Tamil Newspapers & ePaper,தமிழ்ச் செய்திதாள்கள் & இ பேப்பர் ,Journaux Tamouls, Tamilisch Zeitung, Kranten, Aviser
Pages
▼
செவ்வாய், 31 ஜூலை, 2012
ஞாயிறு, 29 ஜூலை, 2012
இளையோர் மாநாடு 2012 - சிங்கப்பூர்
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலகப் பல்கலைக்கழகத் தமிழ் இளையோர் மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பு கிட்டியது. முற்றிலும் இளையோர்களால் நடத்தப்பட்ட மாநாடு.
( nanri : Thiru .Sathia Seelan )
http://www.wtuyc2012.com/
சனி, 28 ஜூலை, 2012
வியாழன், 26 ஜூலை, 2012
திங்கள், 23 ஜூலை, 2012
ஞாயிறு, 22 ஜூலை, 2012
ஜனாதிபதி பதவிக்கு பிரணாப் முகர்ஜி தேர்வு செய்யப்பட்டார்
ஜனாதிபதி பதவிக்குஇன்று பிரணாப் முகர்ஜி தேர்வு செய்யப்பட்டார். ஆளும் மற்றும் பிற கட்சிகளின் ஆதரவு அதிகம் இருந்ததால் அவர் சுமார் 70 சதத்திற்கும் மேலாக ஓட்டுக்களை பெற்றுள்ளார்.
பதவி வகித்த ஜனாதிபதிகள்: இதுவரை ஜனாதிபதியாக இருந்தவர்கள் பட்டியல் வருமாறு:
டாக்டர் . ராஜேந்திரபிரசாத் ( 1950- 1962 ) ,
டாக்டர் . சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ( 1962 - 1967) ,
டாக்டர் ஷகீர்உசேன் ( 1967 - 1969 ),
வரகாகிரி வெங்கடகிரி ( 1969- 1974 )
டாக்டர். பக்ரூதீன் அலி அகம்மது ( 1974 - 1977 ) ,
நீலம் சஞ்சீவரெட்டி ( 1977- 1982) ,
கியானி ஜெயில்சிங் ( 1982- 1987 ),
ஆர் வெங்கட்ராமன் ( 1987- 1992 ),
டாக்டர். சங்கர்தயாள் சர்மா ( 1992- 1997 ),
கே.ஆர். நாராயணன் ( 1997- 2002 ),
டாக்டர் ஏ.பி.ஜே.,அப்துல்கலாம் ( 2002- 2007 ),
பிரதீபா பாட்டில் ( 2007 ஜூலை 25 முதல் 2012 ஜூலை 24 வரை) .
இதில் டாக்டர் . ராஜேந்திரபிரசாத் முதல் ஜனாதிபதி மற்றும் 2 முறை இந்த பதவியை வகித்தவர் என்ற பெருமையையும் பெறுகிறார்.
இதில் டாக்டர் . ராஜேந்திரபிரசாத் முதல் ஜனாதிபதி மற்றும் 2 முறை இந்த பதவியை வகித்தவர் என்ற பெருமையையும் பெறுகிறார்.
தமிழகத்தை சேர்ந்தவர் 3 பேர் இந்த பதவியில் இருந்துள்ளனர். டாக்டர் . சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் , ஆர் வெங்கட்ராமன், டாக்டர் ஏ.பி.ஜே.,அப்துல்கலாம் ஆகியோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காவிரி நதி நீர் - கர்நாடக மறுப்பு ! தமிழக அரசு - டெல்லி உச்ச நீதி மன்றத்தில் மனு
காவிரி நதி நீர் - கர்நாடக மறுப்பு !
தமிழக அரசு - டெல்லி உச்ச நீதி மன்றத்தில் மனு!
தினகரன் :
தமிழகத்துக்கு கர்நாடகா தண்ணீர் திறந்துவிடுவதற்காக பிரதமர் தலைமையில் காவிரி நதிநீர் ஆணையத்தை உடனே கூட்ட உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
மாவட்டங்களில் ஒரு பக்கம் பாசனத்துக்கு கைகொடுக்கும் வகையில் போதிய மழை இல்லை. இன்னொரு பக்கம், வழக்கம் போல, காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகா முரண்டு செய்கிறது. இதனால், மேட்டூரில் தண்ணீர் இல்லாத நிலை தொடர்கிறது. விளைவு, விவசாயம் பாதிக்கப்பட்டு, வறட்சி தாண்டவமாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கர்நாடகாவை கேட்டும் பலனில்லை; கர்நாடகாவை உத்தரவிட வேண்டிய காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்டச்சொன்னாலும் மத்திய அரசிடம் இருந்து பதில் இல்லை. இதனால் வேறு வழியின்றி, சுப்ரீம் கோர்ட்டை தமிழக அரசு நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடகா தரவில்லை. கடந்த 2002ல் காவிரி நதி நீர் ஆணையம், வறட்சி காலத்தில் எந்த அளவின் அடிப்படையில் தமிழகத்துக்கு தண்ணீர் தர வேண்டும் என்ற வரன்முறைகள் வகுக்கப்பட்டன. ஆனால், அந்த விதிமுறைகளை கர்நாடக அரசு முற்றிலுமாக கடைபிடிக்கவில்லை.
