Tamil Newspapers & ePaper,தமிழ்ச் செய்திதாள்கள் & இ பேப்பர் ,Journaux Tamouls, Tamilisch Zeitung, Kranten, Aviser
புதன், 29 ஏப்ரல், 2015
சனி, 25 ஏப்ரல், 2015
வியாழன், 23 ஏப்ரல், 2015
வெள்ளி, 17 ஏப்ரல், 2015
புதன், 15 ஏப்ரல், 2015
திங்கள், 13 ஏப்ரல், 2015
செவ்வாய், 7 ஏப்ரல், 2015
20 தமிழர்கள் சுட்டுப் படுகொலை - தமிழகத்தில் கொந்தளிப்பு!
ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக தமிழகத்தைச் சேர்ந்த 12 பேர் உள்பட 20 பேரை அம்மாநில போலீசார் சுட்டுக்கொன்றனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து, ஆந்திர அரசுக்கு எதிரான கோஷங்களுடன் தமிழகத்தில் பல மாவட்டங்களில் போராட்டங்கள் நடக்கிறது.
சென்னையில் உள்ள ஆந்திரா கிளப் எதிரே தமிழக வாழ்வுரிமைக் கட்சி , தந்தை
பெரியார் திராவிடர் கழகம் மற்றும் மே 17 இயக்கம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து ஆந்திர கிளப்புக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதே போல் வேலூரில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.
அப்போது, வேலூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று ஆந்திர பேருந்துகளை ஆர்பாட்டக்காரர்கள் சிறைபிடித்தனர். பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
ஆந்திராவில் தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து
நெய்வேலியில் திருப்பதி தேவஸ்தான திருமண மண்டபத்தை முற்றுகையிட்டு தமிழக
வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் கண்டனப்
போராட்டம் இன்று நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட தோழர்கள்
பங்கேற்றனர். இப்போராட்டத்தில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவின்
கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
ஆந்திரா அரசைக் கண்டித்து வேலூர், கடலூர், சிதம்பரம்,நெய்வேலி, காஞ்சிபுரம்
உள்ளிட்ட பல இடங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம் நடத்தி
ஆயிரக்கணக்கானோர் கைது- ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு உருவ பொம்மை
எரிக்கப்பட்டது.
© Copyright 2004-2015 - Pathivu.com தொடர்புகளுக்கு: pathivuglobal@gmஇந்த சம்பவத்தை கண்டித்து, ஆந்திர அரசுக்கு எதிரான கோஷங்களுடன் தமிழகத்தில் பல மாவட்டங்களில் போராட்டங்கள் நடக்கிறது.
இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து ஆந்திர கிளப்புக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதே போல் வேலூரில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.
அப்போது, வேலூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று ஆந்திர பேருந்துகளை ஆர்பாட்டக்காரர்கள் சிறைபிடித்தனர். பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
இந்தியாவில், ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூரில் செம்மரங்களை வெட்டியவர்கள் மீது இன்று அதிகாலையில், நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 பேர் உள்ளிட்ட 20 வரையிலான தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
திருப்பதியில் உள்ள சேசாசலம் வனப்பகுதியில், ஸ்ரீவாரிமெட்டு என்ற இடத்தில் இன்றுகாலை நடந்த இந்த சம்பவத்தில், 20 பேர் ஆந்திர மாநில வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
செம்மரங்களை வெட்டி கடத்துவதற்காக, தமிழ்நாட்டில் உள்ள வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சென்ற கூலித் தொழிலாளர்களே, சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அதிகாலை 5 மணியளவில் சேசாசலம் வனப்பகுதியில், 100க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களை, காவல்துறையினர் சுற்றி வளைத்ததாக ஆந்திர மாநில காவல்துறை அதிகாரி கன்டா ராவ் தெரிவித்தார்.
அவர்கள் ஆயுதங்களுடன் காவல்துறையினரைத் தாக்க முயற்சித்ததாகவும், தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 20 பேர் பலியானதாகவும், அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட 20 பேரில், 9 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தையும், 3 பேர் வேலூர் மாவட்டத்தையும் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஏனையவர்கள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.
இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ail.com
புதன், 1 ஏப்ரல், 2015
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)