சத்யபால் ஜெயின் குறிப்பிட்டார்.  

முன்னதாக, இந்திய புள்ளியியல் கழகத்தின் தலைவராக பிரணாப் முகர்ஜி உள்ளதால் வருவாய் தரக் கூடிய பதவியில் அவர் இருக்கிறார். எனவே, அவரது வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என பி.ஏ. சங்மா தேர்தல் அதிகாரிக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

-------------------------------------------------------------------------------

 
 

திங்கள், 2 ஜூலை, 2012

கர்நாடக அமைச்சர்கள் 9 பேர் ராஜினாமா வாபஸ்



தினச்சுடர்

தினமணி :

பெங்களூரு, ஜூலை 2: கர்நாடக முதலமைச்சர் சதானந்த கௌடாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி ராஜினாமா செய்த கர்நாடக அமைச்சர்கள் 9 பேர் தங்கள் ராஜினாமாவைத் திரும்பப் பெற்றனர். தங்கள் கோரிக்கைகள் விரைவில் பரிசீலிக்கப்பட்டு சுமுக முடிவு எட்டப்படுமென்று பாஜக மேலிடம் அறிவித்ததைத் தொடர்ந்து, தங்கள் ராஜினாமாவை திரும்பப் பெற்றதாக அவர்கள் கூறினர்.

------------------------

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

கூடங்குளம் மின்சாரம் தமிழகத்துக்கே தர வேண்டும் ! ஜெயலலிதா கடிதம்




கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே தர வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் !





















சென்னை, மார்ச் 31: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரு யூனிட்டுகளிலும் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே தர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தின் விவரம்:
கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு யூனிட்டுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இரண்டிலும் சேர்த்து 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. அதில், தமிழகத்துக்கு 925 மெகாவாட் மின்சாரம் அளிக்கப்படவுள்ளது.
மத்திய மின் தொகுப்பில் இருந்து தமிழகத்துக்குக் கூடுதலாக ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டுமென்று தங்களிடம் கடந்த ஆண்டு கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால், 100 மெகாவாட் மின்சாரமே அளிக்கப்பட்டுள்ளது.






தமிழகம் கடுமையான மின் பற்றாக்குறையைச் சந்தித்து வரும் நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் அனைத்தையும் தமிழகத்துக்கே வழங்குவதுதான் சரியாக இருக்கும்.
மின்பாதையில் பிரச்னை: மேலும், வெளிமாநிலங்களில் இருந்து பெறும் மின்சாரத்தை தமிழகத்துக்குக் கொண்டு வருவதற்கான மின்பாதையில் பிரச்னை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதையும் தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.
தமிழகத்தின் கோரிக்கையை சாதகமான வகையில் பரிசீலிக்கும்படி தங்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.





-----





தினத்தந்தி





-----





தினமணி





வெள்ளி, 23 மார்ச், 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி !!!


இலங்கைக்கு எதிரான பிரேரணை ஐ.நா. பேரவையில் வெற்றி :
ஆதரவாக 24 நாடுகள்; எதிராக 15 நாடுகள்!



ஜெனீவா, மார்ச் 22:ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்துக்கு இந்தியா உள்பட 24 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போரின்போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றம், மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.

போர்ப்படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.


மொத்தம் 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள இந்தக் கவுன்சிலில், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரியா, பெல்ஜியம், செக் குடியரசு, இத்தாலி, ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, உருகுவே உள்ளிட்ட 24 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன.


 1) தினத்தந்தி


  
 3) மக்கள் ஓசை 23-March-2012








சீனா, ரஷியா, வங்கேதசம், மாலத்தீவு, குவைத், செüதி அரேபியா, இந்தோனேசியா உள்ளிட்ட 15 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன.