இதே நிலைதான் இந்த ஆண்டும் தொடர்ந்து நீடித்து வருகிறது. காவிரியில் தண்ணீர் திறந்து விடாததால் தமிழகத்தில் உள்ள காவிரி பாசன விவசாயப் பகுதிகள் கடும் வறட்சியில் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவின்படி கடந்த ஜூன் மாதம் தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தராததால் தமிழகத்தில் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டது. இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். எனவே, காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் தமிழகத்துக்கு தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசை வலியுறுத்தும் வகையில் பிரதமர் தலைமையில் காவிரி நதி நீர் ஆணையத்தை உடனடியாக கூட்டுமாறு பிரதமருக்கு உத்தரவிட வேண்டும். மேலும், தலைக் காவிரியிலிருந்து வரும் தண்ணீரை கர்நாடக அரசு பல்வேறு தடுப்பணைகளைக் கட்டி தேக்கி வருகிறது. இதனால், தமிழகத்துக்கு வரும் தண்ணீர் தடைபடுகிறது. அந்த தடுப்பணைகளில் தண்ணீர் அதிக அளவு தேக்கப்படாமலிருந்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிக்கும். எனவே, கர்நாடக அரசு தடுப்பணைகளில் தண்ணீரைத் தேக்கிவைக்கக் கூடாது என்றும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு இன்னும் ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
புதன், 18 ஜூலை, 2012
ஜனாதிபதி தேர்தலில் மம்தா "பிரணாப்பை" ஆதரிக்கிறார்
ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளரான பிரணாப் முகர்ஜியை "மன வேதனையோடு " ஆதரிப்பதாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நேற்று அறிவித்தார்.
செவ்வாய், 17 ஜூலை, 2012
இந்தியாவில் எந்த பகுதியிலும் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கக்கூடாது
உலகத் தமிழர்களின் உணர்வுகளை அவமதிக்கும் வகையில், இந்தியாவில் எந்த பகுதியிலும் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கக்கூடாது, அவர்களை உடனே இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து கடும் கண்டனம் தெரிவித்து அவர் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:- போர்க் குற்றங்கள் செய்தவர்களை ஐ.நா சபையுடன் சேர்ந்து போர் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்று வற்புறுத்தியும், இலங்கையில் முகாம்களில் வாழும் தமிழர்களை அவர்களுடைய சொந்த இடங்களில் மறுகுடியமர்ப்பு செய்ய வேண்டும் என்றும், சிங்கள குடிமக்களுக்கு இணையாக தமிழர்களும் சமமான அரசியல் சட்ட உரிமைகளுடன் கெளரவமாக வாழ அனுமதிக்க வேண்டும் என்றும் இலங்கை அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி, 2011 ஜூன் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்த தீர்மானத்தை செயல்படுத்தாத வகையிலும், இலங்கை பாதுக்காப்பு துணை இராணுவ அதிகாரிகளுக்கு தொழிற்நுட்ப பயிற்சி அளிப்பதனாலும், மத்திய அரசு உலகெங்கும்முள்ள தமிழர்களின் உணர்வுகளை புறக்கணிப்பதாகவும், அவமரியாதை செய்வதாகவும் எண்ண வைக்கிறது.
தமிழ்நாட்டில் தாம்பரம் விமானப்படை நிலையத்தில் 9 இலங்கை விமானப்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தபோது, இந்திய அரசின் இந்த செயலை கண்டித்து, இலங்கை ராணுவ அதிகாரிகள் உடனடியாக திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று வலியுறுத்தி நான் பத்திரிகைகளுக்கு அறிக்கை வெளியிட்டேன். இலங்கைக்கு அவர்களை திருப்பி அனுப்புவதற்கு பதிலாக பெங்களூரூ, ஏலகாகெ விமானப்படை தளத்தில் இந்திய அரசு பயிற்சி அளித்து வருகிறது. மேலும், இலங்கை விமானப்படையை சேர்ந்த ஏர்வைஸ்மார்சல் ஜெகத் ஜூலங்கா ரடயஸ் மற்றும் இலங்கை கப்பல்படையை சேர்ந்த ரியர் அட்மிரல் எஸ்.ரணசிங்கே இருவரும் பல நாடுகளை சேர்ந்த 25 பயிற்சியாளர்களுடன் புதுடெல்லி தேசிய பாதுகாப்பு கல்வி கழகத்தில் பயிற்சி பெறுவதாகவும், பயிற்சியின் ஒரு பகுதியாக அவர்கள் 15.7.12 அன்று நீலகிரி மாவட்டம் கூனூருக்கு வந்திருப்பதாகவும், வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் பயிற்சி கல்லூரியை 16.5.12 அன்று பார்வையிடுவதாகவும் நான் அறிகிறேன். இந்தியாவிலுள்ள இராணுவ அதிகாரிகள் பயிற்சி நிறுவனங்களில் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதும், தமிழகத்திற்கு வருகை தர அனுமதிப்பதும், தமிழக மக்களை முற்றிலும் அவமதிப்பதையே வெளிப்படுத்துகிறது.
இந்தியாவில் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கும் இந்திய அரசின் மோசமான பிடிவாதமான செயல்களை கண்டு தமிழக மக்கள் விரக்தியும், கோபமும் அடைந்துள்ளனர். ஆகையினால் இந்தியாவில் எந்த ஒரு இடத்திலும், இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சியளிப்பதை நிறுத்த வேண்டும் என்றும், அவர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று நான் உங்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
----------------
Thinabhoomi
Dinamani
தினத்தந்தி
GOOGLE NEWS
துணை ஜனாதிபதி தேர்தல்: அன்சாரி vs ஜஸ்வந்த் சிங்
துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஹமீது அன்சாரியை எதிர்த்து அவர் போட்டியிடுகிறார்.
துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 7ம் தேதி நடக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி அன்சாரி மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிக்கும் இந்த தேர்தலில் அன்சாரிக்கு அதிக ஆதரவு உள்ளது.
திங்கள், 16 ஜூலை, 2012
ஞாயிறு, 15 ஜூலை, 2012
காமராசர் பிறந்த நாள் ஜூலை 15 திரும்பிப் பார்ப்போம் பச்சைத் தமிழரை
---------------------
தந்தை பெரியார் அவர்களால் தமிழ் நாட்டின் பாது காவலர்
என்று அழைக்கப்பட்ட கல்வி வள்ளல் பெருந்தலைவர் காம ராசரின் பிறந்த நாள் இன்று
(ஜூலை 15). நூற்றுப் பத்து ஆண்டுகளுக்கு முன் மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து
ஆறாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்று, தம் கடுமையான உழைப்பால் அகில இந்தியத்
தலைவர் என்ற அளவுக்கு உயர்ந்த காம ராசர் பெயரால் கால் நூற்றாண்டுக்கு முன்
டெல்லியில் ஓர் அறக்கட்டளை தொடங்கப்பட்டது.
அதன் காரணம் என்னவென்று கேட்டபோது இந்தியாவில்
ஒருவர் அகில இந்தியத் தலைமைப் பொறுப்புக்கு வரவேண்டுமென்றால் அவர் முதலில்
மேல்சாதிக்காரராக, குறிப்பாக பார்ப்பனராக இருக்க வேண்டும். ஒரு பாரம்பரியமிக்கக்
குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அவர் மேல்நாட்டுப் படிப்புப்
படித்திருக்க வேண்டும். அடுத்தபடியாக அவர் வடநாட்டுக்காரராக இருக்க வேண்டும்.
அதிலும் இந்திக்காரராக இருக்க வேண்டும். அதைவிட முக்கியமாக அவர் சிவப்பு
நிறத்தவராகப் பார்ப்பதற்குக் கவர்ச்சிகரமாக இருக்க வேண்டும். இந்த ஆறு
அடையாளங்களில் ஒன்று கூட இல்லாமல் ஓர் அகில இந்தியத் தலைவராக வந்தார் என்றால் அது
காமராசர் ஒருவர்தான் என்று பதில் சொன்னார்கள்.
கறுப்புக் காந்தி என்றழைக்கப்பட்ட காமராசர்தான்
இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக இருந்த ஜவகர்லால் நேரு மறைந்தபோது லால்பகதூர்
சாஸ்திரியை ஏகமானதாகத் தேர்வு செய்தவர். அவரது திறமையை, பெரு மையை உலகமே
பாராட்டியது.
அன்றைக்கு 16 ஆயிரம் மக்கள் மட்டுமே வசித்து வந்த
விருதுநகரில் மேகவர்ணம் என்ற பிரிவினரைச் சேர்ந்த பிரபல வியாபாரியான குமாரசாமி
நாடார் - சிவகாமி அம்மையாருக்கு 1903-ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் நாள் காமராசர்
பிறந்தார். அங்கே சத்திரிய வித்தியா சாலை என்ற பள்ளியில் அவர் 6-ஆம் வயதில்
சேர்க்கப்பட்டார். இந்தப் பள்ளிக் கூடத்திற்கு ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு கைப்பிடி
அரிசி கொண்டு போய் கொடுக்கவேண்டும். ஆதலால் இப்பள்ளி பிடியரிசிப் பள்ளிக்கூடம்
என்று அழைக்கப்பட்டது. காமராசரின் 12-ஆம் வயதிலேயே அவரது தந்தையார் எதிர்பாராது
முடிவெய்திய காரணத்தால் அவரது பள்ளி செல்லும் வாய்ப்பு நிறுத்தப்பட்டது.
1920-ஆம் ஆண்டு காந்தி அறை கூவல் விடுத்த
ஒத்துழையாமைப் போராட்டத் தின்போது காமராசர் அதை ஏற்று, போராட்டத்தில்
பங்குகொண்டார். விருதுநகரில் மட்டுமன்றி சுற்று வட்டார கிராமங்கள் எல்லாவற்றுக்கும்
நடந்தே சென்றுதான் பிரச்சாரம் செய்தார். ஒரு முறை 60 கிலோ மீட்டர் சுற்றி மதுரைக்கு
நடந்து சென்று கட்சிப் பணியாற்றி விட்டுத் திரும்பி வந்தார்.
1924 தந்தை பெரியார் கேரள மாநிலம் வைக்கத்தில்
நடத்திய போராட்டத்தில் ஒரு தொண்டராக காமராசர் விருதுநகரி லிருந்து சென்று
வந்தார்.
காங்கிரஸ் தலைவராக 1940-இல் காமராசர் வெற்றி
பெற்றார். அப்போது அவரைத் தேசத்துரோகி எனக் குற்றம் சாட்டி பிரிட்டிஷ் அரசு கைது
செய்து சிறையில் அடைத்தது. 1941-இல் அவர் சிறையில் இருந்தபோதே விருதுநகர்
நகராட்சித் தலைவ ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிறையிலிருந்து விடு தலையாகி வெளியே வந்து
நகராட்சித் தலைவர் என்ற முறையில் கூட்டத்தை நடத்தி விட்டுப் பின் அந்தப் பதவியை
ராஜினாமா செய்துவிட்டார்.
இந்தப் பதவியில் இருந்தால் காங் கிரஸ் கட்சியின்
இதர கட மைகளையெல்லாம் கவனித்துச் செய்ய முடியாது என்ற கார ணத்தால்தான் அப்பதவியிலி
ருந்து விலகினேன் என்று அவர் சொன்னார். அதுபோலவே பொதுத் தொண்டு செய்பவருக் குத்
திருமணம் ஒரு தொல்லை என்று முடிவு செய்து திருமணத்தைத் தவிர்த்து கடைசிவரை
பிரமச்சாரியாகவே வாழ்ந்து தொண் டாற்றினார்.