8 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதையடுத்து 24 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

"மனித உரிமை தொடர்பான சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்? இது தொடர்பாக உங்களது விளக்கம் என்ன? போர்ப்படிப்பினை மற்றும் நல்லிணக்கக் குழு அறிக்கையின் பரிந்துரைகளை எவ்வாறு அமல்படுத்தப்போகிறீர்கள்?' என்று ஐ.நா. தீர்மானத்தில் இலங்கை அரசுக்கு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்காத இந்தியா, வாக்கெடுப்பில் பங்கேற்றது. முன்னதாக, "இத்தீர்மானத்தின் மீதான நடவடிக்கை, இலங்கையில் வலுக்கட்டாயமாக தலையீடு செய்வதாக இருக்கக்கூடாது; அரசியல் நல்லிணக்கம் ஏற்படுத்துகிற வகையில் இருக்க வேண்டும்' என்று இந்தியா கொண்டுவந்த திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில், நல்லிணக்கத்தைக் கொண்டு வருவதற்காக ஆலோசனையும், தொழில்நுட்ப உதவியும் ஐ.நா. அளிக்கும் என்று தெரிவித்திருந்தது. இதை, "இலங்கையின் ஒப்புதலும், அனுமதியும் பெற்ற பின்பே ஐ.நா. உதவி செய்ய வேண்டும்' என்ற திருத்தத்தை இந்தியா கொண்டு வந்தது.நாடுகளின் கருத்துகள்: முன்னதாக தீர்மானத்தை முன்மொழிந்து அமெரிக்காவின் பிரதிநிதி எய்லீன் டோனாஹோ கூறுகையில், ""மனித உரிமை மீறல் புகார் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க, போர் முடிந்து 3 ஆண்டுகள் அவகாசம் அளித்தபோதிலும், இலங்கை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிரந்தரமான அமைதி ஏற்பட நல்லிணக்க நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது அவசியம். இந்தத் தீர்மானத்தை இலங்கையின் பக்கத்து நாடான இந்தியா ஆதரிப்பதை ஆக்கப்பூர்வமான அணுகுமுறையாக நாங்கள் பார்க்கிறோம்'' என்றார்.

"இதுபோன்ற தீர்மானங்கள், ஒருநாட்டின் பிரச்னையில் மற்ற நாடுகள் தலையிடக்கூடாது என்ற கொள்கையை பலவீனப்படுத்துவதாக அமையும்' என்று சீனா, ரஷியா ஆகிய நாடுகள் கருத்துத் தெரிவித்தன."

"இலங்கை, உள்நாட்டில் தனது எதிரிகளை அச்சுறுத்தி வருகிறது; பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது. இதை நிறுத்த வேண்டும்'' என்று ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் கருத்துத் தெரிவித்தனர்."

"இலங்கையில் போர் முடிவடைந்து 3 ஆண்டுகளே ஆகியுள்ளது. மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும். இந்தத் தீர்மானம் தவறான நேரத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதன் மூலம் மனித உரிமை கவுன்சில் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது. இது வளர்ந்து வரும் நாடுகளைப் பாதிக்கும்'' என்று தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.


இந்தியாவின் நிலையில் மாற்றம்:முன்னதாக தனியொரு நாட்டுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க முடியாது என்று இந்தியா தெரிவித்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து குரல் கொடுத்தன. கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக, ஆதரவை விலக்கிக் கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. அரசியல் நெருக்கடியை அடுத்து மத்திய அரசு தனது நிலையை மாற்றிக்கொண்டது. இலங்கைக்கு எதிராக வாக்களித்துள்ளது.


----------------------



BBC Tamil - Read here  


-------------------------

திங்கள், 2 ஜனவரி, 2012

பொங்கல் மிகை ஊதியம் Pongal Bonus for TN Govt Staff

பொங்கல் மிகை ஊதியம்  ( Pongal Bonus )


அரசு ஊழியர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு மிகை ஊதியம் வழங்க முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.










தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் மிகை ஊதியம் குறித்த அறிவிப்பை, முதல்வர் ஜெயலலிதா ( 01-Jan-2012 ) வெளியிட்டுள்ளார். அதில் சி.மற்றும் டி.பிரிவைச் சேர்ந்த அலுவலர்களுக்கு 30-நாள் ஊதியத்திற்கு இணையாக 3-ஆயிரம் ரூபாய் உச்சவரம்பிற்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.




மேலும் ஏ.மற்றும் பி. பிரிவு அலுவலர்களுக்கு ஆயிரம் ரூபாய் சிறப்பு மிகை ஊதியம் வழங்கவும்;, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவரகள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு 500-ரூபாயாக பொங்கல் பரிசு வழங்கவும், முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.




இதேபோன்று சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்கள், தொகுப்பு ஊதியம் பெறும் பணியாளர்கள், பகுதி நேர ஊழியர்களுக்கும் சிறப்பு மிகை ஊதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.