காந்தியார் நடத்திய 1942 ஆகஸ்டு 9 வெள்ளையனே
வெளியேறு என்ற மாநாட்டிலும் இயக்கத்திலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு
உழைத்தார். 1952இல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஒரு மனதாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது நடைபெற்ற முதல் இந்தியப் பொதுத் தேர்தலில்
தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. ஆனா லும் காங்கிரசேதான் கூட்டணி மந்திரி
சபை அமைத்தது. இராஜாஜி முதலமைச் சரானார். அப்போது தமிழ்நாட்டில் இருந்த 12 ஆயிரம்
பள்ளிகளில், அரசு நிதி நெருக் கடியைக் காரணம் காட்டி 6 ஆயிரம் கிராமப் பள்ளிக்
கூடங்களை இராஜாஜி மூடினார். மீதி இருந்த பள்ளிகளிலும் அரை நேரப்படிப்பும் மீதி
அரைநேரம் அவரவர் குலத் தொழிலைச் செய்தால் போதுமானது என்கிற கல்வித் திட் டத்தைக்
கொண்டு வந்தார்.
தந்தை பெரியார் இத்திட்டத்தைக் குலக்கல்வித்
திட்டம் என்று சொல்லி இதனால் தமிழர்களின் எதிர்காலம் இருளடைந்து பாழாகிவிடும்
எனவும் எச்சரிக்கை செய்தார். இத்திட்டத்தை ஒழிக்க பெரியார் குலக்கல்வித் திட்ட
எதிர்ப்புப் பிரச்சாரப் படையை அமைத்தார். அந்தப் பிரச்சாரப் படை நீடாமங்கலம்
அ.ஆறுமுகம் தலைமையில் நாகப்பட் டினத்திலிருந்து சென்னையை நோக்கிப் புறப்பட்டது.
இக்குலக்கல்வித் திட்டத்தின் தீமைகளை விளக்கி வழியெங்கும் பல்வேறு இடங்களில்
கூட்டங்களை நடத்திப் பிரச்சாரம் செய்து கொண்டே இக்குழு வந்தது. பொதுமக்களிடையே
குலக்கல்வித் திட்டத்திற்கான எதிர்ப்பு வலுவடைந்ததைக் கண்ட இராஜாஜி தமக்கு உடல்நலம்
சரியில்லை என்று சொல்லி முதலமைச்சர் பதவியை இராஜி னாமா செய்தார்.
தந்தை பெரியார் வலியுறுத்தியதன் பேரில் காமராஜர்
முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட உடனேயே குலக் கல்வித் திட்டத்தை ஒழித்தார்.
இராஜாஜி மூடிய 6 ஆயிரம் கிராமப் பள்ளிக் கூடங்களையும் மீண்டும் திறந்தார். மூன்று
கிலோ மீட்டருக்கு ஒரு தொடக்கப்பள்ளி என்ற கொள்கையை வகுத்துத் தமிழ்நாடு முழுவதும்
உடனே செயல்படுத்தினார். பெரியார் காமராசரைக் கல்வி வள்ளல் என்று அழைத்துப்
பாராட்டினார். தமிழ்நாட்டில் கல்விப் புரட்சி வரலாற்றில் காமராசர் வகிக்கும்
மகத்தான பங்கில் உரிமை கொண்டாட வேறு யாருக்கும் அருகதை கிடையாது என்று தந்தை
பெரியார் சென்னை கலைவாணர் அரங் கில் நடைபெற்ற பச்சைத் தமிழர் காமராசர் விழாவின்
போது தன் கைப்பட எழுதிய செய்தியை அனுப்பிவைத்தார்.
ஏழைப்பங்காளர் என்று எல்லோராலும் சொல்லப்பட்ட
காமராசர் 1954 முதல் 1963 வரை ஒன்பது ஆண்டுகள் இணையற்ற முதலமைச்சராக மிகக் குறைந்த
அளவில் எட்டு பேர் அடங்கிய மந்திரி சபையைக் கொண்டு சேவை செய்தார். அவரது
அமைச்சரவையில், சட்டசபையில் காங் கிரசை எதிர்த்து வந்த எதிர்க்கட்சித் தலைவரான
எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியையும் ஒரு அமைச் சராக சேர்த்துக் கொண்டு காங்கிரசுக்கு
வெளியே இருந்த எதிர்ப்பையும் இல்லாமல் செய்து கொண்டு அவரது அணுகுமுறை எல்லோராலும்
பின்பற்றத்தக்கது, பாராட்டத்தக்கது.
அப்போது ஒரு முறை காமராசர் குறிப்பிட்டார். நான்
பல்கலைக் கழகங் களில் படித்தது இல்லை. ஆனால் எனக்கு பூகோளம் தெரியும். சென்னை
மாகாணத் தில் உள்ள எல்லா இடங்களையும் நான் அறிவேன். ஏரிகள் எங்கெங்கு இருக் கின்றன,
மக்கள் என்னென்ன தொழில் செய்து வாழ்க்கையை நடத்துகிறார்கள் என்பதையெல்லாம்
அறிந்திருக்கிறேன். இதையெல்லாம் பூகோளம் என்று கருத வில்லை என்றால் அதைப் பற்றி
எனக்குக் கவலை இல்லை.
வெறும் கோடுகளால் எல்லைகள் வகுத்து புள்ளிகளால் இடங்களைக் குறிப்பதுதான் பூகோளம் என்றால் அது எனக்குத் தேவையில்லை என்றார்.
அவரது சிந்தனை, உழைப்பு, ஊக்கம் எப்போதும் தெளிவாக
இருந்தது, உறுதி யாக இருந்தது. ஏழை மக் களின் துயர் துடைப்பதையே முக்கிய
அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்தார். அவர் அடுத்த படியாக அதிக கவனம் எடுத்துக் கொண்ட
துறைகளில் மின்சாரம் முத லிடம் பெற்றது. அடுத்தது போக்குவரத்து. இவை இரண்டும்
மக்கள் வாழ்க் கைக்கு மிகச் சிறந்த ஏற்றத்தைக் கொடுத்தன.
காமராசரின் நடைமுறை அறிவு எத்தனையோ பட்டப் படிப்பு
படித்தவர்களை விட மேலானது. ஒரே ஒரு உதா ரணம். அப்போது சென்னை கால்நடை மருத்துவக்
கல்லூரியின் பொன்விழாவில் கலந்து கொள்ள பிரதமர் ஜவகர்லால் நேரு சென்னை வந்தார்.
அவ்விழாவில் உரையாற்றும்போது, விஞ்ஞானிகள் எல்லாம் விவசாயிகள் வாழ்வு மேம்பட உழைக்க
வேண்டும். தமிழ்நாட்டின் கால்நடைச் செல்வத்தை அதிகப்படுத்திப் பால் உற்பத்தியைப்
பெருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நேருவை விமான நிலையத்தில்
வழியனுப்பிவிட்டு வந்த கையோடு கால்நடைக் கல்லூரி முதல்வரையும், துறை இயக்குநரையும்,
அரசு செயலாளரையும் அழைத்து இதை எப்படி நடைமுறைப்படுத்துவது? என்று கலந்து
ஆலோசித்தார்.
அப்போது பக்தவத்சலம் இத்துறையில் அமைச்சராக
இருந்தார். ஓராண்டுக்கு எத்தனை கால்நடை மருத்துவர்களை நீங்கள் உருவாக்குகிறீர்கள்?
என்று அதிகாரிகளிடம் கேட்க, அப்போது ஆண்டுக்கு 60 பேர் என்று சொன்னார் கள்.
தமிழ்நாட்டுக்கு 12 ஆயிரம் பஞ் சாயத்துகளிலும், கால்நடை கருவூட்டல் நிலையங்களில்
நியமிக்க ஆண்டுக்கு 60 பேர் என்றால் அத்தனை ஆண்டுகள் காத்திருக்க முடியாது. நம்
பிரதம மந்திரி சொன்னதை நாம் எப்படிச் செய்வது என்று யோசியுங்கள் என்று சொல்லி
அதிகாரிகளை அனுப்பிவிட்டார். அப் போது மத்திய அரசு கேந்திர கிராமத் திட்டங்களை
நிறைவேற்ற பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
அடுத்த நாள் முதலமைச்சர் காமராசர் அதிகாரிகளை
அழைத்துச் சொன்னார்: தமிழ்நாட்டில் பள்ளி இறுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராண்டு
காலம் கால்நடை அபிவிருத்தி பற்றி சிறப்புப் பயிற்சி கொடுக்க வேண்டும் என்று
அறிவித்தார்.
தமிழ்நாட்டில் இருந்த ஒசூர், ஒரத்த நாடு,
புதுக்கோட்டை, செட்டிநாடு, அபி ஷேகப்பட்டி முதலான கால்நடைப் பண் ணைகளில் எல்லாம்
கால்நடை அறிவிய லின் அடிப்படைகளை நடை முறைப் பயிற்சிகளோடு (Practical Training)
சொல் லிக் கொடுக்க வேண்டும் என்று ஸ்டாக்மேன் கோர்ஸ் ஆரம்பிக்க ஆணையிட்டார்.
Anatomy, Psychology, Penacitalogy, Bactrerialogy,
Animal Husbandry, Material Media, Sanitational Hygene and Handling of Animals
என்ற சுமார் 8 பொருள்களில் சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டு கால் நடை ஆய்வாளர்கள்
உருவாக்கப்பட்டு கிராமப்புறங்களில் நியமிக்கப்பட்டார்கள். 3 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட கால்நடை அபி விருத்தி கிளை நிலையங்களில் செயற்கை முறை கால்நடைக்
கருவூட்டல் பணிகள் வெகு சிறப்பாக நிறைவேற்றப்பட்டது.
- இரா.
இரத்தினகிரி
- தொடரும்
சனி, 14 ஜூலை, 2012
புலி போன்று பாய வேண்டிய மத்திய அரசு, சுண்டெலி போல இலங்கை அரசிடம் பணிந்து செல்வது வருந்தத்தக்கது.
சென்னை: இலங்கை விமானப்படை வீரர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒட்டு மொத்த தமிழர்களின் கடும் எதிர்ப்பையடுத்தும், எனது கடும் கண்டனத்தையடுத்தும், இலங்கை விமானப்படை வீரர்களுக்கு அளிக்கப்படும் தொழில்நுட்ப பயிற்சியை சென்னையில் உள்ள தாம்பரம் விமானப்படை நிலையத்தில் இருந்து பெங்களூரில் உள்ள எலகங்கா விமானப்படை நிலையத்திற்கு மாற்றி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த தகவல் கிடைத்தவுடன், இலங்கை வீரர்கள் யாருக்கும் இந்திய மண்ணில் பயிற்சி அளிக்கக் கூடாது என்றும், அவர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் நான் மத்திய அரசை வலியுறுத்தி இருந்தேன். புலி போல் பாய வேண்டிய இந்திய பேரரசு சுண்டெலி போல் இலங்கை அரசிடம் பணிந்து செல்வது வருந்தத்தக்கது என்பதை தெரிவித்து கொள்வதோடு, இலங்கை விமானப்படை வீரர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை மீண்டும் வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
வெள்ளி, 13 ஜூலை, 2012
வியாழன், 12 ஜூலை, 2012
புதன், 11 ஜூலை, 2012
காமராஜர் பற்றிய பக்க இலவச புத்தகம் ( மாலைமலர் )
15 ஜூலை - திரு காமராஜரின் 109-வது பிறந்த நாள்!
காமராஜர் பற்றிய 100 பக்க இலவச புத்தகம் 13-ஆம் தேதி 'மாலைமலர்' நாளிதழுடன் வெளிவருகிறது !
தமிழர்கள் தவறாமல் படிக்க வேண்டிய புத்தகம் !
செவ்வாய், 10 ஜூலை, 2012
திங்கள், 9 ஜூலை, 2012
ஞாயிறு, 8 ஜூலை, 2012
சனி, 7 ஜூலை, 2012
போர் குற்றவாளிகள் சிங்கள காடைய வீரர்கள் வெளியேற்றம்.
தினத்தந்தி epaper
-------------------------------------------------------
தமிழக மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பலத்த எதிர்ப்பு-
போர் குற்றவாளிகள் சிங்கள காடைய வீரர்கள் வெளியேற்றம்
முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசை கண்டனம் செய்து முன்பு 'மடல்' அனுப்பிருந்தார்.
------------------------------------------------------------------
தினகரன் :
சிங்கள வீரர்களுக்கு தாம்பரம் விமானப் படை தளத்தில் பயிற்சி அளிப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பல்வேறு கட்சிகளும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து, போராட்டத்தில் இறங்கின. இதனையடுத்து மத்திய பாதுகாப்பு துறை உத்தரவின் பேரில் பயிற்சிக்காக வந்துள்ள, 9 சிங்கள வீரர்களும் பெங்களூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-----------------------------------------------------------------
Dinamani :
சென்னையில் பயிற்சி பெறும் இலங்கை விமானப் படை வீரர்களை பெங்களூருக்கு மாற்றியதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு பெங்களூர் மட்டுமல்ல, நாட்டின் எந்தவொரு இடத்திலும் பயிற்சி அளிக்கக் கூடாது எனவும், உடனடியாக இலங்கைக்கே திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் மத்திய அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக மக்களை அவமானப்படுத்தும் வகையில், இலங்கையின் 9 விமானப் படை வீரர்களுக்கு தமிழகத்திலுள்ள தாம்பரம் விமானப் படை நிலையத்தில் ஒன்பது மாதம் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தேன்.
தமிழர்களின் உணர்வுகளை சற்றும் மதிக்காமல், தமிழர்களுக்கு எதிரான இந்த செயலை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தேன். தமிழகத்திலுள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் இதே கருத்தைத் தெரிவித்திருந்தன. ஒட்டுமொத்த தமிழ் மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ் இனத்துக்கு எதிராக...: இலங்கையின் ஒன்பது வீரர்களையும் பெங்களூரில் உள்ள எலகங்கா விமானப் படை நிலையத்தில் பயிற்சி அளிப்பதற்காக விமானம் மூலம் மத்திய அரசு வெள்ளிக்கிழமை அனுப்பி வைத்துள்ளது. இதன் மூலம், தமிழர்களுக்கும் தமிழ் இனத்துக்கும் எதிராகச் செயல்படுபவர்களுக்கு சாதகமாக திமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு செயல்படுகிறதோ என்ற எண்ணம் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக, போர் விதிமுறைகளை மீறி செயல்பட்டவர்கள் போர்க் குற்றவாளிகள் என ஐக்கிய நாடுகள் சபை மூலம் தீர்மானிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பம். இலங்கை விமானப் படை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பதைத் தவிர்த்து விட்டு, பெங்களூரில் பயிற்சி அளிப்பதை தமிழர் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றார் ஜெயலலிதா.
வெள்ளி, 6 ஜூலை, 2012
தமிழகத்திலிருந்து 'சிங்கள' விமானப்படையினரை திருப்பியனுப்ப இந்தியா முடிவு
தாம்பரம் விமானப்படைப் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வரும் சிங்கள விமானப்படை அதிகாரிகளைத் திருப்பி அனுப்ப இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிங்கள விமானப்படையினருக்கு இந்திய மத்திய அரசால் - தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கப்படுவதற்கு தமிழகத்தில் பாரிய எதிர்ப்பு எழுந்தது.
தமிழ்நாட்டில் சிங்கள விமானப்படையினருக்கு பயிற்சி அளிக்கப்படுவதை நிறுத்தக் கோரி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா நேற்று கடிதம் எழுதியிருந்தார்.
அத்துடன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கட்சி வேறுபாடுகளின்றி இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையிலேயே இந்திய மத்திய அரசு சிறிலங்கா விமானப்படையினருக்கு பயிற்சி அளிக்காது தமிழ்நாட்டில் இருந்து திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளதுள்ளதாக் கூறப்படுகிறது.
------------------------------------------------------------------------------
வியாழன், 5 ஜூலை, 2012
தமிழ் அரசியல் கைதி அடித்துக்கொலை; பலரின் நிலை பரிதாபம்
BBC TAMIL
லங்கையின் வடக்கே, வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து அனுராதபுரம் மற்றும் அதன்பின்னர் மகர சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில் அரசியல் கைதி நிமலரூபன் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு தமிழ் அரசியல் தலைவர்களிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
-----------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------
இலங்கை விமானப்படை வீரர்களை திருப்பி அனுப்ப முதல்வர் ஜெயலலிதா / வைகோ வலியுறுத்தல்
-----------------------------------------------------
மாலை மலர்
--------------------------------------------------------
தாம்பரம் விமானப்படை நிலையத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒன்பது விமானப்படை வீரர்கள் பயிற்சி பெற வந்து இருக்கிறார்கள் என்ற செய்தி தமிழர்களின் நெஞ்சில் வேலைப் பாய்ச்சுவது போல அமைந்துள்ளது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறி உள்ளார்.
Thanks : மாலைச்சுடர்
------------------------------------------------------------------------------------------
Thinaboomi :
-----------------------
தமிழகத்திற்கு தொழில்நுட்ப பயிற்சி பெற வந்துள்ள இலங்கை விமானப்படை வீரர்களை, மத்திய அரசு திரும்ப அனுப்ப வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். ஈழத் தமிழர்களை படுகொலை செய்த சிங்கள அரசின் விமான படை வீரர்களுக்கு, மத்திய அரசு தொழில்நுட்ப பயிற்சி அளிப்பது வெந்த புண்ணில் சூட்டுக்கோல் திணிப்பது போன்ற செயலாக இருப்பதாக, வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
உடனடியாக இலங்கை விமானப்படை வீரர்களை, மத்திய அரசு திரும்ப அனுப்ப வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
----------------------------------------------------
மாலை மலர்
--------------------------------------------------------
தாம்பரம் விமானப்படை நிலையத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒன்பது விமானப்படை வீரர்கள் பயிற்சி பெற வந்து இருக்கிறார்கள் என்ற செய்தி தமிழர்களின் நெஞ்சில் வேலைப் பாய்ச்சுவது போல அமைந்துள்ளது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறி உள்ளார்.
Thanks : மாலைச்சுடர்
------------------------------------------------------------------------------------------
Thinaboomi :
-----------------------
தமிழகத்திற்கு தொழில்நுட்ப பயிற்சி பெற வந்துள்ள இலங்கை விமானப்படை வீரர்களை, மத்திய அரசு திரும்ப அனுப்ப வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். ஈழத் தமிழர்களை படுகொலை செய்த சிங்கள அரசின் விமான படை வீரர்களுக்கு, மத்திய அரசு தொழில்நுட்ப பயிற்சி அளிப்பது வெந்த புண்ணில் சூட்டுக்கோல் திணிப்பது போன்ற செயலாக இருப்பதாக, வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
உடனடியாக இலங்கை விமானப்படை வீரர்களை, மத்திய அரசு திரும்ப அனுப்ப வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
----------------------------------------------------
தி.மு.க.,வினர் விடுதலை
தி.மு.க.,வினரை கைது செய்து சிறையில் அடைப்பது அரசுக்கும் போலீசுக்கும் பயனற்ற வேலையாக இருக்கும் என்பதால் தி.மு.க.,வினரை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: சிறை நிரப்பும் போராட்டம் நடத்தும் தி.மு.க.,வினர் ஜாமீன் கேட்கக்கூடாது என தி.மு.க., தலைமை உத்தரவிட்டிருந்தது. நில அபகரிப்பு புகார்கள் தி.மு.க., ஆட்சி காலத்திலேயே கொடுக்கப்பட்டன. ஆனால் நிலத்தை அபகரித்தவர்கள் தி.மு.க.,வை சேர்ந்தவர்களாக இருந்ததால் அவர்கள் மீது அப்போதைய தி.மு.க., அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தேர்தல் வாக்குறுதிப்படி, அ.தி.மு.க, ஆட்சி அமைந்ததும் நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிலத்தை அபகரித்தவர்கள் தி.மு.க.,வினர் என்பதால் அவர்கள் பாதிக்கப்பட்டனர். தி.மு.க., மீது ஏற்பட்டுள்ள வெறுப்பை திசை திருப்பவும், தி.மு.க., மீது கூறப்படும் ஊழல்புகார்களை மறைக்கவுமே சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபடும் தி.மு.க.,வினரை கைது செய்து சிறையில் அடைப்பது அரசுக்கும், போலீசுக்கும் பயனற்ற வேலையாக அமையும் என்பதால் அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டேன் என கூறியுள்ளார்
புதன், 4 ஜூலை, 2012
திமுக - சிறை நிரப்பும் போராட்டம்
திமுக - சிறை நிரப்பும் போராட்டம்
மாலை மலர் 04July
----------------------------------------------------------------------
சென்னை : " திமுக நடத்திய சிறை நிரப்பும் போராட்டம் எதிர்பார்த்ததைவிட எழுச்சியாக நடந்துள்ளது. இது போராட்டத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி " என கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
-------------------------------------------------------------------------------------------
தினச்சுடர்
----------------------------------------------------------------------------------
மாலை மலர் 04July
----------------------------------------------------------------------
சென்னை : " திமுக நடத்திய சிறை நிரப்பும் போராட்டம் எதிர்பார்த்ததைவிட எழுச்சியாக நடந்துள்ளது. இது போராட்டத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி " என கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
-------------------------------------------------------------------------------------------
தினச்சுடர்
----------------------------------------------------------------------------------
இலங்கைக் கடற்படை அதிகாரி - நாடுகடத்துமாறு உத்தரவிட்டுள்ளது கனேடிய நீதிமன்றம்.
உதயன் epaper
இலங்கை கடற்படை அதிகாரியை திருப்பி விரட்டுகிறது கனடா அரசு போர்க்குற்றச்சாட்டுக்களே இவரது அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்படக் காரணம்
போர்க்குற்றச்சாட்டுக்கு
உள்ளாகியுள்ள இலங்கைக் கடற்படையில் பணியாற்றிய உயர் தமிழ் அதிகாரி
ஒருவரின் அரசியல் தஞ்சக் கோரிக்கையை நிராகரித்து அவரை நாடுகடத்துமாறு
உத்தரவிட்டுள்ளது கனேடிய நீதிமன்றம்.
உதயன் web
-----------------------------------------------
பிரணாப் முகர்ஜி அளித்த கடிதம், மோசடியாக தயாரிக்கப்பட்டது - பா.ஜனதா
ஆதாயம் தரும் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததாக என்று பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.
தினத்தந்தி :
தினமணி :
பிரணாப் முகர்ஜியின் ராஜிநாமா 100 சதவிகிதம் போலியானது என்று எங்கள் கட்சி குற்றம்சாட்டுகிறது. இப்படிப்பட்ட ஒருவர் இந்தியாவின் உயர் பதவிக்குப் போட்டியிடவிருப்பது துரதிருஷ்டவசமானது. தேர்தல் ஆணையத்திடமிருந்து நீதியை எதிர்பார்க்கிறோம்.
தேர்தல் அதிகாரியின் சான்றளிக்கப்பட்ட கடிதத்துக்காக காத்துக்கொண்டிருக்கிறோம். அதன் பிறகு, சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வது பற்றி தீர்மானிப்போம் என்றார் அனந்த் குமார். பிரணாபின் வேட்பு மனுவைக் காப்பாற்றுவதற்காக, சங்மாவின் குற்றச்சாட்டுக்குப் பிறகு ராஜிநாமா கடிதம் எழுதப்பட்டுள்ளது என்று சங்மாவின் வழக்குரைஞர் சத்யபால் ஜெயின் குறிப்பிட்டார்.
முன்னதாக, இந்திய புள்ளியியல் கழகத்தின் தலைவராக பிரணாப் முகர்ஜி உள்ளதால் வருவாய் தரக் கூடிய பதவியில் அவர் இருக்கிறார். எனவே, அவரது வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என பி.ஏ. சங்மா தேர்தல் அதிகாரிக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
-------------------------------------------------------------------------------
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரணாப், சங்மா வேட்பு மனுக்கள்ஏற்பு
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் பி.ஏ.சங்மாவின் வேட்பு மனுவும், ஆளும் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜியின் வேட்பு மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. பிற மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டதால் பிரணாப் முகர்ஜி, சங்மாவின் நேரடி போட்டி உறுதியாகி விட்டது.
தினத்தந்தி epaper
தினத்தந்தி web :
Thinaboomi :
தினத்தந்தி epaper
தினத்தந்தி web :
Thinaboomi :
செவ்வாய், 3 ஜூலை, 2012
திங்கள், 2 ஜூலை, 2012
கர்நாடக அமைச்சர்கள் 9 பேர் ராஜினாமா வாபஸ்
தினச்சுடர்
தினமணி :
பெங்களூரு, ஜூலை 2: கர்நாடக முதலமைச்சர் சதானந்த கௌடாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி ராஜினாமா செய்த கர்நாடக அமைச்சர்கள் 9 பேர் தங்கள் ராஜினாமாவைத் திரும்பப் பெற்றனர். தங்கள் கோரிக்கைகள் விரைவில் பரிசீலிக்கப்பட்டு சுமுக முடிவு எட்டப்படுமென்று பாஜக மேலிடம் அறிவித்ததைத் தொடர்ந்து, தங்கள் ராஜினாமாவை திரும்பப் பெற்றதாக அவர்கள் கூறினர்.
------------------------
உதயன் 02July : இலங்கை தப்பவே முடியாது என்று எச்சரிக்கிறது அமெரிக்கா
உதயன் epaper 02-July
போர் முடிவடைந்து மூன்று வருடங்கள் கழிந்த நிலையிலும், இன நல்லிணக்க விவகாரங்களைக் கையாள் வதற்கான செயற்றிட்டம் ஒன்றை இலங்கை அரசு கொண்டிருக்க வில்லை என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டி யுள்ளது அமெரிக்கா.
இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்த
ஜனநாயகம், மனித உரிமைகள் மற் றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான
அமெரிக்காவின் வெளிவிவகார உதவி அமைச்சர் மைக்கல் போஸ்னர், இன நல்லிணக்க
விவகாரங்கள் தொடர்பாக அமெரிக்க அரசு தொடர்ந்து இலங்கைக்கு அழுத்தம்
கொடுக்கும் என்றும் தெரிவித்தார்அத்துடன், வடக்கில் உள்ள தமிழர்கள் மீது
பாகுபாடு காட்டப்படுகிறது எனவும், அவர்களையும் அரவணைத்து நடக்க வேண்டும்
எனவும் இலங்கை அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஞாயிறு, 1 ஜூலை, 2012
உதயன் 01July : இந்தியா அதிருப்தி
epaper
இலங்கைக்கு நேற்று முன்தினம் வருகை தந்த இந்திய
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனின் அவதானிப்பின் பின்னரே இத்தகைய
அதிருப்தியை இந்தியா வெளியிட்டுள்ளது.
அரசு உழியர்களுக்கு மேலும் பல சலுகைகள்
தமிழ்நாடு அரசு உழியர்களுக்கு மேலும் பல சலுகைகள்.................
( வீடு கட்ட முன்பண உதவி , மருத்துவ காப்பிட்டு திட்டம் )
தினத்தந்தி epaper.....
----------------------------